Thottal Thodarum

Dec 9, 2012

விஸ்வரூபம் தமிழ் சினிமாவை அழித்துவிடுமா?

விஸ்வரூபம் படத்தை வெள்ளித்திரை வெளியீட்டிற்கு முன் டிடிஎச்சில் வெளியிடப்போவதாய் சொன்ன நேரத்திலிருந்து தமிழ் சினிமா உலகமே அல்லோல கல்லோலப் படுகிறது. இனி சினிமா அவ்வளவுதான். தியேட்டர்கள் முடங்கி விடும். தொழில் படுத்துவிடும் என்று ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிறைய தயாரிப்பாளர்கள் சின்ன படங்களுக்கு இனி வாழ்க்கையே இல்லை என்கிறார்கள். தியேட்டர் அதிபர்களோ இனி நாங்கள் தியேட்டர்களை மூடிவிட்டு போய்விட வேண்டியதுதான் என்று புலம்புகிறார்கள். இன்னொரு பக்கம் வெளிப்படையான அறிக்கை விடாவிட்டாலும் இதனால் வரும் லாபக் கணக்கை பல தயாரிப்பாளர்கள் போட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.


இது ஒன்றும் உலக வழக்கில் இல்லாத விஷயம் இல்லை. அமெரிக்காவில் பல படங்கள் டிவிடியாகவும், பே பர்வியூவிலும் வெளியாகிய பின் தியேட்டரில் வெளியாகி வெற்றிப் படங்களாய் வலம் வந்திருக்கிறது. என்ன செய்தாலும் தியேட்டர் பக்கம் வரவே மாட்டேன் என்கிற ஒரு கும்பல் திருட்டு டிவிடியிலும், சாட்டிலைட் ஒளிபரப்பிலும் படம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறது.

கேபிள் டிவி தமிழ்நாட்டில் வளர ஆரம்பித்த போது தமிழ் திரையுலகமே அதை ஒழிக்க வேண்டும் என்று ஊர்வலம் போனார்கள்.அப்போது விஞ்ஞான வளர்ச்சியை நாம் தடை செய்ய முடியாது என்று சொன்னதற்காக கருங்காலி என்று சொல்லி தூற்றினார்கள். ஆனால் இன்று கேபிளின் வளர்ச்சியால் உருவான சாட்டிலைட் சானல்கள் தான் ஒரு படத்தின் தயாரிப்பிற்கு செலவான தொகையில் குறைந்த பட்சம் 30% லிருந்து 50 % வரை திரும்ப எடுக்க பயன் படுகிறது. இன்னும் சொல்லப் போனால் இன்றைய காலகட்டத்தில் சாட்டிலைட்டுக்காகவே படங்கள் தயாராகின்றது என்று சொன்னால் அது தான் உண்மை. எத்தனை படங்கள் தியேட்டர்களில் மட்டும் ஓடி போட்ட முதலை எடுத்திருக்கிறது. 

எப்.எம்.எஸ் எனும் வெளிநாட்டு தமிழ் சினிமா வியாபாரத்தை விரிவாக்கியதில் கமலுக்கு முக்கிய பங்கு உண்டு. முன்பெல்லாம் பொதுவாக வெளிநாட்டு உரிமை என்று விற்றுவிடுவார்கள். ஆனால் கமல் தன்னுடய படத்தின் மூலம் தான் யு.எஸ். யு.கே. சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, மற்ற ஏசியன், மற்றும் ஈரோப்பியன் நாடுகள், வளைகுடா நாடுகள் என்று தனித்தனியாய் பிரித்து விற்க ஆரம்பித்தார். அப்படி இல்லையென்றால் மொத்தமாய் எல்லா ஏரியாக்களுக்கும் சேர்த்து விலையை நிர்ணையித்தார். அவர் மட்டும் அன்றைய கால கட்டத்தில் அதை செயல்படுத்தவில்லையென்றால் இன்றைக்கு தமிழ் சினிமாவை, தமிழ்நாட்டு திரையரங்கில் மட்டுமே வெளியிட்டு நூறு கோடி எல்லாம் போட்டு படமெடுக்கவே முடியாது.

தமிழ் சினிமாவில் விநியோகஸ்தர்களுக்கு பணம் திரும்பக் கொடுத்ததைப் பற்றி பேசுகிறவர்கள் அவரின் ஹேராம் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொண்டு பணத்தை திரும்பக் கொடுத்ததை பற்றி பேசமாட்டார்கள்.

டி.டி.எச்சில் பே பர்வியூவில் ஒளிபரப்புவதால் தியேட்டர்காரர்களுக்கு என்ன நஷ்டம் வந்துவிடும்?. எனக்கு தெரிந்து நிறைய தயாரிப்பாளர்களுக்கு போட்ட முதலை எடுக்க வாய்ப்பு கிடைக்கும் மேலும் பல படங்களை எடுப்பார்கள்?. சரி தியேட்டர்காரர்களுக்கு என்ன நஷ்டம்?. டி.டிஎச்சில் படத்தைப் போட்டுவிட்டால் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க மாட்டார்கள் என்கிறார்கள். சரி.. இப்போது மட்டும் மக்கள் தியேட்டரில் கூட்டமாய் கூட்டம் சேர்ந்து மொய்த்துக் கொண்டாயிருக்கிறார்கள்?. இல்லையே.. பெரிய நடிகர்கள் நடித்த படத்திற்கு மட்டுமே முதல் மூன்று நாட்கள் அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில் கூட்டம் இருக்கிறது. மற்ற ஊர்களில் எல்லாம் மொத ஷோ பார்த்துவிட்டு நன்றாக இல்லையென்றால் அவ்வளவுதான். ஏனென்றால் அரசு நிர்ணையித்த விலையை விட நான்கு மடங்கு அதிகம் கொடுத்து எதற்காக படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் பொதுமக்களிடம் அதிகம் இருக்கிறது. சென்னையிலாவது பரவாயில்லை மல்ட்டிப்ளெக்சுகளில் 120 ரூபாய்க்கு டிக்கெட் கொடுக்கிறார்கள் மற்ற தியேட்டர்களில் எல்லாம் அடிமடியை பிடுங்கி கொளளையடிக்கிற மாதிரி 200ம் முன்னூறும் பிடுங்குகிறார்கள். அப்படியிருந்தால் மக்கள் தியேட்டரில் போய் படம் பார்க்கவே போவதில்லை. அப்படி போகாத மக்களை வீட்டிலிருந்து திருட்டி டிவிடியில் பார்க்க விடாமல்  டிடிஎச்சின் மூலமாய் பார்க்க வைத்து தயாரிப்பாளர் சம்பாரிப்பது என்ன தவறு?

தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் அவர்கள் சங்கமம் படத்தை தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் போதே சன் டிவிக்கு விற்பனை செய்தார். திரையுலமே அவரை திட்டியது. ஆனால் இன்றைய நிலை.. படம் வெளியாகி ஒரு மாதத்தில் எல்லாம் சாட்டிலைட்டிவியில் ஓடுகிறது. தியேட்டரில் ஓடாத படங்கள் கூட நல்ல விலைக்கு விற்பனையாகிறது. இன்றைய டிவி உலகில் மக்கள் திரையரங்குக்கு வந்துதான் படம் பார்க்க வேண்டும் என்று காத்திராமல் அவர்கள் எங்கேயிருக்கிறார்களோ அங்கேயெல்லாம் படத்தை ஓட்டி காசு பார்ப்பது தான் தயாரிப்பாளரை காப்பாற்ற ஒரே வழி.

 பே பர் வியுவினால் நிறைய சின்னப் படங்களுக்கு கமல் படத்திற்கு கிடைக்கும் விலை அளவிற்கு கிடைக்காவிட்டாலும் அட்லீஸ்ட் ரெவென்யூ ஷேரிங் முறையில் திரையரங்கின் மூலமாய் மட்டுமில்லாமல் மேலும் பணம் சம்பாதிக்க வழி வகுக்கும். சென்னை போன்ற நகரங்களில் கேபிள் டிவி முழுவதும் டிஜிட்டல் மயமாக்கம் நடக்கவிருக்கிறது. டிடிஎச் போலவே மூவி ஆன் டிமாண்ட் டெக்னாலஜியின் மூலம் தனியே சாட்டிலைட்டுக்கு மட்டுமில்லாமல் கேபிள் டிவி பே பர் வியூவிற்கும் விற்று சிறு முதலீட்டுப் படங்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு வரும்.. வந்தே தீரும்.

இப்படத்தை ஏற்கனவே விநியோகஸ்தர்களிடம் விற்றிருந்தால் அதிக விலை கொடுத்து வாங்கிய படத்தை டிடிஎச்சில் போடுவதால் வசூல் பாதிக்கும் என்று சொன்னால் அது நியாயம். இப்படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்று இரண்டையும் கமலே செய்யும் பட்சத்தில் தியேட்டர் அதிபர்கள் ப்ளெயின் ட்ரெம்சில் போட்டு வரும் வசூலை எடுத்துக் கொடுப்பதில் என்ன  குறைந்துவிடப் போகிறது?. இந்திய அளவில் ஃபீரிமியம் விலையில் ஒரு திரைப்படத்தை, படம் வெளியாவதற்கு முன்னே.. வெளியிடுவது  தமிழ் சினிமாவிற்கு வேண்டுமானால் புதிதாய் இருக்கலாம். ஆனால் உலகம் முழுக்க ஏற்றுக் கொள்ளப்பட்ட வியாபாரம் தான் இது என்பதை மற்ற தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் ஒரு சூப்பர் ஹிட் சினிமாவின் வாழ்வே மூன்று வாரங்கள் என்றாகிவிட்ட நேரத்தில் விடியோ, டிவிடி, சாட்டிலைட் போன்ற உரிமைகளை வருடக் கணக்கில் தயாரிப்பாளர்களின் கையில் வைத்துக் கொண்டு அலைவது.. பெரும் பொருளாதார இழப்பு என்றே சொல்ல வேண்டும்.

டி.டிஎச்சில் வெளீயிடுவதால் பைரஸி வெளிவந்துவிடும் என்ற ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் இன்று எந்த படத்தின் திருட்டு டிவிடி, இண்டெர்நெட் டோரண்ட் லிங்க் இல்லாமல் இருக்கிறது. எப்படியும் தியேட்டர்களிலிருந்து திருட்டுப் பிரிண்ட் எடுக்கப்பட்டு வெளிவந்து தயாரிப்பாளரையும், விநியோகஸ்தரையும் நஷ்டமடைய வைக்கத்தான் போகிறது என்கிற பட்சத்தில் அதை ஏன் லீகலாய் வெளியிட்டு, தயாரிப்பாளர் காசாக்கிக் கொள்ளக் கூடாது?

மார்கெட்டிங் ஆட்கள் ஒரு விஷயத்தை சொல்வார்கள் அவர்கள் ஏதாவது ஒரு ப்ராடெக்டை மார்கெட் செய்ய வேண்டுமென்றால் உடனடியாய் தென்னிந்தியாவில், முக்கியமாய் தமிழகத்தில் தான் ஆரம்பிப்பார்களாம். ஏனென்றால் இங்கே பல வருடங்களாய் ஒரே ப்ராண்ட், ஒரே விஷயத்தை உபயோகிப்பவர்கள் அதிகம். அவ்வளவு சீக்கிரம் பழைய விஷயத்திலிருந்து புதியதற்கு மாற மாட்டார்கள். அப்படியான மார்க்கெட்டில் 0.5% வரவேற்பு கிடைத்தால் அது இந்திய அளவில் பெரிய இம்பாக்டை கொடுக்குமாம்.

அரசிடம் போய் மனு கொடுக்கப் போவதாய் சொல்லியிருக்கிறார்கள். திருட்டு டிவிடிக்கு எதிராய் ஏன் மனு கொடுக்கவில்லை?. அதை தடுக்க என்ன செய்திருக்கிறார்கள்?. பெரிய நடிகர்கள் படம் என்று எம்.ஜியாய் கொடுத்து வாங்கிய படங்களை உடனடியாய் வசூல் செய்ய அரசு அனுமதித்த கட்டணத்தை விட அதிகம் வாங்கி கொள்ளையடிப்பதைப் பற்றி ஏன் மனு கொடுக்கவில்லை?. ஆந்திராவில் திருட்டு டிவிடி கிடையாது. இங்கேயிருக்கிறது என்று கம்பேர் செய்யும் ஆட்கள் அங்கே 45 ரூபாய்க்கு ஏசி டிடிஎஸ்சுடன் படம் பார்க்க முடியும் ஏன் இங்கே பார்க்க விடுவதில்லை என்று கேள்வி எழுப்புவதில்லையே?

ஒரு வேளை படம் டிடிஎச்சில் வெளியாகி படம் நன்றாக இல்லை என்று ரிசல்ட் வந்துவிட்டால் ஒரு தயாரிப்பாளராய், விநியோகஸ்தராய், இயக்குனராய்  இந்த முயற்சியால் அதிகம் பாதிக்கப்படப் போவது கமல்தான். ரிஸ்கெடுக்க அவர் தயாராக இருக்கும் போது வேடிக்கை பார்க்க என்ன கஷ்டம்? படம் நன்றாக இருந்து ஒரே நாளில் காப்பி எடுக்கப்பட்டு பைரஸி டிவிடிக்களாய் படத்தின் ஓட்டத்தை காலி செய்தாலும் நஷ்டப்படுபவர் அவரே.. எனவே வெயிட் அண்ட் சீ...
கேபிள் சங்கர்

http://tamildigitalcinema.com/?p=44089

Post a Comment

21 comments:

Anonymous said...

அக்ஸ்சப்டன்ஸ் கிடைக்க லேட் ஆகும் அப்பறம் கமல் காப்பியடிச்சு இப்படி பண்ணினாரு அவரா புதுசா பண்ணினாருன்னு இதுக்கு பின்னாடி போறவங்க சொல்லத்தான் போறாங்க அதையும் நாம கேக்கத்தான் போறோம்

pichaikaaran said...

" இது ஒன்றும் உலக வழக்கில் இல்லாத விஷயம் இல்லை

என்னவோ இந்த முறையையே கமல்தான் கண்டுபிடித்தார் என்பது போல சிலர் கதை விடும் நிலையில், உங்கள் நேர்மை ஆறுதல் அளிக்கிறது.

”அவரின் ஹேராம் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொண்டு பணத்தை திரும்பக் கொடுத்ததை பற்றி பேசமாட்டார்கள்”

ஏன் என்றால் மற்ற தோல்விப்படங்களுக்கு அவர் பணத்தை கொடுத்தாரா.... அதனால்தான்..

“ ஒரு வேளை படம் டிடிஎச்சில் வெளியாகி படம் நன்றாக இல்லை என்று ரிசல்ட் வந்துவிட்டால் ஒரு தயாரிப்பாளராய், விநியோகஸ்தராய், இயக்குனராய் இந்த முயற்சியால் அதிகம் பாதிக்கப்படப் போவது கமல்தான்’

எல்லாம் தெரிந்த நீங்கள் இப்படி சொல்வது கமல் மீது நீங்கள் கொண்டுள்ள கண்மூடித்தனமான பக்தியை காட்டுகிறது. டிடீஎச் மூலம் படம் பிளாப் ஆனால் , சினிமா மூலம் மறைமுகமாக பயன் பெறும் , தியேட்டர் சார்ந்த பல ஏழைகள் பாதிக்ப்படுவார்கள். இந்த முறை பணக்காரனை பணக்காரனாக்கவும் , ஏழைகளை மேலும் ஏழைகளாக்கவும்தான் பயன்படும்

a said...

//
pichaikaaran s said...
டிடீஎச் மூலம் படம் பிளாப் ஆனால் , சினிமா மூலம் மறைமுகமாக பயன் பெறும் , தியேட்டர் சார்ந்த பல ஏழைகள் பாதிக்ப்படுவார்கள். இந்த முறை பணக்காரனை பணக்காரனாக்கவும் , ஏழைகளை மேலும் ஏழைகளாக்கவும்தான் பயன்படும்
//
அபத்தம்...

Athiban said...

அருமையான பதிவு...!!!

இந்தியாவை பொருத்தவரை தயாரிப்பவனை விட நடுவில் புகுந்து வாங்கி விற்பவனே அதிகம் லாபம் அடைகிறான். கமலின் இந்த புதிய முயற்சி முழு லாபத்தையும் தயாரிப்பாளருக்கு கொடுக்கும் என நினைக்கிறேன்.

முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

Hari said...

Enaku oru doubt. DTH il ipodhu record panra option iruku. Vishwaroopam padattha 1 time dhan dth la poda poradha solranga. Apadi 1 time pottalume dth record vechurundha andha padattha parkum bodhu record panni thirumba thirumc epo venalum parkalam. adhulayum dish tv dth recorder la copy panra option iruku. Padam parkum bodhu record panni print pottu ellarukum kuduttha enna pannuvanga?Then ella friends kum kanbichuta kandipa padam edukaravangaluku nashtam dhan.

Hari said...

indha dth la relay panradhula miga periya ottai irukku. ipo sun dth thavira ella dth set box la yum recording panra option irukku. adhulayum dish tv recording set top box la record pannadha copy pannikara vasadhiyum vandhachu. ipadi theatre la release panradhukku 10 days munnadiye dth la relay pannaal dth recording set box vechurukkaravanga andha padam parkkum bodhu record panni copy edutthu print pottu adhu vazhiya sambidhikka aarambiccha enna pannuvaanga? idhunaala cinema ku kandippa loss dhaan. ennadhan internet la padam vandhalum clarity ya vara 1 month mela aagudhu. dth la nalla tharatthoda relay panradha kamal solli irukkaru. appadi relay pannum bodhu record panni copy eduttha sema nashtam dhan avangalukku. apparam idhukkagave ellarum recording set box vaanguvanga. vaangi print pottu vippaaanga. nalla tharamaana print um udane kidaikkinra vazhiyai dhaan kamal seiyya ninaikkiraar. paarpom enna aagiradhu enru.....

சுபா said...

யோவ் பிச்சைக்காரா. தமிழ் நாட்டுல மொத்தம் எத்தனை தியேட்டர் இருக்கும். ரெண்டாயிரம்? ஒரு தியேட்டர்ல பத்து பேரு வேல பாத்தா மொத்தம் 20000 பேர் பாதிக்கபடுவாங்க. சும்மா எபக்டு குடுக்க கூடாது

dr_senthil said...

Again Kamal proved that he takes movies for him not for others satisfaction..

செங்கோவி said...

நீங்கள் சொல்லியிருப்பது போல், இதில் அதிக ரிஸ்க் தயாரிப்பாளர் கமலுக்குத் தான். இதில் மற்றவர்கள் கூக்கிரலிட பெரிதாக ஒன்றும் இல்லை. இந்த மாதிரி எதிர்ப்பைப் பார்ப்பது நமக்கும் கமலுக்கும் புதிதில்லையே தல..!

pichaikaaran said...

@ சுபா... நண்பரே,,, கேபிள் ஜியின் சினி்மா வியாபாரம் புத்தகம் படியுங்கள் .
எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரி்யும்..

கேபிள் ஜிக்கும் இது தெரியும். கமல் மீது கொண்டுள்ள குரு பக்தியால் , உண்மை நிலையை மறைக்கிறார்

ananthu said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...!

Vin said...

I feel the biggest issue of Indian Cinema is the movie's duration.

Producers/Theater Owners will see the following benefits, if they started making movies for 1.5 hrs

1)Production cost & time will be reduced to 50% which means you can complete the movie within 50% less time than now.

2)More number of shows can be shown in theaters. at least 12 shows are possible as there is no need of interval concept.More shows indicate more income within less duration.

3) Theaters can reduce the cost(show & parking) as number of shows increases for a movie.

4) Lot of supposed to be a good movie were spoiled due to unnecessary scenes,songs,fights just to fill in 3 hrs.The movie will be sharp and crispy.

5)Even the test matches itself changed the format to T20 as people are not ready to waste time then why shouldn't our movies.

முஹம்மது யூசுப் said...

@Hari அவ்வாறு வெளியிடப்பட்டால் அது ரெகார்ட் செய்யப்படவியலாத வகையில் மட்டுமே ஒளிபரப்பப்படும். DVR இருப்பதினால் மட்டும் அனைத்தையுமே ரெகார்ட் செய்யலாம் என்றில்லை. அதுவும் ஒரு கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பமே.

Unknown said...

கண்டிப்பா முயற்சி செய்து பார்க்கலாம்

வருண் said...

***அமெரிக்காவில் பல படங்கள் டிவிடியாகவும், பே பர்வியூவிலும் வெளியாகிய பின் தியேட்டரில் வெளியாகி வெற்றிப் படங்களாய் வலம் வந்திருக்கிறது. ***

Educate me on this. When you are making statement like this you should provide which are those movies.

1) When did the dvd come out and

2)when did the movie got released and

3)what is the BO collection.

Thanks.

Unlike here, US audience do not enjoy watching pirated movies.

Ragu R said...

டிடிஎச் வைத்திருப்பவர்களில் எத்தனை சதவிதம் பேர் 1000 ருபாய் கொடுத்து பார்ப்பார்கள்.?
முக்கியமாக மின்சாரம்,எத்தனை சதவிதம் பேரால் பாக்க முடியும். இதையும் நாம் பார்க்க வேண்டும்.

Wanderer said...

கேபிள்ஜி!

ஒரு திரைப்படம் என்பது யாருக்கு சொந்தம்?படைப்பாளிக்கா, முதல் போட்ட தயாரிப்பாளருக்கா? இடைத்தரகர்களான வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்குமா?

இந்த கேள்விக்கான விடையை சரியாக சொல்பவர்களுக்கு வேறு விளக்கமே தேவையில்லை.

காத்தவராயன் said...

1. பைரஸிக்குத்தான் வாய்ப்பு அதிகம். இந்தியாவில் நேர்மையை எல்லாம் மக்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது.

2. கார்பரேட் தயாரிப்பாளர்கள் பெரும் நட்சத்திரங்களை நம்பி ஏமாந்தது போல DTH நிறுவனத்தினர் ஒரு ரவுண்ட் ஏமாறபோகிறார்கள்.

3. கேபிளின் வருகைதான் தியேட்டரின் கூட்டத்தை குறைத்தது என்பதுதான் நிதர்சனமான உன்மை. பொன்முட்டையிடும் வாத்தை அறுத்துவிட்டு தங்கமுட்டை கிடைத்துவிட்டது என்று கொண்டாடுவது எவ்வளவு அபத்தம். ம் இனி தியேட்டருக்கு மூடுவிழாதான்.

4. படத்திற்கு A சர்ட்டிபிகேட் கிடைத்தால் டிவியில் திரையிட சட்டம் அனுமதிக்காதே! கமலின் சித்தம் எல்லாம் முத்தம் மீது இருக்கும் வரை A தவிர்க்க முடியாதது.

5. தமிழ்நாட்டின் மின்தட்டுப்பாடு.

இது எல்லாம் தெரிந்துதான் கமல்; தியேட்டர்காரர்களை மிரட்டி பணியவைத்து 7 மாதமாக வியாபாரமாகாத சரக்கை தள்ளிவிடாலாம் என்று கலகத்தை ஆரம்பித்து உள்ளார்.


Anbu said...

Dear வருண்;
*****Educate me on this.
When you are making statement like
this you should provide which are
those movies.*****

You can check this in google by
giving the keyword "Direct to DVD"

Or
Wikipedia link
http://en.wikipedia.org/wiki/Direct-to-video

or; IMDB link;
http://www.imdb.com/list/daKfbWlrtIg/

Or; www.straight2dvdmovies.com/

Hope you are convinced :-)
Anbu

வருண் said...

அன்பு: விஸ்வரூபம் பட்ஜெட் என்ன? எந்திரனுக்கு கொஞ்சம் குறைவு. சிவாஜி தசாவதாரத்துக்கு அதிகம்.

அதாவது ஹாலிவுட்ல வெளிவரும் மெகா பட்ஜெட் படங்களுக்கு இணையானது.

அதுபோல் படங்களை எல்லாம் யாரும் பே பெர் வியூவில் விடுவதில்லை. அதுதான் உண்மை.

சும்மா கேபிள் எதையாவது சமாளிக்கச் சொல்றாருனு நீங்க வேற!

இதை வாசிச்சுப் பாருங்க..

///Direct-to-video releases have historically carried a stigma of lower technical or artistic quality than theatrical releases.[4] Some films released direct-to-video are films which have been completed but were never released. This delay often occurs when a studio doubts a film's commercial prospects would justify a full cinema release, or because its release window (section: Theatrical Window) has closed. A release window refers to a timely trend or personality, and missing that window of opportunity means a film, possibly rushed into production, failed to release before the trend faded. In film industry slang such films are referred to as having been "vaulted."[5]

Direct-to-video releases can be done for films which cannot be shown theatrically due to controversial content, or because the cost involved in a theatrical release is beyond the releasing company.[6]///

இதுபோல் மெகா பட்ஜெட் படங்களையெல்லாம் எந்த கேணையனும் பே பெர் வியூல வெளியிடுவதில்லை!

கமலஹாசருக்கு என்ன பிரச்சினைனு தெரியலை. அனேகமாக இஸ்லாமியர் பிரச்சினைதான் இந்த "நாடகத்துக்கு" காரணம். நிச்சயம் இந்தப் படம் இஸ்லாமியர் கோபத்தை உண்டாக்கப்போது- தீவிரவாதியை நல்லவனாக காட்டி இருந்தாலும். அதுக்குத்தான் இந்த ட்ராமா எல்லாம். :)))

Kannan said...

மொத்தத்தில் கமல் செலவு இல்லாமல்
ஒரு மிக பெரிய விளம்பரத்தை செய்து
உள்ளார். எவ்வளவு பேருக்கு இது புரிந்தது.