பகுதி-8
ஒரு திரையரங்கு வெற்றிகரமாய் நடத்த தொடர்ந்து வெற்றிப்படங்களை, பெரிய நடிகர்கள் நடித்த படங்களை வெளியிட வேண்டும். அப்படி வெளியிடும் போது அந்த தியேட்டருக்கென்று ஒரு தனி மரியாதை மக்களிடையே ஏற்படும். தொடர்ந்து வெற்றிப் படங்களை போட்டால்தான் தியேட்டருக்கும் லாபம்.
ஒரு திரையரங்கு வெற்றிகரமாய் நடத்த தொடர்ந்து வெற்றிப்படங்களை, பெரிய நடிகர்கள் நடித்த படங்களை வெளியிட வேண்டும். அப்படி வெளியிடும் போது அந்த தியேட்டருக்கென்று ஒரு தனி மரியாதை மக்களிடையே ஏற்படும். தொடர்ந்து வெற்றிப் படங்களை போட்டால்தான் தியேட்டருக்கும் லாபம்.
சினிமாவில் சம்பந்தப்பட்டவரோ, இல்லையோ, பிரச்சனையே இல்லாத படத்தயாரிப்பாளர்கள் முதல், பிரச்சனைக்குள்ளாகும் பெரிய ஆட்கள் வரை சட்டென சொல்லும் குறை நிதி குடும்ப ஆக்கிரமிப்பால் தமிழ் சினிமாவில் அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்றிருக்கிறது என்று சொல்வதுதான். அவர்கள் மற்ற படங்களை வெளியிட விடமாட்டென்கிறார்கள் என்றும், தமிழ் சினிமா மற்றும் மற்ற பெரிய நடிகர்களின் எதிர்காலத்தை அழிப்பதே இவர்கள் தான் என்று குற்றம் குறை கூறிக் கொண்டிருக்கிறாகளே.. இவர்களுக்கு தெரியுமா? இன்றைக்கு நேற்றல்ல தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பெரிய விநியோகஸ்தர்கள் கையில்தான் இருந்திருக்கிறது என்று. என்ன அவர்கள் பெயர் எல்லாம் வெளியில் தெரியாததால் சொல்ல முடியவில்லை. இத்தனைக்கும் அவர்கள் கோலோச்சிய காலமெல்லாம் இன்றைய கால கட்டம் போல நிறைய தியேட்டர்கள் இல்லாத காலம்.
டி.ஆர்.ராமானுஜம் என்பவரை பற்றி தமிழ் சினிமா உலகில் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. அந்த காலத்திலேயே இருபதுக்கும் மேலான தியேட்டர்களை நேரடியாய் லீசுக்கு எடுத்து நடத்தியவர். அது மட்டுமில்லாது அவருடய நெட்வொர்க்கில் இல்லாத தியேட்டர்களே கிடையாது. அவ்வளவு பிரபலம். ஒரு படத்தை அவர் வாங்கிவிட்டால் குறைந்து ஆறு மாதம் வரை எல்லா ஊர்களில் உள்ள தியேட்டர்கள், டெண்ட் கொட்டாய்கள் என்று ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வரும் போது ப்ரிண்ட் எல்லாம் மழையாய்தானிருக்கும் அவ்வளவு தியேட்டர்கள் அவர் கண்ட்ரோலில் இருந்த காலம்.
முன்பெல்லாம் சென்னையில் சிவாஜியின் படம் சாந்தி, கிரவுன், புவனேஷ்வரியில் மட்டுமே சென்னையில் வெளியாகும். சுற்று வட்டார தியேட்டர்களில் கூட வெளியிடக்கூடாது என்று அக்ரிமெண்ட் போடும் காலம் இருந்தது. அதே போல் தான் செங்கல்பட்டு ஏரியா என்றால் குறைந்தது நான்கைந்து தியேட்டர்களில் மட்டுமே படங்கள் வெளியாகும், அங்கு ஓடிய பிறகு, இரண்டாவது கட்ட தியேட்டர்களில் ஷிப்டிங்கில் வெளியிடுவார்கள், அங்கு ஓடி மூன்றாவது கட்ட டெண்ட் கொட்டாய்களில் படங்களை ஓட்டி வருவதற்கு அடுத்த சிவாஜியின் படம் வெளியாகியிருக்கும். இப்படி ஒரு படத்தை ஒட்ட, ஒட்ட ஓட்டிய காலத்தில், மல்டிபிள் திரையரங்கில் படம் ஓட்டுவது எல்லாம் நடக்காத காரியம்.
அப்படிப்பட்ட காலத்தில் டி.ஆர்.ராமனுஜம் அவர்கள் தெய்வமகன் படத்தின் ஒரு ப்ரிண்டை எடுத்துக் கொண்டு தன் நெட்வொர்க் தியேட்டர்களில் போட, அதே சமயத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அவரது தியேட்டரான திருவான்மியூர் ஜெயந்தியில் அவரும் தெய்வமகனை போட்டு ஓட்டியிருக்கிறார்கள். விநியோகஸ்தர்களிடமிருந்து அவர் ஒரு ப்ரிண்டை, அட்வான்ஸ் கொடுத்து எடுத்துக் கொள்வாராம், பின்பு அவர் தியேட்டர்களில் எல்லாம் ஓட்டிவிட்டு கணக்கு பார்த்து செட்டில் செய்வாராம். ஏரியா பாகுபாடு இல்லாமல், எல்லா விநியோகஸ்தரும், இவருக்கு ஒரு பிரிண்டை கொடுத்துவிடுவார்களாம். முதல் ரவுண்டுக்கு பிறகு பெரும்பாலான படங்களை தமிழகம் முழுவதும் ஓட்டி கொடுத்து நிறைவான வசூலை பெற்றுத் தருவதில் டி.ஆர்.ராமானுஜம் கிங் என்பார்களாம்.
ஏன் டி.ஆர். ராமானுஜம் வெளியிடுவதற்காக அந்தந்த தியேட்டர்காரர்கள் காத்திருப்பார்கள் என்றால், தொடர்ந்து எல்லா படங்களையும் வாங்குபவர், தியேட்டர்காரர்கள் படத்துக்காக அலையத் தேவையில்லை. ஒரு படம் ஓடி முடிந்துவிட்டால் அடுத்த படத்தை தர டி.ஆர்.இருக்கும் போது, அவருக்கு தியேட்டர்காரர்கள் ஆதரவு கொடுப்பதில் என்ன ஆச்சர்யம்.? இவரது காலகட்டம் எழுபதுகளில் என்றால், அதன் பின்பு கோலோச்சியவர்கள் ஒரு பெரிய கூட்டமேயிருந்தது அவர்கள் யாரென்று பார்ப்போம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சாப்பாட்டுக்கடை - காசி விநாயகா மெஸ் படிக்க...
Comments
அப்றம் மும்பை விஜயம் எப்போ????
>>> அஜித்தின் மேடை முழக்கம், அதற்கு ரஜினி எழுந்து நின்று கைதட்டியது, விஜய்யின் சமீபகால நடவடிக்கைகள் எதை பறைசாற்றுகின்றன?
Thanks
-அருண்-