Thottal Thodarum

Dec 28, 2012

CZ12


ஜாக்கி சான் உலகளவில் பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்ட ஒரு நடிகர். இவரது படத்தை விரும்பாதவர்கள் கூட இவரது நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் நடிப்புக்காக விரும்புவார்கள். படிக்கும் காலத்தில் அலங்காரில் ஜாக்கிசான் படம் வெளியான நாளே பார்த்த இம்பாக்ட்டில் அவரைப் போலவே ஓடுவதாய் நினைத்து பஸ்ஸில் புட்போர்ட் அடித்த காலெமெல்லாம் உண்டு. அப்படி ஒவ்வொருவருக்கும் என்னதான் புதிய ஹீரோக்கள் வந்தாலும் இன்றைக்கும் இவருக்கு ரசிகர்கள் பெருகிக் கொண்டுதானிருக்கிறார்களே தவிர குறையவில்லை. அப்படிப்பட்ட ஜாக்கிசான் இனியும் அடிப்பட உடலில் இடமில்லை என்றும் வயது வேறு ஆகிவிட்டதால் இத்துடன் இனி ஆக்‌ஷன் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்த பிறகு வெளிவரும்  படம் சைனீஸ் சோடியாக் 12.


கதை என்று படு சிம்பிள். ஜாக்கி புராதன பொங்கிஷங்களை திருடிக் கொண்டு விற்பவர். வாங்கும் எம்.பி கம்பெனி அந்த ஒரிஜினலை வைத்து அதைப் போலவே நகலை உருவாக்கி ஒரிஜினல் என்று ஏலத்தில் விட்டு, கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. சைனீஸ் அரண்மனையிலிருந்து போரின் போது எடுத்து வரப்பட்ட 12 சைனீஸ் சோடியாய் வெண்கல சிலைகளில் நான்கை மட்டும் வைத்திருந்திருக்கும் கம்பெனிக்காரர்கள் மீதி உள்ள ஏழு சிலைகளையும் அது இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து கொண்டு வரச் சொல்கிறார்கள். அந்தந்த நாட்டு கலைப் பொக்கிஷங்களை யார் வைத்திருந்தாலும் அது அந்த நாட்டுக்கே திருப்பிக் கொடுக்க வேண்டுமே தவிர வியாபாரம் ஆக்கக் கூடாது என்று ஒரு பெண் போராடுகிறாள். அவளை வைத்தே மீதி உள்ள சிலைகளையும், தங்கப் புதையலையும் கண்டுபிடித்து கொண்டு வருகிறார் ஜாக்கி. போராட்டப் பெண்ணின் தம்பியையும், நண்பர்களையும் வில்லன் கடத்திப் போக, நாட்டின் பொங்கிஷங்களின் மதிப்பை அறிந்து திருந்தி, அவர்களை காப்பாற்ற போகிறார். பின்பு என்ன நடந்தது என்பதை தியேட்டரில் பார்த்துக் கொள்ளுங்கள்.
உலகெங்கும் சில நடிகர்களுக்கு கதையெல்லாம் ஒரு உட்டாலக்கடிதான். அந்நடிகர்களின் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ்தான் படத்தை பார்கக் வைக்கும். அந்த வகையில் அமிதாப், ரஜினி, ஆர்னால்ட், புரூஸ்லீ, ஜாக்கி என்று வெகு சிலருக்கே அந்த அமைப்பு வாய்த்திருக்கிறது. படத்தின் ஆரம்பக் காட்சி முதல் கடைசி வரை ஜாக்கி, ஜாக்கி.. ஜாக்கிதான். ஜேம்ஸ்பாண்ட் படமெல்ல்லாம் தாயைக் காத்த தனயனாகி செண்டிமெண்ட் பிழிந்து கொண்டிருக்கும் காலத்தில் நம்ம தலை ஜாக்கி ஊரில் உள்ள அத்துனை கேட்ஜெட்டுகளை பயன் படுத்தி தூள் கிளப்பியிருக்கிறார். ஓப்பனிங் சீனில் நம்ப முடியாத ஒரு ஆட்டோமேடிக் ட்ராலியாகவே வீல்களை தன்னுடன் வைத்துக் கொண்டு அவர் போகும் ஆட்டம் இருக்கிறதே சூப்பர். நம்ப முடிகிறதோ இல்லையோ ஜாக்கி செய்தால் நம்ப முடியும். சோடியாக் சிலைகளையும், தங்கத்தையும் கண்டு பிடிக்க ஒர் மலை இடுக்கில் மாட்டிக் கொண்ட கப்பலின் உள்ளே செல்ல, சுந்தர் சி படம் போல, க்ளைமாக்சில் வரும் வில்லன் கும்பல் போல அங்கே ஜாக்கியை துரத்திக் கொண்டு வரும் வில்லன்கள்,  அவர்களை துரத்திக் கொண்டு வரும் கடற்கொள்ளையர்கள் இவர்களிடமிருந்து ஜாக்கி அண்ட் கோ தப்பிக்கும் காட்சி செம காமெடி ஆக்‌ஷன் கலாட்டா. அதே போல மேனுவல் பாராசூட்டை வைத்துக் கொண்டு, நாய்களுடன் வழி தெரியாத தோட்டத்தின் நடுவே மாட்டிக் கொண்டு நாய்களுடன் ஆடும் ஆட்டமும், எண்டர்டெயினிங்.  
வழக்கம் போல லாஜிக் இல்லாத மேஜிக் காமெடிக் காட்சிகள், அற்புதமான நகைச்சுவை கலந்த சண்டைக் காட்சிகள், சுவரஸ்யமாய் செல்ல விறு விறு திரைக்கதை, என்று ஒரு பக்கா மசாலா ஆக்‌ஷன் படத்தை அளித்திருக்கிறார் ஜாக்கி. முடிந்தால் தமிழ் டப்பிங்கில் பாருங்க.. அருமையான வசனங்கள். ஷார்ப்பாய், கிண்டலாய், நகைச்சுவையாய். ரசித்து ரசித்து எழுதியிருக்கிறார்கள்.  மாஸ் மசாலா எண்டர்டெயிண்ட்மெண்ட் வேண்டுகிறவர்களுக்கு... CHINESE ZODIAC 12
கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

Dino LA said...

நல்லபகிர்வு...

Unknown said...

கண்டிப்பா பார்க்கணும் தல

Anbazhagan Ramalingam said...

ARUMAIYANA VIMARSANAM CABLE JI. NANDRI JI