ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு உணவகங்கள் பிரபலமாக இருக்கும். பயணம் செய்யும் போது அவ்வூர்களை கடக்கும் சமயங்களை நம்முடைய லஞ்ச் டைமாகவோ, அல்லது டின்னர் டைமாகவோ அமைத்துக் கொண்டு போய் சாப்பிடுகிறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது அதே உணவகங்கள் தமிழ்நாடு பூராவும் மெல்ல செயின் ஆப் ரெஸ்ட்ராரண்டுகளாய் பரவி வரும் கலாச்சாரக் காலமிது. எல்லா ஏரியா சரவணபவனிலும் ஒரே டேஸ்ட்டில் அதே அயிட்டங்களோடு கிடைக்கும் என்பதில் கொஞ்சம் த்ரில் குறைவாகத்தானிருக்கிறது. சரவணபவன் ஆரம்பித்து வைத்த இந்த கலாச்சாரம் இன்றைக்கு எல்லா முக்கிய உணவகங்களும் ஏரியாவுக்கு ஒரு கிளை என்று பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். சில உணவகங்கள் புதிதாய் திறக்கும் போதே இரண்டு மூன்று கிளைகளோடு ஆரம்பிக்கிறார்கள். அப்படித்தான் இந்த அமிர்தமும் ஆரம்பித்திருக்கிறது.
அடையார் கிராண்ட் ஸ்வீட்ஸ் நிறுவனத்தார் ஆரம்பித்துள்ள இந்த அமிர்தம் உணவகம் ரெஸ்ட்ராண்ட் வகையில் அமைந்திருக்கிறது. அடையாற்றில் செல்ப் சர்வீஸாய் இருப்பதாய் சொன்னார்கள். ஆனால் திநகர், மற்றும் வடபழனியில் ரெஸ்ட்டாரண்டுகளாய் நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் ஸ்வீட் கடையும் மறு பக்கம் உணவகமாகவும் செயல்பட்டு வரும் சிஸ்டத்தை பாலோ செய்கிறார்கள். சரி உணவுக்கு வருவோம். நல்ல ஆம்பியன்ஸுடன் இருக்கிறது இவர்களது உணவகம். மெனு என்று பார்த்தால் வழக்கமான தோசை, இட்லி, பூரி, சோளாபூரி, பரோட்டா, சப்பாத்தி என்றுதான் இருக்கிறது. மிக குறைந்த மெனு. ஒரு சில சேட் அயிட்டங்கள் மட்டும் புதிதாய் இருக்கிறது. உதாரணத்திற்கு ஆனியன் மசாலா கச்சோடி.
நாங்கள் குடும்பத்தோடு தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள உணவகத்திற்கு சென்றோம். ஸ்வீட், ஸ்டார்ட்டர் என்று எதைக் கேட்டாலும் இல்லை என்றார்கள். ஒரு வழியாய் பாஸந்தியும் ஆனியன் மசாலா கச்சோடியும் ஆர்டர் செய்துவிட்டு ஏண்டா இந்த இடத்திற்கு வந்தோம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த யோசனையெல்லாம் கச்சோடியை புட்டு வாயில் போட்டுக் கொள்ளும் வரைதான். செம டேஸ்ட். அடுத்து வந்த தோசை வகையறாக்கள், முக்கியமாய் ரவா தோசை செம கிரிஸ்பியாய் இருந்தது. சரவணபவனைத் தவிர மிக சில ஓட்டல்களில்தான் நல்ல திக்கான சாம்பார் கிடைக்கும். இவர்களது சாம்பாரும் திக்காக இருந்தது. ஆனால் மற்றவர்களை விட செம டேஸ்ட். எனக்கு சாம்பாரின் டேஸ்ட் மிகவும் பிடித்தது. வழக்கமாய் சாப்பிட்ட டேஸ்ட் இல்லாமல் விதயாசமான ஒரு டேஸ்டில் இருந்தது. சோளாபூரிக்கு கொடுத்த சென்னா அதுவும் அட்டகாசமாய் இருந்தது. இருப்பதிலேயே ஹைலைட் பரோட்டாவும் அதற்கு சால்னா போல ஒரு தேங்காய் சார்ந்த ஒரு கிரேவியும், திக்கான காலிப்ளவர் குருமா.. மிக சாப்டான பரோட்டாவும் வாவ்.. சூப்பர்.. நிச்சயம் அந்த சால்னாவுக்காக மீண்டும் ஒரு விசிட் அடிக்கலாம். மதிய சாப்பாடு நூற்றுச் சொச்சத்திற்கு அளிக்கிறார்கள். அது வேலைக்காகாது.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
Regards
JP
நெல்லை : பதிவர்கள் செய்த கலக்கல்கள்
-Karthik