Thottal Thodarum

Jul 4, 2011

கொத்து பரோட்டா – 04/07/11

போன வாரம் முழுவதும் பெரும் பரபரப்பாய் போயிற்று. எங்களின் பட வெளியீட்டால். படத்தைப் பற்றிய விமர்சனங்கள் கொஞ்சம் மிக்ஸுடாக வந்தாலும். நல்ல ரீச் ஆகிக் கொண்டிருக்கிறது. இன்றுதான் தெரியும் படத்தின் கலெக்‌ஷன் நிலைமை. மேலும் இரண்டு திரைப்படங்களை  பொறுப்பேற்று வெளியிடும் வேலை வருகிறது. நிறைய புது தயாரிப்பாளர்கள் படத்தை தயாரிக்கும் ஆர்வத்தினால் தங்கள் படங்களின் பட்ஜெட் தெரியாமல் நிறைய செலவழித்து விடுகிறார்கள். பின்பு அதை சந்தைப்படுத்தும் போது  கையில் காசில்லாமல் போய்விடுகிறது. சில சமயங்களில் சில நல்ல படங்கள் சரியாக சந்தைப்படுத்த முடியாததால் தோல்வியடைகிறது. ஒரு படத்தை ஆரம்பிக்கும் முன் யார் நம் நடிகர்கள்? அவர்களுக்கான மார்கெட் நிலவரம் என்ன? புது நடிகர்களை வைத்து படமெடுத்தால் உள்ள ரிஸ்குகள் என்ன? கையைக் கடிக்காமல் பட்ஜெட் போட்டு படமெடுப்பது எப்படி? போன்ற பல விஷயங்களை தயாரிப்பாளர் மட்டுமல்ல. ஒரு இயக்குனரும் தெரிந்து வைத்துக் கொள்வது சினிமா வியாபாரத்துக்கு நல்லது.:)
##################################


நண்பர் ஆயில்யனின் திருமணத்திற்கு மாயவரம் வரை போய் வந்தது மேலும் உற்சாகத்தை தந்தது. அவர் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.  அப்துல்லா, டாக்டர் புருனோ, மணிஜி, ஓ.ஆர்.பி.ராஜா, கே.ஆர்.பி.செந்தில், முரளிகண்ணன், பொன்.வாசுதேவன், மணிஜியுடன் போன ஆன்மீக ட்ரிப்தான். முதலில் சிக்கல் சுபரமணியஸ்வாமி கோயிலுக்கு போய்விட்டு, வேளாங்கண்ணி மாதாவை அடுத்து நாகூர் தர்காவுக்கு ஒரு விசிட் அடித்து வந்தோம். கோவிலுக்கு போனதால் கிடைத்த அமைதியை விட ஏதோ ஒன்று நிறைவாய் இருந்தது. இதற்கு வித்திட்ட அப்துல்லாவுக்கு நன்றி.
#################################
சன் டிவியின் சக்ஸேனா கைது செய்யப்பட்டிருக்கிறார். கைது செய்யப்பட்ட விஷயம் என்னவோ சாதாரணமான கொலை மிரட்டல், மற்றும் பண விஷயம் தான் என்றாலும் முன்பிருந்த ஆட்சியில் போடப்படாத இரண்டு முக்கிய வழக்குகள் அவர் மீது பாயும் என்கிறது பட்சிகள்
####################################
இந்த வார சந்தோஷம்
கல்கியில் போன வாரம் என்னுடய சிறுகதை வெளியானதும், எனக்கு பிடித்த அதீதம் இணைய இதழ் மீண்டும் துளிர்த்ததும்.
#################################
தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை, சிறு முதலீட்டு படங்களின் எதிர்காலத்தை இனி நிர்ணயிக்க போவது தியேட்டர்களின் அனுமதிக் கட்டணம் தான் என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஆம். நான் ஏற்கனவே தமிழ் சினிமா மெல்லச் சாகிறதா? என்று எழுதிய கட்டுரையில் எழுதியதைப் போல சிறு முதலீட்டுப் படங்களிற்கு, பெரிய நடிகர்கள் நடிக்காத படங்களுக்கு மக்கள் முதல் வாரங்களில் வந்து பார்க்க ஆவல் காட்டுவதேயில்லை. ஏனென்றால் அனுமதிக்கட்டணம். அனால் நாற்பது ரூபாய்க்குள் இருக்கும் திரையரங்குகளில் மக்கள் வந்து படம் பார்க்கிறார்கள். இன்றும் சென்னையில் ஏவி.எம்.ராஜேஸ்வரி, அண்ணா, கிருஷ்ணவேணி போன்ற அரங்குகளில் வரும் மக்களின் கூட்டத்தை பார்த்தாலே தெரியும்.
################################
ப்ளாஷ்பேக்
அற்புதமான கிளாஸிக் இந்தப் பாடல். டி.எம்.எஸ்ஸின் இனிமையான குரலில் அருமையான கர்நாடக ஆரபியையும், கொஞ்சமே கொஞ்சம் ப்லோக்கையும் கலந்த காம்போசிஷன். கேட்டவுடன் பச்சக் என்று மனதில் ஒட்டிக் கொள்ளும். அவ்வளவு இனிமையான பாடல். எழுதியவர் கா.மு.ஷெரிப். இவர் நண்பர் அப்துல்லாவின் தாத்தா. 
   
##############################
வலைப்பூக்கள் எழுதுபவர்கள் எழுத வந்த புதிதில் அடிக்கொருதரம் தங்கள் கம்ப்யூட்டர்களையோ, அல்லது மொபைலிலோ பின்னூட்டம் வந்திருக்கிறதா? என்று பார்பதை ஒரு ஃபோபியாவாக கொண்டிருப்பார்கள். கொஞ்ச நாட்களில் அது போய்விடும். ஆனால் இந்த ட்வீட்டர்களுக்கு அது போகாது போலிருக்கிறது. காலையில் எழுந்தது முதல் தூங்கும் வரை மொபைலில் ட்வீட் செய்து கொண்டேயிருக்கிறார்கள். ட்விட் பக்கத்திலேயே இருக்கிறார்கள். நடப்பது நிற்பது எல்லாவற்றையும் போட்டோ பிடிக்கிறார்கள். உடனுக்குடன் அதை ட்வீட்டுகிறார்கள். ஒரு நாள் மொபைல் நெட்வொர்க் இல்லாவிட்டால் சார்ஜ் இறங்கிப் போன ரோபோவாய் தளர்ந்து வீழ்ந்துவிடுவார்கள் போல. நல்ல வேளை நான் ஒரு நாளைக்கு இரண்டு முறை தான் ட்வீட்டுகிறேன்.
################################
தத்துவம்
Attitude is a little thing which makes a big difference –Winston churchill

போன் எடுத்தா ஒரே நச்சு நச்சுன்னு தொல்லை. யாரோ திருவாரூர் எம்.எல்.ஏவாம் அவராலேயே பொண்ணுக்கு ஜாமீன் வாங்கித்தர முடியலையாம்.  ஒரே குஷ்டமப்பா – ட்வீட்டர் புகழ் மாயவரத்தான்.
######################################
மை கார்னர்
மேகலா


 ###################################
அடல்ட் கார்னர்
பொண்டாட்டி : என்னங்க நம்ம வீட்டு வாஷிங் மெஷின் சரியா வேலை செய்யல என்னன்னு பாருங்க...

புருஷன் : போடி.. என்னைய  பாத்தா உனக்கு மெக்கானிக் மாதிரி இருக்கா..??? நான் ரிப்பேர் பண்ண மாட்டேன்..
.
பொண்டாட்டி : என்னங்க நம்ம வீட்டு டாய்லட் உடைஞ்சி தண்ணி லீக் ஆயிட்டு இருக்கு.. என்னன்னு பாருங்க...
புருஷன்  : என்னடி.. என்னைய  பாத்தா மேஸ்திரி மாதிரி இருக்கா..??? நான் சரி பண்ண மாட்டேன்..
பொண்டாட்டி  : என்னங்க பெட்ரூம்ல ஃபேன் ஓடல.. என்னன்னு பாருங்க...

புருஷன்  : என்னடி திமிரா.. என்னைய பாத்தா எலக்ட்ரீசியன் மாதிரி இருக்கா..??? அதெல்லாம் நான் பண்ண மாட்டேன்..

பொண்டாட்டி  : என்னங்க வாஷிங் மெஷின், டாய்லட், ஃபேன் எல்லாம் சரி பண்ணியாச்சி..

புருஷன் : எப்படி.. ?

பொண்டாட்டி : நான் வெளில இருந்து எல்லாத்துக்கும் ஆளுங்கள கூட்டிட்டு வந்து சரி பண்ணினேன்..

புருஷன்  : அப்படியா. .எவ்ளோ செலவு ஆச்சு?

பொண்டாட்டி : காசெல்லாம் செலவு பண்ணல.. அவங்க எல்லாரும் இதை சரி பண்றதுக்கு கூலியா எங்களுக்கு பிரியாணி செஞ்சி கொடுங்க இல்லாட்டி ஒரே ஒரு தடவை உங்கள மேட்டர் பண்ணிக்கிறேன்னு சொன்னாங்க..

புருஷன்  : என்ன பிரியாணி செஞ்சி கொடுத்தே? சிக்கனா மட்டனா?

பொண்டாட்டி : என்னைய பாத்தா உங்களுக்கு சமையல்காரி மாதிரி இருக்கா..???

புருஷன்  :?????????????????????????Post a Comment

14 comments:

sivakasi maappillai said...

ok okay

VISA said...

Dhool

udhavi iyakkam said...

Yes . . . .Unga "சினிமா வியாபாரத்துக்கு "Romba நல்லது

Thanks

சங்கர் நாராயண் @ Cable Sankar said...

uthavi iyakkam.. அதைத்தான் நானும் சொல்லியிருக்கேனே..

சே.குமார் said...

கொத்துப் பரோட்டா... 'நச்' - பரோட்டா.

தமிழன் said...

Maayavarathan's tweet is ewcellant

Commando said...

Do you have any idea about this shankar ji?

Is it true?

A Human Brilliance : எந்திரன் படத்தினால் இணையம் மூலம் பண மழையில் நனைந்த வலைப்பதிவர்!

http://www.livingextra.com/2011/07/blog-post_7325.html

Jana said...

Attitude is a little thing which makes a big difference –Winston churchill
:)

ஆதிமூலகிருஷ்ணன் said...

என்ன இருந்தாலும் நீங்க அடுத்து கால்ஷீட் இல்லைன்னு சொல்லியிருக்கவேண்டாம். பாருங்க.. உங்க காரெக்டரையே சோலிய முடிச்சிட்டாங்க.. ஹிஹி.!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கொஞ்சம் டைரக்டர் பேரரசு சாயலில் இருந்தாலும் நடிப்பில் துளி பதட்டம் இல்லை பாஸ்.பாடி லாங்க்வேஜ் பின்றீங்க..வாழ்த்துக்கள்..

Nundhaa said...

// நல்ல வேளை நான் ஒரு நாளைக்கு இரண்டு முறை தான் ட்வீட்டுகிறேன். //

நல்ல வேளை நான் ட்வீட் அடிப்பதே இல்லை :)

ananthu said...

என்ன படம் பாஸ்?...அடல்ட் கார்னர் அடடா!..

அன்புடன் அனந்து..
9500014214
http ://pesalamblogalam .blogspot .com

Ezhil R said...

தல.. என்னா வேகமா வசனம் பேசுறீங்க... விட்டா அந்த பொண்ண போயி 2 அடி அடிச்சிடுவீங்க போல..

அடல்ட் கார்னர்.. கேட்ட ஜோக்.. பட், நைஸ்...

கொத்து ஓ.கே...

vidivelli said...

nallaayirukkungka,,,,
vaalththukkal,,,
can you come my said?