Thottal Thodarum

Jun 25, 2011

கள்ளக்காதல்.

ஒவ்வொரு நாளும் தமிழ் தினசரிகளில் வரும் செய்திகளைப் பார்த்தால் வயிறு கலங்கித்தான் போகிறது. முக்கியமாய் கொலைகள் பற்றிய செய்திகளை படித்தால் இன்னும் கலங்கித்தான் போகிறது. எங்கு பார்த்தாலும் கள்ளக் காதல். ஏதோ நாடு முழுக்கவும் கள்ளக் காதல் ப்ரச்சனைதான் முதலில் இருப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. அதிலும் தமிழ் தினசரிகளில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டாள் என்றால் உடனே கள்ளக்காதல் ப்ரச்சனையாக இருக்குமோ என்று ஒரு கேள்வி எழுப்பிவிடுகிறார்கள். சில மாதங்களுக்கு முன் ஒரு மேற்கு மாம்பலத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டார். போலீஸார் பல விதங்களில் துருவித் துருவி விசாரணை செய்தும் கொலையாளியை பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தினத்தந்தியோ.. கொலை நடந்த நாள் முதல் கள்ளக்காதல் ப்ரச்சனை, போனில் பேசினார்கள். தொடர்ந்து தொடர்பிலிருந்தார்கள். என்று மக்களுக்கு பரபரப்பு ஏற்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.


ஆனால் நிஜத்தில் நடந்தது என்னவென்றால் கள்ளக்காதல் விஷயம் ஏதுமில்லை. பணத்துக்காகவும், நகைக்காகவும் செய்யப்பட்ட கொலை அது என்று  குற்ற்வாளியை பிடித்ததும் தெரிந்தது. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இதே செய்திகள் தந்தி, மற்றும் மற்ற தமிழ் தினசரிகளைத் தவிர, ஆங்கில பத்திரிக்கைகளில் இந்த கள்ளக்காதல் அது இது போன்ற பிரச்சனைகள் ஏதுமில்லை. போலீஸாரின் விசாரணையில் என்ன தெரிந்ததோ அதுதான் இருந்தது. கள்ளக்காதல் ப்ரச்சனையால் கொலைகள் நடக்காமல் இல்லை. ஆனால் அம்மாதிரியான ப்ரச்சனைகள் ஏதுமில்லாத விஷயத்தில் சம்பந்தப்பட்ட குடும்பம் எவ்வளவு மோசமான அவமானத்தை சந்திக்க வேண்டியிருக்கும்?. ஏற்கனவே நடந்த கொலையினால் கிடைத்த அதிர்ச்சியே விலகாதிருக்கும் போது, இறந்தவர்களைப் பற்றி இம்மாதிரியான செய்திகள் மேலும் அவர்களுக்கு அதிர்ச்சியையும், அவமானத்தையும்தான் கொடுக்கும். அப்படி தந்தி போன்ற தினசரிகள் சொன்ன கள்ளக்காதல் ப்ரச்சனையில்லாமல், வேறு ஒரு கோணத்தில் கொலை நடந்திருந்தால் தந்தி போன்ற தினசரிகள் மறுப்பு செய்தியையோ, அல்லது மன்னிப்பு செய்தியையோ வெளியிடுகிறதா?. 

ஒரு குடும்பத்தில் இம்மாதிரியான தவறான செய்திகள் அக்குடும்பத்தின் மீது  விழும் பார்வை கேவலமானதாகவே படுகிறது. இதற்கு காரணம் கிசுகிசு பாணியில் பரபரப்பான செய்திகளை கொடுக்க வேண்டும் என்பதற்காக இவர்களாகவே ஏற்றிவிடும் மசாலாக்களுக்கு பலியாவது அக்குடும்பம்தான். இவர்களின் செய்தியால் மனமுடைந்து நடைபிணமாய் ஆகிப் போன குடும்பங்களும் உண்டு.  செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஆங்கில தினசரிகளில்  குறிப்பிடப்படுகிறது. ஆனால் பரபரப்புக்காக எதையும் எழுதுவதில்லை. எனவே இனியாவது கொஞ்சம் பத்திரிக்கை தர்மத்துடன் தமிழ் பத்திரிக்கைகள் நடந்து கொள்ளுமா?

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Post a Comment

23 comments:

செம்மலர் செல்வன் said...

நியாயமான ஆதங்கம். நமது தமிழ் பத்திரிக்கைகள் திருந்த வேண்டும்.

creativemani said...

என்ன சார் பண்றது.. நம்ம ஆளுங்களுக்கு (அடுத்தவன்) ரணகளத்துலேயும் கிளுகிளுப்பு தேவைப்படும்.. அதான் குறிப்பறிஞ்சு விக்கறான்..

kalamarudur said...

தவறான செய்தி தரும் பத்திரிக்கை தண்டிக்க படவேண்டும்

பிரபல பதிவர் said...

தினத்தந்தி படிக்கிறதே இந்த செய்திகளுக்குத்தான்....

எத்தனை பேர் ஞாபகம் வச்சுப்பாங்க... இதெல்லாம் பாஸிங் க்கெளவுட் நியூஸ்தானே....

ஆங்கில பத்திரிக்கை எத்தன பேரால படிக்க முடியும்....

உள்ளது உள்ளபடி படிக்க இதென்னா FIR ஆ???

Cable சங்கர் said...

illai.. மாப்பிள்ளை.. ஒரு குடும்பத்தின்மீது அப்படிப்பட்ட கேவலமான பார்வை விழுந்த பட்ட கஷ்டம் எனக்கு தெரியும். அதனால் தான் இந்த பதிவு.

• » мσнαη « • said...

நியாயமான ஆதங்கம் தான் கேபிள் அவர்களே...எல்லோருடைய எதிர்பார்ப்பும் அதுதான்...சில ஆங்கில சேனல்களும் TRP ரேட்டிங்கிற்காக இது போன்ற விசயங்களை மிகையாக விமர்சிக்கின்றனர்...(எ.கா..ஆருஷி கொலை வழக்கு...ஒவ்வொரு நாளும் புதிதாக ஒரு கள்ள ஜோடியை உருவாக்கி பரபரப்பை உண்டாக்கினர்...)மும்பை தாக்குதலின் போதும் NSG இன் வியூகங்களை நேரடியாக ஒளிபரப்பி மறைமுகமாக தீவிரவாதிகளுக்கும் உதவினரே!!!மறுக்க முடியுமா??!!! பத்திரிக்கை தர்மத்துடன் சமூக பொறுப்பும் இருக்க வேண்டும்!!!!

Unknown said...

பத்திரிகை தர்மம்!..அண்ணே உண்மையில அப்படி ஒன்னு இருக்குங்களா இப்போ!

இயக்குனர் சார்லஸ் said...

மிக முக்கியமான பதிவு இது. கண்டிக்கப்படவேண்டிய ஒன்றை எல்லாரும் கண்டுகொள்ளாமல் விடுகிறார்களே என்று வெகு நாட்களாகப் புழுங்கிக்கொண்டிருக்கிறேன். நமக்கு நேரடியாகப் பாதிக்காதவரை 'இதெல்லாம் சகஜம்' என்று எடுத்துக்கொள்வது அநியாயம். ஐம்பது-நூறு ஆண்டுகள் கழித்து நம் பேரன்கள், இந்த செய்தித்தாள்களை ஆராய்ந்தால் நம்மைப் பற்றி எத்தகைய முடிவுக்கு வருவார்கள் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும்

Unknown said...

மிகவும் நியாயமான ஆதங்கம்.இதை எழுதுபவர்கள் அந்த நிலையில் தங்கள் குடும்பத்தில் ஒருவரை நினைத்துப்பார்த்தால்இவ்வாறு அபாண்டமாக எழுத வாய்ப்பில்லை.ஆனால் அது சாத்தியம் இல்லை.
பத்திரிகையில் உள்ள செய்தி எல்லாம் 100% உண்மை என்று நம்புவதில் இருந்து மக்கள் விடுபடவேண்டும்.

krish said...

சிவகாசி மாப்பிள்ளை. நமக்கு அது passing cloud. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவர்கள் எப்படி மறப்பார்கள். இதில் இன்னும் சிலர் போலீஸ் நிஜமாகவே கொலையாளியையும் காரணத்தையும் கண்டுபிடித்த பிறகும் " காசு குடுத்து விஷயத்த அமுக்கிட்டான்யா ", " நெருப்பு இல்லாம புகையுமா " மாதிரி கேவலமாக பேசுவர் . உங்களை போன்ற கள்ள காதல் செய்தியை படிக்கும் ஆசாமிகளும் ஒரு விதத்தில் தினத்தந்தி செய்திகளுக்கு காரணம். உங்க ரெண்டு பேரையும் உள்ள போட்டு பெண்ட நிமித்தனும்.

Rafeek said...

இது போன்ற செய்திகளை எழுதும் நிருபர்கள்..அவர்களின் அன்றாட நிகழ்வுகள்.. போலீஸிடம் பழகும் முறைகள் எல்லாமுமே.. காசுக்காகவே இருக்கும். யாரேனும் சுட்டி காட்டினால் கூட நான் பத்திரிகைகாரன் தெரியுமா என்பார்கள்.. நிமிர்த்த முடியாது சார். இதில் முதலிடம் தந்திக்கே!!

கோவை நேரம் said...

இந்த தந்தி மட்டும் தான் என்னமோ நேர்ல இருந்து பார்த்த மாதிரி செய்தி போடுவாங்க.கத்தியால் சதக் சதக் என்று குத்திவிட்டு ஓடினான் அப்படின்னு எழுதுவாங்க ...

Kite said...

ஹிந்து பத்திரிக்கை இலங்கை விவகாரங்களில் சில பொய் செய்திகளைப் பரப்பியிருந்தாலும் பொதுவாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களையே செய்திகளாக வெளியிடுகிறது. ஊகங்களை முடிந்தவரைத் தவிர்க்கிறது. தமிழ்ப் பத்திரிகைகள் இந்நிலையை அடைய வெகு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

திருநெல்வேலி வெங்கட்ராமன் said...

super sir ivanunga thiruntha matanunga avan veetula oru..k...........viluntha thaan puriyum

nellai ram said...

நமது தமிழ் பத்திரிக்கைகள் திருந்த வேண்டும்!

bandhu said...

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை! நாளிதழ் படிக்கும் எல்லோர் மனத்திலும் அடி ஆழத்தில் இது போன்ற தவறான செய்திகள் தங்கி விடும்! அந்த மாம்பலம் கொலையில் கள்ளத்தொடர்பு எதுவும் இல்லை என்பது முதல் செய்தி படித்த எத்தனை பேருக்கு தெரியும்? ஒவ்வருவருக்கும் அந்த குடும்பத்தார் விளக்கிக்கொண்டிருக்க முடியுமா?
இதற்கு ஒரே வழி தவறாக செய்தி போட்ட பத்திரிகை மீது வழக்கு போட்டு நாறடிப்பது! ஒரு பத்து வழக்கு வந்தால், பத்திரிக்கைகள் கொஞ்சம் ஒழுங்காக எழுதுவார்கள்.
பத்திரிகை தர்மம், சுய ஒழுக்கம் என்று எதுவும் தமிழ் பத்திரிக்கைகளுக்கு கிடையாது! எது விற்குமோ அதையே கொடுப்போம் என்ற ஒரே குறிக்கோள் தான் இவர்களுக்கு!

Sri (Thanjai Indians) said...

ஊர் குடி கேட்டால் என்ன தன் குடி வாழ்ந்தால் போதும் இப்போ இது தான் பத்திரிக்கை தர்மம் :(

moe said...

Best and needed blog post.

Daily Thanthi is not even fit to clean your S**T. It leaves black ink.

I can only associate it with a bad smell from the barber shops.

To be frank, i have low regard for those who read it in their house.
I shouldn't judge, but i can't help.

it's a shame to have Tamil newspapers like Daily Thanthi in the same shelf as Dinamani.

Adhitanar did a good job, when there were too many illiterates in TN. Now it's just a useless news paper, which gives late news with out any accuracy.

I normally like Dinamalar.but didn't like their story about yester year cinestars and their brothel links. with out getting in to the merit of the stars or story... Indian society puts brothel ahead of 2g or even murder.
These things should be published only after vetting thoroughly.

only saving grace is that Dailythanthi will eventually die.

sarav said...

thank u for the important post. ninaivu therinja naalil irundhu thanthi ippadi thaan new podukirathu Sensational podramnu bad reporting panranga azhagiya ilam pen tharkolai - kalla kadhal karanama ? appadi nu oru headlines indha mathiri headlines English news paperla varavae varadhu standard illama irukkarathu tamil newspapers mattum thaan Fourth pillar appadinnu sollum podhu evalvu poruppa irukkanum

Wanderer said...

நீங்கள் சொல்வதை முழு மனதோடு வரவேற்கிறேன். இது போன்ற அரைவேக்காட்டான, உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதை தந்தி, மலர் போன்ற பத்திரிகைகள் வாடிக்கையாகவே வைத்துள்ளன. குறிப்பாக பெண்களை இழிவுபடுத்த அவ்ர்கள் தயங்குவதேயில்லை. நான் பார்த்த இரண்டு உதாரணங்கள்:

1. பாண்டிச்சேரியில் எங்கள் தெருவில் திரிந்து கொண்டிருந்த மனநலம் குன்றிய பெண், பட்டினியால் இறந்த போது "விபசார அழகி மர்ம மரணம்" என்று தலைப்பிட்டு தந்தி செய்தி வெளியிட்டது.

2. எங்கள் அபார்ட்மென்டில் குடியிருந்த பெண்(மருத்துவக்கல்லூரி மாணவி) மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டபோது, "காதல் தோல்வியால் மாணவி தற்கொலை!" என்று விசாரிக்கமலேயே செய்தி வெளிட்டது.

இது போன்ற பொய் செய்திகளை வெளியிட்டு பிழைப்பு நடத்துவதற்கு, @$#%(&^$$&$. வேண்டாம், அசிங்கமாக வாயில் வருகிறது

அன்புடன் மலிக்கா said...

உண்மைகளை உலகுக்கு எடுத்துச்சொல்வதாக எண்ணிக்கொண்டு
இல்லாதவைகளை இருப்பதாக பொய்களை பரப்பி விற்பனைகளை அதிகப்படித்துக்கொள்ளவே மனசாட்சியை மறந்துவிட்டு இதுபோன்று செய்கிறார்கள்.

தங்களின் ஆதங்கம் நியாயமானவையே..

hayyram said...

தினத்தந்தி ஒரு மஞ்சள் பத்திரிக்கை. டீக்கடையிலும் சவரக்கடையிலும் வாயில் ஜொள்ளு ஒழுக படிப்பவர்களுக்காகவே எழுதப்படும் மற்றும் படம் போடப்படும் பத்திரிக்கை. வீட்டில் வாங்கிப்படிக்க லாயக்கில்லாத பத்திரிக்கை.

Unknown said...

Padippavargal than intha mari yosikiranga seyvinai thannai sudum ennovo thanthila news podrthalthan kalla kadthal. Nadappadhu mari pesarthu thappu adithattu makkal padikkum thanthi thavaru nadakka koodathu endru than solgirthe thavira thavru seyya solla villai