ப்ளஸ் டூவில் முதல் மாணவனாக வரும் அன்புவின் தந்தை ஒரு இராணுவ வீரன். நாட்டுக்காக எல்லைப் பகுதியில் போராடும் வேளையில் காலில் குண்டடிப்பட்டு வி.ஆர்.எஸ் வாங்கிக் கொண்டு திரும்ப ஊருக்கு வருகிறார். மகன் மேல், மனைவி மேல்மிகவும் பாசமுள்ள ஒரு அன்பான தகப்பனாய் வாழ்கிறார். என்னதான் அன்பான அப்பாவாக இருந்தாலும், இளமைக் காலத்தை இராணுவத்திலேயே செலவிட்டு, மீண்டும் வந்து வசந்த காலத்தை பார்க்க முயலும் போது மனைவி பாம்பு கடித்து இறக்கிறார். அப்பாவும் பிள்ளையும் தனிமரமாகிறார்கள்.
அன்புடன் படிக்கும் சுந்தரியிடம் காதல் பிறக்க, பள்ளி படிப்பு மட்டுமே முடித்திருக்கும் அன்புவின் காதலை பார்த்து, அவனின் தந்தை அவர்களின் காதலை புரிந்து திருமணம் செய்து வைக்கிறார். அதற்கு இன்னொரு காரணம் அவருக்கு இதன் நடுவில் ஆக்சிடெண்ட் ஆகி ஆறு மாசத்திற்கு நடக்க முடியாமல் போய்விட்டதால் வீட்டை பார்த்துக் கொள்ளவும் மகனின் காதலை நிறைவேற்றவும் திருமணம் நடக்க, நான்கு நாட்களில் அது முடிந்ததும் அன்புவின் அம்மா சொன்னபடி டீச்சர்ஸ் ட்ரைனிங் படிக்க போய்விடுகிறான்.
அதன் பிறகு மாமனாரின் உணர்வுகளை தூண்டும் விதமாய் நிகழ்வுகள் நடக்க, தன்னை கட்டுப் படுத்த முடியாமல் தள்ளிப் போட்டு, தள்ளிப் போட்டு ஒரு கட்டுப்படுத்த முடியாமல் நட்ட நடுக் கடலில் எது நடக்கக்கூடாதோ அது நடந்தேறி விடுகிறது. இதன் பிறகு நடக்கும் விஷயங்கள் அத விட அதிர்ச்சி. மருமகளே ஒரு கட்டத்தின் தன் உடலின் வேட்கையை தாங்க முடியாமல் மாமனாருடன் உறவு கொள்ள, ஒரு கட்டத்தில் இருவரும் கணவன் மனைவியாகவே காமமும், காதலுமாய் கொழிக்க, மகன் திரும்பும் போது அவனுக்கு சந்தேகம் வருகிறது. பிறகு என்ன ஆனது என்பதுதான் கதை.
கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக காட்டினால் பிட்டு படமாகிவிடக்கூடிய ஒரு கதைக் களன். ஆனா அந்த கதைக் களன் தான் ஆபாச, வக்கிர உணர்வுகளின் உச்சமாய் இருப்பதால் காட்டினாலும் காட்டாவிட்டாலும் மேற்சொன்ன உணர்வுகள் எழாமால் இருக்க முடியாது. ஆனால் முடிந்த வரை காட்சிகளில் ஆபாசம் இல்லாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் சாமி.
எடிபஸ் காம்ப்ளெக்ஸ், போன்ற பல விஷயங்களை விஷுவலிலும், காட்சிப்படுத்துதலிலும் முயன்றிருக்கிறார்.ஆனால் என்னதான் முயன்றாலும், கதைப் போக்கும், அதற்கான காட்சிகளும், மிகவும் திணிக்கப்பட்டதாகவே இருக்கிறது. உதாரணமாய் மகனுக்கு பதினெட்டு வயதில் திருமணம் செய்து வைப்பது, அந்த யாருமேயில்லாத ஒரு கடலோர தனி வீடு, நடுராத்திரி யானை, என்று விதியோ, அல்லது சதியோ, மருமகளுக்கும், மாமனாருக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் இயல்பில்லை. எப்போது வரும் சீன் என்று காத்திருப்பவர்களுக்கான காட்சிகளாகவே இருக்கிறது. என்ன தான் முடிவில் நீதி சொன்னாலும், இம்மாதிரி திணிக்கப்பட்ட காட்சிகளால் படத்துடன் ஒட்டவே முடியாமல் போகிறது. க்ளைமாக்ஸ் காட்சி இன்னும் அதிர்ச்சியோ அதிர்ச்சி.
புதுமுகம் அனயா கருப்பாக இருந்தாலும் களையாய் இருக்கிறார். அழும் காட்சிகளில் தான் பாவம் கொடுமையாய் இருக்கிறார். அப்பாவாக வரும் கஜினிக்கு அவரது மிலிட்டரி உடற்பயிற்சி உடல் போலவே நடிப்பும் கெட்டியாய், கல்லு போல் இருக்கிறார்.ஹரீஷுகு ஒன்று பெரிதாய் சொல்லிக் கொள்கிறார் போன்ற ஒரு கேரக்டர் இல்லை. ஆரம்பத்தில் ரெண்டு பாட்டு பாடி, கட்டிலில் புரண்டு, கடைசி காட்சியில் நீதி வழங்கிவிட்டு போவதுதான். சுந்தர் சி. பாபுவின் இசை ரொம்பவும் இறைச்சலாய் இருக்கிறது. ஒரு வேளை நான் பார்த்த ஏவி.எம்.ராஜேஸ்வரி தியேட்டர் காரணமாய் இருக்கலாம். அதனால் ஒன்றுமே புரியவில்லை.ஒளிப்பதிவு ஓகே. திரும்ப திரும்ப, வீட்டை ஒரு ரவுண்ட் நாலைந்து எபெக்டுகளில் சுற்றி காட்டுவது முதலில் நன்றாக இருந்தாலும், சலிப்படைய வைக்கிறது. தோட்டா தரணியின் அந்த வீட்டு செட் அட்டகாசம்.
படத்தில் வரும் கஞ்சாகருப்பு காமெடிக் காட்சி படு மொக்கை. ஆனால் அவரை வைத்து கிருஸ்துவ பாதிரியார்கள் செய்யும் கில்மா வேலைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முதல் பாதி அரைகுறையாய் ஏதோ ஒட்ட வைத்த காட்சிளுடனே நகர்ந்து எப்படா கதைக்கு வருவார்கள் என்று ஆகிவிடுகிறது.
இம்மாதிரியான கதைகளை செக்ஸுவலான காட்சிகள் இல்லாமல் பழைய மலையாள இயக்குனர்கள் பத்மராஜன், பரதன் போன்றவர்கள் மனித உணர்வுகளின் ஊடே கலந்து அதன் பிரச்சனைகளை கொண்டு படமெடுத்திருக்கிறார்கள்.
அதிகம் பேர் செக்ஸ் காமெடி, செக்ஸுவலான காட்சிகள், நடனங்கள் என்று வக்கிரத்தை படமாக்கி யூ சர்டிபிகேட்டில் படமெடுக்கும் நேரத்தில் தைரியமாய் யாரும் எடுக்க யோசிக்கும் கதைக்களனில் பயணித்து, சாதாரண படங்களில் வரும் க்ளிவேஜ் காட்சிகள் கூட இல்லாமல் மிக மன உணர்வுகளையும், அதன் பிரளயங்களையும், முக்கியமாய் சுந்தரி தன் மாமனாரிடம் ஈடுபாடு கொள்வதற்கான காட்சிகள் நிஜமாகவே நன்றாக படம்பிடித்திருக்கிறார். தொடர்ந்து இம்மாதிரியான கதைக் களன்களில் பயணிக்க இயக்குனருக்கு தைரியம் தான்.
தினமும் தினசரிகளில் நாம் பார்க்கிற கள்ளக்காதலுக்காக மகனையும், கணவனையும், கொல்லும் பெண்களை பற்றியும், மகளையும், மனைவியையும் கொல்லும் ஆண்களை பற்றியும் வருகிற, மற்றும் முறை தவறுகிற உறவுகளை பற்றியும் நாம் படிக்கும், நடக்கும் விஷயங்களை தான்
நிச்சயம் வருகிற வாரங்களுக்கு மீண்டும் சொல்கிறேன் இப்படம் எல்லோருக்கும் அவலாய் மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தர போகிறார்கள். பதிவர்களும், பத்திரிக்கையாளர்களும், இதை ஆதரித்தும், எதிர்த்தும், போராட்டங்கள் நடக்கப் போகிறது. இதனால் நிச்சயம் இப்படம் தயாரித்தவர்களுக்கு லாபம் தான். இதை ஆதரிக்ககூடாது என்று நினைக்கும் நண்பர்கள், கலாச்சார காவலர்கள் எல்லோரும் தயவு செய்து புறக்கணீக்க வேண்டுமென்றால் இதை பற்றி யாரும் பேசாமல், எழுதாமல் இருந்தால் தான் நல்லது. இந்த விமர்சனத்தை எழுதியதற்காக என்னையும் சேர்த்து வக்கிரம் பிடித்தவன் என்று திட்டுபவர்களுக்கு தயவு செய்து முதல் பாராவை படித்துவிட்டு செல்லவும்.
சிந்து சமவெளி – நிச்சயமாய் 18+ மற்றும் முதிர்ச்சியடைந்த மனநிலை உள்ளவர்களுக்கு மட்டும்.
கேபிள் சங்கர்
Comments
அண்ணன் அப்படியெழுதியிருக்கறதை பார்த்தா.. நீங்க அவருக்கு மனநிலை முதிர்ச்சி அடைலைன்னு சொல்லுறீங்க....
.
.
.
-- அப்படின்னு ராமசாமி சொல்லுறார் குரு. ;)
ஒருவேளை அவருக்கு 18 வயசு ஆகலையோ?
இதுக்கு முன்னாடி ஒரு எய்ட்ஸ் படம் எடுத்தாங்களே.. அந்த டைரக்டரா சங்கர்?
(எழவு எல்லார் பேரும் மறந்து போய்டுச்சி)
உ.த அண்ணன் தூங்க போய்ட்டாரு போல.
என்ன தலைவா அது... அந்த மாமானார் வேற யாரோடவாது உல்லாசமா இருக்க போய்டுறாரா??
ஒருவேளை சந்துல சிந்துன்னு வச்சிருந்தா சரியா இருந்திருக்குமா ஹாலி பாலி.
:)
கன்பீஜ்...!
ஹா... இதுக்குதான்.. கவிதை எழுதறவங்க.. நாலு பேரு நாட்டுக்கு வேணுங்கறேன். :)
கலக்கிட்டீங்க. தீர்ந்தது சந்தேகம்.
சாமி- இவர் எடுக்கிற எந்த படமும் உருப்படியாக இருக்காதா//
தப்பா சொல்றீங்க இவரு படத்துல உருப்படி மட்டும் தான் இருக்கும்
:)
:)//
ஆஹா.. ஆஹா.. யாரங்கே... இவருக்கு 100 பொற்கிழி கொடுத்தனுப்புங்கள்.
அந்த கருமத்த எல்லாம் நான் எழுதுறது இல்ல. அந்த தலைப்பு என் நினைவடுக்கின் ஆழத்தில் இருந்து மீட்டு எடுத்தது. எல்லாம் பூர்வாசிரமத்தில் சரோஜா தேவி படித்த அனுபவம்
இப்படி இயக்குநர் சொன்னதா மாலைமலர் வெப்சைட்ல போட்டிருக்கு
டெக்னிகல் ஃபால்ட். :( :)
அண்ணே நல்லா பார்த்தீங்களா, அது "முதல் பாவம்" படமா இருக்கப்போகுது
அப்படியா சார் இந்த படம்?
இல்லையே....
வழக்கமா.. லாங்க் வீக்கெண்ட்ன்னா, சாதி பிரச்சனையையில்ல கிளம்பும்?
அப்படியே பதிவு வந்தாலும் ஹிட்ஸ் வருமா # இன்னொரு டவுட்டு
மொத்தமா எழுத போர் அடிக்குது. இப்படி ஆரம்பிக்கலாம்......
.
.
.
.
//அதன் பிறகு மாமனாரின் உணர்வுகளை தூண்டும் விதமாய் நிகழ்வுகள் நடக்க, தன்னை கட்டுப் படுத்த முடியாமல் தள்ளிப் போட்டு, தள்ளிப் போட்டு ஒரு கட்டுப்படுத்த முடியாமல் நட்ட நடுக் கடலில் எது நடக்கக்கூடாதோ அது நடந்தேறி விடுகிறது//
யாரிடம் சொல்கிறீர்கள் திரு. சாமி? நான் இதை 30 வருடங்களுக்கு முன்பே அனுபவப் பூர்வமாக அனுபவித்தவன். தங்கச் சுரங்கத்தில் வந்து, வெள்ளிக்காசை விற்கப் பார்க்கிறீர்கள்.
நாவல் வடிவம் ஜெயமோகன்தானே? இது ஜெயமோகனுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். எனக்கும், லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் ழான் டுர்டக்கி (Jean EseDtes') க்கும் இல்லை.”
இந்த கடிதத்தை, இன்று திருமணநாள் காணும் மயில் ராவணனுக்கு சமர்பிக்கிறேன்.
-சாரு
03/09/2010
இராமசாமி கண்ணண் சைட்...
இது அப்படின்னா நான் பார்க்க கூடிய படம் இல்ல போலயே (:
//
கவல படாதீங்க.... சாமி சீக்கிரமே இத விட சூப்பரா ஒரு படம் எடுப்பாரு...
இராமசாமி கண்ணண் சைட்...
இது அப்படின்னா நான் பார்க்க கூடிய படம் இல்ல போலயே (:
//
கவல படாதீங்க.... சாமி சீக்கிரமே இத விட சூப்பரா ஒரு படம் எடுப்பாரு...
ஹாலிவுட் பாலா மற்றும் ராமசாமி கண்ணன் இருவரும் எங்கிருந்தாலும் மேடைக்கு வருமாறு விழாக்குழுவின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...
ஹாலி பாலி.. கரெக்ட் மீ இஃப் ஐ எம் ராங்க்.
//
சிந்து சமவெளி வந்த பிறகுதான் மனிதன் நாகரீகமாக வாழ ஆரம்பித்தான். அதை மீண்டும் கல் தோன்றா காலத்துக்கு எடுத்துப் போக கூடாது என்பதை வலியுறுத்ததான் வைத்திருப்பது போல படத்தில் காட்சிகள் வருகிறது.
18+ க்கு சர்டிபிகேட் காட்டலாம்.... முதிர்ச்சியடைந்த மனநிலை உள்ளவர் என்பதற்கு என்ன ஃப்ருப் காட்டனும்????
இந்த வரி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணே..
இருக்குங்க. PG , G னு நிரைய வெச்சிருக்கானுங்க. அந்த மாதிரி இங்க படம் பண்ணினா, எல்லாத்தயும் ஒட்டு மொத்தமா பிட்டு படம்னு பேரு வெச்சிட்டோம். ரசிகர்கள் மனநிலையும் மாறனும். அப்போதான் அந்த சினிமா உலகத்தரம்னு எல்லாம் பேச முடியும்.
ippadi sollitteengale ippo naan paarthaalum thappu aennaa enakku innum 18 aagala paarkalannaalum thappu aennaa enakku mana muthirchchi irukku....
உண்மை தமிழர்களை இப்டீல்லாம் வாரக்கூடாது! :))
நல்ல வேளை... முதிர்ச்சி அடைந்த உடல் நிலை இருப்பவர்கள்தான் படம் பார்க்கணும் நு சொல்லாம விட்டீங்களே .. சொல்லி இருந்தீங்கன்னா இவர் பின்னூட்டம் பயங்கரமா இருந்திருக்கும்
Thanks for sharing.