Thottal Thodarum

Dec 19, 2012

மக்களை ஏமாற்றும் தியேட்டர்கள்/மால்கள்-1

தேவி திரையரங்கு வளாகம் புதுப்பிக்கப்பட்ட பிறகு டிக்கெட் விலையை 10,85,95 என்று மூன்று நிலைகளில் விற்று வந்தார்கள். மூன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருக்கும் வளாகத்தில் இம்மாதிரியான டிக்கெட் முறைதான் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாதங்களில் இவர்கள் 85 ரூபாய் டிக்கெட்டை எடுத்துவிட்டு, நேரடியாய் 10, மற்றும் 95 என்று ஆக்கினார்கள்.  மக்களும் முணுமுணுத்துக் கொண்டே டிக்கெட் வாங்கினார்கள். ஒரு காலத்தில் சென்னையில் அருமையான கலெக்‌ஷன் செண்டர் என்று சொன்னால் அது தேவி வளாகம் தான். ஏனென்றால் அங்கே தான் டிக்கெட் விலை 45 ரூபாய்க்கு மிகாமல் நல்ல ஏர்கண்டீஷனோடு, சிறப்பாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த அரங்கமாய் இருந்தது. 


தியேடட்ரை புதுப்பித்த பிறகு எல்லாமே சத்யம் திரையரங்கைப் போல வருமானம் ஈட்டும் ஆசை வந்துவிட்டது. ஆனானப்பட்ட சத்யமில் பார்க்கிங் 10 ரூபாய் தான் ஆனால் இங்கே இப்போது 15லிருந்து 20 ரூபாய் ஆகிவிட்டது. கார் பார்க்கிங் 30 ரூபாய். முன்பு இருந்த வசூல் இப்போது தேவி வளாகத்தில் கிடையாது. தேவி, மற்றும் தேவி பாரடைஸைத் தவிர தேவிகலா, தேவிபாலா அரங்கங்கள் சிறியதாகவும், முன் சீட்டில் இருப்பவர்களின் தலை மறைக்கும் அளவிற்கு சீட் அமைப்பு இருப்பதால் அங்கே த்ரீடி படம் பார்த்தால் இம்சையாய் முன் சீட் ஆள் தலையும் ஏதோ ஸ்பெஷல் எபெக்ட் போலத் தெரியும் ஆதலால் அங்கே படம் பார்பதை விஷயம் தெரிந்தவர்கள் தவிர்த்துவிடுவார்கள். 

சமீபத்தில் திடீரென தேவி வளாகத்தில் அதிகபட்ச டிக்கெட் விலை 95லிருந்து 120க்கு மாற்றி விட்டார்கள். மூன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளுடன், புட்கோர்ட்டும் இருந்தால் தான் அந்த விலை வாங்க அரசு உத்தரவு. எனக்கு தெரிந்து அங்கே பப்ளிக் புட்கோர்ட் இல்லை அப்படியிருக்க எப்படி அனுமதித்தார்கள்? என்று யோசனையாய் இருந்தது. தியேட்டரினுள் சென்று புட்கோர்ட் எங்கே என்று கேட்டால் அதற்கு அனுமதி கிடையாது என்றார்கள். படம் பார்க்க டிக்கெட் வாங்கினால் தான் உள்ளே அனுமதிப்போம் என்றார்கள். சரி டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே போனால் தேவி அரங்கத்தின் லாபியில் ஒரு ஓரமாய் தடுப்பு போட்டு ஒரு கூண்டு அமைத்து அதில் ஒரு டேபிளையும், நான்கு சேர்களையும் போட்டு விட்டு புட்கோர்ட் என்று பெயரளவில் ஒரு செட்டப் செய்துவிட்டு விலையேற்றி உள்ளார்கள். அதை போட்டோ எடுக்க நான் முனைந்த போது அதை தடுக்க இரண்டு வாட்ச்மேன்கள் வேறு. திருட்டுத்தனமாய் எடுத்த போட்டோ தான் இங்கே போட்டிருக்கிறேன்.
மக்களுக்கு எந்த விதமான வசதிகளையும் செய்து தராமல் இப்படி கொள்ளையடித்தால் மக்கள் எப்படி தியேட்டருக்கு வருவார்கள்?. ரசிகர்களை மரியாதையாய் நடத்துவது இல்லை. கொடுக்கும் காசுக்கு வேல்யூ இல்லை அதனால் முதல் மூன்று நாட்களுக்கு பிறகு தியேட்டரில் கூட்டமில்லை. ஆனால் பக்கத்து ஏரியாவில் இருக்கும் சத்யத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது வெகு சுமார் படத்துக்கு கூட. சத்யம் மாதிரி மக்களுக்கு வசதிகளை செய்து கொடுத்துவிட்டு காசை வாங்கினால் கூட பரவாயில்லை. இப்படி அரசை ஏமாற்றி, மக்களிடம் கொள்ளையடிப்பதை நிறுத்தாவிட்டால் நிச்சயம் தியேட்டர்களின் நிலை எதிர்காலத்தில் கவலைக்கிடம்தான். சத்யத்தில் கூட குறைகளேயில்லையா? என்று கேட்டால் நிச்சயம் இருக்கிறது. ஆதை குறிப்பிட்டால் அதற்கு முடிந்தவரை சரியான பதிலோ, அல்லது அக்குறை நிவர்த்தி செய்யப் படுகிறது. அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
கேபிள் சங்கர்

Post a Comment

13 comments:

Mohandoss said...

//திருட்டுத்தனமாய் எடுத்த போட்டோ தான் இங்கே போட்டிருக்கிறேன்.//

படம் ஷேக்காகியிருக்கு. அடுத்த தடவை ப்ளாஷ் போட்டு, நிறுத்தி நிதானமா எடுங்(கோ!)

ப.கந்தசாமி said...

யானை குளித்த பிறகு தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும். தியேட்டரை மூடும் முன்பு கொஞ்சம் காசு பார்க்கலாமென்று நினைப்பது தவறா?

Krishna said...

arumai sir
Pramatham.
Nice write up

erimalai said...

இதே மாதிரி சாந்தி தியேட்டரிலும் ஓரளவு கூட்டம் வந்தவுடன் கவுண்டரில் டிக்கெட் கொடுப்பதை நிறுத்திவிட்டு, தியேட்டர் ஆட்கள் முலம் டிக்கெட் பிளாக்கில் விற்கபடுகிறது.

scenecreator said...

for ur information ,udhayam theater also getting rs.30 for car parking.

சுரேகா.. said...

இன்றைய தமிழ் சினிமாவின் வியாபார குழப்பங்களுக்கு தியேட்டர்களின் அராஜகம்தான் அடிப்படைக் காரணம் என்பதை அவர்கள் உணரவேண்டும்.

தேவியும் திருட்டுத்தனத்தை ஆரம்பித்துவிட்டார்களா?

சூப்பர்..!

vijayan said...

சினிமாதான் வாழ்கை என்ற தமிழன் இருக்கும்வரை இந்த அட்டகாசம் எல்லாம் குறையாது.

Anonymous said...

95 பரவாயில்லையே கோவையில் மால்களில் உள்ள தியேட்டர்களீல் குறைந்த பட்சம் ரூபாய் 120 மட்டுமே...பார்க்கிங் தனி..மணிக்கு 20 ரூபாய்.

Anonymous said...

விவரம் தெரிஞ்சவங்க தேவி தேட்டருக்கெல்லாம் போக மாட்டாங்க. இப்பிடியே போச்சுன்னா இழுத்து மூட வேண்டியதுதான்.

எனக்குத் தெரிஞ்சு ஒரு காலத்துல ஓகோன்னு இருந்த தேட்டர்தான். இப்போ இப்பிடியாயிருச்சு.

Durai said...

Watch tamil movies online http://www.funtamilvideos.com/

kk said...

உங்க பக்கமும் இதே நிலைதானா நான் யாழ்ப்பாணத்திலிருந்து கொமண்ட் பண்ணுரேன் சேர் யாழ்ப்பாணம் தியேட்டர்களில் கூட இதே நிலைதான் 5 ரூபா மிக்ஸர் பாக்கட்டை 20 ரூபா கொடுத்துவாங்கவேண்டும் என்ன கொடுமை

Unknown said...

இந்த தொல்லை எதுவும் வேண்டாம்னுதான் நான் தியேட்டர் பக்கமே போறது இல்ல..இருக்கவே இருக்கு dvd அல்லது ஆன்லைன் torrent ... பர்சுக்கும் நல்லது, உடம்புக்கும் BP வராமல் இருக்கும்..

Unknown said...

SAY GOODBYE TO THEATERS.DVD IS BEST