Thottal Thodarum

Mar 13, 2013

பரதேசி பாலா


இந்த டீசரை வெளியிடும் முன் இதற்கு என்ன ரியாக்‌ஷன் மக்களிடமிருந்து கிடைக்குமென்று தெரிந்தே வெளியிட்டிருக்கிறார்கள். பாலாவை ஒர் மகோன்னதமான கலைஞன் என்று ஒரு சாரார் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். இன்னொரு சாரார் இந்த வீடியோவை பார்த்து துப்புவார்கள். ஆனால் படத்துக்கு கிடைக்கப் போகிற பப்ளிசிட்டி அதிகம். அதற்காகவே இந்த ரிஸ்க். இது நாள் வரை பாலாவின் படங்களுக்கு இம்மாதிரியான பப்ளிசிட்டியெல்லாம் இல்லாமலேயே ஒர் ஓப்பனிங் இருந்தது. இதற்கு முன்னால் எல்லாம் தயாரிப்பாளர் என்பவர் வேறொருவர். பெரிய ந்டிகர்கள் இருப்பார்கள். ஆனால் இப்போது நிலமை தலைகீழ் தயாரிப்பாளர் அவரே.. அதர்வாவும் பாவம் வளர்ந்து வரும் நடிகர். எனவே எதையாவது செய்து பரபரப்பை ஏற்றியாக வேண்டிய கட்டாயம். பாவம் சொந்த காசில்ல. வேற ப்ரொடியூசர் காசுன்னா.. படத்தில வர்ற மாதிரி அடிபட்டுத்தான் சாவணும். 


இது என்ன பெரிய விஷயம், பாலசந்தர், பாரதிராஜாவெல்லாம் ஹீரோயின்களை அடித்திருக்கிறார்கள். திட்டியிருக்கிறார்கள் என்று சப்பைக் கட்டு கட்டுகிறவர்கள். அவர்களிடம் போய் கேட்டுப் பாருங்கள். ஏதாவது  ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு முறை மட்டுமே நடந்திருக்கும். இப்படி மாட்டை அடிப்பது போல அடித்துவிட்டு, எப்பூடி என்று  பெருமிதமாய்  பார்வை பார்த்து பந்தாவாக ஃபீரிஸ் போஸ் கொடுக்க மாட்டார்கள். இது ஒரு விதமான சாடிஸ்டிசம். இவரது படங்களில் நடிக்க ஆவலோடு வருடங்களை இழந்து காத்திருக்க தயாராக இருக்கும் ஹீரோக்கள் இனிமேல் இப்படி அடிவாங்கித்தான் நடிக்கணுமா? என்று யோசிக்க வேண்டும். அதையும் மீறி நடிக்கப் போகிறவர்கள் மசோகிஸ்டுகளாக இருக்க வேண்டும். இனி பாலா படத்தில் நல்லா நடிச்சிருக்காங்க என்று யாரையும் பாராட்ட முடியாது. ஏனென்றால் அடிக்கு பயந்து வலி தாங்காமல் அழும் காட்சிகள், கோபத்தில் மற்றவர்களை அடிக்கும் காட்சியில் எல்லாம் மனதில் பாலாவின் ஆட்டிட்யூட்டால் பாதிக்கப்பட்டு அதை வெறியோடு அவரை அடிப்பதாகவே நினைத்து அடித்த வெறியாகத்தான் இருக்கும்.

வெளிநாடுகளில் போர்னோ படமெடுக்கும் ஆட்களிடம் சித்ரவதைப் பட்டு கடைசியில் கொல்லப்படும்  ஸ்நர்ப் வகை படங்கள் உண்டு.  அதில் நிஜமாகவே நடிக்க வரும் பெண்களை ஃபோர்னோ படமெடுக்கிறேன் என்று சொல்லிக் கூட்டி வந்து சித்ரவதை செய்து செக்ஸ் வைத்துக் கொண்டு கடைசியில் கொல்வார்கள்.அந்த வகை படங்களுக்கும் இதற்கும் பெரிய வித்யாசமில்லை என்றே தோன்றுகிறது.

மிருகங்களை வைத்து படமெடுக்கும் போது அந்த நலவாரிய ஆட்கள், டாக்டர்களை வைத்து படப்பிடிப்பிற்காக மிருகங்கள் சித்ரவதை செய்யப்படவில்லை என்று சர்டிபிகேட் கொடுத்தால் தான் படம் ரிலீஸ் செய்ய முடியும். இனி வரும் காலங்களில் அதுவும் முக்கியமாய் பாலாவின் படமென்றால் இப்படத்தில் பாலாவால் மனிதர்கள் இம்சிக்கப்படவில்லை என்ற சர்டிபிகேட்டை மனித உரிமை கழகத்தினரால் கொடுத்த பிறகு தான் ரிலீஸ் செய்ய வேண்டும் போலிருக்கிறது.
கேபிள் சங்கர்

Post a Comment

44 comments:

Prem S said...

//பாலாவால் மனிதர்கள் இம்சிக்கப்படவில்லை என்ற சர்டிபிகேட்டை மனித உரிமை கழகத்தினரால் கொடுத்த பிறகு தான் ரிலீஸ் செய்ய வேண்டும் போலிருக்கிறது///


உண்மை உண்மை

திவ்யாஹரி said...

Unga title a konjam mathikiren sir. "bala paradesi".

Sir unna viratham irukkum student pathi ezhuthunga. Unga karutha therinjika aavalaai irukiren.

Unknown said...

கேபிள் சார் இந்த ஆள பத்தி என்னமோ நெனச்சுகிட்டு இருந்தேன் இத பார்த்த என்னவோ போல இருக்கு?

Ravi said...

This trailer didn't come in the TV. I feel sometimes behind the scenes should be kept behind.

Jayaseelan said...

முகநூல் முழுக்க பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது பரதேசி படத்தின் புதிய டீசெர். இந்த குறிப்பிட்ட காணொளியை வைத்து "பாலா ஒரு சைக்கோ", "பரதேசியை புறக்கணிப்போம்" என்பது போன்ற கோசங்கள் ஒலிக்கதொடங்கிவிட்டன. அப்படி என்னதான் இருக்கிறது அந்த டீசெரில் என்று சென்று பார்த்தால் இயக்குனர் பாலா நடிகர்களை அடி, உதை என்று பின்னி எடுக்கிறார். இதை பார்த்தவுடன் " நடிக்க தெரியாத நடிகர், நடிகைகளை அடிக்கிறாரே" என்று கோபம் வரும்... ஆனால் உண்மை அதுவல்ல..
ஒரு காட்சி : ஒரு நடிகர் அடிக்க வேண்டும். ஒரு நடிகர் அடி வாங்க வேண்டும். இதில் எந்த அளவிற்கு எதார்த்தமாக அடிப்பது போல் தெரிய வேண்டும் என்பதையே பாலா நடித்து காண்பித்துள்ளார். அடிக்க உபயோகிக்கப்படும் சாட்டை (அ) கொம்பு டம்மியாக தயாரிக்கப்பட்டது.

இது போலவே ஒவ்வொரு காட்சியையும் அவர் நடித்து காண்பிதுள்ளார். இறுதியாக காண்பிக்கப்படும் காட்சியில் இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதில் இயக்குனர் பாலா நடிகர் அதர்வாவையும், மற்றொரு நடிகரையும் எட்டி உதைத்துவிட்டு நடிகையை தடியால் அடிப்பார். உடனே அடுத்த காட்சியில் பாலாவிற்கு பதிலாக வேறொரு நடிகர் உதைப் பதையும் அடிப்பதையும் பார்ர்க்கலாம். இதிலிருந்து நீங்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
அதுதான் படத்தின் காட்சி என்று.

மாறாக நடிக்க தெரியவில்லை என்று யாரையும் அடிக்கவில்லை.

அவ்வளவு பெரிய தடியில் உண்மையில் அடித்திருந்தால் யாரும் நடித்திருக்க முடியாது. மருத்துவமனையில்தான் இருந்திருப்பார். இந்த அடிப்படை யோசனை கூட இல்லமால் விமர்சனம் செய்வது ஏற்புடையதல்ல... படத்தில் காட்டப்படும் தடி டம்மியாக தயாரிக்கப்பட்டது...

இப்படி எதையுமே ஒழுங்காக உற்றுநோக்காமல் அவசர விமர்சனம் செய்பவர்கள் தங்கள் புரிதலில் உள்ள குறைபாடுகளை தாங்களாகவே வெளிப்படுத்திக்கொள்கிறீர்கள். கார்டூனிஸ்ட் பாலா மற்றும் இன்ன பிற சினிமாக்காரர்களே விமர்சனம் செய்வது அவர்களின் அறியாமையை காட்டுகிறது.

பிரபல பதிவர் said...

ஏங்க நடிப்பு சொல்லி கொடுப்பத போயி தப்பா புரிஞ்சிகிட்டு பொங்குறீங்க

Dwarak R said...

Has he used real stick to beat the cast?. I understand rubber sticks are used in shooting. right ?.

I don't think bala is sadist. Please check the sources in cine field, your perspective might change

நெல்லை கொட்டுன்ன அள்ளலாம் சொல்லை கொட்டுன்ன அள்ள முடியாது

பிரபல பதிவர் said...

//பெரிய ந்டிகர்கள் இருப்பார்கள்.///

ஆமா தல ... சேதுவுக்கு முன்னாடி விக்ரம் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்.... நந்தாவுக்கு முன்னாடி சூர்யா மிக பெரிய பவர் ஸ்டார்.... ஆர்யா நான் கடவுளுக்கு முன்னாடியே மிக பெரிய கடவுள்....

போங்க தல உங்கள் ஒரு தலை பட்சமான பார்வை பாலவின் மீதும் படிந்து விட்டது....

ஜீவன் சுப்பு said...

உங்கள் கருத்திலிருந்து நான் முரண்படுகிறேன் .

படைப்பாளி எழுதியிருந்ததைபோல, அவர் நடித்து காண்பிக்கிறார் அவ்வளவே .

// விலங்குகள் மிருகங்களை வைத்து படமெடுக்கும் போது அந்த நலவாரிய ஆட்கள், டாக்டர்களை வைத்து படப்பிடிப்பிற்காக மிருகங்கள் சித்ரவதை செய்யப்படவில்லை என்று சர்டிபிகேட் கொடுத்தால் தான் படம் ரிலீஸ் செய்ய முடியும். இனி வரும் காலங்களில் அதுவும் முக்கியமாய் பாலாவின் படமென்றால் இப்படத்தில் பாலாவால் மனிதர்கள் இம்சிக்கப்படவில்லை என்ற சர்டிபிகேட்டை மனித உரிமை கழகத்தினரால் கொடுத்த பிறகு தான் ரிலீஸ் செய்ய வேண்டும் போலிருக்கிறது.//

பாலா யாரையும் கட்டாயப் படுத்தியோ ,மிரட்டியோ நடிக்க வைக்கவில்லை . நடிகர்கள் விரும்பியே அவர் படங்களில் நடிக்கிறார்கள் . விலங்குகளுக்கு ஆறாம் அறிவு இல்லை என்பதாலேயே , நீங்கள் சொவது போல் சர்டிபிகேட் தேவை. ஆனால் மனிதர்கள் அப்படி இல்லியே. இத்தன பேரு நடிசுருக்கதுல ஒருத்தர் கூடவா எதிர்ப்ப தெரிவிக்காம இருந்துருப்பாங்க . இதுவரையிலும் எந்த நடிகரும் பாலா ரெம்ப துன்புருத்துராருன்னு சொன்னதாவோ பாதி படப்பிடிப்பில் வெளிவந்ததாவோ நினைவில்லை .


நீங்கள் முதல் பத்தியில் சொல்லியிருப்பதைபோல ஒரு விளம்பரத்திற்காக வெளியிடப்பட்ட காணொளி இன்று விவாதத்திற்கும் , விவகாரத்திற்கும் வழிவகுத்திருக்கிறது.

மிகைப்படுத்தி விட்டீர்களோ என்று தோன்றுகிறது .உங்கள் அளவிற்கு வயதும் , வாசிப்பும் ,அனுபவமும் எனக்கில்லை .நான் புரிந்து கொண்டதை, எனக்கு தோன்றியதை பதிவு செய்து இருக்கிறேன் .

காவேரிகணேஷ் said...

பாலா போன்ற மனபிறழ்வு கொண்டவர்கள் இயக்குகின்ற படங்களை புறக்கணிக்கும் மன உறுதியை வாழ்வில் முன்னேற துடிக்கும் ஒவ்வொரு தமிழனும் புறக்கணிக்க வேண்டும்...

Ramshe said...

என்னதான் நடிப்பு சொல்லி கொடுப்பது போல் நினைத்து கொண்டாலும் இந்த காட்சிகள் பாலாவின் மீதும் அவர் படங்கள் மீதும் உள்ள மதிப்பை குறைத்துதான் விட்டது. Wrong judgement இந்த வெளியீடு

selva said...

சின்ன வயசுல பள்ளியில் படிக்கும் போதும் கல்லூரியில் படிக்கும் போதும் வீட்டிலும் வெளியிலும் சொல்வதுண்டு, "படிக்காம ஊர் சுற்றும் பொருக்கி, ரௌடி பயலுகளோடு சேராதே. சேர்ந்து சுத்தினால் நீயும் கெட்டுபோவாய்" என்று. ஆனா இப்ப என்னடான்னா படிக்காம ஊர் சுற்றிய அதே பசங்க வளர்ந்து சினிமாவில் டைரக்டர் ன்னு ஆனா பின்னாடி படம் எடுக்குறாங்க. அத நல்லா படிச்ச பெரிய ஆளான பசங்க பாக்க வேண்டிய நிலைமை. எல்லாம்............

andygarcia said...

அது பொம்மை குச்சி என்று சொல்பவர்கள், ஒரு காட்சியில் "script pad" ஒருவரை மண்டையில் அடிப்பதை பார்க்கவும், சந்தேகமே இல்லை psycho தான்!

Unknown said...

உலக சினிமா பற்றி எழுதுங்கள்

Unknown said...

பாலா யாரையும் கட்டாயப் படுத்தியோ ,மிரட்டியோ நடிக்க வைக்கவில்லை . நடிகர்கள் விரும்பியே அவர் படங்களில் நடிக்கிறார்கள் . விலங்குகளுக்கு ஆறாம் அறிவு இல்லை என்பதாலேயே , நீங்கள் சொவது போல் சர்டிபிகேட் தேவை. ஆனால் மனிதர்கள் அப்படி இல்லியே. இத்தன பேரு நடிசுருக்கதுல ஒருத்தர் கூடவா எதிர்ப்ப தெரிவிக்காம இருந்துருப்பாங்க . இதுவரையிலும் எந்த நடிகரும் பாலா ரெம்ப துன்புருத்துராருன்னு சொன்னதாவோ பாதி படப்பிடிப்பில் வெளிவந்ததாவோ நினைவில்லை .

Velakkamaaru said...

One thing is very clear as you are more jealous abt Bala.Could be easily understood on your reviews about his movies...


It is clear evident he used sponge/rubber sticks

Whats your actual problem against him?

Will ask him to direct his next based on your novel ..Is it fine? Just be cool ...

குரங்குபெடல் said...



பரபரப்புக்காக நடந்த இந்த

கொடுமைகள் சப்ப Matter


நிஜத்தில் இதை விட கொடிய மனிதர் அவர் . . .

அதை அவரே விகடன் மேடையில் ஒப்புக்கொண்ட

விஷயமும் கூட . . .

அஜித் குமார் - பாம்குரோவ் . . .

அது ஒரு கனாக்காலம் தயாரிப்பாளர் மிரட்டல்

என அவருடைய ஜாதீய லாபி . . .

பலரும் அறிந்த கதையே .

இந்த கொடுமைகள் சிறிது . . .

நிஜ பரதேசிகளுக்கு Rs.2 கொடுக்க யோசித்து

தியேட்டரில் இந்த பரதேசிக்கு Rs.100 நன்கொடை கொடுத்து


ரசிகர்கள் பெறப்போகும் அவஸ்தை மிக பெரிது



Saravanakumar said...

<<அவ்வளவு பெரிய தடியில் உண்மையில் அடித்திருந்தால் யாரும் நடித்திருக்க முடியாது. மருத்துவமனையில்தான் இருந்திருப்பார். இந்த அடிப்படை யோசனை கூட இல்லமால் விமர்சனம் செய்வது ஏற்புடையதல்ல... படத்தில் காட்டப்படும் தடி டம்மியாக தயாரிக்கப்பட்டது...

வழி மொழிகிறேன். அது ஒரு டம்மி தடி. யாராவது அந்த மாதிரி அடி வாங்கி இருந்தால் ரொம்ப ரொம்ப வலிக்கும். காட்சியில நடிக்க கூட முடியாது.

எல்லாம் தெரிந்த நீங்களுமா விமர்சனம் செய்யனும் ?

Saravanakumar said...

<< வெளிநாடுகளில் போர்னோ படமெடுக்கும் ஆட்களிடம் சித்ரவதைப் பட்டு கடைசியில் கொல்லப்படும் ஸ்நர்ப் வகை படங்கள் உண்டு. அதில் நிஜமாகவே நடிக்க வரும் பெண்களை ஃபோர்னோ படமெடுக்கிறேன் என்று சொல்லிக் கூட்டி வந்து சித்ரவதை செய்து செக்ஸ் வைத்துக் கொண்டு கடைசியில் கொல்வார்கள்.அந்த வகை படங்களுக்கும் இதற்கும் பெரிய வித்யாசமில்லை என்றே தோன்றுகிறது.


கேபிள் இது ரொம்ப அதிகம். உண்மையா முழுசா புரிஞ்சுகம மேலே உள்ளத சொல்லிருகிறீங்க. எதையும் எதையும் compare பண்றீங்க? பாலா பெண்களை கேவலமா எடுத்தாரா?

you are very much biased against BALA. :(

அறிவில்லாதவன் said...

பரதேசி படம் வரும்போது அதை அண்ணன் கேபிள் பார்த்து விமர்சிக்காமல் மனித நேயம் காப்பார் என்று நம்பலாமா

unmaiyalan said...

அந்த காலத்தில் நம்பியார் கிராமங்களுக்கு செல்லும் போது அவரை பார்த்து அனைவரும் பயப்படுவாங்களாம்... கெட்டவர்ன்னு திட்டுவாங்களாம்.... உண்மையில் அவர் மிக நல்லமனிதர்... விழிப்பு இல்லததே காரணம்....

50 செகண்ட் ஓடும் ஒரு டிரேசரை பார்த்துட்டு பாலா கொடுங்கோளன்.... மனிதாபிமானமே இல்லாதவன் என்று கூறுவதும் அப்படியே.....
பாலா ஒரு சிறந்த படைப்பாளி.... அது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை....
நான் கடவுள் படத்தில் அவர் காட்டிய கதாப்பாத்திரங்கள் இந்த உலகையே திரும்பிபார்க்க செய்தது....
அதுவரை ஒரு உயிரினமாகவே மதிக்காத பிச்சைகாரர்களை மனிதனாக பார்க்க ஆரம்பித்தார்கள்...

அவர் கோவக்காரர் என்பது எல்லோரும் அறிந்ததே...
படப்பிடிப்பில் அவர் எப்படி நடிக்க வேண்டும் என சொல்லிக்காட்டியதை ஒரு பெரிய புரளியாக கிளப்பிட்டார்கள்...
அவர் கொடுமைபடுத்தியது உண்மையானால் அதை நடிகர்கள்தான் சொல்லவேண்டும் நீங்களும் நானும் இல்லை...

அதில் நடித்தவர்கள் மிகவும் கடினப்பட்டு நடித்துள்ளனர்... அவர்கள் வாழ்கையில் இதனால் பெரிய மாற்றம் வரும் என நம்பியுள்ளனர்....
இந்த நிலையில் இப்படி புரளிகளை நம்பி அவர்கள் எதிர்காலத்தை கெடுத்துவிடாதீர்கள்...

Dhatchana said...

பாலா கோபபட்டு அடிக்கிற மாதிரியா இருக்கு..சீன் சொல்லி தரார் அவ்வளவுதான்...இதகூட புரிஞ்சிக்காத டியூப் லைட்ஸ் ...

R.Puratchimani said...


இது உண்மையோ பொய்யோ எனக்கு தெரியாது....எதற்கு reality in making என்று காண்பிக்க வேண்டும்?. இது டூப் என்பவர்கள் இதற்க்கு பதில் சொல்வார்களா?

Anonymous said...

பாலா நடித்து தான் காண்பித்துள்ளார் என்பது காணொளியை நன்றாக உற்று நோக்கினாலே தெரிகிறது.. இதில் உங்கள் விமர்சனம் தான் கீழ்த்தரமாக உள்ளது.. உங்களை ஏதோ பெரிய சினிமா ஜாம்பவான் என்று நினைத்தேன்.. உங்கள் முகமூடியை நீங்களே கிழித்து கொண்டுள்ளீர்கள். மன்னிக்கவும்..

நாரதர் கலகம் said...

hi guys Mr.cable always against Bala. go and read his review for Naan Kadavul. But bala win national award for that.

shiva said...

கேபிள் உங்க பொறாமை நல்லா விளங்குது பாவம் நீங்க ..

keyven said...

Some one will definitely sue Bala for this activity on humanitarian grounds...

MyRegSub said...

Cable, You became a Psycho.

ஆறுமுகம் said...

பாலாவை விமர்சிக்கும் போக்கில் எதோ பொறாமை தெரிகிறது

நன்னயம் said...

@ unmaiyalan
"அதுவரை ஒரு உயிரினமாகவே மதிக்காத பிச்சைகாரர்களை மனிதனாக பார்க்க ஆரம்பித்தார்கள்..."

அப்படியா??? இப்போ பிச்சைகாரர்களை மக்கள் அரவணைத்து செல்கின்றார்களா ?? எனக்கு சொல்லவேயில்லை

நன்னயம் said...

@ MyRegSub
"Cable, You became a Psycho."
பாலா ஏற்கனவே சைக்கோ தான்

நன்னயம் said...

சரி அடிச்சது டம்மி தடி. அப்படியே இருக்கட்டும்.
எதற்க்காக இம்மாதிரியான காட்சியை எடுத்து விளம்பரம் செய்யவேண்டும்.
இம்மாதிரியான பப்ளிசிட்டி தேவையா ??


இவரை திரையுலக விபச்சாரன் என்றும் இனிமேல் சொல்லலாமா ???
பப்ளிசிட்டி க்காக இம்மாதிரி செயல்ப்படும் ஒருவரை வேறு எப்படி அழைப்பது

நன்னயம் said...

"அது பொம்மை குச்சி என்று சொல்பவர்கள், ஒரு காட்சியில் "script pad" ஒருவரை மண்டையில் அடிப்பதை பார்க்கவும், சந்தேகமே இல்லை psycho தான்!"

தனக்கு மனபிறழ்வு (நோய்) இருக்கின்றது என்று சைகோ பாலா ஏற்கனவே சொல்லியிருக்கின்றார்

Nat Murali said...

Horrible fellow and I will not see this psyco's film.
Mani Ratnam takes 1000 times better film than him but never even raises his voice

R.Puratchimani said...

//R.Puratchimani said...

இது உண்மையோ பொய்யோ எனக்கு தெரியாது....எதற்கு reality in making என்று காண்பிக்க வேண்டும்?. இது டூப் என்பவர்கள் இதற்க்கு பதில் சொல்வார்களா?//

பாலாவை ஆதரிப்பவர்களே என் கேள்விக்கென்ன பதில்?

Hemanth said...

enna ? Cable annan sathame kaanom ?

SurveySan said...

i agree with Jayaseelans view on this.

its not a real video. its a reel video with sound effects.

Unknown said...

பாலா போன்ற பெரிய இயக்குனருக்கு இப்படி ஒரு டிரைலர்/டீசர் தேவை இல்லை....

Love said...

விமர்சனம் எழுத தெரிந்தால் மட்டும் போதாது!!!!!!!!!
அந்த நடிகரோ அல்லது இயக்குனரின் மனதில் நின்று அந்த காட்சியை புரிந்து கொள்ள வேண்டும்...!!!!!!!!

இதே பாலா தமிழ் நாட்டிற்கு இந்தியாவின் ஆஸ்கார் எனப்படும் தேசிய விருதை பெற்று தந்தார் என்பதை ஒரு கணமும் மறக்க கூடாது....

Unknown said...

நடித்ததை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் நடக்கும் உண்மை சம்பவங்கள் பற்றி கண்டுகொள்வதில்லை

Chandran Rama said...

நடிகர்களை எட்டி உதைப்பதும், அவமரியாதையாக திட்டுவதும், இகழ்ந்து பேசுவதும் தான் ஒரு
சிறந்த இயக்குனருக்கான தகுதி என்ற தவறான அணுகு முறையிலிருந்து பாலா வெளி வர வேண்டும்..
Perfectionist என்ற சாக்கு ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை...
இது போன்ற சீற்றம் ஏதும் இல்லாமலேயே பல சிறந்த இயக்குனர்கள் நம்மிடையே உள்ளனர்.
பரதேசி ...பல கலைஞர்களின் தன்மானத்தை கேள்விக்குறியாக்கியவன்.

M a H i said...

Ada ponga ji... first time I heard a wrong openion from your side...

Unknown said...

நல்ல வேளை, படத்துல கற்பழிப்பு காட்சி இல்லைன்னு நினைக்கிறேன்..

இதெல்லாம் கொஞ்சம் ஓவராத்தான் தெரியுது.

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

Jayaseelan Arumugam · Arigna Anna govt Arts college
முகநூல் முழுக்க பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது பரதேசி படத்தின் புதிய டீசெர். இந்த குறிப்பிட்ட காணொளியை வைத்து "பாலா ஒரு சைக்கோ", "பரதேசியை புறக்கணிப்போம்" என்பது போன்ற கோசங்கள் ஒலிக்கதொடங்கிவிட்டன. அப்படி என்னதான் இருக்கிறது அந்த டீசெரில் என்று சென்று பார்த்தால் இயக்குனர் பாலா நடிகர்களை அடி, உதை என்று பின்னி எடுக்கிறார். இதை பார்த்தவுடன் " நடிக்க தெரியாத நடிகர், நடிகைகளை அடிக்கிறாரே" என்று கோபம் வரும்... ஆனால் உண்மை அதுவல்ல..
ஒரு காட்சி : ஒரு நடிகர் அடிக்க வேண்டும். ஒரு நடிகர் அடி வாங்க வேண்டும். இதில் எந்த அளவிற்கு எதார்த்தமாக அடிப்பது போல் தெரிய வேண்டும் என்பதையே பாலா நடித்து காண்பித்துள்ளார். அடிக்க உபயோகிக்கப்படும் சாட்டை (அ) கொம்பு டம்மியாக தயாரிக்கப்பட்டது.

இது போலவே ஒவ்வொரு காட்சியையும் அவர் நடித்து காண்பிதுள்ளார். இறுதியாக காண்பிக்கப்படும் காட்சியில் இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதில் இயக்குனர் பாலா நடிகர் அதர்வாவையும், மற்றொரு நடிகரையும் எட்டி உதைத்துவிட்டு நடிகையை தடியால் அடிப்பார். உடனே அடுத்த காட்சியில் பாலாவிற்கு பதிலாக வேறொரு நடிகர் உதைப் பதையும் அடிப்பதையும் பார்ர்க்கலாம். இதிலிருந்து நீங்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
அதுதான் படத்தின் காட்சி என்று.

மாறாக நடிக்க தெரியவில்லை என்று யாரையும் அடிக்கவில்லை.

அவ்வளவு பெரிய தடியில் உண்மையில் அடித்திருந்தால் யாரும் நடித்திருக்க முடியாது. மருத்துவமனையில்தான் இருந்திருப்பார். இந்த அடிப்படை யோசனை கூட இல்லமால் விமர்சனம் செய்வது ஏற்புடையதல்ல... படத்தில் காட்டப்படும் தடி டம்மியாக தயாரிக்கப்பட்டது...

இப்படி எதையுமே ஒழுங்காக உற்றுநோக்காமல் அவசர விமர்சனம் செய்பவர்கள் தங்கள் புரிதலில் உள்ள குறைபாடுகளை தாங்களாகவே வெளிப்படுத்திக்கொள்கிறீர்கள். கார்டூனிஸ்ட் பாலா மற்றும் இன்ன பிற சினிமாக்காரர்களே விமர்சனம் செய்வது அவர்களின் அறியாமையை காட்டுகிறது.