என்ன பெரிசா இருந்திடப் போவுது. ஒரு கிராமம். ஒரு ஊரு அந்த ஊருக்கே தலைவரா ஒருத்தர் இருப்பாரு. அவர் சொன்னாத்தான் ஓட்டே போடுவாங்க. அவருக்கு ஒரு புள்ளை இருக்கும். அது அங்க இங்க அட்டகாசம் பண்ணினாலும், வீட்டுல அப்பா பேச்சை தட்டாம இருக்கும். ஊர்ல செஞ்ச சில்லுண்டி வேலையினால அப்பா ஊரை விட்டு வெளியே வேலை பாக்க சொல்வாரு. அங்க போனா.. ஒரு ஆளோட மோதுவாரு.. ஆங்.. இங்க ஒரு சின்ன டுவிஸ்டுக்கு அப்புறம் அது போல ஒரு விஷயம் வருது. நடுவுல காதல், காமெடி இத்யாதி. அப்புறம் வில்லனோட ஒரு மோதல். பத்து நாள், இருபது நாள்ன்னு டேட் குறிச்சிட்டா, படம் ஸ்பீடாப் போறாப்புல ஒரு எண்ணம் நம்மளுக்கு வந்துரும். அங்க இங்க ஒரு சின்ன ட்விஸ்டு அப்புறமென்ன ஒரு சூப்பர் மசாலாக்கதை ரெடி. அவ்வளவுதானே. என்று அடுத்தடுத்த காட்சிகளை நேற்று.. சாரி. . இனி பிறக்க போகிற குழந்தை கூட சொல்லிவிடக்கூடிய திரைக்கதையில் வேங்கையாய் பதுங்கி எலியாய் பாய்ந்திருக்கிறது.
யாராவது ராஜ்கிரணை ஊர் தலைவர், நல்லவர் வேஷத்தில் நடிக்க தடை போட்டால் நன்றாக இருக்கும். அடுத்த ரியாக்ஷன் என்ன செய்வார் என்பது கூட மனப்பாடமாய் கண் முன் தெரிகிறது. காமெடி என்கிற பெயரில் கஞ்சா கருப்பு செய்கிற விஷயங்கள் படு சொதப்பல். எரிச்சல் தான் வருகிறது. தனுஷுக்கு பெரியதாய் வேலையில்லை. மொத்தமாய் அருவாள் சைஸில் இருந்து கொண்டு, சடசடவென மரத்தில் ஏறி அருவாளை மரத்தின் மீது பாய்ச்சி நிற்பது நன்றாக இருந்தாலும், ஒரு அருவாளே அருவாளை தாங்குகிறதே என்று கவிதை படிக்க தோன்றுகிறது. பட் நல்ல ஐடியா. காதல் காட்சிகளில் தனுஷ் தனியே தெரிகிறார். ப்ரகாஷ்ராஜுக்கு தூக்கத்தில் கூட ஈஸியா நடிக்கும் கேரக்டர். இவர்களை தவிர, ஹரியின் படங்களில் வரும் அத்துனை கேரக்டர் ஆர்டிஸ்டுகள், துணை நடிகர்கள், அம்பது டஜன் அருவாள்கள், டாட்டா சூமோக்களும், சபாரிகளும், அணிவகுக்கிறது. நிறைய டாப் ஆங்கிள், வைட் ஆங்கிளில், மிட் ரேஞ்சில் சுமோக்களும், சபாரிகளும் நன்றாக நடித்திருக்கின்றன. ஊர்வசி, பறவை முனியம்மா, சார்லி போன்றவர்களும் இருக்கிறார்கள். தமன்னா அழகாய் இருக்கிறார். ஆனால் முகத்தில் ஏதோ ஒரு மென் சோகத்தை அப்பிக் கொண்டவாறு இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தமன்னாவை விட, அவருடன் வரும் தோழிகள் க்யூட்டாக இருக்கிறார்கள். தனுஷின் தங்கையாக வருபவர் கூட. பெயர் மறந்துவிட்டது.
வெற்றியின் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. பளிச். தேவி ஸ்ரீதேவியின் இசையில் ஒரு பாடல் பரவாயில்லை. மற்றதில் எல்லாம் பெரிதாய் சுரத்தேயில்லை. வழக்கம் போல எடிட்டிங் பரப்ரவென இருக்கிறது.
சில படங்களின் கதைக்களம் நடிக்கும் நடிகர்களை வைத்து தெரிந்த, அரைத்த மாவுக் கதையாகவேயிருந்தாலும் எடுபட்டுவிடும். ஆனால் சில நடிகர்களுக்கு பெரிதாய் எடுபடாது. அந்த வகைதான் தனுஷுக்கு இந்தப் படம். விக்ரம், சூர்யாவை வைத்து திரைக்கதையெழுதும் போது இருக்கும் விறுவிறுப்பு மற்ற நடிகர்களுக்கு எழுதும் போது ஹரிக்கு குறைந்து போவது என்ன காரணமோ?. வில்லனுக்கும் ஹீரோவுக்குமான காட்சிகள் எல்லாமே ஏற்கனவே பார்த்த ஃபீலீங் வருவதால் போரடிக்கிறது. அதுவும் தனுஷின் அறிமுகக் காட்சி படு மொக்கை. ஆனால் லாஜிக்கல். இடைவேளைக்கு முன்னால் வரும் சேஸிங் காட்சியும், சண்டை காட்சியை கோரியோகிராப் செய்த விதமும் தீயாய் வேலை செய்திருக்கிறார்கள். சிங்கத்தில் ஆகட்டும், சாமியில் ஆகட்டும் என்ன தான் லாஜிக் இலலாவிட்டாலும் யோசிக்க விடாத படி அடுத்தடுத்து வில்லனுக்கு ஹீரோவுக்குமான கன்பர்ண்டேஷன் அடிதூள் பரத்தும். இதில் பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை வில்லன் செல் போனை தரையிலடித்து உடைப்பதை தவிர வேறேதும் பெரிதாய் இல்லை. படத்தில் ஆரம்பத்தில் வரும் காதல் காட்சிகள் கொஞ்சம் இண்ட்ரஸ்டிங். ஆனால் ட்விஸ்ட் வைக்கிறேன் பேர்விழி என்று தமன்னாவை வில்லி ஆக்குவது செம காமெடி.
இதற்கு முன்னால் வந்த ஹரியின் படங்கள் எல்லாம் எப்படியிருந்ததோ அப்படித்தானே இருக்கும். இதில் வேறு என்ன எதிர்பார்த்தீர்கள்? என்று கேட்டால். நான் எதிர்பார்த்தது படம் பார்க்கும் போது லாஜிக் எழவையெல்லாம் யோசிக்க முடியாதபடியான தீயாய் பரவும் திரைக்கதை. அது இதில் மிஸ்ஸிங் என்பதால் தான் புலம்பல். சன் டிவி வாங்கியிருந்தால் நேற்று நடு ராத்திரியிலிருந்தே சூப்பர் ஹிட் படமாய் அலறியிருக்கும்.
வேங்கை – பாயும் எலி
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
ஆடுகளம் படத்துக்கு ஆறு கிடச்ச மாறி
கார்களுக்கு எதுனா விருது கிடைக்குமா ?
நன்றி
சார், ஒரு சின்ன விஷயம். விமர்சனத்துல எதாவது ட்விஸ்டை போட்டு உடைக்க போறீங்கன்னா, முதல்லயே ஸ்பாய்லர் (spoiler) இருக்குன்னு சொல்லிடுங்க..
//ட்விஸ்ட் வைக்கிறேன் பேர்விழி என்று தமன்னாவை வில்லி ஆக்குவது செம காமெடி//
நான் இன்னைக்குதான் படம் பார்க்க போறேன் :(
and i found from the comments from your previois blogs that you are also an aspiring Director ...
wish you all the best
-அருண்-
http://yithudummy.blogspot.com/2011/07/how-to-show-number-of-posts-in-label.html
:))))))
காலைல, ஒரு வேலையா ராயப்பேட்டை போயிருந்தேன். திரும்பி வர்ற வழியில, 'கமலா'வுல டிக்கெட் இல்ல; ஏ.வி.எம்-லயும் ஃபுல்லு; 'தேவி கருமாரி அம்ம'னுக்கு வண்டியெ விட்டேன். டிக்கெட் கவுன்டரே தொறக்கலை, ஆனா தியேட்டர் ஊழியன் ஒரு சின்னப் பையன் - அவனோட அலப்பற தாங்க முடியலை: "இன்னிக்கு ஏ.ஸி. கிடையாது; ஜெயலலிதா புண்ணியத்துல சாயங்காலம் ஆறு மணிக்குத்தான் கரன்ட் வரும்,"ன்னு திமிரு பண்ணிக்கிட்டு இருந்தான்.
"போங்கடா, இவனுகளா, வீட்டுல அரை பாட்டிலு எம்.ஸி. இருக்கு; இன்னிக்கிப் பொழுதுக்கு அது போதும்."ன்னு வண்டியெக் கிளப்பிக்கிட்டு வந்திட்டேன்.
காப்பாத்திட்டீங்க, தலைவா, நன்றி!
Really liked it (not the movie, your review)
தலைவா... அது தேவி ஸ்ரீபிரசாத். யானைக்கும் அடி சறுக்கும் என்பது இதுதானோ...