Thottal Thodarum

Jul 26, 2011

நான்- ஷர்மி - வைரம்-6

6 ஷர்மி
pic3 
நான் வயதுக்கு வந்த விழாவிற்கு பிறகு அம்மா என்னிடம் வந்து “இதபாரு பேபி.. இனிமே பாய்ஸ் கூடல்லாம் ஜாக்கிரதையா பழகணும். என்ன? தனியா எங்கியாச்சும் கூப்பிட்டாங்கன்னா போக்க்கூடாது. என்ன புரியுதா?” என்றாள். ஆனால் எனக்கு புரியவில்லை. ஆனால் அவள் இம்மாதிரி என்னிடம் உட்கார்ந்து பேசி வெகு நாளாகிவிட்ட்து.


“யாராவது உன் உடம்பை டச் பண்ணி பேசுனா, உனக்கு கம்பர்டபிளா இல்லாட்டி, என் கிட்ட சொல்லு. நீ தனியா இருக்கிறப்போ அப்படியாராச்சும் நடந்தாங்கன்னா அவங்க கிட்டயிருந்து விலகி வந்திரு.” என்றாள். டிரைவர் சுந்தரத்தைப் பற்றி சொல்ல்லாமா? என்று யோசித்தேன். சொல்லவில்லை.

மீண்டும் ஸ்கூல் போன போது கூடப் படிக்கும் எல்லோரும் என்னையே பார்ப்பது போலிருந்த்து. முக்கியமாய் ஆண்கள். என் பிஸிக்ஸ் மிஸ் என்னைப் பார்த்து “எப்படியிருக்கே?” என்று விசாரித்துவிட்டு, “சட்னு இன்னும் அழகாயிட்டா பாருங்க” என்று மேத்ஸ் மிஸ்ஸிடம் சொல்லியது எனக்கு மேலும் வெட்கத்தை ஏற்படுத்தியது.

அதன் பிறகு நான் என்னையே கண்ணாடியில் பார்ப்பது அதிகமானது. என்னுடய முகத்தில் அவர்கள் சொல்லியது போல ஒரு பளபளப்பு ஏறித்தான் இருந்தது. கன்ன்ங்கள் எல்லாம் ரூஜ் தடவியதைப் போல சற்றே சிகப்பாக பளபளத்த்து. இடுப்பு லேசாய் அகண்டு நேராக நின்று கண்ணாடியில் பார்க்கும் போது தடாலென அதிர்ச்சியாய் இருந்த்து. இன்ச் டேப் வைத்து அளந்தபின் தான் கொஞ்சம் அசுவாசமடைந்தேன். மார்பகங்கள் இன்னும் பெரிதாய் திம்மென நெஞ்சில் கட்டி வைத்த பந்து போல இருந்த்தை என்னாலேயே ரசிக்காமல் இருக்க முடியவில்லை. சில நேரங்களில் குளித்துவிட்டு டவலைக் கட்டிக் கொண்டு கண்ணாடியின் முன் சட்டென எல்லாவற்றையும் திறந்து நொடியில் தெரியும் நிர்வாணத்தை ரசிப்பதை என்னாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை.

ஸ்கூலில் கிட்ட்த்தட்ட ராஜகுமாரியைப் போலவே என்னைப் பார்க்க ஆரம்பித்தார்கள். மற்ற பெண்கள் தங்களிடம் வந்து பேசமாட்டானா? என்று ஏங்கிய அர்ஜுன் என் பின்னால் அலைந்த்து எனக்குள் ஒரு ஆணவத்தை ஏற்படுத்தியது. அவனை அலையவைக்க என்ன என்ன வழி என்று யோசிப்பதே ஒரு பொழுது போக்காய் ஆனது. அர்ஜுன் அதற்கெல்லாம் சளைக்கவேயில்லை. விடாமல் துரத்தினான். எவ்வளவு இன்ஸெல்ட் செய்தாலும் அடிபட்ட பார்வையுடன் என்னையே சுற்றி வந்தான். சில சமயம் பாவமாய் இருந்தது.

அர்ஜுனை அப்படி டீஸ் செய்வது என் தோழிகளிடையே என்னைப் பற்றிய ஒரு மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அவனுக்காக் எதை வேண்டுமானாலும் செய்ய நிறைய பேர் காத்திருந்தார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒர் எல்லை இருக்கும் என்பது என் நெருங்கிய தோழி ரேஷ்மாவின் பிறந்தநாள் அன்று தெரிந்தது.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Post a Comment

5 comments:

Ramachandranwrites said...

Wait a minute for two minutes, first read and then comment ok ?

Go to sleep sir, why blogging at midnight 1'O clock

Mohan said...

Nice story sir, Continue.

Ba La said...

You have the flow..

'பரிவை' சே.குமார் said...

Nice story sir.

வணங்காமுடி...! said...

தல... கொஞ்சம் ஃப்ரீக்வன்ட்டா கொண்டு வந்தீங்கன்னா நல்லா இருக்கும்.... போன அத்தியாயத்துல என்ன நடந்ததுன்னு மறந்து போயிருது...

”ஏண்டா... நான் இவ்வளவு நேரப்பற்றாக்குறைக்கு நடுவுலயும் எழுதுறேன்.... போன அத்தியாயம் மறந்தா, மறுபடியும் படிச்சிட்டு வந்து தொடர முடியாதா”-ன்னு நீங்க கேக்கறது நியாயம் தான்...இருந்தாலும் வாசகனா, ஒரு வேண்டுகோள்... ! அம்புட்டுதேன். ..