போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் பேசிக் கொள்கிறார்கள். திருவிழாவுக்கு பாதுகாப்பு பலமாக போட வேண்டும் என்று.. ஏன் அவ்வளவு முக்கியம் என்று கேட்க, கொஞ்சம், கொஞ்சமாய் களம் விரிக்கப்படுகிறது. திருவிழாவும், அதை வைத்து அங்கு வருடா வருடம் நடக்கும் கொலைகளையும், அப்படி கொலை செய்வதற்கான காரணம். அப்படி செத்தவர்களுக்கு கிடைக்கும் மரியாதை என்று களம் மெல்ல அன்போல்ட் செய்யப்பட்ட பிறகு.. திருவிழாவுக்கு போகிறது காட்சி.. ஒவ்வொரு தலைக்கட்டுக்கும் மரியாதை செய்யப்பட, அங்கே கடைசியாய் தன் தலைமுறைக்கே ஒத்தையாய் இருக்கும் அருள்நிதி வர, க்ராஸ் செய்யும் போது வில்லன் ஜெயப்ரகாஷ்.. “டேய்.. இந்த திருவிழாவுக்குள்ளே.. கருவறுத்திரணூம்”என்று சொன்னதும். சும்மா பக்கென பத்திக்குது.
அருள்நிதிக்கு இது முதல் படம். நேற்று தியேட்டரில் லட்டெல்லாம் கொடுத்து வரவேற்றார்கள். முகத்தில் பெரியதாய் எமோஷன் தெரியாவிட்டாலும். காதல் காட்சிகளை விட சண்டைக் காட்சிகளில் செம வேகம். பிக்கப் ஆயிருவாரு போல.. ஓங்கு தாங்காக வளர்ந்திருந்தாலும், முகத்தில் ஒரு இன்னொசென்ஸ் இருப்பது இந்த கேரக்டருக்கு நன்றாக அமைந்திருக்கிறது. முக்கியமாய் காதல் காட்சிகளில். “அசினை” அருளும், சுனைனாவும், மாற்றி மாற்றி தூதுவிட்டுக் கொள்ளும் இடங்கள் இளமை.
சுனைனா.. நிச்சயமாய் இவர் இது வரை நடித்த படஙளில் இவர் நான் நடித்தேன் என்று பெருமைப்பட்டு கொள்ளலாம். அறிமுக காட்சியிலிருந்து, கதைக்கு திருப்பமான முக்கிய காட்சிவரை, இவரது கேரக்டரைஷேஷன் அருமையானது. ஜெயப்ப்ராகாஷின் மீது சாணி கரைத்து ஊற்றிவிட்டு, இவர் பேசும் சீன்.. அட்டகாசம்.
மகேஷ் முத்துசாமியின் ஒளீப்பதிவில் ஆரம்ப திருவிழா காட்சிகளீலும், சண்டைக் காட்சிகளிலும்,சும்மா புகுந்து விளையாடியிருக்கிறார். அதிலும் ஆரம்ப திருவிழா காட்சிகளில், இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர் என்று அனைவருமே தங்கள் திறமையை காட்டியிருக்கிறார்கள். தாஜ்நூரின் இசையில் பாடல்கள் பெரிதாய் மனதை கவரவில்லை. ஆனால் பின்னணியிசையில் சரியான ரிசல்டை கொடுத்திருக்கிறார்.
அதன் பிறகு அருள்நிதிக்கான காட்சிகளை வைக்க முயன்றிருப்பதால் சூடு குறையவே செய்கிறது. சுனைனாவின் கேரக்டரை அவ்வளவு தூக்கி நிறுத்திவிட்டு திடீரென அவர் சீனிக்கண்ணுவை அருள் நிதி எதிர்பதற்காக அவரே ஆள் வைத்து வெட்டிவிட்டு, அருள் தான் வெட்டினார் என்றவரை ஏற்றிவிட்டுவிட்டு அம்போ என்று விட்டுவிட்டார். அதே போல் க்ளைமாக்ஸ் திருவிழா காட்சியும், ஒவ்வொரு நாளும் அருள் அவர்களிடம் மாட்டாமல் இருப்பது. ட்ராய் படத்தை ஞாபகப்படுத்துவது போல காத்திருந்து ஒத்தைக்கு ஒத்தை சண்டை போட்டு ஜெயிப்பது எல்லாம்.. கமர்சியல் சினிமா.. படம் பூராவும் தேவர், மறவர் வீரர் என்று உசுப்பேத்திக் கொண்டே இம்மாதிரி சண்டை போடுவது பின்பு தவறு.. என்று சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. எனிவே அடுத்த ஹிட்டை கொடுத்த பாண்டிராஜுக்கு பாராட்டுக்கள்.
வம்சம்- வளரும்.
கேபிள் சங்கர்
Comments
சூப்பர் விமர்சனம்...
ஒரு பாடல் நல்ல இருக்குனு சொல்றாங்க...
என்னமோ சினிமா காரங்களுக்கு இந்த மாதிரி தயாரிப்பாளர் இருந்தா கொண்டாட்டம் தான்.
நல்ல அலசல் பதிவு கேபிள்..
செகண்ட் ஆஃப் மொக்கை
வம்சம்- வளரும்//
தலைவரே,
சொல்லீட்டீங்க... பார்த்திட வேண்டியதுதான்....
பதிவுலகின் ரஜினி நீங்க.சொன்னா சரியாத்தான் இருக்கும்
---
டக்கிலா கதைலாம் பார்த்தா எனக்கு இவரு பதிவுலக கமல் மாதிரி இருக்கு.. நீங்க என்னன்னா ரஜினின்னு சொல்றீங்க :)
குதிர பந்தயத்தில் ஜெயித்த அல்லது தோற்ற?
என்னுடையது முதல்?
உங்களுடையது?
குதிர பந்தயத்தில் ஜெயித்த அல்லது தோற்ற?
என்னுடையது முதல்?
உங்களுடையது?
நீங்க என்ன சொல்ல வர்றீங்க?
புரியலையே..?
cablesankar
ரொம்ப நல்லா எடுத்து இருக்காரு. ஆனால் தயாரிப்பாளர் இழந்துட்டாரு.
சுமாரத்தான் இருக்கு. ஆனால் எப்படி ஜெயித்ததுங்றது ஆச்சரியமா இருக்கு.
தயாரிப்பாளர் முதல் திரை அரங்க முதலாளி வரைக்கும் சந்தோஷம்.
கமர்ஷியல் ஹிட்
கருத்து ஹிட்
இரண்டுக்கும் நடுவில்
இப்ப சொல்லுங்கள் உங்க விமர்சனப் பார்வையில வம்சத்தை எப்படி கொண்டு வருவீங்க.
இந்த நேட்டிவிட்டு எங்களப் போன்றவங்க வாழ்க்கையோட சம்மந்தப்பட்டது. இன்னும் நான் படம் பார்க்கலை. ப்ரிவ்யூ ஷோ பெருந்தலைகளுடன் பார்த்த நண்பன் சொன்னது சூப்பர் ஹிட் ஆகும்ன்னு.
நீங்க என்ன சொல்றீங்க.
entha வம்சம் வளரும்.?
Nalla vimarsanam.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
த எக்ஸ்பெண்டபிள்ஸ் (1947 – 2010 – ?!)
அதென்னவோ கரெக்ட்டுதான்
@மதன்
நன்றி
@மோகன்குமார்
கொஞ்சம்
@ரமேஷ் வைத்யா
அடுத்த வாட்டி கூட்டிட்டு போறேன்
@ஆர்.கே.சதீஷ்குமார்
பெரிய ஹிட்ட்னுன்னு சொல்ல முடியாது.
வாழ்க..
2பித்தன்
ம்
@பாரதி
ஒரள்வுக்கு
@விஜயமகேந்திரன்
நன்றி
ஏன் இவ்வள்வு அலுப்பு
@சி.பி.செந்தில்குமார்ர்
அஹா..
@காவேரி கணேஷ்
ம்
பார்த்திட்டு சொல்லுங்க
@மொஹமட்
எனக்கு அவ்வளவாக இம்ப்ரஸ் ஆகவில்லை.. கிஷோரின் எபிசோட்
ம்
@வழிப்போக்கன்
ஓகே
@இராமசாமி கண்ணன்
அஹா...
ம்
@ஜோதிஜி
உங்கள் கேள்விக்கெல்லாம்பதில் தெரிய ஒரு இரண்டு வாரமாவது ஆகும் ஜி
@வெடிகுண்டு வெங்கட்
ஓகே நன்றி
ஓகே பார்த்துட்டு சொல்லுங்க
2ஹரி
ஓகே
@கானவரோ
பார்க்கலாம்
@ஆண்மைகுறையேல்
நானும் அதைத்தான் சொல்லியிருக்கேன். செகண்ட் ஹாப் சுமார்ன்னு..