Thottal Thodarum

Feb 16, 2011

சினிமா வியாபாரம்-2-9

ஆம் ஒரு பெரிய கூட்டமேதானிருந்தது. என்பதுகளில் நடுவிலிருந்து, தொண்ணூறுகள் வரை, கே.ஆர் என்றழைக்கப்படும், கோதண்டராமன், டி.ஆர்.பாலுவின் சில்வர் ஸ்கீரீன்ஸ், ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ், கோவை போன்ற ஏரியாக்களில் சக்தி பிலிம்ஸ் என்று ஒவ்வொரு ஏரியாக்களுக்கும் ஒரு பெரிய விநியோகஸ்தர்கள் இருந்தார்கள்

கே.ஆர் ஒரு பக்கம் வெற்றிப் படமாய் வெளியிட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஏவி.எம்மின் அத்துனை படங்களுக்கும் ஆனந்தா பிக்சர்ஸ் தான் அக்காலகட்டத்தில் விநியோகஸ்தர்களாய் இருந்தார்கள். இன்னொரு பக்கம் செங்கல்பட்டு ஏரியாக்களில் தி.மு.காவின் டி.ஆர்.பாலு அவர்களின் சில்வர் ஸ்கீரீன்ஸ் எனும் நிறுவனம் மூலமாய் அவர் ஒரு பக்கம் வெற்றிப் படங்களாய் வெளியிடுவார்.

அப்போது உதாரணமாய் உதயம் தாண்டி பார்த்தால் பரங்கிமலை ஜோதி, ஆலந்தூர் மதி, பல்லாவரம் லஷ்மி, ஜனதா, குரோம்பேட்டை வெற்றி, தாம்பரம் வித்யா, நேஷனல், எம்.ஆர் போன்ற தியேட்டர்கள்தானிருந்தது. ஜோதியில் என் நினைவு தெரிந்து ச்ம்சாரம் அது மின்சாரம் முதல் தொடர்ந்து ஏவி.எம்மின் எல்லா படங்களூம் அங்கே வெளியிடப்பட்டிருக்கிறது. அதனால் ஏவி.எம்மின் படங்கள் வெளிவரும் சமயங்களில் ஜோதி தியேட்டர் அதிபர்கள் அந்த நேரத்தில் வேறு படங்களுக்கான தேதியை தங்கள் தியேட்டருக்கு தராமல் வைத்திருப்பார்கள். அதனால் பேப்பர் விளம்பரம் கூட பார்க்காமல் ஏவி.எம் படமென்றால் நிச்சயம் ஜோதியில் இருக்குமென்று நம்பிப் போன காலங்கள் உண்டு.

அதே போல் கே.ஆர் அவர்கள் பல்லாவரம் ஜனதாவில், குரோம்பேட்டை வெற்றியில், தொடர்ந்து படம் வெளியிட்ட காலம் உண்டு. அவரது வெளியீட்டில் மனசுக்குள் மத்தாப்பு, ஈரமான ரோஜாவே, மைடியர் குட்டிச்சாத்தான் என்று ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய விநியோகஸ்தர்களுள் ஒருவராக அவர் விளங்கினார்.

என் ஞாபக அடுக்குகளிலிருந்து நான் சரியாகச் சொல்வேனானால், டி.ஆரின் பல படங்களை டி.ஆர்.பாலுவின் சில்வர் ஸ்கீரீன்ஸ் வாங்கி வெளியிட்டிருக்கிறது. தாம்பரம் வித்யாவில் தொடர்ந்து வெளியாகியிருக்கிறது. மைதிலி என்னை காதலி போன்ற படங்கள் தாம்பரம் வித்யாவில் நூறு நாட்கள் வரை ஓடியது என்று ஞாபகம். அப்போதுதான் காசியும் ஆரம்பித்திருந்த நேரம். அங்கேயும் மைதிலி என்னை காதலி சாதனை படைத்தது.

எப்படி ஒவ்வொரு விநியோகஸ்தர்களுக்கு ஒரு நெட்வொர் தியேட்டர்கள் நல்ல வியாபார தொடர்பு இருக்கிறதோ. அதே போல சில தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்களுக்கு சில தியேட்டர் அதிபர்களுக்கும் ஆகாது. குறிப்பாக கலைப்புலி எஸ்.தாணுவுக்கும், உதயத்திற்கும் ஆகாது. ஆனால் தேவி தியேட்டருக்கும் தாணுவுக்கும் நல்ல நெருக்கமான வியாபார தொடர்பு இருக்கிறது இன்றளவும். நீங்கள் வேண்டுமானால் நன்றாக யோசித்து பாருங்கள் தாணுவின் எல்லா திரைப்படங்களும் தேவி காம்ப்ளெக்ஸில் தான் முதல் தேதியெடுப்பார்கள். ரொம்ப வருடங்களாய் உதயத்திற்கும் தாணுவிற்கும் இருந்த பனிப்போர் கந்தசாமி வந்த போதுதான் உடைந்தது. அது கூட பெரிய பட்ஜெட் படங்களை பல தியேட்டர்களில் வெளியிடும் முறை வந்ததால் வேறு வழியில்லாமல் வெளியிட்டதாக சொன்னார்கள். இம்மாதிரி பல சுவையான ஊடல்கள் ஒவ்வொரு விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்களுக்கிடையே இருக்கத்தான் செய்யும்.

இவர்கள் எல்லாம் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலேயே மெல்ல இன்னொருவர் வந்து என்.எஸ்.சி ஏரியாவில் கொஞ்சம் கொஞ்சமாய் காலூன்ற ஆரம்பித்திருந்தார் அவர் தான் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

14 comments:

Jana said...

இன்று நாந்தான் 1st

Jana said...

இவ்வளவு Dataகளும் நினைவில் வைத்திருப்பது அச்சரியம்தான் தலை.. தொடருங்கள். அறிந்துகொள்கின்றோம்.

செங்கோவி said...

தொடர் நன்றாகச் செல்கிறது..

Cable சங்கர் said...

நன்றி ஜனா..

geethappriyan said...

very intresting thala

kanagu said...

அருமையாக இருந்தது அண்ணா :) :)

Sivakumar said...

//கொஞ்சம் கொஞ்சமாய் காலூன்ற ஆரம்பித்திருந்தார் அவர் தான் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.//

>>> அலங்கார் தியேட்டர்...ஜாக்கிசான் படங்கள்...மறக்க முடியாத நாட்கள்!

ஜி.ராஜ்மோகன் said...

தொடர் சூடு பிடிக்க ஆரம்பிச்சிருச்சு தலைவா ! வாழ்த்துகள்! கேயார் ஒரு நல்ல இயக்குனராகவும்
பரிணமித்தவர் !

ஜி.ராஜ்மோகன் said...

நேற்று தான் காரைக்குடி புத்தக சந்தையில் தங்களது " லெமன் ட்ரீயும்" ," மீண்டும் ஒரு காதல் கதையும் " வாங்கினேன்
படித்து விட்டு வலைப்பூவில் எழுதுகிறேன் .நன்றி

பிரபல பதிவர் said...

// Jana said...
இவ்வளவு Dataகளும் நினைவில் வைத்திருப்பது அச்சரியம்தான் தலை.. தொடருங்கள்
//

அதனால்தான் அறிவாளிகளுக்கு தலை கொஞ்சம் கனமா இருக்கா????? அந்த கனம் data வாலதானா... நான் கூட தப்பா நினைச்சிகிட்டுருந்தேன் பாருங்களேன்

Kalai said...

Hi Sankarji,

Last week I saw Suyetchai MLS movie. You acted in a police commissioner role. Am I correct?

pichaikaaran said...

அதனால்தான் அறிவாளிகளுக்கு தலை கொஞ்சம் கனமா இருக்கா????? அந்த கனம் data வாலதானா... நான் கூட தப்பா நினைச்சிகிட்டுருந்தேன் பாருங்களேன்"

haa ..haaa

அருண் said...

நல்ல போய்க்கிட்டு இருக்கு,இவ்வளவு தகவல்களை மெமரில வச்சிருக்கிறது கஷ்டம்தான்.தொடருங்கள்.
-அருண்-

ரவிஷா said...

இருந்தாலும், அப்போதைய டிஸ்ட்ரிப்யூட்டர்கள் அரசியல் ரீதியாக எவரையும் மிரட்டவில்லையே! இப்போது நிதிகள் ரொம்பவே மிரட்டுவதாக கேள்வி!