Thottal Thodarum

Jan 19, 2011

இளைஞன்

ilai1 படம் வெளியான பொங்கல் நாளன்று காலையிலேயே சூப்பர் ஹிட் என்று கலைஞர் டிவியில் போட்டார்கள். கலைஞர் நியூஸில் படம் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க. கலைஞர் படம் பார்த்துட்டு சுரேஷ்கிருஷ்ணாவிடம் “என்னய்யா.. தமிழ் படம் எடுப்பேன்னு பார்த்தா.. இங்கிலீஷ் படம் எடுத்திருக்கே” அப்படின்னு கேட்டாராம். இப்படி ஆளாளுக்கு விஜய் படத்தை பத்தி.. சாரி.. பா. விஜய் படத்தை பத்தித்தான் தமிழ்நாடே பேசுது. படம் வெளிவருவதற்கு முன்பே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம் எது என்று கேட்டால் எந்திரனை விட இளைஞனுக்குத்தான் என்று தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பெரும் போலிருக்கிறது. அவ்வளவு எதிர்பார்பாம்.
ilaignan பாவம் மார்ட்டின் கஷ்டப்பட்டு லாட்டரி வித்து சம்பாதிச்ச காசு.. இப்ப கரியா போகணும்னு விதியிருந்தா யார் மாத்த முடியும். நடிக்கவே தெரியாத ஹீரோ. 1940களில் கூட எடுபடாத கதை திரைக்கதை வசனம், இந்த 50வது  படத்தோட தன் திரைப்பணியை முடித்துக் கொள்ள தைரியம் கொண்ட சுரேஷ் கிருஷ்ணாவுக்கு நிச்சயம் தெரியும் இந்தப்படம் என்னவாகுமென..?
ilaignan-desktop-wallpapers043 தலைவர் கலைஞருக்கு மன்னிக்கணும் உங்களுக்கு தெரியாததில்லை..நீங்கள் திரைக்கதை வசனமெழுதிய முந்தின படங்கள் எல்லாம் எப்படி ஓட்டப்பட்டன என்று? கட்சிக்காரர்களில் பல பேர் மிசா காலத்திலகூட அப்படி ஓடினதில்லையாம் அப்படி பின்னங்கால் பிடறி பட போஸ்டரைப் பார்த்தே ஓடிய காட்சிகளை பற்றிய தகவல் உங்கள் உடன்பிறப்புகள் மூலமா வந்திருக்கும். அப்படியிருக்க எப்படி வந்தது உங்களுக்கு மீண்டும் இந்த தைரியம்?. இல்லை இவங்கல்லாம் ரொம்ப நல்லவங்க.. எவ்வளவு வேணுமின்னாலும் தாங்குவான்னு நினைச்சிட்டீங்களா? தயவு செஞ்சு அப்படி மட்டும் நினைச்சிறாதீங்கய்யா.. உங்கள் மேல இருக்கிற மரியாதையில சில விஷயங்களை நாங்க உள்ளுக்குள்ள முழுங்கிக்கிறுவோம். அப்படி ஒன்றும் இன்றைய சினிமாவின் ட்ரெண்டை தெரியாதவரா நீங்கள்?. ரிலீசாகும் எல்லா படங்களையும் நீங்கள் ஃபோர் ப்ரேம்ஸில் பார்த்துவிடுகிறீர்கள் அப்படியிருக்க, எப்படி உங்களுக்கு இப்படி ஒரு படத்தை எடுக்க, எழுத, மனசு வந்தது.  ஒரு ரெட் ஜெயண்டோ, சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனோ, க்ளவுட் நைன் தயாநிதி அழகிரியோ.. ஏன் வம்சம் தயாரிப்பாளரோ.. இப்படத்தை எடுக்க துணிவார்களா? அல்லது நீங்கள் தான் சொல்லியிருப்பீர்களா? எனக்கென்னவோ.. இப்படி நீங்கள் தொடர்ந்து படமெடுத்தால் நிச்சயம் வருகிற தேர்தலில் திமுகவின் எதிர்காலத்தை ஸ்பெக்டர்ம் போன்ற அரசியல் விஷயங்களினால்  கேள்விக்குறியாக்குகிறதோ இல்லையோ.. உங்கள்  திரைத்தொண்டின் காரணமாய்  ஆகிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. போதும் தலைவரே..உங்கள் தமிழ் திரைப்பணி. ஒரு காட்சியில் உங்களை பாராட்டியே ஆக வேண்டும் நமிதாவை டெல்லி கணேஷ் அம்மா, அம்மா என்றழைத்ததற்காக எதோ நல்லது செய்யப் போகிறார் என்று நினைக்கும் போது இன்னும் கடுமையாய் நடந்து கொள்ளுமாறு காட்சியை வைத்து உங்கள் அரசியல் சாணக்கியத்தை காட்டியிருக்கிறீர்கள்.   ஏதோ சொல்லணுமின்னு தோணிச்சு சொல்லிட்டேன். தப்பாயிருந்தா மன்னிச்சுக்கங்க..
ilaignan-desktop-wallpapers046 பா.விஜய்ண்ணே உங்களுக்காகவாது வேற வேலை தெரியும். பாட்டு எழுத போய்டுவீங்க.. பாவம் டைரக்டர், இதுக்கப்புறம் எங்க போவாரு..? தியாகு, குஷ்பு போன்ற நிரந்தர ஆதரவாளர்கள் ஆங்காங்கே மின்னுகிறார்கள். தமிழ் சினிமாவில் உள்ள அத்துனை குணச்சித்திர நடிகர்களும் ஏதாவது ஒரு ஓரத்தில் ப்ரேமில் வந்துவிட்டு போகிறார்கள். பணத்தை தண்ணியாய் செலவழித்திருக்கிறார். தயாரிப்பாளர் பி.எல்.சஞ்செய்யின் ஒளிப்பதிவு, வித்யாசாகரின் “இறைதூதரே” பாடல், ஆர்ட் டைரக்‌ஷன், நடித்த நடிகர்கள் இவர்கள் எல்லாருக்குமே தெரியும் இப்படத்தின் ரிசல்ட் என்னவென்று. முதல் நாள் பல ஊர்களில் இரவுக்காட்சிக்கு ஆட்கள் இல்லாததால் ஷோ கேன்சல் செய்திருக்கிறார்களாம். இன்னொரு தியேட்டரில் வெறும் ஐந்தே பேர்.
கலைஞரின் “இளைஞன்” – அட்டகாசம், சூப்பர் டூப்பர் ஹிட்.. பார்த்தே தீர வேண்டிய படம்.
கேபிள் சங்கர்
Post a Comment

53 comments:

இராமசாமி said...

ithayum parthu vimarsanam eluthirukingale.. onga kadamai unarchiku alave illaya... neenga evalavu thitinalum thatha thriunthava poraru..

அகில் பூங்குன்றன் said...

//கலைஞரின் “இளைஞன்” – அட்டகாசம், சூப்பர் டூப்பர் ஹிட்.. பார்த்தே தீர வேண்டிய படம்.// யாரு பார்த்தே தீர வேண்டிய படம்ங்க ? :)

விஜய்கோபால்சாமி said...

ஏன் அண்ணே? ஏன்? ஆளே இல்லாத கடைல உக்காந்து டீ ஆத்துறீங்க? ஏற்கெனவே பையன் உங்கள காமெடி பீசுன்னு கலாய்க்கிறான்.

விஜய்கோபால்சாமி said...

//யாரு பார்த்தே தீர வேண்டிய படம்//

ஆமாம்ணே, பாத்தா தீந்துற வேண்டியது தான்... தாத்தா ஆரம்பிச்ச டாஸ்மாக் இருக்கைல இதுக்கு எதுக்குண்ணே போனீங்க...

♥ RomeO ♥ said...

தலைவரே நம்ம அப்துல்லா அண்ணே கிட்ட சொல்லி ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்ய சொல்லுங்க.. நமக்கு வேண்டாதவங்கள கூடிட்டு போய் பழிவாங்கிடலாம் .. :))

வந்தியத்தேவன் said...

இளைஞர்கள் பெருவாரியாக மாநாட்டுக்கு போவதுபோல் தியேட்டர்களுக்கு இளைஞன் பார்க்கபோவதாக கலைஞர் செய்திகளில் காட்டினார்களே ஹிஹிஹி.

கேபிளாரா இம்முறை சிறந்த தேசியவிருது இந்தப்படத்திற்க்கு கிடைக்கலாம், நீரா ராடியா போல் திரைப்பட அமைப்பிலும் கனிமொழிக்கு ஆள் இருக்கும் ஆகவே படத்தை கன்னாபின்னா என விமர்சிக்காதீர்கள்.

Philosophy Prabhakaran said...

வலைப்பூக்களில் விமர்சனம் எழுதிக் கிழிப்பவர்களை கூட மிரட்டுகிறார்களாமே... உங்களுக்கு மிரட்டல் ஏதாவது வந்ததா கேபிள்...

Philosophy Prabhakaran said...

என்னுடைய கருத்து: இது வெறும் இளைஞனாக வந்திருந்தால் கூட பத்து பதினைந்து நாட்கள் ஓடியிருக்கக் கூடும்... கலைஞரின் இளைஞன் என்ற ஒரே காரணத்தினால் இளைஞர்கள் பலர் தலைதெறிக்க ஓடுகிறார்கள்...

bandhu said...

இந்த படத்துக்கு போனீங்களா? ஏங்க? தி மு க வில MLA சீட்டு கேக்க போறீங்களா?

பார்வையாளன் said...

படம் வெளிவருவதற்கு முன்பே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம் எது என்று கேட்டால் எந்திரனை விட இளைஞனுக்குத்தான் என்று தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பெரும் போலிருக்கிறது. அவ்வளவு எதிர்பார்பாம்.

************************

அட விடுங்கண்ணே.. மன்ம்தன் அம்பு மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானதாக நீங்கள் நகைச்சுவையாக எழுதவில்லையா....
இதையும் அப்படி எடுத்து கொள்ளுங்கள்

blogpaandi said...

மதுரையில் கழக கண்மணிகள் அடித்த சுவரொட்டியில் அச்சாகி இருந்த வாசகம்
"கலைஞரின் இளைஞன் - அழகிரி"

பார்வையாளன் said...

: கேபிள் எழுதிய “சினிமா வியாபாரம்” புத்தகம்- சிறப்பானதா.. சிக்கலானதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கலைஞரின் “இளைஞன்” – அட்டகாசம், சூப்பர் டூப்பர் ஹிட்.. பார்த்தே தீர வேண்டிய படம்.
கேபிள் சங்கர்//

காலை எழுந்தவுடனையே சிரிக்க வைத்ததற்கு நன்றி

udhavi iyakkam said...

"போதும் தலைவரே..உங்கள் தமிழ் திரைப்பணி."


நல்ல நகைச்சுவை . . . நன்றி . . .

தமிழ் அமுதன் said...

///Philosophy Prabhakaran said...

என்னுடைய கருத்து: இது வெறும் இளைஞனாக வந்திருந்தால் கூட பத்து பதினைந்து நாட்கள் ஓடியிருக்கக் கூடும்... கலைஞரின் இளைஞன் என்ற ஒரே காரணத்தினால் இளைஞர்கள் பலர் தலைதெறிக்க ஓடுகிறார்கள்... //

;;)))

Rafeek said...

கேபிள் இன்று முதல் அஞ்சா நெஞ்சன் என்றும் அழைக்கப்படுவார் :-)

sivakasi maappillai said...

may i come in?

Cable Sankar said...

thaaralama.. உங்களுக்கு இல்லாத உரிமையா.. ஆனா கொஞ்சமாவது நகைச்சுவை உணர்ச்சியோட பேசணும். அப்புறம் உங்களுக்கு ஒரு வேலை கொடுத்தேன் இன்னும் செய்யலை மாப்பிளை

ஜி.ராஜ்மோகன் said...

சுரேஷ்க்ருஷ்ணா ரொம்ப பாவம்ங்க ! ஏற்கனவே பரட்டை , ஆறுமுகம் படங்களல்ல வாங்கின அடியே
இன்னும் மறக்கல அதுக்குள்ள இன்னொரு அடியா ! தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஒரு
சின்ன விண்ணப்பம் தயவு செய்து எங்கள விட்ருங்க அய்யா . நாங்க எல்லாம் ரொம்ப பாவம்.
வேணும்னா வர எலக்சன்ல உங்களுக்கே ஒட்டு போட்டு விடுகிறோம் ! தயவு செய்து
படத்துக்கு கதை வசனம் எழுதுறது மட்டும் வேணாம்.

சந்தோஷ் = Santhosh said...

ஆதிமுகாவின் கொபசெ கேபிள் ஒழிக..தலிவரு ஒவ்வொரு பிரேமுலையும் மின்னுறாரு.. பொறாமை சார் உங்களுக்கு...

Anonymous said...

போங்க சார், உங்களுக்கு விமர்சனமே எழுத தெரியல... படத்தோட கதையை பத்தி ஒண்ணுமே சொல்லாம கலைஞர் பத்தியும் ப விஜய் பத்தியும் மார்டின் பத்தியும் பேசுறீங்களே....ஒருவேளை இங்கிலீஷ் படம் மாதிரி இருக்கிறதால உங்களுக்கு புரியலையோ.....

சே.குமார் said...

சிரிக்க வைத்ததற்கு நன்றி... நன்றி... நன்றி...

அமுதா கிருஷ்ணா said...

என் மகன் இன்று காலையில் தான் அம்மா இந்த படம் போய் பார்த்துட்டு வந்து எப்படி இருக்குன்னு எனக்கு மட்டும் சொல்லுங்க. நீங்க இந்த படம் பார்த்தீங்கன்னு யார்கிட்டேயும் நான் சொல்ல மாட்டேன்னு சொன்னான். கேபிள் சார் பார்த்துட்டு சொல்வார் கொஞ்சம் பொறு மகனே என்று சொன்னேன். கரெக்டா இன்று விமர்சனம். கலைஞருக்கு நீங்கள் எழுதி உள்ள கடிதம் அருமை.

Samudra said...

விமர்சனம் எழுதுவது மிகவும் எளிது தான்..ஆனால்..

Baski.. said...

//இப்படி நீங்கள் தொடர்ந்து படமெடுத்தால் நிச்சயம் வருகிற தேர்தலில் திமுகவின் எதிர்காலத்தை ஸ்பெக்டர்ம் போன்ற அரசியல் விஷயங்களினால் கேள்விக்குறியாக்குகிறதோ இல்லையோ.. உங்கள் திரைத்தொண்டின் காரணமாய் ஆகிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. போதும் தலைவரே..உங்கள் தமிழ் திரைப்பணி.//

Super.

Nataraj said...

என் ஆச்சர்யம் எல்லாம் சுரேஷ் கிருஷ்ணா மேல தான். பாஷா எடுத்த ஒரு டைரக்டர் இவ்வளவா quality sense இல்லாம படம் எடுப்பார்? எது மொக்கை என்று ஒரு self judgement வேண்டாம்?

Yuva said...

"கடிதர்"க்கே கடிதமா? அதெல்லாம் கேட்கின்ற மனநிலையில் அவரில்லை. அவரொன்றும் காலி பெருங்காய டப்பாயில்லை. ஆனால் அதிலிருப்பது ரொம்ப பழைய சரக்கு. நாமதான் கொஞ்சம் அலார்டா இருந்து தவிர்க்கணும். தங்களின் இந்த http://www.atheetham.com/cable.htm முன்னோட்டத்திலே தொடங்கியாச்சு கிண்டலை.

கோவி.கண்ணன் said...

இந்தப்படம் ஊத்திக்குமா இல்லையான்னு பெரிய எதிர்பார்ப்பு இருந்தத் உண்மை தான்.

:)

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே நான் வீட்டுல இல்லைண்ணே என்னை விட்ருங்கன்னே....

Feroz said...

பா.விஜய் வித்தக கவிஞன் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் ஒரு புத்தக கவிஞன் அவ்வளவே. இந்த மாதிரி எல்லாப்படங்களையும் பார்த்து விமர்சனம் எழுதி எங்களையெல்லாம் காவலுக்கு இருந்து காப்பாத்தோணும் சாமிமிமி. தோழமையுடன்

சிவகுமார் said...

>>> கேபிள் அண்ணே, புத்தக கண்காட்சி கேண்டீனில் டீ சாப்டமே. எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது. ஆமா மேல அரசியல் கலந்து ஏதோ எழுதி இருக்கீங்களே. எனக்கு கண்ணு சரியா தெரியல. ஆத்தாடி ஆத்தா..!! இன்னைக்கி நான் உகாண்டா போறேன். ஒரு மாசம் வர மாட்டேன்.

ஸ்வர்ணரேக்கா said...

//கட்சிக்காரர்களில் பல பேர் மிசா காலத்திலகூட அப்படி ஓடினதில்லையாம் //

ஹா... ஹா... உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க....

sivakasi maappillai said...

தல... ஒவ்வொரு வரியும் செதுக்கிருக்கீங்க.... இந்த விகடன், குமுதத்லல்லாம் பிரபலங்களுக்கு ரசிகனின் கடிதம்னு முன்னாடி வரும்... அதெல்லாம் உங்க படைப்புதானே....


கலைஞர் தனது குடும்பத்தினரை மிரட்டுவதற்காகவே இப்படி திரைதுறையில் இருந்து கொண்டிருக்கிறார்... (நானும் ரவுடிதான்)...... மார்டின் சும்மா பேருக்குதானே... இவர்களின் கருப்பு பணம் அவரிடம் போயி திரும்ப ஒயிட்டாக வந்து சேரும்.....


அப்புற‌ம்.... புத்த‌க‌ விம‌ர்ச‌னம்... என‌து ம‌னைவியின் க‌மெண்ட்டுக்காக‌ வெயிட்டிங்.... என் விம‌ர்ச‌னம்... இந்த‌ க‌தைதானே நம் இருவ‌ரையும் நேர‌டி தொட‌ர்பில் உண்டாக்கிய‌து... அவ்ளோ ப‌வ‌ர்ஃபுல்.....

Jana said...

இளைஞன் விமர்சனத்திற்காக முதல் நன்றி, பாராட்டுக்கள்.
:)

அஹோரி said...

ஆனாலும் கருணாநிதி தீர்க்க தரிசி ... இப்படியெல்லாம் இன்னமும் கதை திரைக்கதை எழுதிகிட்டு இருந்தா தமிழன் கடல்லதான் தூக்கி போடுவான்னு முன்னாடியே தெரிஞ்சி இருக்கு. ஆனா ஒன்னு இப்படியே தமிழுக்கு தொண்டு ஆத்தி கொண்டு இருந்தா .... கட்டு மரமால்லாம் மிதக்க முடியாது ... கல்ல கட்டி தான் தூக்கி போடுவாங்க.

முஹம்மது யூசுப் said...

விமர்சனம் எழுதுவதற்காக, எத்தனை வேதனைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. தங்களது மன உறுதியை மெச்சுகிறேன். கலைஞரை வாரியதற்கு அல்ல. இந்தப் படத்தை, முழுவதும் பார்த்ததற்கு :-)

எனக்கு ட்ரெயிலர் பார்க்கவே, ஏதோ மாதிரி உள்ளது..

மாதேவி said...

:))))) மிக்க நன்றி.

R.Gopi said...

//கலைஞரின் “இளைஞன்” – அட்டகாசம், சூப்பர் டூப்பர் ஹிட்.. பார்த்தே தீர வேண்டிய படம்.//

******

சங்கர் ஜி...

படம் பார்த்தா அவ்ளோ தான், தீர்ந்தீங்கன்னு சிம்பாலிக்கா சொல்றீங்களா?

அஹோரி said...

கடலோர மாவட்டங்களுக்கு முக்கிய அறிவிப்பு.

"இளைஞன்" படம் பார்த்து மன உளைச்சலுக்கு உள்ளான தமிழர்கள் கடலில் குதித்து தற்கொலைக்கு முயல்வதால் , அபாயத்தை குறிக்கும் கூண்டு எண் 6 ஏற்றப்பட்டுள்ளது. குறிப்பாக கடலுக்கு போகும் மீனவர்கள் இப்படம் பார்ப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்த படுகிறார்கள்.

Jegan said...

"வலைப்பூக்களில் விமர்சனம் எழுதிக் கிழிப்பவர்களை கூட மிரட்டுகிறார்களாமே... "
உண்மைதானா..? உங்களை தவிர யாருமே இளைஞனுக்கு விமர்சனம் பதிவிடவில்லையே. என்னாச்சு...?

தோமா said...

பாஸ், உங்க தைரியத்தை (படம் பார்த்ததற்கும், நல்ல விமர்சனத்துக்கும்) பாராட்டுகிறேன் ;)
நல்ல நச்சுனு நகைச்சுவையுடன் அருமை அருமை .....

கே.ஆர்.பி.செந்தில் said...

பிரியாணி பொட்டலம், குவார்டர், மற்றும் ஐநூறு ரூபாய் பணம் மார்டினை கொடுக்க வைத்தாவது ஆள் பிடிப்பார் தலைவர்....

Riyas said...

நீங்க ரொம்ப மோசம் போங்க படத்துல நமீதா இருக்காங்களாமோ அவுங்கள பத்தி சொல்லவேயில்ல...

கவனிப்பவன் said...

அவ்வளவு பெரிய கப்பல் எல்லாம் வச்சி படம் எடுத்து இருக்கங்க boss...பாத்து கொஞ்சம் பதமா சொல்லுங்க ....

angusamy said...

Martin kastapattu samaparichathu ilai
mathavanai kastapaduthi samabarichau sir?!
ooran veetu neiye en pontati kaiye

angusamy said...

Martin kastapattu samaparichathu ilai
mathavanai kastapaduthi samabarichau sir?!
ooran veetu neiye en pontati kaiye

angusamy said...
This comment has been removed by the author.
angusamy said...

Martin kastapattu samaparichathu ilai
mathavanai kastapaduthi samabarichau sir?!
ooran veetu neiye en pontati kaiye

சிவகுமார் said...

சைதையில் நீங்கள் சொல்லும் தியேட்டர் எது என்பதை யூகிக்க முடிகிறது. பஞ்சு வைத்த சொகுசு சேர் வைப்பதற்கு முன் உரிமையாளர்கள் ஒன்றுக்கு பலமுறை யோசிக்க வேண்டும். அதுவும் குறிப்பாக மாஸ் ஹீரோ படங்கள் என்றால் சீட்டுக்கு நோ கியாரண்டி. அது எவ்வளவு பெரிய தியேட்டர் ஆனாலும்.

சிவகுமார் said...

cinema vyaabaram 2-7 comment posted here. sorry..

kadar said...

kathai vimarsanathavida inka iruka comments romba arumayaaa iruku..... irunthalum ipidi ezhutha romba thairiyam than unkaluku. jaakirathai sikkuna thookiruvaanga.... kalaignar veetula ellarum kathai vasanam padichitu padam paathachu thaatha supernu solrangalam....lolz. (illati sothula panku kidaikathula)

விக்னேஷ்வரி said...

இந்தப் படத்தையும் போய்ப் பார்த்தீங்கள்ல, உங்களை சொல்லணும். :)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நான் இந்தப் பக்கமே வரலை என்பதை எல்லோருக்கும் சொல்லிக் கொள்கிறேன்!
:)