மதுரை ஆர்.சி.வியில் சன் குழும சேனலகள் நாளை முதல் ஓளிபரப்பு

தாத்தாவும் பேரன்களூம் ஓன்று சேர்ந்துவிட்டார்கள்.. ஆனால் தாத்தாவும், அவரது மகனும், சொன்னதின் பேரில் அவர்களுக்கு போட்டியாய் தொழிலில் இறக்கி விடப்பட்டவர்கள் என்னாவார்கள்..?
ராஜ்டிவி.
இவர்களை நம்பி சன்னுக்கு எதிராய் தங்களுடய சேட்டிலைட்டில் உடனடியாய் இடம் கொடுத்து, இவர்களுக்கு வேண்டியதெல்லாம் செய்தனர். அவர்களுக்கு தேவையான நியூஸ் சேனலையும், லைவ் அப்லிங்கும், அவர்களுக்கு கிடைத்ததில், ஓரு வகையில் அவர்களுக்கு ஆதாயமே.. இனி அவர்களது நிலமை என்னவாகும்?
கலைஞர் தொலைக்காட்சி
சன் டிவியை எதிர்பதற்காகவே, மாறன் சகோதரர்களால் துரோகி பட்டம் கட்டி வெளியேற்றபட்ட, சரத் ரெட்டியின் தலைமையில் ஆரம்பிக்க பட்டது கலைஞர் டிவி.. ஆரம்பித்த ஓரு ஆண்டில் சன் டிவிக்கு அடுத்த இடத்தில் வர ஆரம்பித்து விட்டது, கலைஞரை தொடர்ந்து, இசையருவி, கலைஞர் செய்திகள் என்று சேனல்களை ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. சரத் ரெட்டியை தூக்கி விட்டு, சன் அத்தனை சேனல்களை தங்கள் வசம் வைத்து கொண்டால் கூட சன்னுக்கு போட்டியாய் ஓரு சேனலை அவர்கள் அதே குவாலிட்டியுடன் தருவார்களா..? என்பது கேள்வி.
ஹாத்வே
பாவம் இவர்கள் தான் என்ன செய்ய போகிறார்கள் என்றே தெரியவில்லை.. எப்போதுமே இவர்கள் அரசியலவாதிகளால் அலைகழிக்கபட்டு, திராட்டில் விடப்படுபவர்கள்.. சென்ற ஆட்சியின் போது ஜெ அரசால் ஆதரிக்கபட்டு, பாஸ்கரனின் கட்டுப்பாட்டில் எஸ்.சி.வியுடன் மோதினார்கள்.. ஆனால் அவர்களுக்கு கே.டிவி, சன்செய்திகள், ஜெமினி, தேஜா, போன்ற் சேனல்களை கொடுக்காமல் இழுத்த்டித்து, அவர்க்ள் நொந்து நூலாகி, அரசின் ஆதரவும் கைவிடபட்டதனால் பாஸ்கரனும் வெளியேறிவிட்ட நிலையில்.. தாத்தா பேரன் சண்டையில், அழகிரி இவர்களுக்கு ஆதரவாய் களம் இறங்க.. மீண்டும் வெற்றி முகம்.. சென்னையில் 80 சதவிகதம் ஹாத்வே கையில்..இனிமேல் என்னவாகும்.. இவர்கள் நிலை..?
ஆர்.சி.வி
மதுரையில் அழகிரியால் எஸ்.சி.விக்கு போட்டியாய் ஆரம்பிக்கபட்டது. மதுரை மற்றும் சுற்றுபுற்த்தில் உள்ள எல்லா ஊர்களுக்கும் எஸ்.சி.வியின் இணைப்பை துண்டித்து, கட்டாயமாய் ஆர்.சி.வி கனைக்ஷன் கொடுக்கபட்டது.. அவர்களூக்கு எதிராய் எஸ்.சிவியுடன் இருந்தவர்கள் மிரட்டப்பட்டார்கள்.. இனி ஆர்.சி.வியின் கதி..?
அரசு கேபிள் கார்பரேஷன்
நடுநிலைமையோடு தான் ஆட்சி செய்வதாய் காட்டி கொள்வதற்காக மக்கள் பணத்தில் ஆரம்பிக்கபட்ட கார்பரேச்ன் ஏற்கனவே அதன்நிலமை மிக மோசமாய்தான் இருக்கிறது.. இந்த நிலையில் சென்னையில் அவர்கள் டிசம்பரில் ஆரம்பிக்க போவதாய் இருந்தது.. இனி அவர்கள் நிலை.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்
இவர்கள் தான் பாவம் எந்த ஆட்சி வந்தாலும் அவர்களுக்கு சொம்படிப்பதையே தொழிலாக கொண்டிருப்பதால், இவர்கள் சண்டையில் நன்றாக சம்பதித்து கொண்டிருந்தார்கள்.. இனி இவர்கள் கதி என்ன ..? அனேகமாய் ரெண்டு பேருக்கும் சொம்படித்து பிழைப்பை ஓட்டுவார்கள் என்றே தெரிகிறது.
ஆனந்தவிகடன்
இவர்களை நம்பி மாறன் சகோதரர்களுக்கு ஆதரவாய் விஜயகாந்தை ஏற்றிவிட்டு கொண்டிருந்தனர். இனிமேல் விஜயகாந்த் விகடனில் வருவாரா..?
இவர்களையெல்லாம் விட பாவம்.. அறிவிழி என்று ஓருவர் மாய்ந்து, மாய்ந்து மாறன் சகோதரர்கள் கலைஞரை ஏமாற்றி விட்டதாக தொடர் பதிவு எழுதியவர்.. இனிமேல் அவர் என்ன செய்ய போகிறார்.
கலைஞர் தனக்கு பின்னால் தன்னுடய குடும்பத்தை செட்டில் செய்ய வேண்டிய நிர்பந்ததில் இருப்பதாலும், இனிமேல் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இலலையென்பதாலும் செட்டில்மெண்டை துரிதமாய் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அரசு கடமைகளைவிட தன் குடும்ப கடமைகளூக்கு முக்யத்துவம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு.. ஆனால் மாறன் சகோதர்களுக்கு எதிராய் ஆரம்பித்த விஷயங்கள் எல்லாம் அவ்வளவு சுலபமாய் மாற்றிவிட முடியாது.. இதை நாடு பார்த்து கொண்டுதானிருக்கிறது. தங்கள் சுயலாபத்துக்காக, அரசை அதிகாரங்களை பயன்படுத்தி வருவதை மக்கள் கவனித்து கொண்டுதானிருக்கிறார்கள்..
இந்த சந்திப்பை வெற்றிகரமாய் சாதித்த பங்கு அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் உண்டு என்றார் கலைஞர்.. தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வளவு முக்கியமான சந்திப்பு.. இவர்கள் சந்திப்பால் தமிழகம் செழித்தோங்க போகிறதோ..?
வழக்கமாய் க்லைஞர் குடும்பத்திற்கு ஓரு வழக்கம் உண்டு, அதாவது அவர்களூக்கு உதவியவர்களை முடிந்த வரை உபயோகபடுத்தி கொண்டு பின்பு தேவையில்லையெனில் கழட்டிவிடுவது, அதையே அவரது பேரன்களும் செய்யவே கோபம் வந்து பிய்த்து கொண்டார்கள்.. அவர்களூக்கும் வேறு வழியில்லை.. என்ன செய்வது.. வாய்விட்டே சொல்லியும் விட்டார் கலைஞர் தனக்கு ”ரவுண்டாய்” கொடுக்கவில்லை என்று.. ஓரு வேளை ரவுண்டாய் கொடுத்துவிட்டார்கள் போலிருக்கு.. அவர்கள் சிறந்த பிஸினெஸ்மேன்கள் என்பதை மீண்டும் ஓரு முறை நிருபித்திருகிறார்கள். கொடுக்க வேண்டியதை கொடுத்து அவர்களின் பேங்க் பேலன்ஸ் கனத்ததால் தானோ என்னவோ கலைஞரின் கண்கள் பனித்தது.. இதயம் கனத்ததோ..?

Comments
அது சரி உஙக்ளுக்கு எவ்வளவு
“ரவுண்டா” கொடுத்தாங்க..?
ஹாத்வே நிலைமை ரொம்பவே பரிதாபமா இருக்கும்.
அரசு கேபிளை நினைச்சாதான்.....................??????
அப்படியா அத்திரி.. நிஜமாகவே இது எனக்கு தகவல்.. நன்றி..அத்திரி.
அதை ஏன் நினைக்கணும்.. நம்ம காசுதானே.. போவுது அது பத்தி அவங்களுக்கு என்ன கவலை..?
thank you anani..
இனிமே அவர் கடை காத்து வாங்கும்...........
அவர் எழுதினதுல 99 சதவீதம் மாறனை பற்றிதான்
இதுக்குத்தான் அவிங்கள பத்தி தெரியாம பீல் பண்ணக்கூடாதுங்கற்து..
இதையேதான் நான் காலையில் இருந்து நினைத்து கொண்டிருக்கிறேன். கவலை வேண்டாம். இதைவிட வேறு யாரும் செய்துவிட முடியாது என்று ஒரு பதிவ் எழுதுவார்.
இதையெல்லாம் விட நண்பர் செந்தழல் ரவி அளித்த பின்னூட்டம் தான் மகா கொடுமை
//என்ன, முரசொலி செல்வத்துக்கும் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் கொஞ்சம் டெர்ம்ஸ் சரியில்லை...
அது விரைவில் தீரும், ஹொக்கேனக்கல் பிரச்சினையும் தீரும்...
கொள்கைகளையும், கருத்துக்களையும் முக்கியமாக கருதாமல் தனிமனித வழிபாடு செய்பவர்களுக்கு இந்நிகழ்ச்சி ஒரு பாடமாக அமையும் என்று நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள்!!
:) :) : ) :)
ரிப்பீட்ட்ட்டேய்ய்ய்ய்ய்
எனக்கு ஒரு பொன்மொழிதான் நினைவுக்கு வருகிறது.
'இதுவும் கடந்து பொகும்.'
வேற வழி.. கடந்த் போய்தானே ஆவணும் நமக்கு அதவிட்டா வேற வழி..
இவங்க பாதிக்க படுவத பத்தி நீங்க எழுதவே இல்லையே...
இதுவரை கலைஞர் அரசுக்கு எதிராகவும் விஜயகாந்த்துக்கு ஆதரவாகவும் வந்த சன் செய்திகளை மக்கள் இனிமேல் தொடர்ந்து பார்த்தால் குழம்பி மண்டை காய்ந்து ஏர்வாடிக்கு போக போவது உறுதி....
அரசியல்ன்னாலே மானம், வெக்கம், ரோசம், மரியாதை இதெல்லாத்தையும் கழட்டி வச்சுடணும்.... (ஆனா மறக்காம ஜட்டிய போட்டுக்கணும்... ஏன்னா எப்ப வெட்டியா அவுப்பாய்ந்கன்னு யாருக்கும் தெரியாது.... )
கொள்கைன்ன்கிறது தோள்ள கிடக்குற துண்டு மாதிரி... தூக்கி எறிஞ்சுட்டு வேற துண்ட எப்ப வேணா போட்டுக்கலாம்....
நல்ல பதிவு....!
இவங்க பாதிக்க படுவத பத்தி நீங்க எழுதவே இல்லையே...//
அதான் அவங்க எல்லாரும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க இல்ல இனிமே மக்கள்- பொதுஜனம் - பாமரனுக்கு நல்ல நேரம்தான் அதுக்காத்தானே ஒண்ணாயிருக்காங்க..
இன்னமும் அவர் கலைஞருக்கு வக்காலத்து வாங்கி கொண்டுதானிருக்கிறார்.
shankar good job
:-)
சர்வே ஒரு டுபுக்குன்னு கடந்த ஓன்னறை வருஷமா தெரிஞ்சிகிட்டு இருப்பாங்களே.. இன்னுமா சர்வே..
கலைஞருக்கு கண்கள் பனித்தது; இதயம் இனித்தது; சினிமா தயாரிப்பாளர்களுக்கு வயிற்றை கலக்குது;
இவங்களுக்குள்ள அடிச்சிகிட்டு சாவறத பத்தி பேசத்தானே தாத்தா கூப்ப்ட்டு பேசியிருக்காரு.. பாவம் அநத் பையனோட அம்மா கேஸூக்கு அலைஞ்சிக்கிட்டு இருக்காஙக்.. அவங்க நிலமையை நினைச்சாத்தான் கவலையாய் இருக்கு.
:-)//
நன்றி கடைசி பக்கம்
இதெல்லாம் தெரிந்தோ என்னவோ சில வாரங்களூக்கு முன்பே சிவசக்தி பாண்டியன் சன் டிவியின் ஆடியோ ரிலீஸின் போது சன் டிவி பக்கம் சொம்படிக்க ஆரம்பித்துவிட்டார்.
சன் டிவி உடன் இருந்தால் கலைஞர் ஜெயிப்பது உறுதியில்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களை பகைத்துக் கொண்டால் தோல்வி உறுதி, இதை கலைஞர் உணர்ந்துவிட்டார்.. ஸாரி.. மாறன் பிரதர்ஸ் உணர்த்தி விட்டார்கள்.. பின்னே கலைஞர் எட்டடி பாய்ந்தால் அழகிரி பதினாறு அடி பாய்கிறார், பேரன்கள் முப்பத்திரண்டு அடி பாய்கிறார்கள்.. :))))
மற்றபடி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராணி காமிக்ஸ் பற்றிய ஒரு பிரத்யேக தமிழ் வலைபூ கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது http://ranicomics.blogspot.com
வருகை தந்து, தங்கள் மேன்மையான கருத்துக்களை பதியுமாறு கேட்டு கொள்கிறோம்.
விஜயகாந்த் இது தெரிஞ்சுதானோ.. கேப்டன் டிவி ஆரம்பிக்க போறாரு..
இனி மாறன் பிரதர்ஸ் நினைத்தாலும் சரி, கலைஞர் நினைதாலும் சரி.. கண்டிப்பாக திமுக கூட்டணி இம்முறை தேர்தலில் வெற்றி பெற போவதில்லை என்பது நிச்சயம்.
அது சரி உங்களுக்கு என்ன நன்மை கிடைச்சுது இவங்களால..?
கலாய்ககவில்லை ராஜ்..பாவம் அவரு என்ன பண்ணுவாரு அவங்க தலை இப்படி உட்டாலக்கடி போடும்னு.. அதுக்காகத்தான் பரிதாபபட்டேன். அவ்வளவுதான். கண்டிப்பாய் கிண்டலோ..கலாய்ப்போ இல்ல.
என்னா பெருந்தன்மை.. என்னா பெருந்தன்மை.. அதுசரி ரகசியமா போன் பணணி சொல்லுங்க.. எவ்வ்ளவுன்னு கண்டிப்பா ப்ளாக்ல எழுதமாட்டேன்.
நன்றி முரளி கண்ணன்.
ஹா..ஹா.. இன்னமுமா அதை ஞாபகம் வச்சிருக்கீங்க..?
அண்ணே! நான் எப்போ இணைப்பு கொடுத்தேன்? நீங்க எப்போ பயன்படுத்தினீங்க ....?
ஒண்ணுமே புரியலையே...!!?
மொத்தத்தில் பத்த்திரிக்கை தொடங்கி பதிவர் வரை குடும்பத்து சன்டைக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசி பேசி நேரத்தை வீனடித்தோம் என்பதே நிதர்சனம்..
வீட்டுக்கு வீடு வாசப்படி, மாமன் மச்சான் சன்டை , பங்காளி சன்டை என விடாமல்.. இதற்கு முக்கியத்துவம் கொடுத்து விளாசித்தள்ளிய அனைவரும் காமெடியன்களே
இவர்கள் சண்டை இவர்களுக்குள் இருந்தால் யாரும் கவலை பட போவதில்லை.. மக்களின் வரி பணத்தில் இவர்களின் சண்டைக்கான செலவு இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாய் விளாசி தள்ளத்தான் வேண்டும்.. அதனால் அவர்கள் யாரும் காமெயன்கள் அல்ல.. என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன். நன்றி உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்
மேலும், இவர்கள் சன்டையால், தினகரன் ஊழியர் உயிர் இழப்பு, அரசு கேபிள் போன்றவை மக்களை பாதித்தது மற்ற படி ஆத்வே, ராஜ் வளர்ச்சி, கலைஞர் டீ வி, ஜெயா, வைகோ சப்போர்ட் எல்லாம் நமக்கு தேவையில்லாதது. ஓவ்வொருவரும் குளிர் காய நினைத்தார்கள் அவ்வலவே..
விளாசியிருக்க வேண்டிய விஷயத்தை விட்டு தேவையற்ற விஷயத்தில் பேசி நேரம் வீண் பன்னிவிட்டோம் என்ற ஆதங்கம் தான்.
அது என்னவோ சரிதான் மது.. மீண்டும் நன்றி
"Kalignar thaan oru arasiyal saanakkiyan enpathai meendum nirupiththirukkiraar"
"koottani recipe'l kalaignarai minja aal illai"
"kalaignarin master piece move in zeroing vijayakanth"
"kalaignaring ethirikalai nanbarkalaakkum arasiyal thanthiram"
"koottani recipe'l kalaignarai minja aal illai"
"kalaignarin master piece move in zeroing vijayakanth"
"kalaignaring ethirikalai nanbarkalaakkum arasiyal thanthiram"//
இந்த மக்களின் மறதியை நம்பிதானே அரசியல்வாதிகள் பீலா விட்டு திரிந்து கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக இம்முறை வரும் தேர்தலில் எந்த சன் டிவியால் ஜெயித்தது என்று சொல்லிக் கொள்கிறார்களோ.. அதே சன் டிவியின் ஓளிபரப்பினாலேயே தோற்கிறார்களா இல்லையா என்று பாருங்கள்..
கண்டிப்பாய் எதாவது நல்ல கட்சி இருந்தால் சொல்லுங்கள்.அக்னி..
Yet another example on the amount of public money Karunanidhi is ready to spend for settling personal scores!
நன்றி கபிஷ். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
Yet another example on the amount of public money Karunanidhi is ready to spend for settling personal scores!//
மிக்க நன்றி அனானி...
எது எப்படியோ.. அவர்கள் நினைத்தது போல் சன் டிவியிலிருந்து ஓரு பெரிய “ரவுண்ட்” அமெளண்ட் வாங்கியாகிவிட்டது. நீங்கள் சொல்வது போல் நடந்தால் இரட்டை சந்தோஷம் தான்.
உங்கள் பதிவுகள் பெரிதும் நியாயங்களைப் பேசுகின்றன.அதனால் தான் உங்கள் பதிவை மீண்டும் செய்தியாக்க வேண்டுமென்று எண்ணினேன்.உண்மைகள் உறங்கிவிடக்கூடாது என்று குறியாக இருக்கிற உங்களின் எழுத்து வீச்சு தொடர வாழ்த்துக்கள்.
தமிழ்சித்தன்.
மக்கள் - பொது ஜனம் - பாமரன் ....
இவங்க பாதிக்க படுவத பத்தி நீங்க எழுதவே இல்லையே...
இதுவரை கலைஞர் அரசுக்கு எதிராகவும் விஜயகாந்த்துக்கு ஆதரவாகவும் வந்த சன் செய்திகளை மக்கள் இனிமேல் தொடர்ந்து பார்த்தால் குழம்பி மண்டை காய்ந்து ஏர்வாடிக்கு போக போவது உறுதி....
அரசியல்ன்னாலே மானம், வெக்கம், ரோசம், மரியாதை இதெல்லாத்தையும் கழட்டி வச்சுடணும்.... (ஆனா மறக்காம ஜட்டிய போட்டுக்கணும்... ஏன்னா எப்ப வெட்டியா அவுப்பாய்ந்கன்னு யாருக்கும் தெரியாது.... )
கொள்கைன்ன்கிறது தோள்ள கிடக்குற துண்டு மாதிரி... தூக்கி எறிஞ்சுட்டு வேற துண்ட எப்ப வேணா போட்டுக்கலாம்....///
ஏமாந்தா..கலைஞர் கோமணத்தையும் கழட்டிகிட்டு விட்டுடுவார்னு ஒரு சமயம் ராமதாஸ் சொன்னது ஞாபகம் இருக்கா?