Thottal Thodarum

Jan 15, 2013

சமர்

ஊட்டியில் ட்ரெக்கராய் இருக்கிறார் விஷால்.  அப்பா பாரஸ்ட் ரேஞ்சர். விஷாலின் காதலி சுனைனா. தனக்கு முக்யத்துவம் கொடுப்பதில்லை என்ற காரணத்தால் விஷாலை பிரிகிறார் சுனைனா. காதலியின் பிரிவால் வாடிக் கொண்டிருக்கும் விஷாலுக்கு மூன்று மாதங்கள் கழித்து ஒரு லெட்டர் வருகிறது. விஷாலை மறக்க முடியவில்லை என்றும், உடனே தனனை வந்து பார்க்கும்படி பாங்காங்கிற்கு டிக்கெட் அனுப்புகிறார். ஆர்வமாய் காதலியை பார்க்க பாங்காக் போனவருக்கு திருப்பத்துக்கு மேல் திருப்பமாய் நடக்க ஆரம்பித்து ப்ரச்சனைகளில் மாட்டுகிறார். யார் சுனைனாவின் பெயரில் லெட்டர் அனுப்பியது?. எதற்காக விஷாலை சத்தாய்க்கிறார்கள்? தன்னை பிரச்சனையில் மாட்ட வைத்தவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்கிறார்? முடிவு என்ன என்பதை வெள்ளித்திரையில் பார்த்துக் கொள்ளவும்.


கதையென்று பார்த்தால் நல்ல விறுவிறுப்பான கதைதான். ஆனால் அந்த விறுவிறுப்பை மோசமான திரைக்கதையும், வசனமும், காலில் போட்டு மிதித்து காலியாக்குகிறது. முக்கியமாய் வசனம். விஷாலுக்கும், சுனைனாவிற்கு இடையே ஆன காதல் முறிவுக்கான  காட்சி. “என் இடுப்பு அளவு என்ன?” “என் செருப்பு சைஸ் என்ன?” “கண்ணை மூடிட்டு சொல்லு இப்ப நான் என்ன ட்ரெஸ் போட்டிருக்கேன்?” என்று கேள்வி கேட்டு, அதற்கு விஷால் பதில் சொல்லாததால் இருவருக்கும் ப்ரேக்கப். மேலோட்டமாய் ஏதோ ஆங்கில அல்லது உலக படத்தில் பார்த்த இன்ஸ்பயர் ஆன வசனங்களைப் போலவே இருக்கிறது. இந்தக் காட்சியில் வழக்கமாய் காதலர்கள் பிரிவதற்கான வசனங்களாய் இல்லாமல், தன்னைப் பற்றி, தான் என்ன உடை அணிந்திருக்கிறோம் என்பதைக் கூட கவனிக்காத காதலன் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? என்று  பிரிந்து போக இது போதும் என்று நினைத்துவிட்டார் போல. அதே போல திரிஷா, விஷாலுக்குமிடையே ஆன வசனங்கள் சவ சவ.. க்ளைமாக்சில் மொத்த முடிச்சுக்களுக்கும் பதில் சொல்லும் விதமாய் வரும் வாய்ஸ் ஓவர் வசனங்கள் மட்டும் ஓகே.  வசனம் எஸ்.ராமகிருஷ்ணனாம்.

நல்ல லைன் கிடைத்துவிட்டது. ஆனால் ஹீரோவை கடவுள் ரேஞ்சுக்கு பில்டப் சாங்கில் அறிமுகப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம். அவர் வீரர் சூரர் என்று பில்டப் செய்ய ரெண்டு மூன்று சீன்கள் வேண்டும், அவர் எல்லாரையும் பந்தாடுவதில் அசகாய சூரர் என்று வேறு காட்ட வேண்டும். சமூக பொறுப்புள்ளவராய் காட்ட வேண்டும். இப்படி பல வேண்டும்களால் ஆரம்பக் காட்சிகளில் த்டுமாறுகிறது திரைக்கதை.பழைய காதலியிடமிருந்து லெட்டர் வந்ததிலிருந்து, பாங்காங்கில் போய் காத்திருக்க ஆரம்பித்ததும் சூடு பிடிக்க ஆரம்பிக்கும் படம், அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளினால் மேலும் விறுவிறுப்பாக போய் இடைவேளையின் போது அட.. போட வைக்கிறார்கள். ஆனால் அதே ஸ்பீடோடு போக வேண்டிய படம் தேவையில்லாத தொய்வான திரிஷா, விஷால் சம்பந்தப்பட்ட காட்சிகள், பாடல்கள், என்று பல விஷயங்கள் போகிற ஸ்பீடை குறைக்க, க்ளைமாக்ஸின் போது ஹீரோ வில்லன்களை ட்ராப் செய்து விட்டு, “நான் சுதாரிச்சிட்டேன்” என்று வசனம் பேசும் போது ஆடியன்ஸிடமிருந்து ‘எப்ப?” என்று கேட்கிறார்கள். நிறைய இடங்களில் வசனம் படத்தின் வேகத்தை கொல்கிறது. பல இடங்களில் லாஜிக் பெரிய பொத்தலாய் இருக்கிறது. கான்செப்டா நன்றாக இருந்தாலும், எக்ஸிக்யூஷனில் சறுக்கியிருக்கிறார். கதை, திரைக்கதை, இயக்கம் திரு.

பாங்காங் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் கே.நாதனும், சண்டைக்காட்சிகளில் கனல் கண்ண்னும், எடிட்டரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இசை யுவன் சங்கர் ராஜாவின் அழகோ அழகு அழகான மெலடி. பின்னணியிசை இரைச்சல்.

விஷால் ஆக்‌ஷன் காட்சிகளிலும், நடனக் காட்சியிலும் மிளிர்கிறார். ஆனால் இவ்வளவு பெரிய ப்ரச்சனையில் மாட்டிக் கொண்டவரின் பதட்டம் கொஞ்சம் கூட இல்லாமல் இறுக்கமாய் முகத்தை வைத்தால் போதுமென யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. த்ரிஷா பார்க்க சாப்டாக அழகாக இருக்கிறார்.  சுனைனா நான்கைந்து காட்சிகளே வந்தாலும் கொத்தும் கொலையுமாய் காட்சியளிக்கிறார். ஜான் விஜய், மனோஜ் பாஜ்பாய், ஜே.டி சக்ரவர்த்தி, சம்பத், ஜெயபிரகாஷ் என்று பட்டாளம் இருந்தாலும், ஜான் விஜய் கவனம் ஈர்க்கிறார்.  ஹீரோவிற்காக திரைக்கதை அமைக்காமல் கதைக்காக செய்திருந்தால் நிச்சயம் இன்னும் பெட்டராய் வந்திருக்க வேண்டிய படம். எல்லாம் சரி சமர்ன்னா என்னா?

Post a Comment

12 comments:

Kvp said...

சமர் என்றால் யுத்தம்

கேரளாக்காரன் said...

Samar means war

courtesy: unmaitamizhan

அத்திரி said...

ithuvum puttukicha

movies said...

samar means war!!!!!

saravanan selvam said...

சமர் என்றல் போர் என்று பொருள். இதை நான் ஆனந்த விகடன் ல் படித்த மாதிரி நினைவு.நன்றி தங்களது விமர்சனத்துக்கு

Arun said...

Samar means warrior in Tamil

Karthik Somalinga said...

நன்றாக இருந்திருக்க வேண்டிய படம், ஹ்ம்ம்....! :( பாங்காங்கில் எடுத்தால் மட்டும் இது உலகப் படம் ஆகிவிடாது என்பதை இயக்குனர் உணர்ந்தால் சரி! வில்லன்கள் தேர்வும் படு மோசம் - லைவ் மானிட்டர்கள் முன் அவர்கள் அடிக்கும் கூத்து எரிச்சலைத்தான் வரவழைத்தது! சமர் = போர் = Bore!

Unknown said...

சமர் -ன்னா "போர்" என்று அர்த்தம், சமரன் -ன்னு ஒரு டைட்டில் வேறு ஒரு இயக்குனரிடம் இருந்ததால் இதை தலைப்பாக்கி இருக்கிறார்கள். எங்கோ படித்தது/பார்த்தது (டிவியில்)......

குரங்குபெடல் said...

அண்ணே . ..

எஸ்ரா Trueman show கண்டதன் விளைவே இந்த திரைப்படம் . . .

அவர் உலக சினிமாக்களை காண காண

உள்ளூர் சினிமா அடையும் நஷ்டம் அதிகம் . . .

Unknown said...

The Game endra padathin appatamana copy thaan Samar. Michael Douglas matrum Sean Penn arputhamaga nadithu irupaarkal. The Game padathai paarthuvitu ethai paarthal padu mokkaiaga irukum. But Samar well tried mudhal paadhi varaikum.

Stock said...

I read the story in UnamaiTamilan's blog look like they took the story from "Trading Places" and "The Game". :-(.

ஓஜஸ் said...

சமர் -ன்னா "போர்" or bORE