Thottal Thodarum

Dec 4, 2010

சிக்கு.. புக்கு

chikku-bukku-wallpapers-004
இந்த வருடத்தில் ஆர்யா நடித்து வரும் மூன்றாவது படம். முதல் இரண்டு படங்களின் வெற்றி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏகத்திற்கும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்ற கேள்விக்கு பதில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆர்யாவும், ஸ்ரேயாவும் லண்டனின் தனித்தனியே இருக்கிறார்கள். ஆர்யாவின் பூர்வீக வீடு கடனில் மூழ்கப்போவதை தடுக்க இந்தியா கிளம்புகிறார். ஸ்ரேயா.. தன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று ஊருக்கு கிளம்புகிறார். லண்டனிலிருந்து பங்களூர் வந்தவர்களுக்கு ஸ்ட்ரைக் காரணமாய் ப்ளைட்டுகள் இல்லாமல் போக.. ப்ளாக் டிக்கெட்டில் கணவன் மனைவியாய் ஒரே ட்ரைனில் பயணிக்க, டி.டி.ஆர். கண்டுபிடித்து இறக்கிவிட, நடராஜா சர்வீஸ், பஸ், சைக்கிள் என்று உலகில் உள்ள எல்லா ஊர்திகளிலும் பயணிக்கிறார்கள், இதற்கு நடுவில் சண்டைப் போட்டு, பிரிந்து, காதலித்து அவரவர் ஊர்களுக்கு போகிறார்கள். இவர்களின் காதல் ஜெயித்ததா? என்பது க்ளைமாக்ஸ்.

Chikku-Bhukku-Movie1
இந்த மெயின் கதைக்கு நடுவே ஒரு ப்ளாஷ் பேக்  இருக்கிறது. அதில் ஆரியாவின் அப்பா ஆர்யா (டபுள் ஆக்‌ஷனுங்கோ) அந்த ஊரில் உள்ள தமிழ் வாத்தியாரின் பெண்ணை காதலிக்க, வீட்டில் எதிர்க்கிறார்கள். அவளுடன் ஊரை விட்டு ஓடிப்போக முடிவு செய்து காத்திருக்கும் போது அவள் வராமல் போக.. ஆர்யா போலீஸ் ட்ரைனிங்கில் போய் சேர்ந்து விடுகிறார். அங்கே அறிமுகமாகும் ஒரு மாக்கான் நண்பன் அவனின் அத்தை பெண் மேல் காதலாகியிருக்க, தான் காதலிக்கும் பெண்ணும், அவன் அத்தை பெண்ணும் ஒருத்தியே  என்று தெரிந்து அவனுக்காக காதலியை விட்டுக் கொடுக்கும் கதையிருக்கிறது. இந்த இரண்டு கதையும் பாரலலாக படம் முழுவதும் ட்ராவல் செய்கிற திரைக்கதை.

ஆர்யாவுக்கு பையன் கேரக்டரை விட அப்பா ஆர்யா கேரக்டர் அம்சம். ஸ்கூலில் டி.இ.ஓவாக வந்து மீனாளை கலாய்க்கும் காட்சியிலும், வீட்டில் அறுபதாம் கல்யாண களேபரங்களின் நடுவே நடக்கும் ரொமான்ஸ் கூத்துக்கள் க்யூட்.. ஆனால் அந்த பெண்ணின் முகம் கொஞ்சம் கூட உணர்வுகளை பிரதிபலிக்க மாட்டேன்கிறது. காதலனை வெகு நாட்கள் கழித்து பார்க்கும் போது ஏன் என்னை காண்டேக்ட் செய்யலைன்னு கேட்கற போது கூட சாப்டியா? என்ற  பாவத்தில் முகத்தை வைத்துக் கொண்டு பேசினால் எப்படி காதல் கொப்பளிக்கும்?. முக்கியமாய் இந்த ப்ளாஷ் பேக் ட்ராக்கில் ஊட்டியில் ஏது போலீஸ் டிரைனிங்?. கண்ணாடி போட்டுக் கொண்டு இருப்பவர்கள் எப்படி போலீஸ் டிரைனிங்கில் சேர்ப்பார்கள்? உயிருக்கு உயிராய் காதலித்தவளை விட்டுக் கொடுக்கும் அளவுக்கு இவர்களது நட்பில் அவ்வளவு எமோஷனலாக ஏதும் இல்லையே..? அந்த பேக்கு நண்பனின் முகமே மனதில் ஏறாமல் எரிச்சலடையும் போது. அந்த கேரக்டர் மேல் எப்படி இன்வால்மெண்ட் வரும்?. ஆர்யாவுக்கு ஏன் அந்த கேரக்டர் மேல் பாசமும், நட்பும் பொத்துக் கொண்டு வர வேண்டும்?.

chiku
இன்னொரு கரண்ட் லைனான ஆர்யா, ஸ்ரேயா காட்சிகள் படு ஸ்லோ.. இம்மாதிரியான ட்ராவல் படங்களில் மிக இயல்பான நகைச்சுவை மிளிர வேண்டும், அதற்கு இரண்டு வேறுபட்ட கேரக்டர்கள் படத்தினுள் இருக்க வேண்டும். ஸ்ரேயா கேரக்டர் மேல் எந்த விதமான இன்வால்மெண்டும் வரக்கூடிய காட்சிகளே இல்லை. அது மட்டுமில்லாமல் அவர்கள் பேசும் டயலாக்குகள் படு அசுவாரஸ்யமாகவே இருக்கிறது. சாரி.. எஸ்.ராமகிருஷ்ணன் சார். ஆர்யாவின் நடிப்பில் கொஞ்சம் கூட  இன்வால்வ்மெண்ட் இருக்கவே இல்லை. ஸ்ரேயா மட்டுமே நடிக்க முயற்சி செய்திருந்தாலும் ரொம்பவும் அப்நார்மலான பெண்ணாய் தான் தெரிகிறாரே தவிர நார்மலாக இல்லை.. அதுவும் சில வருடங்களாய் தான் லண்டனில் இருக்கும் பெண் எனும் போது கொஞ்சம் ஓவர் அல்டாப்பாய் தான் தெரிகிறது. க்ளைமாக்ஸில் எப்படி சேரப் போகிறார்களோ என்ற பதைப்பு எழவு வர வேண்டாமோ..?

படத்தில் பாராட்டப் படவேண்டிய ஒருவர் ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ். லண்டனாகட்டும், கூர்க், மற்றும் இந்திய மலைப் பிரதேசங்களாகட்டும், ப்ளாஷ் பேக் காரைக்குடி, ஊட்டியாகட்டும் சும்மா மனசை அள்ளும் வகையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இசை ஹரிஹரன் – லெஸ்லி  பின்னணியிசை பிரவீன் மணி.. இரண்டு பேருமே மிகப் பெரிய லெட் டவுன்.  இம்மாதிரியான படங்களுக்கு மிகப் பெரிய பலமே பாடல்களும், பின்னணியிசையுமாய் தான் இருக்க வேண்டும் இந்த ரெண்டுமே கவிழ்த்துவிட்டதால் பாதி புஸ்..

Chikku-Bukku _11_
எழுதி இயக்கிய மணிகண்டன். ஜீவாவின் உதவியாளர். தாம்தூமை ஓரு வழியாய் ஜீவாவுக்கு பிறகு முடித்தவர். ஜீவாவிடம் ஒரு நல்ல பழக்கமிருந்த்து, அவர் இன்ஸ்பயர் ஆகும் படங்களை மிக அழகான விஷுவல், மற்றும் இசையால் இன்வால்வ் செய்துவிடுவார். அவரது உள்ளம் கேட்குதே, 12பி, தாம் தூம் போன்றவை இன்ஸ்பிரேஷன் படங்களாய் இருந்தாலும் அவரின் இம்பாக்ட் இருக்கும். நீங்கள் இன்ஸ்பயரான கிளாஸிக்கில் இருக்கும் அந்த காதலும், ரொமான்ஸும் இப்படத்தில் இல்லவே இல்லை.. மற்ற டிபார்ட்மெண்டான வசனம், இசை ஆகியவை கைவிட்டிருந்தாலும், உங்களது திரைக்கதை கைவிடாமல் இருந்திருந்தால் ஆர்யாவுக்கு, ஹாட்ரிக்கும், உங்களுக்கு முதல் ஹிட்டாகவும் அமைந்திருக்கும்..

சிக்கு.. புக்கு – ட்ரையின் கிளம்பவேயில்லை.

டிஸ்கி: நாளை காலை கலைஞர் டிவியில் “நாளைய இயக்குனர்” நிகழ்ச்சியில் என்னுடய கதை, திரைக்கதை, வசனத்தில், நண்பர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான “போஸ்ட்ர்” என்கிற குறும்படம் காலை. 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

மதியம் நான், மணிஜீ, பலாப்பட்டரை, விந்தை மனிதன், கே.ஆர்.பி, ஜாக்கி கலந்து கொண்ட நந்தலாலா படம் பற்றிய ஒரு கலந்துரையாடல். விஜய் டிவியில் மதியம்2.00 மணிக்கு..  ஒளிபரப்பாகிறது. காணத் தவறாதீர்கள்.
கேபிள் சங்கர்
Post a Comment

40 comments:

vinu said...

me firstuuuuuuuu

Unknown said...

அண்ணா அப்படியே இணையத்தில் தரவேற்றம் செய்யுங்கள்.என்னை போன்றவர்களுக்கும் பார்க்க வாய்ப்பாக அமையும்.ஆப்கானிலிருந்து எதிர்பார்ப்புடன் நந்தா....

காதலன் said...

மிக விரிவான பார்வை.. விமர்சனத்திற்கு நன்றி

CrazyBugger said...

riteu

மாணவன் said...

வழக்கம்போலவே விமர்சனம் அருமை உங்கள் பார்வையில்...

தொடரட்டும் உங்கள் பணி

மாணவன் said...

//
டிஸ்கி: நாளை காலை கலைஞர் டிவியில் “நாளைய இயக்குனர்” நிகழ்ச்சியில் என்னுடய கதை, திரைக்கதை, வசனத்தில், நண்பர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒளிபரப்பப்படும் “போஸ்ட்ர்” என்கிற குறும்படம் காலை. 10.30 மணிக்கு.

மதியம் நான், மணிஜீ, பலாப்பட்டரை, விந்தை மனிதன், கே.ஆர்.பி, ஜாக்கி கலந்து கொண்ட நந்தலாலா படம் பற்றிய ஒரு கலந்துரையாடல். மதியம்2.30 மணிக்கு.. காணத் தவறாதீர்கள்.//

மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து.........

வல்லிசிம்ஹன் said...

நல்ல வேளை நீங்கள் முன்னாலியே சொல்லிவிடுவதால் கொஞ்ச நஞ்ச ஆசையும் போய்விடுகிறது.
படத்தைவிட விட உங்கள் விமர்சனம் சுவையாக இருக்க இருக்கிறது. வாழ்த்துகள் சங்கர். நாளை கட்டாயம் குறும்படம் பார்க்கிறேன்.

Anonymous said...

இரண்டாவதும் கலைஞர் t v யில் தானே ? அவசியம் பார்க்கிறேன்.

Cable சங்கர் said...

illai.. vijay tvla..

ஜி.ராஜ்மோகன் said...

தலைவா! விமர்சனம் சூப்பர் !

"உங்களது திரைக்கதை கைவிடாமல் இருந்திருந்தால் ஆர்யாவுக்கு, ஹாட்ரிக்கும், உங்களுக்கு முதல் ஹிட்டாகவும் அமைந்திருக்கும்.. "
என்ன பண்றது கொடுத்து வச்சது அவ்வளவு தான்!
நாளை 10 .30 மணி ,2 .30௦ மணி வெகு ஆவலோடு எஎஎதிதிதிர்ர்ர் பார்க்கிறேன். http://grajmohan.blogspot.com

CS. Mohan Kumar said...

அல்லோ ரெண்டாவது ப்ரோகிராம் விஜய் டிவி-ன்னா ஒழுங்கா அங்கேயே சொல்லணும். ஓகே??

Thirumalai Kandasami said...

சிக்கு புக்கு - புகை விட்டுருச்சுனு சொல்லுங்க .

http://enathupayanangal.blogspot.com

Thirumalai Kandasami said...

Thala,
Naliya iyakkunar is a recorded show.I think,you already got some good comments from Madhan,Prathab during recording..


So that,,you are publishing here.Am I correct?

Wait and See.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

நல்ல விரிவான விமர்சனம். அந்த குறும்படத்தையும் உங்களின் கலந்துரையாடலையும் இங்கு பதிவு செய்தால் என்னை போன்று பார்க்க இயலாதவர்களுக்கு உதவியாக இருக்கும்.

Thirumalai Kandasami said...

Hi கனாக்காதலன்,

Hope you know,
It's possible to download that show(after telecast) from this site..

http://www.techsatish.com/

Thirumalai Kandasami said...

http://www.techsatish.net/2010/04/tv-shows-index.html

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

நன்றி திருமலை கந்தசாமி !

'பரிவை' சே.குமார் said...

மிக விரிவான பார்வை.. விமர்சனத்திற்கு நன்றி

வினோ said...

அண்ணா ரெண்டையும் பார்தறேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மதியம் நான், மணிஜீ, பலாப்பட்டரை, விந்தை மனிதன், கே.ஆர்.பி, ஜாக்கி கலந்து கொண்ட நந்தலாலா படம் பற்றிய ஒரு கலந்துரையாடல். விஜய் டிவியில் மதியம்2.30 மணிக்கு.. ஒளிபரப்பாகிறது. காணத் தவறாதீர்கள்.//

முதல்லையே சொல்ல மாட்டேங்களா. நாளைக்குதான் சிக்குபுக்கு போறேன்

பனித்துளி சங்கர் said...

இன்னும் படம் பார்க்கவில்லை தல . உங்களின் விமர்சனம் மிகவும் அருமை .

shabi said...

mahilchi padam patri yean vimarsanam yaarum podavillai

சி.பி.செந்தில்குமார் said...

விமர்சனம் டாப்,நாளை டி வி புரோகிராம் பார்க்கறேன்

சிவராம்குமார் said...

நாளைக்கு புரோகிராம் பார்த்திடலாம்.... படம் அவ்ளோதான்,,,,

Unknown said...

ரொம்ப நல்ல விமர்சனங்க.. நன்றி..

pichaikaaran said...

நந்தலாலா சர்ச்சை, நர்சிம் "நச்" விளக்கம் - தாக்கம் இன்றி படைப்பு இல்லை

taaru said...
This comment has been removed by the author.
taaru said...

குறும்படத்துக்கான நல்ல கதை... ரொம்ப அழகான கதை... பயங்கர நக்கல்....பின்னிட்டீங்க... ஒரு சின்ன டவுட்...அந்த phone diary ல இருக்குற மடம் போன் நம்பர் யாரு ஐடியா?? அனேகமா நீங்க தான்னு நினைக்குறேன்.. நல்ல விளக்கவும்...

Dr. A. said...

very nice comedy...!!!! Really enjoyed and laughed at the end..!!! Kudos to the screenplay..!

Unknown said...

congrats to ur team for best film of the week in Nalaiya Eyakkunar-by gomathi

sivaG said...

ur short film was very good.

வெற்றி நமதே said...

போஸ்டர் திரைவிமர்சனம்

வெற்றி நமதே said...

போஸ்டர் திரைவிமர்சனம்



போஸ்டர் திரைவிமர்சனம்

RK நண்பன்.. said...

சிக்கு.. புக்கு – ட்ரையின்
கிளம்பவேயில்லை.

ரொம்ப எதிர்பார்தேன்,, சோதப்பிட்டங்களே ...

good review anna..

RK நண்பன்.. said...

கேபில் அண்ணா, விஜய் டிவியில் கலந்துகொண்டதுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள், மேலும் விரைவில் சிறந்த இயக்குனராக வெற்றியடய வாழ்துக்கள்..

நாண் இத்துணை நாட்களாக உங்கள் பிளாகில் வாசிப்பதோடு சரி கமெண்ட் போட்டதே இல்லை & ஃபாலோ பண்ணவும் இல்லை.. இன்றுதான் உங்களின் போலோவர் ஆக சேர்ந்துள்ளேன், கொம்மெண்டும் பதிவு செய்துள்ளேன்... உங்களுக்கு நாண் அனுப்பிய மின்னஞ்சல் ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன்...

செந்தில் அண்ணா, ஜாக்கி அண்ணா மற்றும் நீங்கள் பங்குகொண்ட நிகல்சியை பார்க்க ஆவலாக உள்ளேன்... இனிமேல்தான் அலுவலகம் முடிந்த பின் ஆன்லைன் ல பார்க்கணும்

கடைக்குட்டி said...

உங்க ஷார்ட் ஃபிலிம் பார்த்தேன்...

போலீஸ்னு சொன்ன உடனே எல்லாரும் .. “நான்.. அன்புச்செல்வன்.. அவன போடணும்...” இப்பிடி பேசி பேசி காக்க காக்க பாதிப்புலேயே அனைத்து படங்களும் இருந்தன..

உங்க களம்.. அழகா இருந்தது.. உண்மைக்கு ரொம்ப பக்கத்துல இருந்தது...

ஆனா போலிசா நடிச்சவர் இன்னும் ஒழுங்க பண்ணி இருக்கலாமோனு ஒரு எண்ணம்.. அவர் கொஞ்சம் தன்னம்பிக்கை இல்லாதது போல் நடித்து இருந்தார்.. அவர் நடிக்கிறார்ன்றது தெரிஞ்சது.. (உங்க மேல தப்பு இல்ல.. ஆனா சொல்லனும்னு தோணுச்சு..)

அடுத்த படைப்புல இன்னும் கலக்குங்க.. பாலச்சந்தர் சொன்ன மாதிரி இன்னும் சீரியஸான புதுசான கதைக்களங்களில் கலக்கவும் :-)

வாழ்த்துக்கள் !! திரைக்கதையாசிரியராய் ஜெயிச்சுட்டீங்க!!

Marimuthu Murugan said...

ஆர்யாவின் முதல் Dual ரோல் படம்
ஆனா பிளாப் ..


//சிக்கு.. புக்கு – ட்ரையின் கிளம்பவேயில்லை//

Unknown said...

nice movie review post.i think it will be a great chartbuster.

Muthu Pandi said...

Hello Boss,
Nanum Parthen POSTER short film, nalla irrunduchhu anna nadichavanga naddippu, naddipunnu theriyiramadiri irrunduchhu aana neenga direction illaigradunalla thapichiteenga......

நிலவுக்காதலன் said...

its remake of Korean movie The classic.. in that the friendship wud be shown in depth.. inga sothappitanga :)