ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு நம்மூர்ல சொல்வாங்க. ஆனா இவங்க அளக்காம கடல்ல 95 கோடிய போட்டுருக்காங்க. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், அக்ஷய்குமார், சஞ்செய்தத், லாராதத்தா, காத்ரீனா கைஃப், என்ற நட்சத்திர பட்டாளம், ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி என்ற டெக்னீஷியன்கள் பட்டாளம், என்று எதிர்பார்ப்பு எகிற வைத்த படம்.
1949ல் Lady of Blue என்கிற கப்பல் இந்தியாவுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷஙக்ளை ஏற்றி கொண்டுவந்த கப்பல் பஹாமாஸ் தீவில் மூழ்கிவிட, அதை எடுக்க போகும் மூவர் பற்றிய கதை.
சஞ்செய், அக்ஷ்யின் கப்பல் கம்பெனியில் வேலை செய்பவன், நேர்மையானவன், ஆழ்கடல் நீச்சலில் ஜித்தன், தன் முந்தய அனுபவத்தினால் அந்த பொக்கிஷத்தை அடைய ஆசைபடாதவன்
அக்ஷய் பணக்காரன், எப்போதும் வெற்றியை மட்டுமே பேசுபவன், ஸ்திரிலோலன், என்றாவது ஒரு நாள் அந்த பொக்கிஷத்தை அடைய சஞ்செய்யை உசுப்பேற்றி கொண்டே இருப்பவன்.
சாம் அவனுடய வீக்னெஸ் பைக், மற்றும் பைக் ரேஸ்.. ஒரு பிரச்சனையில் தாதா ராகுலிடம் மாட்டிக் கொண்டுவிட, அவனுக்கு பணத்தை திரும்ப கொடுக்க முடியாததால் அங்கிருந்து தப்பித்து, அண்ணிடம் வந்து தஞ்சம் அடைகிறான்.
மோனா லாராதத்தா சஞ்செய்யின் காதலி. காத்ரினா சாம் காதலிக்கும் பெண். ஒரு கட்டத்தில் வில்லன் சாமை தேடி பஹாமாஸ் வந்து சஞ்செய்யின் காதலியை கடத்தி போய் சாம் கொடுக்க வேண்டிய பணத்தை க்கொடுத்துவிட்டு போ என்று சொல்ல வேறு வழியில்லாமல் மூவரும், கடலுக்குள் பொக்கிஷத்டஹி தேடி போகிறார்கள். அவர்களுக்கு பொக்கிஷய்ம் கிடைத்ததா..? வில்லன் என்ன செய்தான்? என்பது போன்றா கேள்விகளுக்கு 95 கோடி செலவு செய்து பதில் சொல்லியிருக்கிறார்கள்.
கதையின் ப்ளஸ் பாயிண்டான அண்டர் வாட்டர் காட்சிகள் மிரட்டல். அருமையா ஒளிப்பதிவு, அதற்கான லைட்டிங் என்று மிரட்டியிருக்கிறார்கள். அதே போல அந்த காட்சிகளுக்கான பிண்ணனி இசையும சூப்பர். அதே போல் அந்த பைக் சேஸிங் காட்சிகளும் மிரட்டல்.
மிக மிக செயற்கையான காட்சிகளால் நம்மை டேய் போய் சீக்கிரம் எடுங்கடா என்று புலம்ப வைகிற அளவுக்கு திரைக்கதை மொக்கை. இத்தனைக்கும் 2 மணி நேர படம்தான். ஆனால் டயர்ஸம்.
லாரா அண்டர்வாட்டரில் அழகாய் இருக்கிறார். கச்சிதமான உடலமைப்பு. சஞ்செய், அக்ஷய், என்று எல்லோரும் பெரிதாய் சொல்ல முடியாவிட்டாலும் அவர்களுக்கு கொடுத்த பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
புது இயக்குனர் ஆண்டனி டிசோஸாவுக்கு இது ஒரு பெரிய ப்ரேக். கதை திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் எங்கேயோ போயிருக்க வேண்டிய படம். கதையின் முக்கிய தளத்துக்கு வருவதற்கே ஒண்ணேகால் மணி நேரம் ஆகிவிடுகிறது. அதே போல் அந்த அண்டர்வாட்டர் காட்சிகள் எல்லாம் நன்றாக இருந்தாலும் கூட பெரிய அட்வென்சர் ஏதுவுமில்லாத விஷயஙக்ளாகவே காட்டியிருப்பது பெரிய மைனஸ். இம்மாதிரியான காட்சிகளை நாம் டீவியில் நேஷனல் ஜியோகிராபியில் பார்த்திருக்கிறோம். என்ன பெரிய திரையில் நிச்சயம் பிரம்மாண்டமாய் இருக்கிறது.
க்ளைமாக்ஸில் ட்டுவிஸ்ட் வைத்து கதை சொல்கிறேன் பேர்விழி என்று அக்ஷய்க்கு ஒரு கதை சொல்வது செம காமெடி. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை தனியே கேட்பதற்கு நன்றாய் இருந்தது படத்தில் ஒட்டவில்லை.
Blue – Go For the Exotic Under Water Visual.
டிஸ்கி:
படத்திற்கு ஐடிபிஐ பேங்க் மட்டும் 40 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறது.
படத்தின் ப்ரோமோஷனுக்கு மட்டும் சுமார் 17 கோடி செலவு செய்திருக்கிறார்கள்.
தேவி பாரடைஸ் சீட் மட்டும் ஓகே. முன்பிருந்த சவுண்ட் இல்லை. ஏசியும் அவ்வப்போது கட் செய்துபோடுவது மிக அநியாயம். சத்யம ஏன் சென்னையின் முக்கியமான ஒரு எணடர்டெயின்மெண்ட் செண்டராக இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
padam mokkai entralum kiss kkavathu padathai parkkalame ...
he he he he he
congrats
இன்னும் கோடிகள் பல பெற வாழ்த்துக்கள்.
naan nethu deviku poi irundhen.. athu nalla thaan irundhudu na...
40 கோடி ரூபாய் வாங்க வங்கி அதிகாரிகளிடம் செல்லுபடியான திறமை மக்களிடம் செல்லுபடியாகாமல் போனது விந்தையாக இல்லை,ஷங்கர்?
படம் பாக்கலாமா ...
lasta unga stylelaye oru small disky..
லாரா அண்டர்வாட்டரில் அழகாய் இருக்கிறார். Avasarathula idha naanu.. லாரா அண்டெர்வேர் இல் அழகாய் இருக்கிறார் nu padichuten he he... :)
நிச்சயம் சினிமா என்னுடய் பேஷன்..
@பிரபாகர்
நன்றி
@டம்பிமேவி
கிஸ்ஸு இல்லியே..:(
நன்றி
படத்தையே வெளிநாட்டுலதான் எடுத்திருக்காங்க..
நன்றீண்ணே
@கனகு
மிக்க நன்றி.. தேவியை இன்னும் நான்பார்க்க வில்லை.. நீங்கள் முன்பு தேவி தேவிபாரடைஸ் சவுண்ட் மற்றும் லைட்டை பார்த்திருந்தீர்கள் என்றால் இப்போது இருப்பது ஜுஜுபி என்ருதான் சொல்ல வேண்டும்
நல்லா ஓடும்னு நம்பித்தான்
@பித்தன்
ஆமாம் பித்தன். இன்னைய வரையில் மல்டிப்ளெக்ஸில் சத்யம்தான் பெஸ்ட்
@ராஜ்
அட கொடுமையை டிவிடில கூட மிச்சம் பிடிக்க ஆரம்பிச்சிட்ட்டாஙக்ளே
நன்றி
@ஷண்முகப்பிரியன்
வங்கியில் ப்ரொஜக்டட் பிகர் காட்டினால் போதும், படம் எடுககையில் ஆடியன்ஸிடம் ப்ரொஜக்டட் விசயம் ரீச் ஆகணும்
@பின்ன்னோக்கி
கிட்டத்தட்ட ஆமா
2கலையரசன்
@ரைட்டு
@ஸ்டார்ஜான்
நன்றி.. பெரிய திரையின் விஷுவலுக்காக பார்க்கலாம்
@வால்பையன்
ஒரு விஷயத்தில் நல்ல படஙக்ளும் கிடைக்கிறது. வேறு ஆங்கிளில் நலல் படஙக்ள் மோசமாகவும் வருகிறது
@உளருனது விவேகன்
நன்றி.. ந்ன்றி
நன்றி
@பப்பு
யெஸ்
@நேசன்
அப்படியா..?:(
@ஸ்ரீ
என்னால ஒரு டிக்கெட் போச்சா..
@சாண்டோ மகராஜ்
நன்றி. நீங்க படிச்ச தொனியில எழுதினதுதான்.. அந்த வரிகள்.:)
:(
உயிரே படம் வந்தப்ப, மணிரத்னம் படத்தை அந்த தியேட்டரில் பார்த்துட்டு.. “ஆஹா.. ஓஹோ”-ன்னு புகழ்ந்து இருந்தார்.
கார்பன் உபயோகிப்பதற்கு பதிலா.. லைட்டோ- என்னமோ.. யூஸ் பண்ணுறாங்கன்னு.
இப்ப அதுவும் நட்டுகிச்சா...!
நன்றி
@ஹாலிவுட்பாலா
நிஜமாகவே தேவி, தேவிபாரடைஸ் முன்பு அருமையான டி.டி.எஸ். சவுண்டும், கார்பனுக்கு பதிலாக ஜெர்மானிய தொழில்நுட்பமான ஜெனான் லேம்ப் வைத்து ஆபரேட் செயதவர்களில் தமிழ்நாட்டில் அவர்கள் ஒருவர்தான்.
ஓகே
@அசோக்
அதுக்கு வேற விமர்சனம் பண்ணனுமா..?
@பேநாமூடி
ஏற்கனவே பின்னூட்டத்தில சொல்லியிருகாங்களே படிக்கலையா ?