Thottal Thodarum

Mar 26, 2012

கொத்து பரோட்டா 26/03/12

புதிய தமிழ் படங்களே ரிலீசான நாள் முதல் காத்து வாங்கிக் கொண்டிருக்கும் போது அறுபதுகளில் வந்த கர்ணன் இரண்டாவது வாரம் சாந்தியில் மதியக் காட்சி ஹவுஸ்புல் போர்டு போட்டிருந்தது ஆச்சர்யமளித்தது. தியேட்டர் மேலாளர் தெரியுமென்பதால் குசலம் விசாரித்தேன். சமீப காலத்தில் பெரிய நடிகர்கள் படங்கள் கூட ஹவுஸ்புல் ஆனதில்லை. ஆனால் கர்ணன் இரண்டு வாரமாக ஹவுஸ்புல்லாய் ஓடிக் கொண்டிருக்கிறது என்றார். இந்த போர்டை தொடர்ந்து வாரக்கணக்கில் மாட்டியே பல வருடங்கள் ஆகிவிட்டதாக சொன்னார். பார்க்கிங்கில் இருந்தவர் முகம் முழுக்க பல்லாய் ரொம்ப நாளாச்சு இவ்வளவு வண்டிய ஒட்டுக்கா பார்த்து என்றார். காண்டீன் காரர்களின் முகப் பொலிவை சொல்ல வேண்டியது இல்லை. இப்படி பல பேருக்கு மீண்டும் ஒரு நம்பிக்கையை, கொடுத்து சிவந்த கர்ணன் படம் மூலம் நடந்திருப்பது ஒரு சிங்க் என்றுதான் சொல்ல வேண்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@

விரைவில் வெளிவர இருக்கும் மசாலா கஃபேவிற்கு பிறகு நான் வசனமெழுதியிருக்கும் கந்தக்கோட்டை சக்திவேலின் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் பொள்ளாச்சியில் ஆரம்பமாகிறது.. இளைமையான காதல் கதை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அந்தா இந்தா என்று கூடங்குளத்தை ஆரம்பித்துவிட்டார்கள். ஆளாளுக்கு ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும், வலையுலகத்திலும் உதயகுமாரைப் போல போராடிக் கொண்டிருந்த வேகத்தை அம்மாவின் தீர்மானம் காலியாக்கிவிட்டது. இன்னொரு பக்கம் போராட்டம் வலுவாகிக் கொண்டிருக்கிறது. இதே வேலையை கலைஞர் செய்திருந்தால் ஊர் நெடுக போராட்டம் அது இதுவென பெரிய ப்ரச்சனையை முன்னெடுத்திருப்பார்கள். ஒரு வேளை வெய்யில் காலத்தில எதுக்கு ஜெயிலுக்கு எல்லாம் போயிட்டு என்று யோசித்திருப்பார்களோ? என்னவோ? என்னைப் பொறுத்த வரை அணு சக்தியின் மூலமாய் எந்த நல்லது வந்தாலும் வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த பவர் கட் படு மோசமாயிருக்கிறது. வழக்கமாய் போகும் இரண்டு மணி நேரம் இல்லாமல் நேற்று முழுவதும் பல முறை பவர் கட். அதுவுமில்லாமல் இரவு பத்து மணியிலிருந்து நள்ளிரவுவரை பவர் இல்லை. ஏதோ ஒயர் எரிந்துவிட்டது என்றார்கள். இரவில் பார்க்க முடியாது என்று கைவிரித்துவிட்டுப் போக தெருவில் உள்ளவர்களின் தொடர் இம்சையால் ஒரு வழியாய் இரண்டு மணிக்கு வந்தது பவர். பேசாம கரண்ட் இல்லாத நேரத்தில பவர் ஸ்டாரை கடத்துனா கரண்டு வந்திருமா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சாந்தி தியேட்டர் வளாகத்தில் உள்ள சரவணபவனின் வாசலில் ஒரு இளைஞர் கருத்து நோஞ்சானாய் இருந்த ஒரு பையனின் சட்டையை பிடித்து இரண்டு பெண்கள் முன்பு ஸ்டைலாய் அடித்துக் கொண்டிருந்தார். இரண்டு பெண்கள் முகத்திலும் கோபம் தாண்டவமாடியது. அந்த ஒல்லிப்பிச்சானை அடிக்கும் போது கண்களை சுருக்கி, முகத்தை சுளித்தார்கள். என்னடா சொன்னே? என்னாடா சொன்னே? என்று கேட்டு கேட்டு அடித்தார் அந்த இளைஞர்.  இல்லீங்க.. சும்மா ஜாலியாத்தான் சொன்னேன். என்னாடா சொன்னே? என்று திரும்பவும் அடித்தார். அவன் தயங்கி தயங்கி “ரொம்ப சாப்பிடாதீங்க குண்டாயிரப் போறீங்கன்னேன்” என்றான். அதை சொன்னதும் மீண்டும் ஒரு அடி அடிக்க, இரண்டு பெண்களில் ஒல்லியாக இருந்தவள் போலீஸுக்கு போன் பண்றேன் என்று ஐ போனை எடுத்தாள். அதற்குள் பையன் சாரி மேடம் தெரியாம் சொல்லிட்டேன்.. தெரியாம சொல்லிட்டேன் என்று கெஞ்ச, இளைஞன் கொஞ்சம் யோசித்து, மீண்டும் அவன் தலையின் பின் அடித்து, கால்ல விழுந்து மன்னிப்பு கேளூடா என்றான். அவனும் சட்டென இரண்டு பெண்களின் கால்களை தொட்டு மன்னிப்புக் கேட்க கிளம்ப, கடைசியாய் முதுகில் ஒரு அடியோடு விடுவிக்கப்பட்டான். இளைஞனும், இரண்டு பெண்களும் ஹோட்டலுக்குள் நுழைய, பின்னால் கூட்டத்தில் இருந்தவர்களில் சில சத்தமாக  கொஞச்ம் குண்டாக இருந்த பெண்ணைப் பார்த்து “அவன் சொன்னது ஒண்ணும் தப்பில்லை என்று சொல்ல, அதைக் கேட்ட அவர்கள் ஒரு நிமிடம் நின்று திரும்பிப் பார்த்துவிட்டு,  அவன் சொன்னதென்னவோ சரிதான் என்று இளைஞன் குண்டுப் பெண்ணைப் பார்த்துச் சொல்ல, அவள் அழகு காட்டி சிரித்து.. “யூ..டூ” என்றாள். பாவம் அந்த கருத்த ஒல்லிப்பையன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
சிட்டுக்குருவி அழிந்து போனதற்கும் சிட்டுக்குருவி லேக்கியத்திற்கும் சம்பந்தமிருக்கிறதோ?
மெச்சூரிட்டி என்பது பெரிய விஷயங்களை பேசுவது இல்லை. சிறிய விஷயங்களை சரியாக புரிந்து கொள்வதுதான்.

நான் எப்போதுமே ஆட்டத்தை கலைத்துவிடுவேன் நான் தோற்கப்போகிறேன் என்ற நிலை வரும் போது.


வார்த்தைகள் உன் உணர்வுகளை காயப்படுத்தும், ஆனாம் மெளனம் இதயத்தை உடைக்கும்.


உன்னை துன்பத்தில் ஆழ்த்தும் நண்பணுக்காக அழாதே சிரித்தபடி உன்னை விட சிறந்த நண்பனை அடைய ஒரு வாய்ப்பை கொடுத்தற்கு நன்றி சொல்.


அழுவது என்பது உன் மன தைரியமில்லாதவர் என்பதை பறைசாற்றும் விஷயமல்ல. நாம் உயிருடன் இருக்கிறோம் என்று பிறந்ததிலிருந்து காட்ட பழகிய வழி


கனவில் கூட செய்ய முடியாதை கனவு காண்


தனியாய் இருக்கும் போது ஜோடிகள் எல்லாம் சந்தோஷமாய் இருப்பது போல் தோன்றுகிறது. தனியாய் இருக்கும் போது வைஸ்வர்ஸா..


சில சமயம் நண்பர்களிடம் ப்ரஸ்தாபிபதற்காக நாம் விடும் பீலாக்களை குடும்பத்தில் உள்ளவர்கள் நம்பி நமக்கே ஆப்பாவது கொடுமை.


மன்னிப்பு கேட்பதால் நம் மீது தவறு என்று அர்த்தம் கிடையாது. அவர்களுடய அன்புக்கு உறவுக்கு நம் சுயத்தை மீறி அவ்வளவு மதிப்பு கொடுக்கிறோம் என்பதாகும்.


வாழ்க்கை ஒரு பாக்ஸிங் போட்டி போல. கீழே விழுந்தவனை தோற்றவனாக அறிவிப்பதில்லை வீழ்ந்து எழாதவனையே. 

@@@@@@@@@@@@@@@@@@@@@@
கர்ணனின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து அரசகட்டளையை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். இனி வெளிவரப் போகும் எல்லா பழைய பட விளம்பரங்களிலும் இந்த வரி இல்லாமல் இருக்காது. பட் அப்படி ஏதும் செய்யப்படாத படமாகவே தான் வெளிவரும். எனக்கென்னவோ கர்ணன் போல பெரிய பப்ளிசிட்டி எல்லாம் கொடுத்து மீண்டும் ரீரிலீஸ் செய்தாலும் ஒன்றும் பெரிதாய் நடக்காது என்று தோன்றுகிறது. எல்லாருக்கும் ஒரு சின்ன மாறுதல் தேவை. அதை கர்ணன் கொடுத்திருக்கிறது. எல்லா படங்களுக்கும் இதே ரிசல்ட் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.  எம்.ஜி.ஆர் படங்களில் உலகம் சுற்றும் வாலிபன், சிவாஜியின் தில்லானா மோகனாம்பாள், போன்ற வெகு சிலப் படங்களுக்கே இம்மாதிரியான ரீரிலீஸ் ஒர்க்கவுட் ஆகும் என்று தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
கிட்டத்தட்ட காதலில் சொதப்புவது எப்படி போலவே இருந்தாலும் காதல் எப்போதும் சுவாரஸ்யம்தான். அப்படி சுவாரஸ்யமான ஒரு சின்ன குறும்படம். என்ன குறும்படத்தில் சினிமாவின் தாக்கம் அதிகம். பாடலெல்லாம் இருக்கிறது. நல்ல விஷுவல்ஸ், டீசண்டாய் இருக்கிற படமிது. டைம் பாஸ் குறும்படம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
தேவ் ஆனந்தின் படங்களில் பாடல்கள் எல்லாம் பெப்பியான கிளாஸிக்கல் பாடல்களாய் அமைந்தது ஒர் வரம் என்றே சொல்ல வேண்டும். அப்படியான ஒரு பாடல் தான் இந்த சோல்வா சால் படப் பாடல். ஹேம்ந்த் குமாரின் குரலில் லெஜெண்ட் எஸ்.டி.பர்மனின் இசையில் ஒரு க்ளாஸிக். பாடலின் நடுவில் வரும் மவுத் ஆர்கனும், ஹார்மோனிக்காவும், அட்டகாசமாயிருக்கும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஹைதர் காலம். கோபி செட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு இசைக்கூடத்தின் பெயர். நிஜமாகவே ஹைதர் காலத்து பாடல்களை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்களாம். அது மட்டுமில்லாமல் தலைவர்களின் முழு நீள பேச்சுக்கள் அடங்கிய சிடிக்கள் கொட்டிக் கிடக்கிறதாம். ஒவ்வொன்றும் முத்துக்கள்.  எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பேச்சாளர்கள், ஆன்மீக பேச்சாளர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோரின் பேச்சுக்கள் அடங்கிய சிடி ஒன்று என்பது ரூபாய்தானாம். இயக்குனர் பத்ரி மூவாயிரம் ரூபாய்க்கு அள்ளி வந்திருக்கிறார். சாவகாசமாய் ஒவ்வொன்றாய் எடுத்து வந்து கேட்க வேண்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மை கார்னர்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
ராஜா போருக்கு போகும் முன் தன் இளம் மனைவியின் கற்பை காப்பாற்ற மந்திரியிடம் ஐடியா கேட்க, அவர் அந்த இடத்தில் ஒரு ப்ளேடை வைத்தால் யார் முயற்சி செய்தாலும் கட் ஆகிவிடும் என்று சொல்ல, அவரும் அந்த அகுடியாவை ஓகே சொல்லி செயல்படுத்தினார். போருக்கு சென்று சில வருடங்களுக்கு பிறகு திரும்பிய மன்னர் எல்லா ஆண்களின் டவுசரை உருவி அவர்களின் லுல்லாவை பார்க்க எல்லோருடையதும் துண்டாகியிருக்க, மந்திரியின் லுல்லா மட்டும் மாசு மருவில்லாமல் இருந்தது. சந்தோஷப்பட்ட மன்னர் உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்க மந்திரி “பே..பே” என்றார்.


Post a Comment

14 comments:

Manimaran said...

CHINNA...CHINNA..SONGS SUPERB!!!!!!

Anonymous said...

'சின்ன சின்ன தூறல் மின்ன'...பெத்த அடைமழை கண்ணில் வழிந்தோடுவதை தடுக்க வழியின்றி தவிக்கிறேன்.

Seetha said...

shankar Sir,

Waiting for your STORY. Pls post it ASAP.

பாண்டி-பரணி said...

அனுவினால் x-ray, Digital scan Mri scan, Atom bomb,Atom Ship

arul said...

it seems kudankulam plant will be started in 3 months even if the public severely oppose it. safety will be a big concern for all people.

விஜய் said...

அண்ணா, சென்னையில் மின்வெட்டே இல்லாமல் இருந்தாலும் பேருக்கு ஒரு மணி இரண்டு மணி நேரம் மின்வெட்டு. சென்னையை தாண்டினால் எட்டு ஒன்பது மணி நேரம் மின்வெட்டு. பகலில் தொழிற்சாலையை முழு அளவுக்கு ஓட்டமுடியாமல் இராத்திரியில் மின்விசிறி இல்லாம தூங்கமுடியாமல் தவிக்கும் எங்களுக்கு அணு உலை பற்றி கொள்கை பெசமுடிவதில்லை. அது என்ன அண்ணா சென்னைவாசிகள் மட்டும் உயர்குடி மக்களா....

N.H. Narasimma Prasad said...

அருமையான பதிவு அண்ணே. ஆனா நீங்க சொன்ன அடல்ட் கார்னர் கதை ரொம்ப பழசு. இதை நான் பத்தாவது படிக்கும்போதே கேட்டு சிரிச்சிருக்கேன்.

R. Jagannathan said...

ஐடியா சொன்ன மந்திரி மாங்கா மடையனாயிருந்திருப்பான் போல!

அணு உலை அவசியம், வேறு வழிகள் இல்லாத போது. இத்தனை அணு உலைகள் இந்தியாவில் உள்ளன, இப்போது மட்டும் என்ன பிரச்சனை? ஃபுகூஷிமா சம்பவம் இந்தத் துறையில் இருப்பவர்களுக்கும் தெரியும், அரசாங்கத்துக்கும் தெரியும். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவிட்டோம் என்று சொன்னால் நம்ப வேண்டும்.

சில வருஷங்களுக்கு முன் ஹிந்தியில் மொகல்-ஏ-ஆஸம் படத்தை கலர் செய்து வெளியிட்டபோதும் பரபரப்பு இருந்தது; ஆனால் மற்ற பழைய படங்கள் அந்த மாதிரி மாற்றப்பட்டதாகத் தெரியவில்லை. இங்கும் அப்படித்தான் ஆகும்.

மன்னிப்பு கேட்பதற்கு தன் சுயத்தை மீறிய பயமும் காரணமாயிருக்கலாம்!

அந்த கம்மென்ட்டை மீண்டும் கேட்பதற்காகவே ஒல்லிப்பிச்சானை அடித்தானோ!(சாந்தி தியேட்டர் குண்டுப் பெண்!)

-ஜெ.

R. Jagannathan said...

இந்த லிங்கில் சில தமிழ் பேச்சுகள் கிடைக்கும். - ஜெ.

CS. Mohan Kumar said...

ஒரு ஆண் அடி வாங்கிருக்கார் பாத்துட்டு சும்மா வந்துருக்கீர்.

போட்டோவில் இருக்கும் ஹீரோயின் புதுமுகமா?பேர் என்ன? படத்தில் பார்த்த மாதிரி இல்லை

முஹம்மது யூசுப் said...

அந்த அடி வாங்கிய ஆள் சற்று சிவப்பு நிறமாகவும், விலையுயர்ந்த ஆடை அணிந்தவராகவும் இருந்திருந்தால், கூடவே, அதே விஷயத்தை ஆங்கிலத்தில் சொல்லியிருந்தால், அங்கு நடந்த நிகழ்வுகள் வேறு விதமாக அமைந்திருக்க வாய்ப்பிருக்கிறது..

ponsiva said...

உங்கள் கேட்டால் கிடைக்கும் எல்லாம் வெரும் பிஸாவிற்க்கும் சாப்பாட்டுக்கும் தான.. ? அந்த அடித்த பய புல்லைய நாலு வார்த்தை நறுக்குனு கேட்டு இருக்கனும்.

நந்தாகுமாரன் said...

அட உங்கள் குரல் வளமும் நன்றாக இருக்கிறது ...

நந்தாகுமாரன் said...

கிட்டத்தட்ட SPB தான்