ராகவா லாரன்ஸ் வழக்கப்படி நன்றாக டான்ஸ் ஆடுகிறார். ரஜினியை இமிடேட் செய்கிறார். சிகப்பு லஷ்மிராயுடன் சல்லாபிக்கிறார். டபுள் மீனிங்கிலும், சிங்கிள் மீனிங்கிளும் அம்மா, அண்ணன், அண்ணி, என்று மொத்த குடும்பமே பேசிக் கொள்கிறது. அம்மா பக்கா கோவை பாழை பேசுகிறார். அண்ணி அய்யராத்து பாஷை பேசி சிக்கன் சமைத்து போடுகிறார். அண்ணன் சாதாரண தமிழ் பேசுகிறார். என்ன எழவுக்கென்றே தெரியவில்லை. முதல் பாதி முழுவதும் தேவையில்லாத சண்டைக் காட்சிகள், குத்து பாட்டுகள் என்று போனாலும், பேய் மேட்டர் ஆரம்பித்ததும் கொஞ்சம் சுறுசுறுப்படையத்தான் வைக்கிறார். சும்மா ஜிவ்வென போய் கொண்டிருக்கும் போது கோவைசரளாவை காமெடியாக்கியதால் ஜில்லிப்பு தணிந்து போய் விடுகிறது. ஆனால் இப்படத்தை பொறுத்தவரை கோவை சரளாத்தான் சரியான எண்டர்டெயினர். சும்மா புகுந்து விளையாடுகிறார். இவரது மருமகளாக வரும் தேவதர்ஷினியும் க்யூட். வெள்ளைத்தோல் லஷ்மிராய் ம்ஹும்…….
இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகள் எல்லாம் குழந்தைகள் கூட பயப்படாது. ப்ளாஷ்பேக் காட்சிகள் எல்லாம் படு அபத்தம். எலலா வில்லன்களையும் கொன்ற காஞ்சனா, கடைசி வில்லனை மட்டும் கோவிலுக்குள் வைத்து, வெளியே வைத்து எல்லாம் விளையாடி கொல்வது படு போரடிக்க்கிறது. அட இடைவேளை வரை பரவாயில்லையே என்று நினைத்ததற்கு சரியான பதிலடியை கொடுத்திருக்கிறார்கள். வழக்கமான பழிவாங்கும் கதைக்கு அரவாணி பெயிண்ட் அடித்திருக்கிறார் இயக்குனர் ராகவா லாரன்ஸ்.
தமன் வர வர ஏமாற்றுகிறார். இப்படத்திலும் அது தொடர்கிறது. கேமரா கோணங்களில் பெரிதாய் பயமுறுத்தாமல் சின்னச் சின்ன ஷாட்களில் நம்மை ஜில்லிட வைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். கோவை சரளாவும், தேவதர்ஷினியும், வீட்டில் பேய் இருக்கிறதா? என்று கண்டு பிடிக்க செய்யும் முயற்சிகள் த்ரிலுக்கு திரில், காமெடிக்கு காமெடியாக வந்திருக்கிறது.
காஞ்சனா- பேய் படம் எப்படியிருந்தாலும் பார்ப்பேன் என்று சொல்பவர்களுக்கு
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
- நாம அஜீத், விஜய் நடிப்பைப் பார்த்தே பயப்படறதில்லை...அசல் பேய் படத்துக்கா பயப்படபோறோம்?!
Intha Padatha Poi Pathirukkingalae !
அவங்களும் சேலை கட்ட பழக மாடங்குறாங்க
நாமளும் ஒரு சுடிதார் எடுத்து குடுக்க மாடங்குறோம்
சுடிதார் எடுத்து குடுத்தா அவங்கள போட்டுக்குவாங்களே
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! நொந்து நூடுல்ஸான ஒரு சக வலைப்பதிவரின் சோக கதை..!
http://www.livingextra.com/2011/07/blog-post_2901.html