Thottal Thodarum

Oct 29, 2008

TAMILAN என்று சொல்லடா.. தலை குனிந்து நில்லடா..



தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. இப்படி சோல்லி சொல்லியே நம்மள உசுப்பேத்தி விட்டுராங்க.. அப்படி உசுப்பேரிய நாம தமிழை தவிர எதையும் படிக்காம எத்தனை பேர் தமிழ்நாட்டு பார்டர் தாண்ட முடியாம இருக்கோம்? அது சரி அதைப்பத்தி நமக்கென்ன கவலை..அறிவுரை எல்லாம் மத்தவங்களூக்கு தானே..

தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று முதல்வர் அறிவித்தவுடன், தமிழில் பெயர் தேடி அலைய ஆரம்பித்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தமிழிலேயே அர்த்தம் சொன்னால்தான் புரியும்படியான் தலைப்புகளை வைத்து வரிவிலக்கு பெற்று வருகிறார்கள்.. (உ.த: வாரணம் ஆயிரம்(ஆயிரம் யானைகள்) ஏகன் (சிவன், எல்லாம் அறிந்தவ்ன்)). அதே போல் அந்த படங்களை தயாரிக்கும், விநியோக செய்கிற நிறுவனங்களின் பெயர்களும் தமிழில் இருந்தால்தான் வரிவிலக்கு என்று அறிவித்தால் நன்றாய் இருக்கும் போலருக்கு.


நம் முதல்வரின் வாரிசுகள் நடத்தும் அத்தனை நிறுவனங்களூக்கும் ஆங்கிலத்திலேயே பெயர் வைத்திருக்கிறார்கள்.

1. Suntv
2. Ktv
3. Sun Music
4. Sun news
மேற்படி பெயர்களை வைத்த பேரன்களுக்கும், ந்ம் தலைவருக்கும் இப்போது தொடர்பு இல்லாவிட்டாலும்,மாறன் சகோதரர்கள் வைத்த பெயர்.

1. Royal furnitures
2. Royal cable vision
3. Cloud Nine
மேற்படி பெயர்களை முறையே முதல்வரின் மனைவி நடத்திய ஓரு நிறுவன பெயர் ஆகும், மற்ற் இரு பெயர்கள் திரு. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி நடத்தும் கேபிள் டிவி நிறுவனத்துக்கும், சினிமா விநியோக நிறுவன பெயர்களாகும்..


1. Red Gaint Movies
இது நமது அமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதியின் சினிமா கம்பெனியின் பெயர்..

இதையெல்லாம் குறை சொல்வதற்காகவோ.. குத்தி காட்ட நினைப்பதாகவோ எழுதவில்லை.. முன் ஏறு எப்படியோ அப்படிதானே பின் ஏறு போகும், ஓரு அரசாங்கத்தின் மூத்த மகன் எப்படி தன்னையும் தன் குடும்பத்தையும் வழிநட்த்துகிறாறோ..அப்படித்தானே மக்களும் நடப்பார்கள்..

கலைஞர் அவர்களை மட்டும் குறிவைத்து எழுதவில்லை. இவரை போல் தமிழ், தமிழ் என்று பேசி, பேசியே மாய்ந்து போகிற எல்லோருக்கும் தான் பொருந்தும்,

எதோ இந்த மட்டும் கலைஞர், ராமதாஸ் பரவாயில்லை. அவருடய சேனல்களுக்கு பெயராவது தமிழிலேயே வைத்திருக்கிறார்.
1. கலைஞர்
2. இசையருவி
3. மக்கள் தொலைக்காட்சி
அவரின் தமிழ் பணி சிறக்க வேண்டுமென்ற ஆவலோடு.. ஓரு தலை குனிந்த தமிழன்.
Post a Comment

9 comments:

Anonymous said...

கருத்து சொல்ல விரும்பவில்லை. நீங்கள் சொன்ன மாதிரி, தமிழ் வழியே பாலிடெக்னிக் படித்து தற்போது வெளிநாட்டில் அவதிப்படும் நண்பன்.

Cable சங்கர் said...

//கருத்து சொல்ல விரும்பவில்லை. நீங்கள் சொன்ன மாதிரி, தமிழ் வழியே பாலிடெக்னிக் படித்து தற்போது வெளிநாட்டில் அவதிப்படும் நண்பன்.//

என்ன செய்வது... மற்ற மொழிகள் கற்பது ஓன்றும் கம்ப சூத்திரம் அல்ல.. முயன்றால் கண்டிப்பாய் கற்றுக்கொள்ளமுடியும் நண்பா.. ஆல் த பெஸ்ட்

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//மற்ற மொழிகள் கற்பது ஓன்றும் கம்ப சூத்திரம் அல்ல..//

ஒரு வயதை தாண்டியபின் எல்லாருக்கும் நீங்கள் கூறியது போல் அவ்வளவு எளிதல்ல .

Cable சங்கர் said...

//ஒரு வயதை தாண்டியபின் எல்லாருக்கும் நீங்கள் கூறியது போல் அவ்வளவு எளிதல்ல .//

கற்பதற்கு ஆர்வமிருந்தால் வயது ஓரு தடையல்ல என்பது என் கருத்து பாஸ்கர்.

Anonymous said...

அந்த வகைல நாம அந்தமான் நிவாசிங்கிரதால பல மொழிகள்ல பூந்து விளையாட முடியுது..!

Cable சங்கர் said...

//அந்த வகைல நாம அந்தமான் நிவாசிங்கிரதால பல மொழிகள்ல பூந்து விளையாட முடியுது..!//

//நிவாசிங்கிரதால//

ஜீவராசி???

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//வயது ஓரு தடையல்ல//

கற்க வேண்டிய வயதில் கற்பதற்கும் , காலம் தாண்டி கற்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு தோழரே !

Cable சங்கர் said...

//கற்க வேண்டிய வயதில் கற்பதற்கும் , காலம் தாண்டி கற்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு தோழரே !//

அது சரிதான்..

Anonymous said...

//அந்த வகைல நாம அந்தமான் நிவாசிங்கிரதால பல மொழிகள்ல பூந்து விளையாட முடியுது..!//

//நிவாசிங்கிரதால//

ஜீவராசி???//

நிவாசி= வசிப்பவன், குடியுருப்பவன்...!