Thottal Thodarum

Dec 22, 2012

சட்டம் ஒரு இருட்டறை

முப்பது வருஷத்துக்கு முன்னாடி எஸ்.ஏ.சி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்து வெளியான ஹிட் படம். விஜய்காந்துக்கு ஒரு மார்கெட்டை உருவாக்கிய படம்  இப்படி பல பெருமைகளை கொண்ட சட்டம் ஒரு இருட்டறை மீண்டும் அதே ஹிட்டை தந்திருக்கிறதா?


அப்போது படம் வந்த நேரத்தில் இந்தக்கதை ஒரு புதுவிதமான கதைதான். ஹீரோ கொலையாளி, அக்கா போலீஸ் ஆபீஸர். சொந்த அக்காவே தன் தம்பியை கைது செய்ய அலைகிறார். ஆனால் சட்டத்தின் முக்கிய ஓட்டையான சாட்சி என்கிற ஒன்றை வைத்து ஹீரோ க்ளைமாக்ஸ் வரை எப்படி சொந்த அக்காவையே ஆட்டம் காட்டி குடும்பத்தை கொன்றவர்களையோ, அல்லது காதலியையோ என்று மறந்து போய்விட்டது அவர்களை கொலை செய்து பழிவாங்குகிறார்.  ஆனால் இதுவே முப்பது வருசத்துக்கு முன்னாடி ஐடியா.. அதை இப்போது தூசி தட்டினால் எப்படி இருக்கும் தும்மல் வருமா? வராதா?

இசை விஜய் ஆண்டனியாம். டைட்டில் மியூசிக்கே முப்பது வருஷத்துக்கு முன்னால் போடப்பட்ட இசை போலவே இருந்தது.ஏதோ ஒரு பாடல் மட்டும் ஓகே என்று தோன்றியது. அதுவும் பியாவின் துள்ளல் காரணமாய். ஒளிப்பதிவு சி.ஜே.ராஜ்குமார். ரெட்ஸ்கார்லெட்டில் படமாக்கியதாய் சொன்னார்கள். ஹாங்காங் காட்சிகள் நன்றாக இருந்தாலும் டி.ஐ.யில் ஏதோ பிரச்சனையிருக்கிறது. கொஞ்சம் கவனித்திருக்கலாம். ஒரு ஸ்மூத் விஷூவலாய் இல்லாமல் இருக்கிறது.

அக்காவாக ரீமாசென். விஜய்காந்த் ரேஞ்சுக்கு போலீஸ் ட்ரெஸுக்கு மேல் காக்கி ஓவர் கோட்டெல்லாம் போட்டு ஹைஸ்பீடில் நடந்து வருகிறார். பிந்து மாதவியை பார்த்துக் கொண்டிருந்தாலே போதையாய் இருக்கிறது. சொற்ப காட்சிகளில் வந்தாலும் பியா துள்ளல். ஹீரோவாக ஆச்சர்யங்கள் படத்தில் நடித்த தமன். கொஞ்சம் நடிக்க முயற்சிக்கிறார். இவருக்கும், பியாவுக்குமான ஹாங்காங் மீட்டிங்கில் இருவருக்குமான ஒரே டயலாக் சண்டைகள் சுவாரஸ்யம். பட்... இவர்களின் காதலில் டெப்த் இல்லாததால், பியாவின் கொலை படத்திற்கும் சரி, படம் பார்க்கும் நமக்கும் சரி எந்த விதமான இம்பாக்டையும் கொடுக்காததால் இம்பூட்டு கஷ்டப்பட்டு பழிவாங்குவது விழலுக்கு இறைத்த நீராய் இருக்கிறது. வில்லன்களாய் சுரேஷ், ராதாரவி என்று வெரி யங் ஆட்களைப் போட்டிருப்பதால் முப்பது வருஷ படம் என்பதை மறக்கடிக்கிறார்கள். போலீஸ் கஸ்டடியில் அவர்கள் சீட்டு ஆடிக் கொண்டு பேசும் காட்சிகள் எல்லாம் அபத்த உச்சம். படத்திற்கு வசனம் ரூபன். படம் நெடுக பேசினதையே பேசிக் கொண்டிருக்கிறார்கள். யார் எதைப் பேசினாலும் ரெண்டு தடவை விட்ட இடத்திலேர்ந்து மீண்டும் பேசுகிறார்கள். நிறைய ஓவர்லாப் வசனங்கள். ஷூட்டிங்கில் கவனிக்கபட வேண்டிய விஷயம் அட்லீஸ்ட் டப்பிங்கின் போதாவது சரி செய்திருக்கலாம். டெக்னிக்கலாகவும் வெரி புவர் எக்ஸிக்யூஷன்.
கதை, திரைக்கதை, க்ரியேட்டிவ் ஹெட் என்ற தலைப்பில் எஸ்.ஏ.சியின் பெயரைப் போட்டிருக்கிறார்கள். சினிமா கம்பெனிக்கோ, அல்லது ஒரு சீரியல் கம்பெனிக்கோ க்ரியேட்டிவ் ஹெட் என்ற தலைப்பு ஓகே. ஆனால்  சினிமாவுக்கு எதற்கு இந்த பொஸிஷன் என்று தெரியவில்லை. கதையில் என் ஞாபகத்தில் அவர்கள் மாற்றியுள்ளது பழிவாங்கலுக்கான காரணம் மட்டுமே. மற்றபடி அதே அரைத்த மாவுதான். கதை, திரைக்கதை வசனம், எல்லாம் செய்தால்தான் இயக்குனர் என்று தமிழ் சினிமாவில் ஒரு எண்ணம் உண்டு, ஆனால் ஒரு இயக்குனர் தான் அவர்களின் எழுத்தை விஷுவலாய் வெளிக் கொண்டு வருகிறவர். அந்த வகையில் இப்படத்தின் இயக்குனர் சிநேகா பிரிட்டோ பயணப்பட வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.
கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

Unknown said...

அப்பா போலீஸ் அதிகாரி. குடும்பத்தைக் கொன்றவர்களை ஹீரோ பழிவாங்குகிறார். சன் டீவியில் ஏழெட்டு வருஷத்துக்கு முதல் பார்த்தது!

அய்யய்யோ.. அது 'சட்டம் ஒரு விளையாட்டு!' - அதுவும் எஸ். ஏ. சி. படம்ல!
:-)

குரங்குபெடல் said...



" தமிழ் நாடு ஒரு இருட்டறை "

பேரு வெச்சிருந்தா ஹிட் ஆயிருக்கும்

Creative Head SAC

making Head Ache . . .

muthu123 said...

Sir, waiting for kalla thuppakki review.