Thottal Thodarum

Apr 24, 2012

பத்து மணி நேர பவர் கட்

கேட்டால் கிடைக்கும் பதிவுகளுக்கு கிடைத்த வரவேற்பும், மற்ற சமூக பொறுப்போடு (என்று நினைத்து ) எழுதப்பட்ட பதிவுகளுக்கு கிடைத்த நல்ல மாற்றங்களையும் பார்த்துவிட்டு, நிறைய நண்பர்கள் அவர்களது ஏரியா ப்ரச்சனைகளை என் பதிவுகளில் எழுதச் சொல்லி போட்டோ முதற்கொண்டு எடுத்து மெயில் அனுப்புகிறார்கள். இன்னும் சிலர் கேட்டால் கிடைக்கும் என்கிற விஷயத்தில் நம்பிக்கை வைத்து அவர்கள் கேட்டு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.


சென்ற மாதத்தின் போது சைதாப்பேட்டை குப்பை மேட்டரைப் பற்றி எழுதியவுடன் அது க்ளீன் செய்யபட்டதும், சென்னையில் பகலில் எரியும் விளக்குகள் என்கிற தலைப்பில் தெருவிளக்குகளை பகலில் போட்டு வைப்பதால் நடக்கும் மின்சார விரயத்தைப் பற்றி எழுதியதும் பல ஏரியாக்களில் இப்போது மின் விளக்குகள் எரிவதில்லை என்றும் மெயில் அனுப்புகிறார்கள். கேட்கவே சந்தோஷமாய் இருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் ஏரியா கவுன்சிலருக்கு கொடுக்க வேண்டிய மனுவெல்லாம் கூட எனக்கு ஒரு காப்பி அனுப்பி வைத்துவிடுவார்கள் போலருக்கிறது. ஜோக்ஸ் அபார்ட்... ஏதோ என்னாலான ஒரு முயற்சி. இம்மாதிரியான பதிவுகளை எழுதிவிட்டு மட்டும் போகாமல் சம்பந்தப்பட்ட இலாக்காக்களின் ஃபேஸ்புக், மற்றும் இணையதளங்களில் அப்பதிவின் இணைப்பை கொடுத்துவிடுகிறேன். இதனால் உடனடியாய் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்கிறார்கள் என்பது என் எண்ணம். சென்னை மேயர் சம்மந்தப்பட்ட குறைகளை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் இணைத்தால் நிச்சயம் ரிசல்ட் கிடைக்கிறது. அந்த வகையில் கோவையிலிருந்து ஒரு வாசகி ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். 

கேபிள் சங்கர் அவர்களுக்கு,
                        நான் கோயம்புத்தூர் வாசகி.  தற்போது கோவை நகரில் வெயில் பாடாய்  படுத்துகிறது. அதோடு பத்து மணி நேர பவர் கட்டினால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. ஒரு நாளில் எத்தனை முறை பவர் cut ஆகிறதென்று கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
                                 காலை 6 மணி முதல் 9 மணி வரை               -  3
                                 பகல்  12 மணி முதல் 3 மணி வரை                  -  3
                                 மாலை 6 மணி முதல் 7 மணி வரை                -  1
                                 இரவு 9 மணி முதல் 10 மணி வரை                   -  1
                                 இரவு 12 மணி முதல் 1 மணி வரை                 -  1
                                 அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை        -  1
                                 மொத்தம்                                                                -  10
மனிதன் களைத்து போய் வீடு திரும்பும் போது நிம்மதியான தூக்கம் ஒன்று தான் அவனுக்கு மிக பெரிய சொத்து. அதுவே இல்லாம பண்றது தான் தமிழக அரசின் நோக்கமா? மேல இருக்கிற அட்டவணையில் சிவப்பு மையினால் இருப்பவை மிக மிக கொடுமை. அந்த நேரத்தில ரொம்ப வேர்க்குதுன்னு வீடு கதவ திறந்து வச்சோம்ன்னு வைங்க கொசு எல்லாம் நம்மள கடிக்க ஆரம்பிச்சுடுது. இதனால தினம் தினம் சித்ரவதை தான். நான் இபோது 9 மாத கர்ப்பினியும் கூட. காலையில் அலுவலகத்துக்கு sendru மாலை வீடு thirumbi நிம்மதியாக தூங்க கூட முடியவில்லை. இது போல் எத்தனை எத்தனை வயதானவர்கள், குழந்தைகள், நோயாளிகள், மாணவ மாணவிகள் ??????????????????  இந்த பிரச்சினை கு விடிவு காலமே இல்லையா?
கருணை உள்ளம் அம்மா! எங்கள் இதய தெய்வம் அம்மா! என்றெல்லாம் புகழ் பாடுகிறார்கள். ஆனால் என்னை கேட்டால் அந்த அம்மாவுக்கு இரக்கமே இல்ல நு தான் நான் சொல்லுவேன். ஒரு அரை மணி நேரம் அவங்களால கரண்ட் இல்லாம இருக்க mudiuuma ? இது தான் நான் அவங்கள கேக்கணும் நு நெனைக்கிற கேள்வி.........
இது ஒரு ஊர் pirachna இல்ல தமிழ்நாடே கரண்ட் இல்லாமல் தத்தளிக்கிறது. தமிழ்நாடு மக்கள் அப்படி என்ன பாவம் பண்ணிடாங்க இந்த கொடுமைஎல்லாம் அனுபவிக்க? பணம் படைத்தவர்கள் UPS இன்வேர்ட்டர் பயன்படுத்தி சொகுசாக வாழ்கிறார்கள். எல்லாராலும் இதை வாங்க முடியுமா? என்பது தான் என் கேள்வி.  இந்த பதிவின் மூலம் கூடிய விரைவில் நல்ல தீர்வுஎதிர் பார்க்கிறோம்.
பின் குறிப்பு: அட்லீஸ்ட் நைட் டைம் ஆவது கரண்ட் தடை இல்லாம வரணும்.
இந்த பதிவை எல்லோருடைய கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். 

இவரது குறையை உடனடியாய் போக்க முடியாது நிதர்சனமென்றாலும், அதை வெளிப்படுத்திய ஆறுதலாவது அவருக்கு கிடைக்கட்டும் என்ற நோக்கோடு இதை பிரசுரிக்கிறேன்.
கேபிள் சங்கர்

Post a Comment

39 comments:

Anonymous said...

//ஏரியா கவுன்சிலருக்கு கொடுக்க வேண்டிய மனுவெல்லாம் கூட எனக்கு ஒரு காப்பி அனுப்பி வைத்துவிடுவார்கள் போலருக்கிறது.//

சென்னையின் அடுத்த 'ஸ்நேக் பாபு' நீங்கதான். முடிவு பண்ணியாச்சி.

வவ்வால் said...

கேபிள்ஜி,

என்னக்கொடுமை சார் இது , கோவையில இருந்து யாரோ ஒரு வாசகி எழுதும் வரை தமிழ்நாட்டில் 10மணி நேர மின் வெட்டு இருப்பது தெரியாமல் இருக்கீரே, சென்னை நகர எல்லைக்குள் இரண்டு மணி நேர மின் வெட்டு மட்டும் இருப்பதால் எல்லா இடமும் அப்படி என நினைத்து விட்டீரா?

எங்கே உங்கள் நெஞ்சில் நீதி நியாயம் இருக்குமாயின் சென்னைக்கும் 10 மணி நேர மின்வெட்டுக்கொண்டு வாருங்கள் என மின்வாரியத்துக்கு மனு போடுங்கள் பார்ப்போம் :-))

ஹி..ஹி நானும் சென்னைக்காரன் என சொல்லிக்கொண்டாலும் மாநகர எல்லைக்கு வெளியில் இருப்பதால் 10 மணி நேர மின்வெட்டினை அனுபவிப்பவன் தான். கடந்த 5 ஆண்டுகாலம் தாத்தா எதையும் பிடுங்கவில்லை , இனி இந்தம்மா பிடுங்க ஆரம்பிக்க எத்தனைக்காலம் ஆகுமோ, புவி வெப்பம் ஆகாமல் தடுக்க 5 நிமிடம் விளக்கணைக்க சொல்வாங்களாம், நாம 10 மணி நேரம் விளக்கணைத்து புவியை காப்பாற்றுகிறோம் என பெருமிதம் கொள்வோம் :-))

திருவாரூர் சரவணா said...

பொதுவாக நெருக்கடி காலம் என்றால் உயிர் பிழைக்க என்ன வழியோ அதைத்தான் முதலில் செய்வார்கள். ஆனால் இந்த அரசு ''குடல் கூழுக்கு அழுதாம். கொண்டை பூவுக்கு அழுதாம்.(இன்னும் நாகரிகமற்ற வார்த்தையில் சொல்வது என்றால் வயிற்றுக்கு கஞ்சி இல்லை.............-.......டிக்கு சந்தனமாம் என்றும் ஒரு பழைய சொற்றொடர் உண்டு.) ''என்ற பழமொழிக்கேற்ப கொண்டைக்கு பூ வாங்குவதுதான் முக்கியம் என்று செயல்படுகிறது.

ஆந்திராவுல யூனிட் 50 ரூபா. நாகலாந்துல யூனிட் நாற்பது ரூபா அப்படின்னு எல்லாம் புள்ளி விபரம் எடுத்து விடுறவங்க, 100 அடி அகலத்துல ஆயிரக்கணக்கான ஹோர்டிங் எல்லாம் அரசோட சலுகை விலை மின்சாரத்துல எரிஞ்சு மக்களோட வயித்தை எரிய வெக்கிதே...முதல்ல இந்த ஹோர்டிங் எல்லாத்துக்கும் சூரிய ஒளியிலதான் மின்சாரம் தயாரிச்சுக்கணும்னு ஒரு ஆர்டர் போட மனசு வருதா?

அது சரி...தமிழ் நாடு பூரா நாலு மணி நேரம் மட்டும் கரண்ட் கட் பண்ணணும்னா சென்னையில ரெண்டு மணி நேரம் கட் பண்ணணும்னு சொல்லிட்டு, சென்னையில இருக்குற நட்சத்திர ஹோட்டல்களுக்கும், மெகாமால், மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களுக்கும் மின் வெட்டுலேர்ந்து விலக்கு கொடுத்தவங்கதானே இவங்க.

இப்பவும் ஜனங்களுக்கு சொரணை இல்லை. சுவாசிக்கிற ஆக்சிஜனுக்கும் காசு கேட்கும்போதுதான் புத்தி வரும்.

அபி அப்பா said...

என்னால முடிஞ்ச அளவு இந்த பதிவை பரவலாக்கியிருக்கேன் கேபிள்ஜி! வருங்கால ஸ்னேக் பாபு வாழ்க!:-)

உலக சினிமா ரசிகன் said...

கேபிள்...
யு.பி.எஸ் விலையை கன்னாபின்னாவென்று கூட்டி விட்டார்கள்.
அப்படியே வாங்கினாலும் ஒழுங்காக வேலை செய்யாது.
ஏனென்றால் ஒரு யுபிஎஸ் புல் பெர்பாமன்ஸ் பண்ண அதற்க்கு 12 மணிநேரம் தொடர்ச்சியாக கரண்ட் வேண்டும்.
இனி ஜெனரேட்டர்தான் கதி .
அதற்க்கு மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் வேண்டும்.
ஹோண்டா ஜெனரேட்டர் வாங்க புக் பண்ணி 10 நாள் கழித்துதான் டெலிவரி.

அம்மா மிக்ஸி,கிரைண்டர் தருவதற்க்கு பதில் விலையில்லா ஹோண்டா ஜெனரேட்டர் தரலாம்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

கொடுமை.

புதுகை.அப்துல்லா said...

ஹி...ஹி...ஹி.... ஒன்றும் சொல்வதற்கு இல்லை :)

திமுக அரசில் வெறும் 2 மனி நேர மின் தடையினால் உலகமே ஸ்தம்பித்ததுபோல் எழுதுன எந்த மீடியாவாவது எப்ப எதுனா எழுதுதா? அப்ப ஆற்காட்டாரை கிண்டலடிச்சவங்க எல்லாம் இப்ப எங்க போனாங்க?? பாவம் அவங்களைக் குறை சொல்லி என்ன செய்றது.. யார் மின்சாரத்துறை அமைச்சர்னு தெரிஞ்சாத்தானே கிண்டல் செய்ய முடியும்? :)

Cvprakash86 said...

pesama laptop,mixi,grinder,fan,ithukallam bathila oru inverter kudutha nejamave ellarukum useful ah irukum

ippadikku

same blood

Cable சங்கர் said...

//என்னக்கொடுமை சார் இது , கோவையில இருந்து யாரோ ஒரு வாசகி எழுதும் வரை தமிழ்நாட்டில் 10மணி நேர மின் வெட்டு இருப்பது தெரியாமல் இருக்கீரே, சென்னை நகர எல்லைக்குள் இரண்டு மணி நேர மின் வெட்டு மட்டும் இருப்பதால் எல்லா இடமும் அப்படி என நினைத்து விட்டீரா?//

vavvall.. காமெடி செய்வதாய் நினைத்து நீங்கள் ஒழுங்காக எதையும் படிக்காமல் பதில் எழுதுகிறீரோ என்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்துகிறீர்.. என்னுடய ஒவ்வொரு கொத்துபரோட்டாவிலும் இதை பற்றி எழுதியிருக்கிறேன். இது அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்த எழுதியது என்றும் சொல்லியிருக்கிறேன்.

Unknown said...

ஆத்தா பெயிலாயி ஆறு மாசமாச்சி:))

priyan said...

இது பரவாயில்லை சோசியல் மேட்டர் பண்ணிடலாம் , டைவெர்ஸ் கேஸ் எல்லாம் வருதப்பா .. நான் என்ன கோர்ட்டா?

இந்த பதிவை படித்த பொழுது இந்த வசனம் ஞாபகம் வராதவர்கள் எல்லாம் கழக தொண்டரடிபொடிகளை விடவும் ரொம்ப நல்லவர்கள் என்னும் பட்டத்திற்க்கு மிக தகுதியானவர்கள்

RAVI said...

இது எந்திர யுகம்டா...!!!
இரவுபகலா எந்திரங்கள் இயங்குமடா...!!!
மனுசனுக்கு கரண்ட் கொடுக்கறதவிட, இரவுகளில் ஃபாக்டரிகள் இயங்கினால் மொதலாளிகளுக்கு லாபமடா....!!!

Jayaprakash said...

நன்று கேபிள் ஜி! இதை தான் நான் எதிர் பார்த்தேன் வுங்களிடம் இருந்து! இது கொஞ்சம் லேட் anyway தீர்வு கிடைத்தால் சந்தோசம்!

இல்லையேல் மக்களின் சாபம் ஜெயலலிதா வை சும்மா விடாது! (அடாதட அடாதட மனிதா! நீ ஆட்டம் போட்டால் அடங்கிடுவ மனிதா) இது CM கு மிகவும் பொருந்தும்!

நன்றி
JP

Unknown said...

போங்க சார்! இன்வெட்டர் இருந்தாலும் என்ன செய்வது சார்ஜ் ஏறுவதக்கு கரண்டு வேனுமே....?

வவ்வால் said...

கேபிள்ஜி,

காமெடி செய்வதாய் நினைத்துக்கொண்டு என நீங்கள் சொன்னதிலிருந்தே நான் காமெடியாகத்தான் அப்படி சொல்ல வந்தேன் என்பது புரிந்திருக்கும், உங்களுக்கு இது தெரியும் என்பது எனக்கும் தெரியும், ஏன் நானே உங்களது முந்தைய பதிவுகளில் மின்வெட்டுப்பற்றி பின்னூட்டம் எல்லாம் போட்டிருக்கிறேன், அப்படி இருக்கும் போது உங்களுக்கு தெரியாது என்றா சொல்வேன்.

நீங்க கொஞ்சம் லேட்டா இந்த சமாச்சாரத்தை தொட்டு இருப்பதாக ஒரு உணர்வு, அவ்வப்போது சொன்னீர்கள் ஆனால் ஒரு அழுத்தம் இல்லை என என்பது எனது தனிப்பட்ட கருத்து.

நீ மட்டும் தான் அப்படி நினைப்ப எல்லாரும் அப்படி நினைக்கவில்லை எனலாம் , நீங்களே பாருங்க கீழ ஜெயப்பிரகாஷ் என்பவர் கூட நீங்க லேட்டா தொட்டு இருக்கிங்க என சொல்லி இருக்கிறார்.
//Jayaprakash said...
நன்று கேபிள் ஜி! இதை தான் நான் எதிர் பார்த்தேன் வுங்களிடம் இருந்து! இது கொஞ்சம் லேட் anyway தீர்வு கிடைத்தால் சந்தோசம்!//

இதைத்தான் நான் கொஞ்சம் காமெடியாக சொல்வதாக நினைத்து அப்படி சொன்னேன், காமெடிக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் போல :-))

நான் எப்போதும் நினைப்பதை மறைக்காமல் சொல்லிவிடுவேன். மற்றவர்களை போல படிக்காமலே அருமை,கலக்கல் என எல்லாம் பின்னூட்ட சாமரம் வீசுவதில்லை, நீங்கள் எண்ணியதை எழுதப்பதிவு ,நான் எண்ணியதை சொல்ல பின்னூட்டம்ம் என நினைத்திருந்தேன் :-))

Sivaraman said...

sankarJi -> "Idhu kooda parava illa ...vara vara diverse case ellam kooda varuthuppa... Naan enna vakkila illa courta ..." Narayanaaaa...

வவ்வால் said...

அப்துல்லா அண்ணே,

//திமுக அரசில் வெறும் 2 மனி நேர மின் தடையினால் உலகமே ஸ்தம்பித்ததுபோல் எழுதுன எந்த மீடியாவாவது எப்ப எதுனா எழுதுதா? அப்ப ஆற்காட்டாரை கிண்டலடிச்சவங்க எல்லாம் இப்ப எங்க போனாங்க?? பாவம் அவங்களைக் குறை சொல்லி என்ன செய்றது.. யார் மின்சாரத்துறை அமைச்சர்னு தெரிஞ்சாத்தானே கிண்டல் செய்ய முடியும்? :)//

ரீல் அந்து போய் ரொம்ப நாளாச்சுண்ணே இப்போ போய் ஆர்காட்டார் னு எல்லாம் சொல்லி காமெடி செய்துக்கிட்டு :-))

அப்போ செய்த கூத்து தான் இப்போ இப்படி தலை விரிச்சு ஆடுது, அம்மையாருக்கும் சொந்த கதை சோக கதைய பார்க்கவே நேரம்ம் போயிடுது, எனவே பிரச்சினை தீர்க்காமல் வளரவிடுறாங்க.

மின் உற்பத்தியை 1 வருடத்தில பெருக்கிட முடியுமா? 5 ஆண்டுகளில் ஆயிரம் மெகா வாட்ஸ் கூட உற்பத்தியை துவக்கவில்லை, அதே நிலையை அம்மையாரும் தொடர்ந்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆப்பு தானா வரும் , நீங்க அப்போ நல்லவங்களா ஆகிடுவிங்க , தானா ஓட்டு வரும் ,இதே நிலை தொடர்ந்தால் தான் கழகத்துக்கு அரசியல் எதிர்காலம் பிரகாசமா இருக்கும் எனவே இப்படியே இருக்கணும்னு குல தெய்வத்த வேண்டிக்கோங்க ,பாவம் மக்கள் தான் வழக்கம் போல நம்பி ஏமாறப்போறது.

புதுகை.அப்துல்லா said...

// அப்போ செய்த கூத்து தான் இப்போ இப்படி தலை விரிச்சு ஆடுது,

//


பேசுங்க... பேசுங்க... பேசிகிட்டே இருங்க :)))

arul said...

solar power installation is the only way gujarat had already installed solar stations that are said to be the biggest in asia

கூடல் பாலா said...

தமிழ் நாட்டின் இன்டெஃபினிட் டண்டணக்கா !

Thangavel Manickam said...

தூக்கம் போய் கிட்டத்தட்ட ஆறு மாதம் ஆகி விட்டது. இன்வெர்ட்டர் பயன்படுத்துபவர்கள் மின்சாரத்தை சேமித்து வைத்துக்கொள்கிறார்கள். அதாவது அவர்களுக்கு மின்சாரம் தொடர்ந்து கிடைத்து விடுகிறது. ஆனால் ஏழைகளுக்கு?? தமிழ் நாடு நரகத்தின் பிடியில் சிக்கி விட்டது. மீட்க எந்த தேவதூதரும் வரப்போவதில்லை.

Rajesh V Ravanappan said...

கோவையில் இன்று பனிக்கட்டி மழை.. நீங்க எழுதிய effect ஆ?

R. Jagannathan said...

//இவரது குறையை உடனடியாய் போக்க முடியாது நிதர்சனமென்றாலும், அதை வெளிப்படுத்திய ஆறுதலாவது அவருக்கு கிடைக்கட்டும் என்ற நோக்கோடு இதை பிரசுரிக்கிறேன்// Very noble indeed! And a true statement.

Arignar Anna had been able to see the future very clearly (that MK and Jay will continue to rule and ruin Tamil Nadu for long) and hence said " Edahaiyum Thaangum Idhayam Vendum - Thamizhaa unakku" enru!

-R. J.

Chandrasekaran said...

cable,
why dont we start a "we want electricity" or "shut down electricity for all" movement?

i agree with what the lasy from CBE says ... can jayalalitha , karunanithi, stalin et all survive for a day without power? ... even the ministers ... why dont we start a campaign .. sms campaign ... to atleast stop misuse ... more importantly none of these leaders live the same life that we commoners live .. their streets are clean , no mosquitoes, electricity 24 hrs a day ... they can never understand how it feels to be a commoner ... all great journeys start with 2 steps ... i think we need a campign ...
thanks,
solomon

Indian said...

//சென்ற மாதத்தின் போது சைதாப்பேட்டை குப்பை மேட்டரைப் பற்றி எழுதியவுடன் அது க்ளீன் செய்யபட்டதும், //

கீழே இருப்பது அந்த சனவரி இடுகையில் நானிட்ட பின்னூட்டம்.

**
பாராட்டுகள் சங்கர்.

மேலும் இரண்டு வேலைகள் செய்யலாம்.

1. இதே இடத்தைத் தொடர்ந்து 6 மாதங்களுக்குக் கண்காணித்து வரலாம்.

அ. ரெகுலரா குப்பையை அள்ளறாங்களான்னு
ஆ. அப்படி அள்ளாத போது ஒவ்வொரு முறை முகப்புத்தகத்தில் போடும்போதும் வந்து சுத்தம் பண்றாங்களான்னு

2. இல்லாட்டி, இதே மாதிரி அசுத்தமா இருக்கிற 20/25 இடங்கள பதிவிட்டால் எல்லா இடங்களையும் உடனே சுத்தம் பண்றாங்களான்னு.

Bottom line : Exceptions cannot replace routine work. Exceptions cannot be scaled up or sustained in the long run.

கட்டகம் உருப்படியா வேலை செய்தா விதிவிலக்குகளைக் கொண்டாடும் அவல நிலை நமக்குத் தோன்றாது.
**

இப்ப நெலம எப்படின்னு கொஞ்சம் பாத்து சொல்லமுடியுமா?

அம்பிகா said...

\\ஒரு அரை மணி நேரம் அவங்களால கரண்ட் இல்லாம இருக்க mudiuuma ? இது தான் நான் அவங்கள கேக்கணும் நு நெனைக்கிற கேள்வி.........\\
)))))
இதே கேள்வி தான் அனைவரிடமும்.

குரங்குபெடல் said...

கலைஞர் ஜெயலலிதா . .

ரெண்டு பேரும் வேற நாட்டுல பொறந்திருந்தா

தமிழ்நாடு எப்பவோ தேறியிருக்கும் . . .

ரெண்டு பேரும் சாரய உற்பத்திக்குதான் முதலிடம்

குடுப்பாங்க . .

கரண்ட் ம்ஹூம் . . .

ஷர்புதீன் said...

தலைவரே, அடியேனும் கோவைக்காரந்தான்., அந்த பெண் சொல்வதெல்லாம் உண்மைதான்., ஆனால் ஒரு சந்தோசம் பாருங்க கோவையில் இருப்பதில்!!

கோவையில் கோடை காலம் பங்குனி மற்றும் சித்திரை மட்டுமே, ஆகவே, வரும் மே மாதம் 15 தேதி முதல் சென்னையின் அக்டோபர் மாத கிளைமேட் இங்கே வந்துவிடும், ஆகவே ஓரளவுக்கு இரவு சூடு மிகவும் குறைந்துவிடும், ஆகவே கோவைகாரர்கள் இரண்டு மூன்று மாத வெயிலை மட்டும் தாங்கி கொண்டால் போதும்!

பொதுவில் தமிழகத்தில் வெப்பம் குறைந்த மாவட்டம் கோவைதான் ( மலைபிரதேசம் தவிர்த்து )!

:-)

பித்தனின் வாக்கு said...

// தமிழ்நாடு மக்கள் அப்படி என்ன பாவம் பண்ணிடாங்க //

enna ippadi keetinga, kamaraj ponrorai thokka seitha povam illaiya?. long project invest pannum policiankalai purakkanithu viddu. kurukiya kala illavasangalai nambiyathu povam illaiya. nillaiyana kalvi. tholil, then adipadai vasathikalai seitha kamaraj avarkalai viddu, roopaikku moonu padi arisi enru oottu pottarkaley athu pooavam illaiya.
cinema, vethu pochu, dance parthu mayangia thamilanukku ithuthan thandanai. innamum ethir kalathil wate wars varum. athaiyum anupavithu sakungal. ithuthan thamilanin vidhi. oottkku ilavasamai half ltr water bottle kodukkum nilum varalam. ithu enthu kobam alla varutham.

கொக்கரக்கோ..!!! said...

//ஆத்தா பெயிலாயி ஆறு மாசமாச்சி:)) //

மக்கள் பெயிலாயி ஒரு வருஷம் ஆயிடிச்சி!! ))

selvan said...

கேபிள் , நான் ஒன்று கேள்விப்பட்டேன். கல்பாக்கம் அனல் மின் நிலையத்தில் ஒரு UNIT மட்டுமே ஓடுகிறதாம் (அரகொரையாக), மீதி இரண்டு UNIT சுவிட்ச் ஆப் செய்திருக்கிறார்கலாம். இரண்டாவது UNIT ON செய்தால், தமிழ்நாடுக்கே மின்சாரம் வருமாம்.

வவ்வால் said...

கேபிள்ஜி,

இன்னும் சில நாட்களீல் படிப்படியாக மின் வெட்டுக்குறைய வாய்ப்புள்ளது எப்படி என நான் ஒரு பதிவிட்டுள்ளேன் ,முடிந்தால் பார்க்கவும்.

மின்வெட்டுக்குறையும்

cinema said...

Same problem in also madurai
by
kathir

G.R said...

தென் மாவட்டம் முழுக்க இதே நிலைதான்.. எங்க ஊருல 11,12 மணி நேரம் ரொம்ப சாதாரணமாகி போச்சு.. இந்த கேடு கெட்ட அரசாங்களினால்..
6 to 9
12 to 3
6.15 to 7.15
9.15 to 10.15
12.00 to 1.00
3.00 to 4.00
இது நிலையானது.. இடையில் 5,10 நிமிடம் கண்க்கில் இல்லை..

விஜயன் said...

ங்கொய்யால... இதெல்லாம் 'அம்மா'வுக்கு வோட்டுப் போடுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

Best Regarding.

www.ChiCha.in

www.ChiCha.in

Vetirmagal said...

எந்த மாநிலமாக இருந்தால் என்ன?

சில வாரங்கள் வரை ஆந்திராவும் இந்த நிலை தான். எங்களுக்கும் இதே கேள்விதான்- ஏன் பெரிய தலைகளின் மின்சார இணைப்பை துண்டிக்கவில்லை என்று.

ஏதோ, பல தொகுதிகளில் எலக்க்ஷன் இருப்பதனால் இதுவரை அவ்வளவாக தடைகள் இல்லை.

ஜோதிஜி said...

சங்கர் அவங்க எப்படி சொல்கிறார் என்பது எனக்கு புரியல. ஒரு வேளை சஞ்சய் காந்திக்கு தெரியலாம். காரணம் திருப்பூரில் கூட தற்போது இரண்டு மணி நேரம் தான் மின் தடை. சில சமயம் மூன்று மணி நேரம். அருகே இருக்கும் கோவையில் பத்து மணி நேரம் என்பது ரொம்ப ஆச்சரியமாக இருக்கு.

ஜோதிஜி said...

சென்னையின் அடுத்த 'ஸ்நேக் பாபு' நீங்கதான். முடிவு பண்ணியாச்சி.


உன்னோட வீட்ல ஒரு வாய் சோறு தின்னதுக்கு கையை உண்டியல் மாதிரி ஆக்கியிட்டீயேன்னு யாரும் கை குலுக்காத அளவுக்கு (சொல்லாத) அளவுக்கு சூதனமா நடந்துக்குங்க.