தசாவதாரத்துக்கு பிறகு, கே.எஸ். ரவிகுமார், அயனுக்கு பிறகு சூர்யா, ஹாரிஸ்ஜெயராஜ் காம்பினேஷன், குருவியின் தோல்விக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் படம் பார்க்க உட்கார்ந்தால், நீங்கள் இதுவரை பார்த்த தமிழ் சினிமாக்களை அத்தனையையும் உங்கள் ஞாபக அடுக்குகளிலிருந்து ஒவ்வொரு காட்சியிலும் கொண்டு வர வைக்கும் படம்.
காசு கொடுத்தால் கொலை செய்யும் ஆதவன். அல்வா சாப்பிடுவது போல் கொலை செய்பவன். ஜட்ஜை கொலை செய்யும் முயற்சியில் ஃபெயிலியர் ஆகிவிட, அதனால் பணம் கொடுத்த ஆள் இவர்களை மிரட்ட, இன்னும் பத்து நாட்களில் அவனை கொல்லாமல் விட மாட்டேன் என்று அவர்களின் வீட்டோடு வடிவேலுவை மிரட்டி உள்ளே போக, அதற்கு அப்புறம் என்ன நடக்கும் என்று தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தெரியாதது இல்லை. பிறந்த குழந்தை கூட சொல்லிவிடும் அடுத்த காட்சி என்னவென்று. அவ்வள்வு அற்புதமான திரைக்கதை.
ரவிகுமார் ஏற்கனவே மின்சார கண்ணாவில் ஒரு கும்பலை வைத்து செய்த விஷயத்தை மீண்டும் தூசு தட்டி மேலும் குடும்ப கும்பலோடு கொடுக்க நினைத்து இருக்கிறார். சேம் ப்ளட்.
வடிவேலு, சூர்யா காம்பினேஷனில் படம் பூராவும் வருகிற நகைச்சுவை காட்சிகள் மட்டும் இல்லையென்றால் அவ்வளவு தான். நயன்ந்தாரா வழக்கம் போல் சிக், கிக்காக இருக்கிறார், முகத்தில் தான் கிழடு த்ட்டி இருக்கிறது. மற்றபடி படம் பூராவும் ஒரு மூன்று குடும்பம், அதன் குழந்தை குட்டிகள், குடும்பமாய் பாட்டு, என்று 50பேர் இருந்து கொண்டு வெறுபேற்றி இருக்கிறார்கள்.
இருக்கிற வெறுப்பில் எண்ணையை ஊற்றுவது பொல் சரோஜாதேவி. பார்க்கிற வயசிலேயே அவர் கொஞ்சி, கொஞ்சி பேசும் வசங்கள் எனக்கு எரிச்சல் மூட்டும், இதில் இன்னும் எரிச்சலாகவே இருக்கிறது. கொடுமைடா சாமி. கதை ரமேஷ்கண்ணா என்பதாலும் அவ்ர் ரவிகுமாஅரின் நண்பர் என்பதாலும் படத்தில் சம்பந்தமே இல்லாத ஒரு கேரக்டரில் வந்து உயிரை எடுக்கிறார்.
சூர்யாவின் பத்து வயது நடிப்பு சி.ஜியின் தோல்வி அந்த ப்ளாஷ் பேக் படு அமெச்சூர் தனம்.
ஹாரிஸ் வழக்கம் போல் ஹிட்டடித்து இருக்கிறார். பிண்ண்னி இசை மிகவும் சொதப்பல். கனல் கண்ணனின் சண்டை பயிற்சி அயனின் மிச்சம் District B17ல் விடுபட்ட சில ஷாட்களின் ரி ஷூட். டோன் மாக்ஸின் எடிட்டிங் ஓகே.
சூர்யா போன்ற நடிகர்களிடமிருந்து கமர்ஷியல் படமென்றாலும் கூட ஏதாவது இருக்கும் என்று எதிர்பார்த்து போகும் ரசிகர்களை சூர்யாவும் ரவிகுமாரும் சேர்ந்து ஏமாற்றிவிட்டார்கள்.
சூர்யா உங்களையும் விஜய் அஜித் என்ற லிஸ்ட்லில் சேர்த்துவிட்டுட்டாங்களே.. கமர்சியல் வெற்றி பெற்ற ஹீரோக்கள் இம்மாதிரி நேரங்களில் தான் உசாரா இருக்கணும். சூர்யா பார்த்து நடந்துக்கங்க.
சூர்யாவின் “ஆதவன்” என்று டைட்டில் போடுவதற்கு பதிலாய் வடிவேலுவின் “ஆதவன் “ என்று போடலாம்.
ஆதவன் – மொக்கை (வடிவேலுவை தவிர)
டிஸ்கி:
நைட் ஷோ படம் பார்த்ததில் படத்தின் மொக்கை தாஙக் முடியாமல் தூக்கம் வேறு சொக்கி, சொக்கி அடிக்கிது. அதனால் நைட்ஷோ தவிர்பது .நல்லது. இன்னொரு எச்சரிக்கை உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார். ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு அவர் ஹீரோவாக ஒரு நடிக்கிறாராம்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
பெங்களூரில் வெள்ளிகிழமையே ரிலிஸ் ஆகி விட்டது. முதல் நாள் பார்த்து நொந்து நூடுல்ஸாகி விட்டேன்..
சூர்யா இனி ரவிகுமார் போன்ற மசாலா ஆட்களிடம் தள்ளி இருப்பது நல்லது
viveganblog.blogspot.com.
அப்புறம் இன்று ஞாயிறுக்கிழமை எனவே என் ஞாயிறு ஹொக்ரெயில் உண்டு. கண்டிப்பாக வந்து எட்டிப்பாருங்கள் (என்வலைப்பக்கத்தில்)
பிரபு தேவா, கவனிக்க
நைட் ஷோ படம் பார்த்ததில் படத்தின் மொக்கை தாஙக் முடியாமல் தூக்கம் வேறு சொக்கி, சொக்கி அடிக்கிது. அதனால் நைட்ஷோ தவிர்பது நல்லது.
/
அவ்வ்வ்வ்வ்வ்
இங்கயும் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இன்னைக்கு போகனும்னு எங்கூட்டுக்காரம்மா ஆர்டர் வேற போட்டிருக்காங்க :(((((((((
மிக சரி...கடைசியில ரவிக்குமாரும் உதயநிதியும் வந்து...அய்யோ...சாமீ...கொடுமை ;)
சூர்யாவின் ஈ மெயில் ஐ.டி இருக்குறதா? இருந்தால் kiran kumar dot gosu at gmail dot com க்கு மெயில் செய்யுங்களேன்.
ஆதவனை, ஆதவன் விளம்பரத்தால் காப்பாற்றிவிடும் என்றே நினைக்கிறேன். குருவியையே அவங்க 100 நாளுக்கு மேல ஓட்டினவங்களாச்சே
me the escape
என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க! ஆடியோ ரிலீஸ் பண்ணும்போதே KSR 10 வயசுப் பையனா சூர்யா வர்றத பத்தி ஓவரா பில்டப் குடுத்தாரே.
இந்த படமே இப்படின்னா, அடுத்து ஹரி இயக்கத்துல வர்ற் 'சிங்கம்'??? மறுபடி திருநெல்வேலி, மறுபடி டெபுடி கமிஷனர் ஆஃப் போலிஸா? ஹரிய 'சாமி'தான் காப்பாத்தணும்
உதயநிதிக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது? அவரோட அடுத்த படம், முருகதாஸ்-சூர்யா-ஹாரிஸ் காம்பினேஷனாம்! அவ்வ்வ்வ்வ்!
ஆனாலும், சூர்யாவுக்காகவாவது இந்த படத்த ஒரு தடவ பாக்கணும்!
:)
பேராண்மை தேறுகிறதோ என்னவோ, மக்களோட பல்ஸ் KSR நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். ஆகவே ஆதவன் 50 நாட்கள் தாண்டுவது எளிது.
என் மனதை அப்படியே எழுத்தில் வார்த்த்து போல இருக்கு இந்த விமர்சனம்.
நேத்து நைட் ஷோ பாத்துட்டு காரில் வீடு வரைக்கும் நாங்கள் பேசிக்கொண்டு வந்ததும் இந்த விமர்சனமும் 90% ஒத்துப் போகிறது.
வடிவேலு மட்டும் இல்லன்னா இந்த படம் ஒரு வாரம் கூட தாங்காது, நான் கொடுத்த 12$ வடிவேலுக்கே சரியா போச்சு..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
அனேகமா கலைஞர் டிவில மட்டும் வெற்றி நடை போடுமா இனி???
சொல்லி வச்ச மாதிரி மூவரும் வடிவேலு நடிப்பை பாராட்டி இருக்கின்றீர்கள்.
சரோஜாதேவி யாருக்கும் பிடிக்கவில்ல்லை.
நயன் முக அமைப்பு கிழடுதட்டி போய்விட்டது என்பதை எல்லோருமேச் சொல்லியிருக்கின்றீர்கள்.
மொத்தத்தில் படம் மோசம்.
நன்றி கேபிள் ஜி
RS 160 கோவிந்தா கோவிந்தா
அதெல்லாம் இருக்கட்டும், ஹாட் ஸ்பாட் எங்கே,
நாட்டாமை படத்தப் போடு.
லேட்டா வந்திருந்தாலும் நல்லா சொல்லி இருக்கிறீங்க..
உங்க பதிவுக்கு தான் வெயிட்டிங்...
நீங்க சொன்னா அப்பீலே இல்ல...
வில்லு பார்ட் II
-Toto.
http://www.pixmonk.com
நன்றி
2அருண்குமார்
நிச்சயம்
@உளருனது விவேகன்
நிச்சயம் படிக்கிறேன். உஙக்ள் வருகை நல்வரவாகுக
@ஜனா
ஏதோ என்னால் முடிஞ்சது..
கஷடமாத்தான் இருக்கு.. இருந்தாலும் கடமை அழைக்குதே
@மங்களூர் சிவா
நிச்ச்யம் பார்த்துதான் ஆவணுமா..?
@பித்தன்
நன்றி
@ஷாகுல்
எனக்கு அப்படி படுது..
@ஜெட்லி
ஆமா ஜெட்லி எதுக்கு உசார இருக்கனும் நாம
2
அது கொடுமையிலும் கொடுமை
@ட்ரூத்
எதுக்கு ஈமெயில் ஐடி எல்லாம் ஒண்ணும்பதில் சொல்ல மாட்டாங்க
@தமிழினியன்
ஆமா ஆதவனை ஆதவ்ன் காப்பாத்ததான் செய்வாங்க
@கனகு
அதுக்காக இவ்வளவு மொக்கையாவா
@ஜாக்கி
அமாம்
@டம்பிமேவி
யாரை பார்த்து சொல்றே
@அசோக்
ஏன்னயா இந்த சிரிப்பு
@துபாய்ராஜா
நன்றி
@குறும்பன்
படம்னா பில்டப் கொடுக்கிறது.. படத்துல மொகையா இருக்கிறது சகஜமதானேப்பா..விட்ரா..விட்ரா
நன்றி
@கார்த்திக்
படிச்சிட்டேன்
@சிம்பா
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேஸ்டு
@ரமேஷ்
நீங்களும் நைட் ஷிப்டா?
@ஸ்ரீராம்
காசிக்கு போனாலும் கர்மம் விடாதுன்ற மாதிரி.. அமெரிக்கா போனாலு தமிழ் பட மொக்கை விடாது போலருக்க்
எதுக்கு நன்றியெல்லாம் பின்னால் கவனிச்சிரு
@குறைஓண்ரும் இலை
ஆமாம்
@இராகவன்
மொத்ததிலஏ செம மொக்கை
@கிறுக்கல் கிறுக்கன்
தப்பிச்சிட்டீங்க
போயிருச்சா
@தராசு
ஆமாம்
2கார்த்திக்
ஆமாம் சாமி
@லோஷன்
சேம்ப்ளட்
@சூரியா
ஆமா
@டோடோ
நன்றி
ஆண்டி ஹீரொ ரோல்ல மத்தவங்க சொதப்பறவர அஜித் மார்க்கெட் ஸ்டேடி கோயிங்க்..
பால் குடிக்கிற பையன் பியர் குடிக்க ஆச பட கூடாது .. விஜய், அஜித் மாதிரி வர, நீ வளரனும் தம்பி ..
:((((
//சூர்யா உங்களையும் விஜய் அஜித் என்ற லிஸ்ட்லில் சேர்த்துவிட்டுட்டாங்களே.. //
Enna solla varEngganu therla. SonneengannA, mErkondu pEsalAm...
Anyway, it's unnecessary to bring those actors when speaking about Aadhavan and Sivakumar's son.
Surya and Vadivelu kalakal...
கேபிள்ஜி, அது District B17 இல்லீங்க.. District B13, ஃபிரஞ்சு படம்..
நன்றி,
எழில்.ரா