Thottal Thodarum

Oct 4, 2008

"யானை கொம்பனும் ஏதோ ஓரு ......யபாரதியும்..


எனக்கென்னவோ அவ்வளவு ஆர்வம் இல்லாதது மாதிரி காட்டிக்கொண்டேன்.. யாராவது பார்த்துவிட்டால்.. “யாரும் பாக்கமாட்டாங்கடா..” என்றான் சேகர்.. எங்கள் குருப்புக்கு வஸ்தாது..பார்த்தால் சோனியாய் இருப்பான், ஆனால் செய்கிற வேலையெல்லாம் சோனி டிவிமாதிரி பெரிசாத்தான் இருக்கும்.

நான், சேகர், சண்முகம் ஆகிய மூவரும் ரொம்ப நெருக்கம்.. நானும்,சண்முகமும் ஓரே ஏரியா...ஆனால் சேகர் தண்டையார்பேட்டை..அவனிடம் ஓரு வசீகரம் இருந்த்து.. கதை அவனை பற்றியல்ல.. நாங்கள் மூவரும் முதல் முதலாய் பிட்டு படம் பார்க்க போக ப்ளான் செய்த்தை பற்றி தான் .

எனக்குன்னு என்னுடய் செட்டில் சுமாராய் படிப்பவன் என்ற இமேஜ் இருந்ததால், நான் இந்த மாதிரி படத்துக்கெல்லாம் தெரிந்தால், “வதனி” என்ன நினைப்பாள் என்றெல்லாம் தோண்றியது. அதையெல்லாம் சேகரிடம் சொல்லவில்லை..தீவரமாய் ஐ.எஸ்.ஐ ஏஜெண்ட் கணக்காய் சுற்று வட்டாரத்தில் எங்கெல்லாம் அந்த மாதிரி தியேட்டர் இருக்கிறது என்ற லிஸ்டை தயார் செய்தோம்.. என் காலேஜிலிருந்து பக்கத்தில் இருந்த்து அனகாபுத்தூர் அங்கே ஓரூ தியேட்டர், அலந்தூர், என்று பக்கத்தில் உள்ள தியேட்டரை எல்லாம் லிஸ்ட் எடுத்து.. ராமகிருஷ்ணா போகலாம் என்று ப்ளான் செய்தோம்..

பஸ்ஸில் போகும் போது ராமகிருஷ்ணாவின் போஸ்டரில் ஏதோ காமுகன் என்ற டைட்டிலில் உள்ளே இருப்பதையெல்லாம் பிதுக்கியபடி போஸ்டரில் இருந்த அந்த நடிகையை பார்த்து, மனசுக்குள் ஓரு கிளூகிளூப்பு ஏற்பட்டது.. நாங்கள் மூவரும் ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டோம்.. பஸ்ஸில் கொஞ்சம் புஷ்டியாய் இருந்த அம்மணிகளை பார்த்தால் போஸ்டர் நினைவுக்கு வந்தது.

ஓரு வழியாய் தியேட்டர் வாசலில் போய் நின்றால் வாசலில் ஓரு போர்ட் வைத்திருந்தார்கள் ஏதோ ஜெனரேட்டரோ.. புரஜெக்டரோ ப்ராப்ளம் என்பதால் ஷோ கேன்சல் செய்திருப்பதாக.. மூண்று பேருக்கும் “சேது சமுத்திர திட்டம்” கெட்டு போனதை போல ரொம்ப வருத்தமா இருந்திச்சு.. பக்கத்தில் வேறு ஏதாவது தியேட்டர் இருக்குமா ? என்று மனசில் நினைக்க, சேகர் மச்சான் கிளம்பினது கிளம்பிட்டோம் .. படம் பாக்காம போகறதில்ல.. வாடா எங்க ஏரியாவுல ஓரு திருவெற்றியூர்ல ஓரு தியேட்டர் இருக்கு. நம்ம ஏரியாவாச்சேன்னு போவாணாம்ன்னு பாத்தேன்.. கிளம்பு” என்று ஒரு படை தளபதி போல முடிவெடுத்து திருவொற்றியூருக்கு பஸ் பிடித்து கிளம்பினோம்..

ஓரு பிட்டு படம் பார்பதற்காக இவ்வளவு அலைச்சலா என்றெல்லாம் தோண்றவில்லை.. எடுத்த குறிக்கோளில் உறுதியாய் எங்கள் வீர பயணம் செய்து தியேட்டர் அருகில் இறங்கினோம்.. தியேட்டர் வாசலில் ராஜேந்தர் நின்று கொண்டிருந்தார். நான் சேகரை சந்தேகத்துடன் பார்க்க,, ம்ச்சான் தியேட்டர் இது இல்லடா கொஞ்சம் உள்ள போணும். அந்த தெரு ஓரு அகலமான நீண்ட தெரு.. நடுவில் ஏதோ ஓரு அம்மன் கோயில் இருந்த்து.. அந்த கோயிலை சுற்றி “ப” வடிவில் தெரு இருக்க, சுற்றிலும் வீடுகள், கோயிலின் நேர் பின்புறம் தியேட்டர்..(சாமி பட தியேட்டர் கோயிலுக்கு பின்னாலே..) தியேட்டர் வாசலில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஓரே பெருசுகள் சிகரெட் பிடித்து கொண்டிருந்தார்கள். “யானை கொம்பன்” ப்ரேம் நசீர் நடித்த படம்.. 6ரூபாய் பால்கனி டிக்கெட். சிறிது நேரத்தில் சுற்றி பார்த்தால் ஓரளவுக்கு கூட்டம் வந்திருந்த்து.

படம் ஆரம்பித்தவுடன் ப்ரேம்நசிர் ஓரு கிராமத்தில் யானை வளர்த்து வருகிறார்.ஜயப்ப பக்தர்.படத்தில் முண்டு கட்டிக் கொண்டு வரும் ஏதோ ஓரு பாரதியை பார்த்து.. “இதுதான் பிட்டா சேகரு” என்றேன். சேகர் எற்கனவே பார்தவன் போல சேச்சே அதெல்லாம் தனியா காட்டுவாங்க..என்றான்.

சிறிது நேரத்தில் ரசிக கண்மணிகள் ப்ரேம்நசிர் சாமி கும்பிடும் காட்சியில் கைதட்டி விசிலடிக்க ஆரம்பித்தார்கள்.. படம் கட் ஆகி ஓரு அட்டு பிகர் திருமலைநாயக்கர் தூணுக்கு கோவணம் கட்டிய மாதிரி மெலிதான வெள்ளை துணியில் குளிக்க ஆரம்பித்தாள்.. தியேட்டர் முழுவதும் மயான அமைதி.. சூடும் ஏறியது போல் இருந்த்து.. ஆனால் என் உடம்புக்குள் ஏற்பட்ட சூடு என்பது பிற்பாடு தெரிந்த்து. அவள் கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் ஊற்றி, குளிக்க.. எங்களுக்கு வேர்த்து.. கையை..சாரி பையை வைத்து அழுத்தியபடி பார்க ஓரு வழியாய் தன்னுடய மேலாடையை (அப்படின்னு ஓண்ணு இருந்த்தா?)
கழட்டிவிட, அவ்வளவு பெரிய.. பார்த்து விதிர்த்து போய் என்னன்னு புரிவதற்குள் முடிந்து இண்டர்வெல் விட்டார்கள்..

நாங்கள் மூவரும் தேண் குடித்த நரி போல் ஓருத்தரை ஓருத்தர் பாத்து கொண்டோம்.. “மச்சான் வெளிய போவாணாம். எங்க ஏரியா தெரிஞ்சவங்க யாராவது பார்த்தா? பிரச்சனை..என்றான் சேகர்..உடனடியாய் பாத்ரூம் போக வேண்டிய நிர்பந்தம் இருந்தாலும், நண்பனின் பாதுகாப்பு கருதி அடக்கி கொண்டேன்.

இண்டர்வெல் முடிந்து ஓரு பத்து நிமிடம் திரும்பவும் ப்ரேம் நசிர் முதல் சீனிலிருந்து போட்டார்கள்.இம்முறை ரசிக கண்மணிகள் கைதட்டல்,விசிலில்,, நாங்களும் ஐக்கியமானோம்..ஓரு முறை தட்டினோம் , இரண்டாவது தடவை தட்டினோம்.. மூண்றாவது முறை தட்டிய போது எங்கள் கைத்ட்டல், விசில் மட்டுமே கேட்டது.சுற்றி பார்தால் யாருமே இல்லை.. சம்மந்தமேயில்லாமல் டக்கென்று படத்தை நிறுத்தி முடித்துவிட்டார்கள்.. சேகர் முதலில் வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்து தியேடரிலிருந்து வெளியே வர.. எங்களுக்கு எந்த பயமும் இல்லாததால் அசால்டாகவே வந்தோம்.

பஸ்ஸ்டாண்டு அருகில் வந்த்தும் திரும்பவும் காலேஜூக்கு போகலாம்னு பஸ்ஸுக்கு காத்துகிட்டு இருந்த போது.. சண்முகத்தின் தலை மேல பட்டென்று அடிவிழுந்த்து.. திரும்பி பார்த்தால் அவன் சித்தப்பா.. நாங்கள் எல்லாம் ஸ்டாப் ப்ளாக்கில் எஸ்கேப்பாக.. அடுத்த நாள் காலையில் சண்முகத்தை ரயில்வே ஸ்டேசனில் பார்த்தபோது என்னடா ஆச்சு..ன்னு கேட்டேன்..

நான் படம் பாத்ததை வீட்ல சொன்னீங்கன்னா.. நீங்க படம் பாத்த மேட்டரை நானும் சொல்வேன்ன்னு சொன்னேன்... அவரு போயிட்டாரு..

அவரும் படம் பார்த்தாரா மச்சான்?

யாருக்கு தெரியும் என்றான் சண்முகம்..

Post a Comment

4 comments:

யூர்கன் க்ருகியர் said...

நல்ல தமாசான அனுபவம்தான்!

யூர்கன் க்ருகியர் said...

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது என் நண்பன் படத்துக்கு போலாம் என்று என்னை அழைத்து சென்று கொண்டிருக்கும்போது நான் கேட்டேன்..
மச்சான் ... படம் பேர் என்னடா?
அவன் சொன்னது
"இருட்டறையில் ஒரு முரட்டு குத்து"

Cable சங்கர் said...

//"இருட்டறையில் ஒரு முரட்டு குத்து"//

குத்தினீங்களா இல்லயா? ஜூர்கேன்..

யூர்கன் க்ருகியர் said...

//"இருட்டறையில் ஒரு முரட்டு குத்து"//

குத்தினீங்களா இல்லயா? ஜூர்கேன்..//

அந்த படத்தில் ஹீரோ வேற ஒருத்தன்!