Thottal Thodarum

Sep 22, 2009

மதுரை- தேனி – திரை விமர்சனம்

Madurai_2_Theni_ _7_

மதுரையிலிருந்து தேனிக்கு செல்லும் பஸ்ஸில் நடக்கும் ஒரு நாள் கதை. அட போட வைக்கும் லைன் தான்.  வாத்யார் வேலை கிடைத்து தேனிக்கு முன் உள்ள ஒரு கிராமத்தில் வேலையில் சேருவதற்காக மதுரையிலிருந்து தேனிக்கு செல்கிறான் ஹீரோ.

பஸ்ஸ்டாண்டில் ஹீரோயினை பஸ் ரிவர்ஸ் எடுக்கும் போது நடக்கவிருந்த விபத்திலிருந்து காப்பாற்றுகிறான். உடனே அவளிடம் மனதை பறிகொடுக்கிறான். பஸ் மதுரையிலிருந்து ஆண்டிப்பட்டி வழியாக, தேனி போவதற்குள் அவன், அவளிடம் காதலை சொன்னானா இல்லையா.. என்பது தான் படம்.
Madurai_2_Theni_ _12_


கதையின் லைன் சொல்லும் போது இண்ட்ரஸ்டாக இருந்தாலும், நிகழும் சம்பவஙக்ள் சுவாரஸ்யமாய் இல்லை. ஆனா.. ஊனா என்றால் காமெடி செய்கிறேன் என்று நெல்லை சிவா, முத்துக்காளை, படத்தில் வரும் ரஜினி ரசிக கண்டக்டர், என்று எல்லோரும் காமெடியாய் தான் செய்ய முயற்சிக்கிறார்கள் ஆனால் சிரிப்புதான் வர மாட்டேன் என்கிறது.ஹீரோவை, ஹீரோயின் காதலிக்க, அவனை புத்திசாலியாகவும், நல்லவனாகவும் காட்ட வைக்கப்பட்ட காட்சிகள், காமெடியின் உச்சம். ஒரு பெரிய ஊர் கூட்டம் பஸ்ஸை மரித்து குடிநீருக்காக போராட, யார் சொல்லியும் கேட்காதவர்கள், ஹீரோ வந்து ஒரு பத்து நிமிஷம் பேசினவுடன், அதுவும் பெரிய ஐடியா ஏதும் கொடுக்கவில்லை,இங்கே போராடுவதை விட, அரசாஙக் அதிகாரிகளிடம், எம்.எல்.ஏவிடம் போய் போராடுங்கள் என்று சொல்கிறார். அடப்போங்கப்பா.Madurai_2_Theni_ _40_படத்தில் ஒரு திருப்பமான விஷயமே ஹீரோயினிடம், தான் அவளை காதலிப்பதாய் சொல்லாமல் கல்யாணம் செய்து கொள்ள கேட்பது. பின்பு அவள் ஊரில் போய் தேடி அவளீன் தகப்பனிடம் பெண் கேட்டு, பிரச்சனை பஞ்சாயத்து வரை வந்து களேபரமாகி, ஒரு நாள் காதல் கல்யாணத்தில் முடிகிறது.கடைசி பத்து நிமிஷங்களில் தான் கதையே சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. ஹீரோவுக்கு நடிக்க இன்னும் கொஞ்சம் வருஷங்கள் ஆகலாம். ஹீரோயின் பரவாயில்லை.. ஆனால் கிராமத்து பெண்ணான அவருக்கும் மேக்கப்பை அப்பி விட்டிருக்கிறார்கள். க்ளைமாக்ச் காட்சியில் அவர் பேசும் வசனங்கள் எல்லாம் சிரியல் வகை.
 Madurai_2_Theni_ _43_


ப்டத்தில் பாராட்ட படவேண்டிய ஒரு விஷயம் ஒளிப்பதிவு. டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் அதிலும் உயர்நிலை கேமரா இல்லாமல். HDV SONY 270யில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அருமையான ஒளிப்பதிவு.. வெயில் ப்ளீச், இல்லை, அருமையான பிண்ணனி கலர் காம்பினேஷனில்.. கண்க்ளை பதம் பார்க்காத ஒளிப்பதிவு.கும்பல், கும்பலாய் பேசுவது, எல்லோரும் வந்திட்டாங்கய், போயிட்டாய்ங்க, என்று ஒரே சமயத்தில் பேசுவதும், ஓலை பாயில் ஒன்னுக்கிருந்தார் போல சள சளவென பேசிக் கொண்டிருக்கும் ஒரு அம்மாவையோ.. கிழவியையொ வைத்து பேச விட்டால் லைவாக படமெடுப்பதாய் அர்த்தமில்லை. இன்னொன்றை விட்டு விட்டேன். நடு நடுவே பழைய இளையராஜாவின் பாடல்களை பிண்ணனியில் ஓட விட்டுவிட்டால் போதுமா..? அது காட்சிகு என்ன விதத்தில் உதவுகிறது என்றே தெரியவில்லை.இம்மாதிரியான படங்களுக்கு திரைக்கதை ரொம்ப முக்கியம். அது இல்லாததால் முதல் பாதி முழுவதும் போர் அடிக்கிறது. இரண்டாவது பாதியிலும் போர் அடிக்கிறது. அதுவும் தாலிக்கு பதிலாய் அரணாக்கயிறை கழுத்தில் கட்டுவதெல்லாம் புதுமை என்று சொல்லி.. முடியலாடா சாமிமதுரை – தேனி – பஸ் ஸ்டார்டே ஆவலஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

47 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

Me the First? Appo Bus Puncture a ?
:))))))

குறை ஒன்றும் இல்லை !!! said...

கவுண்டர் : நாட்டில இந்த எதார்த்த டைரக்டர்கள் தொல்ல தாங்க முடியலேடா சாமி!!

இராகவன் நைஜிரியா said...

me the second...

:-)

இஃகி, இஃகி...

இராகவன் நைஜிரியா said...

அச்சச்சோ... மீ த தேர்டா...

சரி எல்லோரும் மாற்றிப் படிச்சுக்குங்கப்பா..

குறை ஒன்றும் இல்லை !!! said...

கவுண்டர் : அது என்ன எதார்த்தமெல்லாம் மதுரைய சுத்தி தான் நடக்கணுமா? மத்த ஊர்ல எல்லாம் தேம்ஸ் நதிக்கரையில பொறந்தவனா வாழ்ந்துட்டு இருக்கான்? இவனுக கூட ஒரே குஷ்டம்பா ச்சீ கஷ்டம்பா!!

இராகவன் நைஜிரியா said...

விதி வலியது, கொடியது என்றுச் சொல்லுவார்கள்... மொக்கைச் சினிமாக்களை சகித்துக் கொண்டு, அதற்கு விமர்சனம் செய்ய வேண்டும் என்று உங்க தலைவிதி. I pity for your my brother.

இராகவன் நைஜிரியா said...

// குறை ஒன்றும் இல்லை !!! said...
கவுண்டர் : அது என்ன எதார்த்தமெல்லாம் மதுரைய சுத்தி தான் நடக்கணுமா? மத்த ஊர்ல எல்லாம் தேம்ஸ் நதிக்கரையில பொறந்தவனா வாழ்ந்துட்டு இருக்கான்? இவனுக கூட ஒரே குஷ்டம்பா ச்சீ கஷ்டம்பா!! //

அண்ணே சரி ஃபார்ம்ல இருக்கீங்க போலிருக்கு...

பாலா said...

///////
ஹீரோவுக்கு நடிக்க இன்னும் கொஞ்சம் வருஷஙக்ள் ஆகலாம்.
///////

உங்களோட... நம்பிக்கைதான்... எனக்கு ரொம்ப பிடிச்சது!!!!

பிரபாகர் said...

//எல்லோரும் காமெடியாய் தான் செய்ய முயற்சிக்கிறார்கள் ஆனால் சிரிப்புதான் வர மாட்டேன் என்கிறது. //

//கடைசி பத்து நிமிஷங்களில் தான் கதையே சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது.//

//முதல் பாதி முழுவதும் போர் அடிக்கிறது. இரண்டாவது பாதியிலும் போர் அடிக்கிறது. அதுவும் தாலிக்கு பதிலாய் அரணாக்கயிறை கழுத்தில் கட்டுவதெல்லாம் புதுமை என்று சொல்லி.. முடியலாடா சாமி//

அண்ணே பாத்துன்னே, நண்பர் ஜெட்லி இன்னும் நல்லாவே விமர்சனம் எழுதியிருக்கும்போதே சரியான மிரட்டலாம் பி.ஆர்.ஓ கிட்ட இருந்து.

இந்த மாதிரி குப்பையை எடுத்து வெச்சிட்டு எப்படித்தா மிரட்ட தோணுதோ? மிரண்டு போயில்ல கிடக்கனும்? பதிவெழுத வரலன்னு சொல்லறதுக்கு பதிலா படமெடுக்க வரலன்னு சொல்லியிருக்கலாமோன்னு தோனுது.

டரியலான படத்துக்கு டக்கரான விமர்சனம். (அண்ணே விமர்சனம் மட்டும் சூப்பர்...)

பிரபாகர்.

Mahesh said...

//இங்கே போராடுவதை விட, அரசாஙக் அதிகாரிகளிடம், எம்.எல்.ஏவிடம் போய் போராடுங்கள் என்று சொல்கிறார்//

அட.. அட.... என்னா யோசனை? இது தெரியாம 62 வருசத்தை வீணடிச்சுட்டமே :(

Raju said...

\\மதுரை – தேனி – பஸ் ஸ்டார்டே ஆவல் \\

என்னாது..? ஸ்டார்ட்டிங் ட்ரபுளா..?
அவ்வ்வ்வ்வ்வ்

Raju said...

\\முதல் பாதி முழுவதும் போர் அடிக்கிறது. இரண்டாவது பாதியிலும் போர் அடிக்கிறது. \\

:-))))))))

குப்பன்.யாஹூ said...

I too had much expectation on this film. The title is catchy.

thiyaa said...

சில படங்களுக்கு தொலைக்காட்சிகள் முக்கியம் கொடுப்பதில்லை என்பதுதான் கவலையாக உள்ளது.

Sukumar said...

அப்பாடா.... கேபிள் சங்கர்னு ஒரு மானஸ்தர் இருந்தார்... இப்ப அவர் திரும்பி வந்துட்டார்.....
ஐ யாம் பேக்கு.....

Sukumar said...

follow up

GHOST said...

//இங்கே போராடுவதை விட, அரசாஙக் அதிகாரிகளிடம், எம்.எல்.ஏவிடம் போய் போராடுங்கள் என்று சொல்கிறார்//

என்ன அரிய கண்டுபிடிப்பு,

அண்ணே எப்படி பொருமையா உக்காந்து புல் படத்தையும் பாக்கறீங்க, ரொம்ப நல்லவர் நீங்க

இரும்புத்திரை said...

அலெக்ஸா ரேங்க்ல லட்சத்துக்குள்ள வந்துடீங்க வாழ்த்துகள்.

சக்திவேல் வந்து உங்கள கும்ம போறாரு

Prabhu said...

மதுர பேரக் கெடுக்க அடுத்த பேட்ச் வந்துட்டானுங்களா? இப்படியே பேட்ச் பேட்சா கெளம்பி இருக்கானுங்க போல!

பின்னோக்கி said...

ஈரம் படத்துக்கு 2.5 ஸ்டார், இந்த படத்துக்கி 3 ஸ்டார் கொடுத்திருக்கிறார்கள் டைம்ஸ் ஆப் இந்தியா பேப்பரில்.

மங்களூர் சிவா said...

/
Appo Bus Puncture a ?
/

:))))))))))))))))))))))))))))))))))))))

நையாண்டி நைனா said...

பிரசண்டு சார்வால்.

தராசு said...

உள்ளேன் அண்ணே.

யோ வொய்ஸ் (யோகா) said...

:(

வினோத் கெளதம் said...

இன்னொரு மதுரை குரூப் படமா..!!!!!!!
எப்ப தான் இதுக்கு ஒரு விடிவுக்காலம்..?

butterfly Surya said...

ஸ்டார்ட் ஆகாதா..??? புஸ்ஸா..??

போவட்டும் விடுங்க..

இந்த மாதம் ஒரு நல்ல படம் பார்த்தாச்சு.. அது போதும்.

தமிழ் குமார் said...

//ஹீரோவுக்கு நடிக்க இன்னும் கொஞ்சம் வருஷங்கள் ஆகலாம்//

கேபிள் சங்கர் டச் இந்த லைன்.
இதுக்கு முன்னாடியே ஏதோ படத்துல நடிச்சாச்சு நம்ம ஹீரோ...

// முடியலாடா சாமி//
விகடன் டச் மாதிரி இருக்கு சங்கர் சார்.

Ravikumar Tirupur said...

oneline ready aanathum shooting kilambittaanga pola....

ஸ்ரீ.கிருஷ்ணா said...

// அலெக்ஸா ரேங்க்ல லட்சத்துக்குள்ள வந்துடீங்க வாழ்த்துகள்./
சைதை சிங்கத்திற்கு வாழ்த்துக்கள்

ஸ்ரீ.கிருஷ்ணா said...

// அலெக்ஸா ரேங்க்ல லட்சத்துக்குள்ள வந்துடீங்க வாழ்த்துகள்./
சைதை சிங்கத்திற்கு வாழ்த்துக்கள்

Jawahar said...

ஜெயித்த படத்தில் வந்த டெக்னிக்குகளை அப்படியே கையாள்வதை பலரும் முயற்சிக்கிறார்கள். என்.எல்.பி. என்கிற சுய முன்னேற்ற முறையில் இது தப்பில்லை என்று கூடச் சொல்கிறார்கள். copying excellence என்று இதை அழைக்கிறார்கள். ஆனால், நிஜமான வெற்றி எங்கே என்று தெரிந்ததும் இதையெல்லாம் நிறுத்திக்கொள் என்றும் சொல்கிறார்கள்!

http://kgjawarlal.wordpress.com

selventhiran said...

மதுரை – தேனி – பஸ் ஸ்டார்டே ஆவல

ha.. ha nice

Romeoboy said...

சோ படம் பிரேக் டவ்ன் ...

மண்குதிரை said...

didnt but i like your review

ராஜன் said...

//முதல் பாதி முழுவதும் போர் அடிக்கிறது. இரண்டாவது பாதியிலும் போர் அடிக்கிறது//

:)

Beski said...

//மதுரை – தேனி – பஸ் ஸ்டார்டே ஆவல //

:))))

ப்ரியமுடன் வசந்த் said...

மதுரை டூ தேனி பஸ்காதல் என்கிட்ட கேட்ருந்தா நிறைய எடுத்து விட்ருப்பேனே இப்பிடி அநியாயமா எங்கூரு தேனிய நாரடிச்சுட்டாய்ங்களே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

ஜெட்லி... said...

//மதுரை – தேனி – பஸ் ஸ்டார்டே ஆவல //

இதுதான் கேபிள் டச்.....

T.V.ராதாகிருஷ்ணன் said...

மதுரை-தேனி வழியில பரோட்டா கடை ஏதும் இல்லையா?

Cable சங்கர் said...

!@குறை ஒன்றும் இலலை
ஆமாம்
@ஆமான்

@இரகவன்
சரி படிச்சிருவோம்
@குறை ஒன்றும் இல்லை
எல்லா ஊர்லேயும் நடக்கும், என்ன இருக்கிற அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் எல்லாம் மதுரை, அல்லது பக்கத்திலிருந்து வந்ததால்.. என்னவோ..

Cable சங்கர் said...

@ஹாலிவுட் பாலா
அந்த நம்பிக்கைதான் வாழ்கையை நடத்த உதவுது..

@பிரபாகர்.
விடுங்க பிரபா.. போன் பண்ணுங்க

@மகேஷ
அது சரி

@ராஜு
ஆமாம்

Cable சங்கர் said...

@ராம்ஜி

நீஙக் ஒருத்தராவது எக்ஸ்பெக்டேஷன் வச்சிருந்தது அவஙக்ளுக்கு தெரியுமா.?
2தியாவின் பேனா

ஆமா த்யா

@சுகுமார்

அவரு எப்பய்யா காணாம போனாரு..
@கோஸ்ட்

ஏல்லாம் உங்கலூக்காகத்தான்

@இரும்புத்திரை அரவிந்த்

குத்தட்டுமே.. மிக்க நன்றி

!@பப்பு
இனிமே மதுரை பப்பு வேகாது மக்கா..

Cable சங்கர் said...

@பின்னோக்கிஒ
கட்டிங் பேசியிருக்கும்

2மஙக்ளூர் சிவா
ஆமாண்ணே

@ நைனா

என்னபிரசண்டு

@யொ
நன்றி
@வினோத் கவுத
கவலைப்படாதே நிச்சயமா நலல் பொண்னு கிடைக்கும்

@சூர்யா
ஆது சரி..

Cable சங்கர் said...

@தமிழ்குமார்
நன்றி

@ரவிகுமார்

ஆமா
கிருஷ்னா
மிக நன்றி

@ஜவர்க்லால்
நலல் உட்திகளை வெளிப்படுத்தியமைக்கு நன்றி

ramalingam said...

கப்பலுக்குள் கதை நடந்தால் டைட்டானிக் என்பீர்கள். அதுவே பஸ்ஸூக்குள் நடந்தால் கிண்டலா?

Cable சங்கர் said...

/கப்பலுக்குள் கதை நடந்தால் டைட்டானிக் என்பீர்கள். அதுவே பஸ்ஸூக்குள் நடந்தால் கிண்டலா?
//

தலைவரே.. டைட்டானிக்கில் கப்பலுக்கு ஒரு அருமையான காதல் கதையை கொடுத்தார்கள்.. இங்க பஸ் ஸ்டார்டே ஆகல் தலைவரே..

அதுமட்டுமில்லாமல் கதை கப்பலுக்குள் நடக்கிறதோ, பஸ்ஸில் நடக்கிறதோ.. ஒரு நலல் திரைக்கதை வேண்டியிருக்கு பாஸு உங்களுக்கு தெரியாததா..?

Starjan (ஸ்டார்ஜன்) said...

பஸ் ஸ்ட்டார்டிங் டரபிளா ...