Thottal Thodarum

Jun 17, 2011

சாப்பாட்டுக்கடை - பூர்ணா உணவகம்.

12 சில சாப்பாட்டுக்கடைகள் பெரியதாய் இருக்கும். ஏசி, சோபா செட்டுகள் என்று அட்டகாசமாய் தூள் பரத்தியிருப்பார்கள். ஆனால் உணவு வாயில் வைக்க வழங்காது. ஆனால் அதே சின்னக் கடையில் நிற்பதற்கு கூட இடமில்லாமல் இருக்கும். ஆனால் உணவின் சுவையோ அட்டகாசமாய் இருக்கும். அப்படியொரு உணவகம்தான் இந்த பூர்ணா உணவகம்.



வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவில் கங்கையம்மன் கோவிலைத் தாண்டிய பிறகு வலது பக்கமாய் வரும். பூர்ணா பேக்கரி, பூர்ணா உணவகம் என்று இரண்டு கடைகள் சேர்ந்தார்ப் போல இருக்கும். இவர்களுடய ஸ்பெஷாலிட்டி மதிய உணவு. ஒரு நாள் நண்பர் சன் ஷைன் மனோஜ் சாரின் வீட்டில் இருக்கும் போது சாப்பிட பார்சல் வாங்கி வரச் சொன்னோம். அப்போது சாப்பாட்டுடன் சிக்கன் கிரேவி, மீன் குழம்பு, தலைக்கறி என்று ஏகப்பட்ட அயிட்டங்களை வைத்திருந்தார்கள். கூடவே சாம்பார், ரசம், வத்தக்குழம்பு வேறு. எவ்வளவு விலை என்றால் குழம்பு பதினைந்து ரூபாய் என்றான். நான் வெஜ் எல்லாம் வெறும் முப்பது ரூபாய், நாற்பது ரூபாய்தான் என்றதும். நேரில் போய் சாப்பிட ஆசை வந்தது.
09 மிக சின்ன இடம் சுமார் பத்து பேருக்கு மேல் உட்கார முடியாது. எல்லா குழம்பு வகைகளும் பார்சல் கிடைக்கும். சாப்பாடு வாங்காமலேயே. குறிப்பாய் வெஜிட்டேரியனில் வத்தக்குழம்பை வாங்காமல் வந்துவிடாதீர்கள். அவ்வளவு அருமையான சுவை. இதுவே அவ்வளவு நன்றாக இருக்கிறது என்றால் மற்ற அயிட்டங்களைப் பற்றி சொல்லத்தான் வேண்டுமா? என்ன  எண்ணை கொஞ்சம் அதிகம் ஊற்றுகிறார்கள். மற்றபடி சுவைக்கு பஞ்சமில்லை.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Post a Comment

6 comments:

PARAYAN said...

Looks Tasty!

ம.தி.சுதா said...

ஐயையோ நினைக்கையிலேயே நாவு ஊறுதே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அகவை ஒன்று கடக்கும் மதியோடை (நன்றி உறவுகளே)

Sri (Thanjai Indians) said...

Waiting for Avan-Ivan Review.....

அருண் said...

அவன் இவன் விமர்சனம் எப்போ ரிலீஸ்,இன்னிக்கு நைட் எதிர்பார்க்கலாமா?
-அருண்-

மாதேவி said...

அறுசுவை.

KSR said...

Its gud boss, i had meal here many times everytime its been great,Try one more in that area K.S.Tiffen Center.