Thottal Thodarum

Nov 26, 2010

நந்தலாலா

Nandalala
சிறு வயதில் தன்னை விட்டு பிரிந்து போன தாயை ஒரு முறை பார்த்து, கட்டி அணைத்து முத்தமிடவேண்டுமென்று ஸ்கூல் எஸ்கர்ஷனை கட் செய்துவிட்டு சிறுவன் அகி கிளம்புகிறான். இன்னொரு பக்கம் மனநல மருத்துவ மனையில் தன்னை இப்படி விட்டு விட்டு போன தாயை போய் பார்த்து அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட வேண்டும் மனநல மருத்துவமனையிலிருந்து தப்பிக்கிறான் ஒருவன். இவர்கள் இருவரும் அடுத்தடுத்து உள்ள ஊர்களுக்கே போக வேண்டியிருப்பதால் ஒன்றாக பயணப்படுகிறார்கள். அவரவர் அம்மாக்களை சந்தித்தார்களா? என்பதே கதை.

nandalala_movie_pictures_02
ரோடு சைட் டிராவல் படங்கள் பல இருந்தாலும் இவ்வளவு நெகிழ்ச்சியூட்டும் படம் வந்திருக்கிறதா என்று யோசித்து பார்த்தால் சட்டென ஞாபகம் வரவில்லை. சல சலத்தோடும் நீரோடு இழுத்துக் கொண்டு அலையும் இலை தழையோடு நம் மனதையும் ஒளிப்பதிவாளர் இழுத்துக் கொள்கிறார் என்றால் அது மிகையல்ல.. குறிப்பாக பல வைட் ஷாட்டுகளிலும், லோ ஆங்கிள் ஷாட்களிலும், கால்களுக்கு மட்டுமே முக்யத்துவம் கொடுத்து அலையும் ஷாட்களிலும், கேமராவாய் தெரியாமல் கதையோடு நம்மை பயணிக்கிறது ஒளிப்பதிவு. அந்த பச்சை பசேல் சுற்றுப்புறமும், நேர் கோடு சாலைகளும் பல இடங்களில் இவர் நின்றால் நாமும் நிற்கிறோம். இவர் ஓடினால் நாமும் ஓடுகிறோம். கூடவே பயணிக்க வைத்த மகேஷ் முத்துசாமியின் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் எல்லோருமே ஷாலினி முதல்.. நேற்றைய மைனாவில் வரும் சிறுவன் வரை வயதுக்கு மீறிய பேச்சும், நடவடிக்கையுமாய் பார்த்து பார்த்து சலித்து போன கண்களுக்கு இப்படத்தில் வரும் சிறுவன் அஸ்வத் வெல்லக்கட்டி. முதல் காட்சியில் தலை குனிந்து த்ன் வெறுமையை வெளிகாட்டும் காட்சியாகட்டும், தனித்து பாட்டியுடன் வாழும் நிலையில் உள்ள அவனின் மெச்சூரிட்டியும், படித்த பையனுக்கே உரிய புத்திசாலித்தனமுமாய் சேர்ந்து மிளிர்கிறான். க்ளைமாக்ஸ் காட்சியில் அவன் பேசும் வசனம் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் ரியாலிட்டிக்கு மேலே.. மற்றபடி.. ரியலி வெரி குட் பர்பாமென்ஸ்.

nandalala_movie_pictures_04
இவருடனே தன் தாயை தேடி போகும் மெண்டல் கேரக்டருக்கு மிக சரியாய் பொருந்துகிறார் மிஷ்கின். ச்ச்சிலீர் என்று ரோடியோ பெட்டியை ஒடைத்துவிட்டு எதுவுமே தெரியாதது போல, இடது கை ஆள்காட்டி விரலை சுவற்றில் தேய்த்தபடியே அறிமுகமாகுமிடத்திலிருந்து மெல்ல, மெல்ல நம் மனதில் இறங்கி உட்கார ஆரம்பித்துவிடுகிறார். அவர் பைத்தியம் என்பதாலே பிதாமகன் போல மிகவும் அரகண்டாக ஆளாய் காட்டாமல் மிதமாக கொஞ்சம் அக்ரஸிவாகவும், இன்னும் சில இடங்களில் கையாலாகாமல் அடிவாங்குபவராகவும், மிக சரியான மாடுலேஷனில் சில இடங்களில் பேசி கைத்தட்டல் பெறுகிறார். ஒரு சில காட்சிகளில் மட்டும் இவர் மன நலம் குன்றியவரில்லையோ என்று சந்தேகிக்க வைக்கும்படியான காட்சி வருகிறது.

nandalala-wallpapers01
படம் நெடுக சிறு சிறு கேரக்டர்கள் வந்து கொண்டேயிருக்கிறது. அடிக்கடி அகியிடம் பணம் கேட்கும் வேலைக்காரி, அந்த வழிப்பறி செய்யும் வேலையற்றவன்,  காலில் அடிப்பட்டதும் தொடர்ந்து பாவாடையை மிஷ்கின் தூக்க அடித்துக் கொண்டேயிருக்கும் அந்த ஸ்கூல் பெண்ணிடம், வலிக்குதா எச்சி வச்சிக்க ஜில்லுனு இருக்கும் என்றதும் ஆச்சர்யமாக பார்த்து நெருங்குவதும், கிளம்புகையில் ஓடிப்போய் அவள் கையில் நான்கு கூழாங்கற்களை கொடுப்பதும், சிறுவனுக்கு முத்தமும், மிஷ்கினுக்கு ஒரு  தயக்கத்துடனான ஒரு தோள் சாய்தலுடன் திரும்பி பார்க்காமல் ட்ராக்டரை கிளப்பிக் கொண்டு போகையில் நம் மனதில் நிற்கிறாள். அவள் திரும்பி ஃப்ரெமிலிருந்து வெளியேறும் வரை ஷாட் எக்ஸ்டண்ட் ஆவதும் அட்டகாசம். அந்த முகமே தெரியாத பஸ் கண்டக்டர், போலீஸ் இன்ஸ்பெக்டர், லாரி டிரைவர், ஒரே ஒரு ஷாட்டில் மட்டும் வரும் நாசர், ரோட்டோர விபச்சாரி ஸ்னிகிதா, நொண்டி ஆள், ஜாதி கலவர கற்பழிப்புக்கு ஆளாகும் பெண்,  கடோத்கஜன்களான ட்ராவலர்கள், ஸ்னிகிதாவை கடத்த முயற்சிக்கும் வயதான ”போய்” கட்டு கிழவன், அந்த சிகப்பு டெம்போ, புது மண தம்பதிகள்,  ஓப்பன் கார் பீர் இளைஞர்கள், அகியின் அம்மா, அந்த கண் தெரியாத கிழவி, மிஷ்கினின் குடும்பம் என்று படம் முழுக்க ஒவ்வொரு கேரக்டரும் மனதில் நிற்கும் வண்ணமாய் செதுக்கியிருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். மிக குறைந்த அளவான டயலாக்குளை மட்டுமே வைத்து பல உணர்வுகளை பல கேரக்டர்கள் மூலம் உணர்த்துகிறார். கொஞ்சம் அந்நியமான கேரக்டர்கள் என்றால் அந்த மோட்டார் பைக் மொட்டை தடியன்கள் தான். ஆனால் அடிக்கடி ட்ராவல் செய்யும் ஆட்களிடம் கேட்டால் இது மாதிரி வித்யாசமானவர்களை அவர்கள் சந்தித்திருப்பதை சொல்வார்கள். நான் கூட சென்னையில் ஒரு பெரியவரை பார்ப்பேன். பூணூல் தரித்த மேல் சட்டை போடாமல் நீண்ட தாடியுடைய பெரியவர், பழைய கைனடிக் ஹோண்டாவில் தலை முழுக்க முண்டாஸுடன், விபூதி, சந்தனம், குங்குமமிட்டு, வண்டியின் பின் பக்கம் பூராவும் ஒரு பெரிய பெட்டியில் ஏதோ ஒரு விளம்பரத்தையும் அந்த ப்ராடெக்டையும் ஒரு ரோடியோ பெட்டியை ஸ்பீக்கருடன் கட்டிக் கொண்டு அலைவார்.

nandalala_movie_pictures_05
இப்படத்திற்கு மணி மகுடமென்றால் அது இளையராஜாவை தவிர வேறு யாரையும் சொல்ல முடியாது. மொட்டை கலக்கியிருக்கிறார். ஆரம்ப காட்சியில் சலசலக்கும் நீரின் ஓசையோடு ஆரம்பிக்கும் இவரது ராஜ்ஜியம் படத்தின் கடைசி காட்சி வரை அதுவும் ரோலிங் டைட்டில் முடியும் வரை கலங்கிய கண்களோடு தியேட்டரில் நிற்கும் ரசிகர்களே அதற்கு சாட்சி.  பின்னணியிசை என்றால் என்ன என்பதை இன்றளவில் உயர் நிலையில் இருக்கும் இசையமைப்பாளர்களும் சரி, புதியவர்களுக்கும் சரி பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாய் எங்கு இசை ஒலிக்கக்கூடாது என்பது சரியாக புரிந்து மெளனத்தையே இசையாய் கொண்டு வந்திருக்கும் ராஜா க்டைசி இருப்து நிமிடங்கள் இசை ராஜாங்கமே நடத்தியிருக்கிறார். என்னால் அந்த கடைசி நிமிடங்களில் கண்ணீரை அடக்க முடியவில்லை. படத்தின் காட்சி ஏற்படுத்திய பாதிப்பை விட அதை இசையால் சந்தோஷமோ, துக்கமோ, எல்லா உணர்வுகளையும் மெல்ல மெல்ல ஸ்லோ பாய்சன் போல நம்முள் ஏற்றி.. போதையாய், உருக்கமாய், உணர்வுகளூடே பயணித்து கரைய வைத்திருக்கிறார். முக்கியமாய் அகியின் அம்மா மிஷ்கினிடம் பேசும்  வசனமேயில்லாத சிங்கிள் டாப் ஆங்கில் ஷாட்டில் ஒரு கதையை தன் இசையாலேயே சொல்லி கலங்கடித்திருக்கும்  மொட்டை என் மொட்டை..

படத்தை பற்றிய ஒரு குற்றச்சாட்டு இது ஒரு ஜப்பானிய படமான கிகிஜிரோவின் காப்பி என்று,  கிகிஜிரோவின் கான்செப்ட்தான் ஆனால் காப்பியில்லை. அதைஉள்வாங்கி மிஷ்கின் தந்திருக்கும் வர்ஷன் வேறு. சரி விடுங்க அப்படித்தான் என்று சொல்பவர்களுக்கு கிகிஜிரோ தராத ஒரு உணர்வை இப்படம் எனக்கு தந்திருக்கும் பட்சத்தில் இப்படம் நிச்சயம் நல்ல படமே. படத்தை பற்றி யோசிக்கையில் இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் படம் பார்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய இம்பாக்ட படித்துவிட்டு பார்த்தால் கிடைக்காது என்பதால் சொல்லவில்லை.
nandalala-ja12-2009 குறைகளே இல்லையா என்று கேட்பவர்களுக்கு.. ஒரிரு காட்சிகள்,முக்கியமாய் ஷாட் ப்யூட்டிக்காகவே ரொம்ப நேரம் நின்று கொண்டேயிருப்பது, லெந்தியான ஸ்டாண்ட் ஸ்டில் காட்சிகள். ஆனால் அது உணர்த்தும் விஷயங்கள் நிறைய.  சில க்ளிஷே காட்சிகள், க்ளைமாக்ஸ் முடிந்து வரும் காட்சி போன்றவைகளை சொல்லலாம்.

ஐங்கரன் சுடச் சுட வெளியிட்ட படமெல்லாம் வந்த சூட்டிலேயே பெட்டிக்குள் போய் விட, வெளியிட முடியாமல் இழுத்தடித்த படமெல்லாம் நின்று விளையாடுகிற காலம் போலருக்கு.. பேராண்மை, அங்காடித்தெரு, இப்போது  நந்தலாலா அதில் ஒன்று.. 150 கோடி செலவில்  எந்திரனை  தயாரிக்க முடியவில்லையே என்று ஐங்கரன் வருத்தப் பட தேவையில்லை.. அதை விட 150 முறை  சிறந்த படத்தை வழங்கியதற்காக காலமெல்லாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.
நந்தலாலா – வாழ்க்கையின் பயணம்  A MUST SEE FILM
கேபிள் சங்கர்
டிஸ்கி: ஒரே நாளில் இரண்டாவது முறையாய் படத்தை பார்த்துவிட்டு வருகிறேன். பாதிப்பு குறையவேயில்லை...
Post a Comment

95 comments:

செங்கோவி said...

விமர்சனம் மிக அருமை. மிஷ்கினின் படங்கள் எப்போதும் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுப்பவை..கண்டிப்பாகப் பார்க்கவேண்டும் என நீங்களே சொல்லீட்டீங்க..பார்த்திடுவோம்...நமக்கு வாய்த்த மிஷ்கின் மிக மிகத் திறமைசாலி..ஆனால் வாய்தான் காதுவரை நீள்கிறது...

--செங்கோவி

Sukumar said...

வாவ்.. ரொம்ப நாள் கழிச்சு எனக்கொரு வாய்ப்பு... நான்தான் பர்ஸ்ட்டு..

ம.தி.சுதா said...

மிஸ்கினின் படத்தில் எனக்கும் எப்போதும் ஒரு ஈர்ப்ப இருக்கிறது...

Thirumalai Kandasami said...

Oh..I expected this film very much for last one year,,I missed opportunity.not in Chennai ,,now..


http://enathupayanangal.blogspot.com

Sukumar said...

நல்லா சொல்லியிருக்கீங்களே.. கண்டிப்பா பார்த்துட வேண்டியதுதான்... (மீ த பர்ஸ்ட் வடை போச்சா...)

KANA VARO said...

ஓகே பார்ப்பம்!

Anonymous said...

தல விமர்சனம் எல்லாம் சரி, நல்லா இருக்கு... ஆனால் படம் நன்றாக ஓடி ஹிட் ஆன உடனே நந்தலாலாவை ரசித்த தமிழர்களுக்கு அறிவே இல்லை ரசனையும் இல்லை என்று மிஷ்கின் பேட்டி கொடுப்பார்,

அப்புறம் எதுக்கு இப்படி மாங்கு மாங்கு என்று படம் எடுக்கிறார் என்று அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

Anonymous said...
This comment has been removed by the author.
தமிழ் அமுதன் said...

நன்றி...!
நாளைக்கே தியேட்டருக்கு..!

பிரபாகர் said...

ரெண்டு அண்ணன்களும் சூப்பர்னு சொல்லியிருக்கீங்க!(உ.த, கே.ச). கண்டிப்பா பார்த்துடலாம்!...

பிரபாகர்...

கத்தார் சீனு said...

சூடான, சூப்பரான விமர்சனம் கேபிள்ஜி.....முக்கியமா ராஜாவின் இசை ராஜாங்கத்திற்காக மற்றும் மிஷ்கினின் இயக்கம், நடிப்புக்கு...
இன்னும் ஒரு வாரம் இருக்கு திரும்பி போக..அதுக்குள்ள இங்கயே பார்த்துடணும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

pathudalaam

Giri Ramasubramanian said...

விமரிசனத்திற்கு நன்றி சார்.

//இவருடனே தன் தாயை தேடி போகும் மெண்டல் கேரக்டருக்கு மிக சரியாய் பொருந்துகிறார் மிஷ்கின்//

"மென்டல்" = இன்னமும் கொஞ்சம் சரியான (மரியாதை தரும்) வார்த்தையாக நீங்கள் இங்கே மாற்றிக் கொள்ளலாம்.

யாரோ ஒருவர் எழுதும் பதிவென்றால் நான் ஜஸ்ட் லைக் தட் கடந்து சென்றுவிடுவேன். அண்ணன் கேபிளார் என்பதால்.....

Chitra said...

விமர்சனத்தை பார்த்த பின், படத்தை பார்க்க வேண்டும் போல தோன்றுகிறது. Sounds like a good movie.

NERUBEN said...

நீங்க சொன்ன விதத்துல கதைட THEME கிகிஜிரோ தான்னு புரியுது....
ஆனாலும் தமிழில் குறிப்பிடத்தக்க மாற்று சினிமாவை உருவாக்க விரும்பும் மிஸ்கினுக்காக பார்த்துடுவம்....
BUT இலங்கைல எந்த தியட்டர்லயும் இப்படம் இல்ல போலத்தான் இருக்கு.....

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

படம் பார்க்கத் தூண்டுகின்றது உங்கள் விமர்சனம். நன்று.

Unknown said...

//150 கோடி செலவில் எந்திரனை தயாரிக்க முடியவில்லையே என்று ஐங்கரன் வருத்தப் பட தேவையில்லை.. அதை விட 150 முறை சிறந்த படத்தை வழங்கியதற்காக காலமெல்லாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்//
super!! :)

Unknown said...

நந்தலாலாவை எவ்வளவு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்!
ஏற்கனவே சாரு இளையராஜாவின் பின்னணி இசை அற்புதம்னு சொல்லி பயங்கர எதிர்பார்ப்பு! இப்போ நீங்க வேற சொல்லிடிங்க! :))

மாணவன் said...

//படத்தின் காட்சி ஏற்படுத்திய பாதிப்பை விட அதை இசையால் சந்தோஷமோ, துக்கமோ, எல்லா உணர்வுகளையும் மெல்ல மெல்ல ஸ்லோ பாய்சன் போல நம்முள் ஏற்றி.. போதையாய், உருக்கமாய், உணர்வுகளூடே பயணித்து கரைய வைத்திருக்கிறார். முக்கியமாய் அகியின் அம்மா மிஷ்கினிடம் பேசும் வசனமேயில்லாத சிங்கிள் ஷாட் டாப் ஆங்கில் ஷாட்டில் ஒரு கதையை தன் இசையாலேயே சொல்லி கலங்கடித்திருக்கும் மொட்டை என் மொட்டை..//

ராஜா ராஜாதான்...

அருமையான விமர்சனம் சார்,

Unknown said...

கொடுமையைப் பாருங்க! நாங்க இங்க (கொழும்பில) DVD க்கு காத்திருக்கணும். அந்த தியேட்டர்லயாவது ரிலீஸ் பண்றாங்களோ தெரியல! சுறா, வில்லு போன்ற பின்நவீனத்துவ படங்கள் தான் உடனே வரும். :(

vimalanperali said...

நல்ல அறிமுகம்,நல்ல விமர்சனம்,அவசியம் படம் பார்த்து விடுகிறேன்சார்.

sivaG said...

nice review. Want to see the film soon...

க ரா said...

காப்பி அடிக்கறது தப்பே இல்ல... ஆனால் i am inspired by this அப்படின்னு வெளில சொல்றவன் ஒரு நல்ல கலைஞன்னா இருக்க முடியும்...

பொன்கார்த்திக் said...

//சுறா, வில்லு போன்ற பின்நவீனத்துவ படங்கள் தான் உடனே வரும்.//

அதென்ன பின்நவீனத்துவ படங்கள்? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க? அப்படியே அது இருந்தாலும் உங்களுக்கு வேற எந்த பின்நவீனத்துவ படங்களும் கிடைக்கலையா?
கிடைக்குற கேப்ளலாம் கோல் போடுறீங்களே ஜி?

idroos said...

maniratnam padangalaivida myskinin padankal thaan sirandhavaiyaaka enakku thondrukirathu.

Myskinnku iruppadhu katrorukke uriya aanavam.

Avarin thiramaikkaka adhai porutthukkollalam

CS. Mohan Kumar said...

Fantastic. இந்த வருடத்தின் சிறந்த படம் என டைம்ஸ் ஆப் இந்தியா நான்கரை ஸ்டார் ரேடிங் தந்துள்ளது !!

Luna said...

I dont like tear jerkers!!

வாழ்க்கையில் ஆயிரம் கஷ்டத்தை மறக்க சினிமாக்கு போறோம். அங்கேயும் போய் அழணுமா?

உங்க மனசை உருக்கிருசுன்னா படம் சூப்பர்-னு அர்த்தமாயிடுமா?

இதுக்கு சன் டிவி-ல சீரியல் பாக்கறதே பெட்டர்! தயவு செய்து இதெல்லாம் ஒரு படம்-னே சொல்லாதீங்க!

உடனே பத்துபேர் எதுவுமே யோசிக்காம, "சூப்பர் ரிவியூ பாஸ்"-னு ஜால்ரா தட்டுறாங்க

அதான் நம்ம தமிழ் சினிமா இன்னும் அப்படியே இருக்கு!

pichaikaaran said...

அதை விட 150 முறை சிறந்த படத்தை வழங்கியதற்காக காலமெல்லாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம் "

இந்த வரி தேவையற்றது... அவதூறானது.. உங்களை போன்ற ஒருவருக்கு அழகல்ல..

எந்திரன் எந்திரன் தான்.. இந்த ஒப்பீட்டை மிஷ்கின் ஒப்புக்கொள்வாரா என்பது கூட சந்தேகம்தான் ..

நேசமித்ரன் said...

உணர்வு பூர்வமான விமர்சனம் ஜி

ஐங்கரன் மெஸேஜ்- க்ரியேட்டரா உங்க ஆதங்கம் அழுத்தம்

Rafeek said...

"LUNA:I dont like tear jerkers!!"

போங்க தம்பி போங்க..போய் வா குவட்டர் கட்டிங் போய் பாருங்க.

அழுக வைக்கிற படமெல்லாம் ஒடிடாது.. நந்தலாலா போஸ்டர் மற்றும் விளம்பரங்களே சொல்லிவிட்டது இது சோகமான பயணம் என்று.. ஆனால் அதையும் மீறி போகிறவர்களுக்கு தரும் அனுபவமே படத்தின் வெற்றி. தைரியமிருந்தால்.. சோகத்தில் அழுதிடுவோமோ என்ற பயமில்லாமல் இருந்தால் நீங்கள் பார்த்து விட்டு எழுதுங்கள். நந்தலாலா இசையும் வாழ்வும் கலந்த ஒரு இனிய பயண அனுபவமே.

pradeep said...

Padam parthern , another Quality movie from mysskin,

ana indha padam cammercialy sucessfull agathunu thonuthu

Unknown said...

நான் பார்த்த ஆகச்சிறந்த தமிழ் படங்களின் வரிசையில் இது முதன்மையானது....

a said...

இருமுறை பார்த்தும் இயல்புக்கு மீளவில்லை போல.........

Ba La said...

ஏற்கனவே இருந்த ஆர்வத்தை பலமடங்காக்கி இருக்கிறது உங்கள் வரிகள்

Prasanna Rajan said...

'பூ' திரைப்படம் வந்த போது, அந்த திரைப்படத்தின் ஆரம்பத்தில் 'நன்றி: ஷாங்க் ஈமூ' என்று டைட்டில் கார்ட் வரும். அது ஏனென்றால் 'பூ' திரைப்படத்தின் சில காட்சிகள், ஷாங்க் ஈமூவின் 'தி ரோட் ஹோம்' திரைப்படத்தில் இருந்து மறுஆக்கம் செய்யப்பட்டவை.

கான்செப்டில் எடுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. குறைந்தபட்சம் ஒரு நன்றி டைட்டில் கார்டு போட மிஷ்கினுக்கு துப்பில்லையா என்ன? 'Taken for Granted' என்று இப்படி செய்துவிட்டு எழுத்து. இயக்கம் என்று போடுவதை பார்த்தால் கடுப்பு வருமா, வராதா?

ராஜன் said...

TO >>>> ///// LUNA:I dont like tear jerkers!!" //////

யாரும் கஷ்டத்தை மறக்க அல்ல சந்தோசமாக இருக்க சினிமா செல்வதில்லை , அப்படி சென்றால் கூட அந்த 3 மணிநேரத்தில் அவன் கஷ்டம் மறிந்து சினிமா பார்க்க முடியும் என்று சொல்ல முடியாது , இன்னும் கேட்டால் ஒருவன் மன கஷ்டத்தில் இருக்கும் போது சினமா ரசித்து பார்க்க முடியாது என்பது என் கருத்து ! படம் பார்க்க ஒரு தனி மனநிலை அமைதி வேண்டும் அப்படி சென்றால் தான் படத்தை ரசிக்க முடியும். எந்த படமாக இருத்தாலும் சரி அது எந்திரன் அல்ல மைனா என்று இல்லை .இது தான் நிஜம் உண்மை , என் அனுபவ உண்மை கூட .இப்போது இந்த படம் பார்க்க என் மனம் முழுவதுமாக தயாராக உள்ளது.

புஹாரி ராஜா said...

sorry sir,,naan padam paarthutten...very dissapppointed....oruvelai niraya footagela poirukkalam...ilayarajavum..muthusamiyum mattum innum manathai vittu marayavillai...moonram pirai sridevikkum nandhalala manibaskerukkum niraya vithyasangal undu......

வெடிகுண்டு வெங்கட் said...

மந்திரவாதியின் தொடுதலுக்காக காத்திருந்த சபிக்கப்பட்ட தவளை போல பலரும் மிஸ்கின் பாத்திரத்தின் மூலம் தங்களின் விமோசனத்தை எதிர் நோக்கியிருந்தனர்.
வெடிகுண்டு வெங்கட் விமர்சனம்: நந்தலாலா - தமிழ் சினிமாவின் முதல் படம்

பிரபல பதிவர் said...

//150 கோடி செலவில் எந்திரனை தயாரிக்க முடியவில்லையே என்று ஐங்கரன் வருத்தப் பட தேவையில்லை.. அதை விட 150 முறை சிறந்த படத்தை வழங்கியதற்காக காலமெல்லாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.
//

எந்திரன் வயித்தெரிச்சல் இன்னும் போகல போலருக்கு.... எத்தன ஜெலுசில் வேணும் தல...வாங்கி தரேன்... அப்புறம் உலக நாயகனின் படத்த ரெட் ஜெயண்ட் கை மாத்திட்டானுக‌ போலருக்கு... உங்க சினிமா வியாபாரத்துல இதபத்தி எழுதுங்களேன்....

இன்னனும் உ.போ.ஒ. மும்பையில் பத்து நாள் கழிச்சி ரிலீஸ் ஆனத பத்தி ஒண்ணும் வாய தொறக்க காணோம்....

எந்திரன் ரிலீஸ் ஒட்டி எல்லா முண்ணனி டெய்லிலயும் பேட்டி கொடுத்தத பத்தி பீத்திகிட்டீங்க... இப்ப என்னன்னா அந்த படத்த இழுத்து ஒரு தேவையில்லாத பன்ச்.....

எல்லாத்துலயும் ரஜினிய இழுக்கும் இந்த இரிட்டேட்டிங் பதிவர்கள என்ன செய்யலாம்???

Cable சங்கர் said...

//எந்திரன் வயித்தெரிச்சல் இன்னும் போகல போலருக்கு.... எத்தன ஜெலுசில் வேணும் தல...வாங்கி தரேன்... அப்புறம் உலக நாயகனின் படத்த ரெட் ஜெயண்ட் கை மாத்திட்டானுக‌ போலருக்கு... உங்க சினிமா வியாபாரத்துல இதபத்தி எழுதுங்களேன்....//

jelucil தேவையேயில்லை.. ஏன் எந்திரன் பற்றி பேசினால் கமலஹாசனை இழுக்கும் சிறுபிள்ளைத்தனமான ஆட்டம் உங்களிடமிருந்து போக மாட்டேன் என்கிறது. எந்திரனை அதன் வசூலை பற்றி.. ரஜினியை பற்றி பாராட்டும் போது மட்டும் சிரித்துக் கொண்டிருக்கும் நீங்கள் கொஞ்சம் மாற்று கருத்து சொன்னால் மட்டும் எங்கிருந்து கிளம்புகிறீர்கள்..? மாப்ளை.. நிச்சயம்.. இந்த படம் ஐங்கரன் தங்கள் தயாரிப்பில் வந்த மிக சிறந்த படங்களில் ஏன் தமிழிலேயே சிறந்த படஙக்ளில் ஒன்றாகும்.

//இன்னனும் உ.போ.ஒ. மும்பையில் பத்து நாள் கழிச்சி ரிலீஸ் ஆனத பத்தி ஒண்ணும் வாய தொறக்க காணோம்....//

அதை பற்றி பேச்சு வரும் போதுதான் திறப்போம்..

//எந்திரன் ரிலீஸ் ஒட்டி எல்லா முண்ணனி டெய்லிலயும் பேட்டி கொடுத்தத பத்தி பீத்திகிட்டீங்க... இப்ப என்னன்னா அந்த படத்த இழுத்து ஒரு தேவையில்லாத பன்ச்.....//

நிச்சயம் அதுவும் ஒரு பெருமைதான் தலைவரே... அதுக்காக நான் உண்மையை சொல்லக்கூடாது என்று ஏதாவது கட்டாயமா.. என்ன>.?.. அதெல்லாம் முடியாது. அஸ்கு..புஸ்கு..

எல்லாத்துலயும் ரஜினிய இழுக்கும் இந்த இரிட்டேட்டிங் பதிவர்கள என்ன செய்யலாம்???

பிரபல பதிவர் said...

இது என் ப்ளாக்... நான் என்ன வேண்ணா எழுதுவேன்னு பதில் சொல்லாதீங்க.... என்ன வேண்ணா உங்க பெர்சனல் டைரில எழுதிக்கிங்க... எல்லாரும் படிக்கிற ஒரு வலை பதிவரா இருந்துகிட்டு கிடச்ச கேப்லல்லாம் ரஜினிய நக்கல் உடுற வேலைய நிறுத்துங்க...

அய்ங்கரன் ப்ரடியூசர் ஆகி 4 வருஷம் ஆகுது... 10 படம் பண்ணிருக்காங்க‌.... ரஜினி 35 வருஷம் ஆச்சி... 150 படம் பண்ணிட்டார்... இந்திய சினிமாவின் ஒரு அடையாளமாக இருக்கிறார்.... மைண்ட் இட்

பிரபல பதிவர் said...

இது ரஜினி ஸ்டைல் என்று ஒரு தனிப்பட்ட‌ ஐகானாக தெரிகிறாரே தவிர.... ஜப்பான் பட பாதிப்பு, அமெரிக்க பட பாதிப்பு, உலக சினிமா பாதிப்பு என்று உங்களுக்கு தெரிந்த அறிவு ஜீவிகள் செய்யும் உட்டாலக்கடி வேலைகள் செய்ததில்லை....

ரீமேக் படங்கள் கூட ரஜினி ஸ்டைலில்தான் இருந்தனவே தவிர... ஈயடிச்சான் காப்பி இல்லை.....

பிரபல பதிவர் said...

//ஏன் எந்திரன் பற்றி பேசினால் கமலஹாசனை இழுக்கும் சிறுபிள்ளைத்தனமான ஆட்டம் உங்களிடமிருந்து போக மாட்டேன் என்கிறது//

எல்லாத்துலயும் ரஜினிய இழுப்பது சிறுபிள்ளைத்தனமில்லையா??

பிரபல பதிவர் said...

//இந்த படம் ஐங்கரன் தங்கள் தயாரிப்பில் வந்த மிக சிறந்த படங்களில் ஏன் தமிழிலேயே சிறந்த படஙக்ளில் ஒன்றாகும்.

///

ஊரான் பொண்டாட்டிய கூட்டி வந்து உலகத்தில உத்தமி என் பொண்டாட்டின்னானாம்.... ஜப்பான் படத்த எடுத்து தமிழ்ல சிறந்த படமாம்.... சிப்பு வருது தல... சிப்பு வருது

பிரபல பதிவர் said...

//அதுக்காக நான் உண்மையை சொல்லக்கூடாது என்று ஏதாவது கட்டாயமா///

நீங்க கேபிள் சங்கரா???.. இல்ல உண்மை சங்கரா???? அல்ரெடி ஒரு அண்ணாச்சி உண்மைய எழுதுறது பத்தாதா???


இங்க ரிலீஸ் ஆகல.... அடுத்த வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் சென்னைல இருக்கேன்.... ரெண்டு பேரும் படத்துக்கு போவோம் (எந்திரன் போலாம்).... அப்புறம் எதாவது சாப்பாட்டு கடைக்கு போவோம்... எந்த டைம் ஃப்ரீயா இருப்பீங்கன்னு மட்டும் சொல்லுங்க‌

Cable சங்கர் said...

maappillai.. இது என் ப்ளாக் என்ன வேணும்னாலும் எழுதுவேன் என்றுநான் எப்போதுமே சொல்லவில்லை..
நிச்சயம் ரஜினியை மட்டுமல்ல.. எல்லாறையும்பற்றியும் நக்கல் விடுவேன். ரஜினி அடையாளம் இல்லைன்னு யாரு... சொன்னா.. அதுக்காக அவரை பற்றி பேசவே கூடாது என்று நினைப்பது நிச்சயம் சிறுபிள்ளைத்தனம் தான்.. இது ரஜினி கமல் சண்டை போட இருக்கும் பதிவல்ல.. அந்த நிலையெல்லாம் நான் தாண்டி ரொமப் நாளாகிறது தலைவரே..

Cable சங்கர் said...

//ஊரான் பொண்டாட்டிய கூட்டி வந்து உலகத்தில உத்தமி என் பொண்டாட்டின்னானாம்.... ஜப்பான் படத்த எடுத்து தமிழ்ல சிறந்த படமாம்.... சிப்பு வருது தல... சிப்பு வருது
//

எந்திரன்ல எத்தனை பேர் பொண்டாட்டியை கூட்டி வந்திருக்காங்கன்னு தெரியுமா../:))

பிரபல பதிவர் said...

//ஏன் எந்திரன் பற்றி பேசினால் கமலஹாசனை இழுக்கும் சிறுபிள்ளைத்தனமான ஆட்டம் உங்களிடமிருந்து போக மாட்டேன் என்கிறது. ///

நாங்களாவது கமல இழுக்குறோம்... நீங்க மாஸ் ஃபிலிமோட ஆர்ட் ஃபிலிம்மெல்ல கம்பேர் செஞ்சிருக்கீங்க‌

Cable சங்கர் said...

50

நீங்களே படிச்சி பாருங்க உங்க கமெண்டை.. எவ்வளவு சால்ஜாப்புள்ளதுன்னு உங்களுக்கே தெரியும்.. :))

பிரபல பதிவர் said...

//எந்திரன்ல எத்தனை பேர் பொண்டாட்டியை கூட்டி வந்திருக்காங்கன்னு தெரியுமா..//

த‌ல‌ நாங்க‌ ஒண்ணும் த‌மிழில் வ‌ந்த‌ சிற‌ந்த‌ ப‌ட‌ம்னு எந்திர‌ன‌ சொன்ன‌தில்லையே.... த‌மிழ் சினிமா வ‌சூல் சாத்திய‌ங்க‌ளை திற‌ந்துவிட்ட‌ ப‌ட‌ம்னுதான் சொல்றோம்.....

நீங்க‌தான் ந‌ந்த‌லால‌ ஜ‌ப்பானிய‌ பட‌ பாதிப்பு... த‌மிழின் சிற‌ந்த‌ ப‌ட‌ம்னு சொல்றீங்க‌

பிரபல பதிவர் said...

//இது என் ப்ளாக் என்ன வேணும்னாலும் எழுதுவேன் என்றுநான் எப்போதுமே சொல்லவில்லை..///


எப்ப‌வுமே இத‌த்தான் சொல்வீங்க... இது உங்க‌ள ப‌டிக்கிற எல்லாத்துக்குமே தெரியும்...

Cable சங்கர் said...

அதை நீங்க என்ன சொல்றது.. எங்களுக்கே தெரியும்.. நிச்சயம் தமிழில் வந்த சினிமாக்களில் மிகச் சிறந்த படம் என்றுபார்க்கும் போது நந்தலாலாவை சேர்ப்பேனே தவிர.. நிச்சயம் எந்திரனை சேர்க்க மாட்டேன்..

Cable சங்கர் said...

@செங்கோவி
மிஷ்கின் வாயை ஏன் பார்க்கிறீங்க..? படத்தை மட்டும் பாருங்க தலைவரே..:))

@

பிரபல பதிவர் said...

//ஏன் எந்திரன் பற்றி பேசினால் கமலஹாசனை இழுக்கும் சிறுபிள்ளைத்தனமான ஆட்டம் உங்களிடமிருந்து போக மாட்டேன் என்கிறது. //


இந்த ஆட்டம் ஆரம்பிச்சது நீங்க... எந்திரன் அலை என்ற பதிவில் தசாவதாரத்த இழுத்தீங்க... எந்திரன் பற்றிய பதிவில் நைசா விக்ரம் (நடிகர் விக்ரம் இல்ல.... கமல் நடிச்ச ஓடாத படம்) பத்தி எழுதுனீங்க....

Cable சங்கர் said...

@அருண் பிரசங்கி

சரி.. விடுங்க தலைவரே..

@தமிழ் அமுதன்
நிச்சயம் பாருங்கள்

@பிரபாகர்
நிச்சயம் பார்த்துட்டு சொல்லுங்க..


@சீனு
நிச்சயம்பாருங்க.. போவறதுக்குள்ள ஒரு நாள் மீட் பண்ணுவோமா..?

@ரமேஷ்
ம்

@ஸ்ஸ்ரிரி கிரி
இல்லை நண்பா.. நிச்சயம் அந்த வார்த்தைக்கான அர்த்தம் எனக்கு புரிந்துதான் எழுதியிருக்கிறேன்... படத்தை பாருங்கள்.

@சித்ரா
நிச்சயம் பாருங்க..

Cable சங்கர் said...

@நிரூபன்
விரைவில் வரும்

@கனாக்காதலன்
பாருங்கள்

@ஜீ
ம்

@ஜீ
சாரு.. சொல்லி இளையராஜாவின் இசையை புரிந்து கொள்கிறீர்களா..? :((

KUTTI said...

your review is simply super like the film.

Cable சங்கர் said...

@மாணவன்
நன்றி

@ஜீ
ஹா..ஹா..

@விமலன்
ம்

சிவா.ஜி
நிச்சயம்

@இராமசாமி கண்ணன்
சரி விடுங்க.. போண்டா நல்லாருக்கான்னுதான் பாக்கணும். போன வாரம் கூடமோமோன்னு ஒரு அயிட்டம் சாப்பிட்டேன். ஜப்பானிய அயிட்டம்.. ஆனா நம்ம ஊர் பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டை மாதிரியே இருந்திச்சு.. என்ன உள்ள் இருக்கிற பில்லிங் மட்டுமே விதயாசம்..

பிரபல பதிவர் said...

//Cable Sankar said...
அதை நீங்க என்ன சொல்றது.. எங்களுக்கே தெரியும்.. நிச்சயம் தமிழில் வந்த சினிமாக்களில் மிகச் சிறந்த படம் என்றுபார்க்கும் போது நந்தலாலாவை சேர்ப்பேனே தவிர.. நிச்சயம் எந்திரனை சேர்க்க மாட்டேன்..
///

சரி மேல....என்னதான் சொல்ல வர்றீங்க... ஒண்னும் பிரியலை... மாஸ் படமும் ஆர்ட் படமும் எப்படி கம்பேர் பண்ண முடியும்.....


இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்று நந்தலாலாவையோ இல்ல ஏதாவது கமல் படத்தயோ நினக்கவே முடியாது...

அதத்தான் நான் சொல்றேன்....

நீங்க என்னன்ன... பூவ பூன்னு சொல்லலாம்... புய்ப்பம்னு சொல்லாம்னு ஏதோ செந்தில் மாதிரி புலம்புறீங்க

Giri Ramasubramanian said...

//@ஸ்ஸ்ரிரி கிரி
இல்லை நண்பா.. நிச்சயம் அந்த வார்த்தைக்கான அர்த்தம் எனக்கு புரிந்துதான் எழுதியிருக்கிறேன்... படத்தை பாருங்கள்.
//

நன்றி தல... பாப்போம்...

Cable சங்கர் said...

@பொன்.கார்த்திக்
விடுங்க.. விடுங்க..

@ஐத்ரூஸ்
அது சரி..

2மோகன் குமார்
ஆமா..

2லூனா
எப்ப ஒரு படம் நம்மளை அவர்களோட களத்துக்கு கொண்டு போய் சிரிக்கவோ, அழவோ வைக்குதோ அப்பவே அது சூப்பர் படம் தான் லூனா

சீரியல்னா என்ன குறைவு.. அதிலும் எல்லா சீரியலும் ஹிட்டாவுறதில்லை.. சரியா காமெடியோ அழுகையோ சொல்றதுதான் ஹிட்டாவுது..

Cable சங்கர் said...

@பார்வையாளன்
இது நிச்சயம் அவதூறு இல்லை தலைவரே..

@நேசமித்ரன்
ஆமா..
புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி..:))

Cable சங்கர் said...

@ரபீக்
வ குவாட்டர் கட்டிங்கா..?

@பிரதீப்
அதை பற்றி கவலைபடாதீர்கள்.. ஒரு படம் நமக்கு பிடித்திருக்கிறதா என்று மட்டுமே ஒரு ரசிகன் கவலை படவேண்டும் என்பது என் எண்ணம் கம்ர்ஷியல் விஷயமெல்லாம் என்னை போன்ற வியாபாரிகளுக்கு இருக்கவே இருக்கு

@கே.ஆர்.பி.செந்தில்
ம்..

Cable சங்கர் said...

@வழிப்போக்கன்
ஆமாம்ஜி

@கி.ந.லா
ம்.. பாருங்க..

@பிரசன்னா ராஜன்
சரி விடுங்க.. அதுக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கு இங்க..

@ராஜன்
நீங்க போய் பாருங்க ராஜன்

Cable சங்கர் said...

@புஹாரி ராஜா
எதுக்கு இந்த கமேரிசன் ஜி..

@அத்திரி
ம்..

@வெடிகுண்டு வெங்கிட்
உங்கள் பதிவை படித்துவிட்டு.. நானும் பதிவர் சுரேகாவும்.. பேசிக் கொண்டிருந்தோம். அவர் நீங்கள் சொன்னதைதான் சொன்னார்..

Cable சங்கர் said...

//இங்க ரிலீஸ் ஆகல.... அடுத்த வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் சென்னைல இருக்கேன்.... ரெண்டு பேரும் படத்துக்கு போவோம் (எந்திரன் போலாம்).... அப்புறம் எதாவது சாப்பாட்டு கடைக்கு போவோம்... எந்த டைம் ஃப்ரீயா இருப்பீங்கன்னு மட்டும் சொல்லுங்//

maapillai.. நானே கேட்கணுமின்னு இருந்தேன்.. என் நம்பருக்கு போன் அடிங்க.. நிச்சயம் மீட் பண்ணுவோம்.. ஆவலுடன்..

Rishoban said...

A Must watch film...Excellent!
People, go and watch this film! Nice Review :)

(and Cable sir, seems like a psycho started to comment in this post...:P)

Indian said...

//சரி மேல....என்னதான் சொல்ல வர்றீங்க... ஒண்னும் பிரியலை... மாஸ் படமும் ஆர்ட் படமும் எப்படி கம்பேர் பண்ண முடியும்.....
//

எந்திரன் அய்ங்கரனால் துவக்கப்பட்டு பின்னர் முடியாமல் கைமாற்றி விடப்பட்ட படம். அதனால் என்ன? நந்தலாலா போன்ற படத்தை எடுத்ததற்காக நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்ற தொனியிலேயே திரு.சங்கர் அக்கருத்தைச் சொன்னார் என நினைக்கிறேன்.

Both movies are setting benchmarks in their own way.

Cable சங்கர் said...

indian

விடுங்க..உங்களுக்காகவாவது புரிஞ்சுதே..;))

பிரபல பதிவர் said...

//Cable Sankar said...
indian

விடுங்க..உங்களுக்காகவாவது புரிஞ்சுதே..;))
//


யார் இந்த இந்தியன்... பேரில் ஓரு உள்குத்து தெரியுதே....

தல என்ன இதெல்லாம் :)))))

பிரபல பதிவர் said...

//எந்திரன் அய்ங்கரனால் துவக்கப்பட்டு பின்னர் முடியாமல் கைமாற்றி விடப்பட்ட படம். அதனால் என்ன? நந்தலாலா போன்ற படத்தை எடுத்ததற்காக நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்ற தொனியிலேயே திரு.சங்கர் அக்கருத்தைச் சொன்னார் என நினைக்கிறேன்.
///

இது போன்று தொணியில் சொல்லியிருந்தால் நிச்சயம் சர்ச்சை வந்திருக்காது.... சொன்ன தொனியின் நக்கலை கவனிக்கவில்லையா???

பிரபல பதிவர் said...

//நானே கேட்கணுமின்னு இருந்தேன்.. என் நம்பருக்கு போன் அடிங்க.. நிச்சயம் மீட் பண்ணுவோம்.. ஆவலுடன்..//

கண்டிப்பா தல.... வியாழக்கிழமை பேசிர்றேன்... கண்டிப்பா மீட் பண்ணுவோம்....

பிரபல பதிவர் said...

just fyi and ref

http://www.envazhi.com/?p=21845

கத்தார் சீனு said...

Sure ji...i'll call you..

Kolipaiyan said...

Super review anna :) I ll see this movie today!

Vediyappan M said...

இயக்குனருக்கும் சரி, இசையமைப்பாளருக்கும் சரி இதைவிட ஒரு நல்ல விமர்சனம் கிடைக்காது, உடனே பார்த்துவிடுகிறேன்.

யுவா said...

படத்தை பார்த்துட்டு வரேன். விமர்சனம் அருமை!!!

செங்கோவி said...

இன்றுதான் இப்படத்தைப் பார்த்தேன்..
தாயைத் தேடும் பயணத்தின் டெஸ்டினேசன் ‘அன்னை வயல்’ & ‘தாய் வாசல்’ என்று பெயர் வைப்பதிலேயே தெரிகிறது மிஷ்கினின் டச். இப்படம் ஒரு விஷுவல் & மியுசிகல் ட்ரீட்..இன்னும் ரீங்காரமிடுகிறது ராஜாவின் பிண்ணனி இசை..கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போன்று ஒளிப்பதிவு..கண் கலங்க வைக்கும் க்ளைமாக்ஸ்..

ஆனாலும் முதல் பாதி ஆர்ட் ஃபிலிம் பார்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கிறது..காதாபாத்திரங்கள் கேமிராவைப் பார்த்து திகைத்து நிற்பதும், கேமிராவைத் திருப்பி சர்ஃப்ரைசாக ஏதோவொன்றை காட்டும் உத்தி ஆரம்பத்தில் ரசிக்கவைத்தாலும் திரும்பத் திரும்ப வருவதால் சலிப்பூட்டுகிறது..

கமர்சியல் அயிட்டங்களைப் பற்றி கவலைப்பட்டாமல் இக்கலைப்படைப்பைத் தந்த ஐங்கரனுக்கும் மிஷ்கினுக்கும் பாராட்டுக்கள்...இப்பட்த்தைப் பார்க்கத்தூண்டிய உங்கள் விமர்சனத்திற்கும் நன்றி!

--செங்கோவி

கேரளாக்காரன் said...

சூப்பர் வாத்தியாரே இன்னிக்கு ராவோட ராவா ராவா சரக்கடிச்சுட்டு பாத்துடறேன்

கேரளாக்காரன் said...

இங்க ஒரு படைப்பும் ஓவரா பேசுது
படைப்பாளியும் ஓவரா பேசுறாரு சரிதானே

kavi said...

//150 கோடி செலவில் எந்திரனை தயாரிக்க முடியவில்லையே என்று ஐங்கரன் வருத்தப் பட தேவையில்லை.. அதை விட 150 முறை சிறந்த படத்தை வழங்கியதற்காக காலமெல்லாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.//

உண்மையான, அருமையான வரிகள்...

சி.பி.செந்தில்குமார் said...

thala தல விமர்சனம் டாப்

Thamizh said...

உங்கள் விமர்சனம் மிக அருமை.படத்தின்
clippings எப்படி உங்களுக்கு கிடைக்கிறது?

Cable சங்கர் said...

@sivakasi mappillai
ஸோ..வாட்..?

@சீனு
வெயிட்டிங்

@கோலிப்பையன்
நன்றி

@டிஸ்கவரி புக் ஷாப்
நிச்சயம் பாருங்க

2யுவா
நன்றி

Cable சங்கர் said...

@கேரளாக்காரன்
பார்த்துட்டு சொல்லுங்க..

சில.. சமயம்..

@கவி
நன்றி

@சி.பி.செந்தில்குமார்
நன்றி

2தமிழ்
நெட்டிலிருந்து..

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் மிக அருமை.

Prasanna Rajan said...

//
@பிரசன்னா ராஜன்
சரி விடுங்க.. அதுக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கு இங்க..
//

அப்படி என்ன பிரச்சனை. இது எப்படி அந்த படத்தை ரீமேக் செய்திருக்கிறார் என்ற விசயம் அல்ல. ஒருவரின் நேர்மை சம்பந்தபட்டது. மிஷ்கின் தனது மனசாட்சிக்கு பதில் சொல்லி கொள்ளட்டும்...

R.Gopi said...

//150 கோடி செலவில் எந்திரனை தயாரிக்க முடியவில்லையே என்று ஐங்கரன் வருத்தப் பட தேவையில்லை.. அதை விட 150 முறை சிறந்த படத்தை வழங்கியதற்காக காலமெல்லாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.//

********

ஷங்கர் ஜி....

இந்த டயலாக்குக்கும் “நந்தலாலா” திரைப்பட விமர்சனத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

இந்த வரிகளை நீக்கினால், திரைப்பட விமர்சனம் முழுமையாகும்....

அதென்ன “எந்திரன்” படத்தை விட 150 முறை சிறந்த படம்... “மன்மதன் அம்பு” படத்தை விட 500 மடங்கு சிறந்த படம்??!!!!

கம்பேரிசனே சரியா இல்லையே தல?

kavi said...

@கோபி - நீங்க ரஜினி ரசிகரா.....இல்ல எந்திரன்தான் சிறந்த படமா....

Cable சங்கர் said...

//ஷங்கர் ஜி....

இந்த டயலாக்குக்கும் “நந்தலாலா” திரைப்பட விமர்சனத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?//

நிச்சயம் இருக்கிறது இவர்கள் தான் அந்த படத்திற்கு முதல் தயாரிப்பாளர்.

//இந்த வரிகளை நீக்கினால், திரைப்பட விமர்சனம் முழுமையாகும்....//
முதலில் ஒன்றை புரிந்து கொள்ளூங்கள்.. அவர்களின் பெருமை படத்தக்க படம் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

//அதென்ன “எந்திரன்” படத்தை விட 150 முறை சிறந்த படம்... “மன்மதன் அம்பு” படத்தை விட 500 மடங்கு சிறந்த படம்??!!!!//
அதை பற்றி கமலின் படம் வரட்டும் அப்போது சொல்கிறேன்.

//கம்பேரிசனே சரியா இல்லையே தல?//

எல்லாத்தையும் எப்போதும் ரஜினி ரசிகராகவே பாக்க கூடாது தலைவரே.. :))

Marimuthu Murugan said...

நிச்சயம் நான் படம் பார்க்க வேண்டும்..
ஒன்று இந்த விமர்சனத்துக்காக ...
இன்னொன்று, எங்க ஊருக்காக...
(கோபிசெட்டிபாளையம்..)

pradeep said...

Cable ji , Whether this flim will

commercially sucessfull ?

SurveySan said...

//மொட்டை என் மொட்டை//

நம் மொட்டை ;)

Unknown said...

@Sivakasi mappillai :

//இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்று நந்தலாலாவையோ இல்ல ஏதாவது கமல் படத்தயோ நினக்கவே முடியாது...

Dasavatharam was the biggest grosser till Three idiots released and was way ahead of what so called Sivaji grossed and UPO was a better hit than Kuselan.

சஞ்சயன் said...

வணக்கம் தம்பி!

உங்கள் பெயரை கேள்விப்பட்டிருந்தாலும் இன்று தான் உங்கள் பதிவுகளைப் பார்க்கிறேன். நன்றாக இருக்கின்றன. நேற்றிரவு நண்பர் ஒருவர் ”நந்தலாலா பார்க்கலியா” என்றார். அவரின் கேள்வியே உங்கள் பதிவை வாசிக்க வைத்தது. உங்களின் பதிவை பார்த்த பின் படத்தைப் பார்ப்பது என தீர்மானித்துள்ளேன்.

தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.

நன்றி

எனது வலைத்தளம்
visaran.blogspot.com