Thottal Thodarum

Nov 28, 2009

Tsotsi (எ) யோகி – திரை விமர்சனம்

tsotsi

Tsosti சவுத் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு ஸ்லமில் இருக்கும் அநாதை டீன் ஏஜர். சிறுவயதிலேயே பெற்றோரால் கைவிடப்பட்டு முட்டி மோதி இந்த ஸ்லம்மில் செட்டிலானவன். அவனும், அவனுடய கூட்டாளிகளும் வழக்கமாய் இம்மாதிரியான சிறுவர்கள் ஈடுபடும், கொள்ளையில் ஈடுபட்டு பணத்தை திருடி குடித்தும், பெண்களுடனுமாய் அலைய, ஒரு நாள் ஒரு கொள்ளையை நடந்த்திவிட்டு ஓடி வரும் போது ஒரு காரை திருட எத்தனிக்க, அதை தடுக்கும் பெண்ணை சுட்டுவிட்டு, காரை திருடிக் கொண்டுவர, கொஞ்சம் தூரம் ஓட்டி வந்த பிறகு பின்னால் சத்தம் வர, பார்த்தால் ஒரு கைக்குழந்தை, குழந்தையை அங்கேயே விட்டு விட்டு போக மனமில்லாமல் குழந்தையை ஒரு பேப்பர் பேக்கில் போட்டுக் கொண்டு தன் வீட்டில் வைத்து பராமரிக்க ஆரம்பிக்க,ஒரு கட்டத்தில் குழந்தையால் அவனுடய வாழ்கையில் மாற்றம் ஏற்பட, அந்த குழந்தையை ஒரு கட்டத்தில் அதன் தாயிடமே கொண்டு போய் விட போகும் போது அவனை போலீஸ் கொன்று விடுகிறது.
yogi pic

மேலே சொன்ன அத்துனை காட்சிகளும் யோகி படத்தில் வரிசைக்கிரமமாய் அச்சு அசலாய் இருக்கிறது என்ன டீன் ஏஜ் பசஙக்ளுக்கு பதிலாய் நாற்பது வய்து யூத்துகள். அவர்கள் ஸ்லம்மில் சுற்றும் காட்சிகள், மற்றும் கொலை, கொள்ளை செய்யும் காட்சிகள் எல்லாம் இதைவிட லைவ்வாக பல படங்களில் பார்த்தாகிவிட்டது. அதனால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. முக்கியமாய், சென்னை ஸ்லம் ரவுடிகளை பற்றிய படமாக்கும் போது அதனுடய நேட்டிவிட்டியும், லாங்குவேஜ், பாடி லேங்குவேஜ் போன்ற வற்றை படத்தில் பிரதிபலித்தால்தான்  படத்தோடு ஒட்ட முடியும்,  அதுவே இதில் பெரிய சைபர்.  ஒரிஜினல் படத்தில் கைக்குழந்தையோடு ஒரு பெண் அலைய, அந்த பெண்ணை, மிரட்டி, தன் குழந்தைக்கு பாலூட்ட சொல்வதும், பின்பு அவளுடன் நெருக்கமாவதும், குழந்தைக்கு பாலுட்ட மில்க்மெயிட் ஊட்டிவிட்டு அப்படியே போய்விட திரும்ப வரும் போது குழந்தையை எறும்பு கடித்து அழுவதும், அதே போல் குழந்தையை திருடிய வீட்டிற்கே போய் மீண்டும் கொள்ளை அடிக்க போவது, போய் திரும்பும் போது குழந்தைகளூக்கான பொருட்களை எடுத்து வருவதும், அங்கே நடக்கும் பிரச்சனையில் கூட்டாளியையே போட்டு தள்ளூவது, என்று மிச்சம வைக்காமல் ஒரிஜினல் படத்தின் எல்லா காட்சிகளும்.
tsotsi-10 yogi 2

அமீர் நடக்கிறார், ஜீன்ஸ் போட்டு நட்க்கிறார், சார்ட்ஸ் போட்டு நடிக்கிறார், ஹை ஸ்பீடில் ந்டக்கிறார், ஆனால் நடிப்பை பார்க்கும் போது பருத்டி வீரன் அமிர் சாரி கார்த்தி தான் தெரிகிறார். முக்கியமாய் கொஞ்சம் கூட சென்னை ஸ்லாங்கில்லாம் மதுரை ஸ்லாங்கிலேயே இழுத்து இழுத்து பேசுகிறார். குழந்தையை கடிக்க வரும் பாம்பை கொல்லும் காட்சி மட்டும் நச்.
tsosti

கவிஞர் ஸ்நேகன் இன்னொரு ரவுடியாய் வருகிறார். என்ன அவருக்கு பாடி லேங்குவேஜும், ஸ்லாங்கும்தான் வருவேனா என்கிறது. ஒரு வேளை இன்னும் ரெண்டு மூணு ரவுடிகள் படம் வந்தால் அஜயன் பாலாவுக்கு பதிலாய் இவரை போடலாம்.கூட வரும் இரண்டு பேர் சரியான செலக்‌ஷன்.
photo_03_hires

குழந்தைக்கு பால் கொடுக்கும் தெலுங்கு பெண்ணாக, மதுமிதா பெரிதாய் சொல்ல முடியாவிட்டாலும் சின்ன சின்ன எக்ஸ்பிரஷனில் ஜெயிக்கிறார். மேலே உள்ள ஒரிஜினல் படத்தில் குழந்தையை தூக்கி போவது போன்ற யோகியிலும் தூக்கி போகிறார். குழந்தையின் அப்பாவாக வின்செண்ட் அசோகன், மனைவி சுவாதி, வேறு ஒருவனுக்கு கர்பமானவள் மனைவி என்று தெரிந்தே திருமணம் செய்து கொண்டு, அந்த காணாமல் போன குழந்தையை கொல்ல துடிப்பவன். அரைவேக்காட்டுதனமான திரைகதை ஆசிரியரின் சொந்த கற்பனை.

ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு கச்சிதம், அமிர் போடும் சண்டை காட்சிகளில் இவரும் எடிட்டரும் ஜெயித்திருக்கிறார்கள். யுவனின் பிண்ணனி இசை அருமை, பாடல்கள் என்று பெரிதாய் இல்லாததால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. செகண்ட் ஹாப் முழுவதும், யோகி தீம் மீயூசிக் பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது.
yogi

திருடா திருடி சுப்ரமணிய சிவாவுக்கு இது மூன்றாவது படம் தமிழில். அமீர், யுவன், அமிரின் கம்பெனி என்று சரியாகத்தான் செலக்ட் செய்திருக்கிறார். அமிரை சூப்பர் ஹீரோவை போல பில்டப் செய்ய பிரயத்தனபட்ட அளவுக்கு படத்தில் அவ்ரின் உழைப்பு தெரியவில்லை. அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் ஒவ்வொரு அடிக்கும் பஞ்ச் டயலாக் பேசி அடிப்பது எல்லாம் தேவையா..? அதே போல் ஹல்க் போல நெஞ்சில் அடித்து கொண்டு அலறுவது எல்லாம் ரொம்பவே ஓவர். கதை  இவருடயதாம்.

yogi1

திரைக்கதை, வசனமெழுதி நடித்து, தயாரித்திருப்பவர் அமீர். இவர் புதியா திரைக்கதை என்ன எழுதினார் என்று தெரியவில்லை. பல இடங்களில் வசனங்கள் கூட ஒரிஜினலின் பிரதிபலிப்பு. முக்கியமாய் மதுமிதா அமீர் வசனங்கள். இவர் திரைகதையில் செய்த மாற்றங்கள் குழந்தையின் தந்தையை வில்லனாக காட்டியதும், இவரின் ப்ளாஷ் பாக் காட்சிகளும் தான். அந்த காட்சிகளில் கூட தள்ளூவண்டியில் பிச்சையெடுக்கும், ஒரு பிச்சைக்காரனைக்கூட தன் அப்பாவாக உருமாற்றியிருக்கிறார். அந்த ப்ளாஷ் பேக்கெல்லாம் படு சொதப்பல்.
yogi3

ஒரிஜினல் படத்தை பார்க்கும் போது டீனேஜ் பையன்களின் ஸ்லம் வாழ்கையையும், அதில் ஒருவனுடய மன மாறற்மும், அதனால் ஏற்படும் பிரசனைகளூம்,  நம் மனதில் ஒரு சின்ன நெகிழ்வை உருவாக்கும். இதில் என்ன செய்தாலும் அது வர மாட்டேன் என்கிறது. எந்த இடத்திலும், நம்மால் கதையோடு ஒட்ட முடியவில்லை. யாருக்கோ நடக்கிற உணர்வு தான் படம் முழுவதும். தெரியாத களனை கையிலெடுத்ததால் திண்டாடியிருக்கிறார். நமக்கு என்ன வருமோ அதை செய்வதுதான் உசிதம். அமீர் என்னாச்சு நல்லாத்தானே போயிட்டிருந்தது.?:(((( 

Tsosti (எ) யோகி – ரோகி

டிஸ்கி: இந்த படத்தை இரண்டு வருஷமாய் எடுக்க என்ன எழவு இருக்கிறது? ஒரு வேளை அஞ்சு லட்சம் அடி பிலிமில் ஷூட் பண்ணி, அதில் பதினாலாயிரம் அடி எடிட் பண்ணி, கொறைஞ்சது ஒரு 150 நாள் ஷுட் செய்தால் படம் ஹிட்டாயிரும்னு அமீர் நினைச்சி எடுத்திட்டிருந்தாரோ..?


Post a Comment

71 comments:

அத்திரி said...

நாந்தான் மொதல்ல

அத்திரி said...

//இந்த படத்தை இரண்டு வருஷமாய் எடுக்க என்ன எழவு இருக்கிறது? ஒரு வேளை அஞ்சு லட்சம் அடி பிலிமில் ஷூட் பண்ணி, அதில் பதினாலாயிரம் அடி எடிட் பண்ணி, கொறைஞ்சது ஒரு 150 நாள் ஷுட் செய்தால் படம் ஹிட்டாயிரும்னு அமீர் நினைச்சி எடுத்திட்டிருந்தாரோ..?
//

நோ டென்சன்.கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்................

அத்திரி said...

//பதிலாய் நாற்பது வய்து யூத்துகள்.//

பாதி கிழம்னு சொல்லுங்களேன்......ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

Raj said...

விடுங்க விடுங்க! அடுத்த படம் நல்லா கொடுத்துடுவாரு!

Cable சங்கர் said...

/விடுங்க விடுங்க! அடுத்த படம் நல்லா கொடுத்துடுவாரு!
//

அதுக்கு எப்படியும் ஒரு நாலு வருஷம் ஆகும்.. அப்ப பாக்கலாம்..

Raju said...

:-(

venkatapathy said...

ஐயோ., ஐயோ

creativemani said...

(வழக்கம் போல)இருநூறு ரூபாயை காப்பாற்றிக் கொடுத்த கேபிள் வாழ்க... :)

creativemani said...

// யோகி - ரோகி //
அடப் பாவமே.... (இளநிய அதிக விலைக்கு வச்சு வித்த கவுண்டமணி கதையா இல்ல ஆச்சு..)

பாலா said...

////கதை இவருடயதாம்./////

சு.சிவா... ப்ளீஸ்.. சொன்னா கேளுங்க...! இதுக்கெல்லாம் போயா.. கெணத்துல குதிக்கிறது..!!

:)

பாலா said...

///Tsosti (எ) யோகி – ரோகி///

உங்க நக்கலுக்கு அளவே இல்லையா?

Unknown said...

இவர்கள் ஹோம் வொர்க் சுத்தமாக செய்வதே இல்லை.

”சச்ச ஜுட்டா”வை “நினைத்தை
முடிப்பவன்(எம்.ஜி.ஆர்)”ஆக்கும் லெவலிதான் இன்னும் இருக்கிறார்கள்.

பாலாஜி சங்கர் said...

கொஞ்சம் காட்டம் குறைவாக சொல்லி இருக்கலாம்

கார்க்கிபவா said...

இயக்குனர்கள் இதை புரிஞ்சிக்கனும். கதைதான் ஹீரோன்னு சொல்றது எல்லாம் சரிதான். ஆனா ஆளாளுக்கு என்னென்ன வருமோ அதைத்தான் செயனும். இதுக்கு அமீர் கொடுத்த் பில்டப் இருக்கே!!!! சூப்பர் ஹீரோக்களே தேவலாம்..

Thamira said...

கிழிச்சுட்டீங்க கேபிள், இன்னிக்குப் போகலாம்னு இருந்தேன்.! பார்ப்போம்.

இருந்தாலும் இந்தக்கூட்டணி இப்படி காப்பி அடிக்கும்னு நினைக்கலை.

காப்பி அடிங்க.. வேணான்னு சொல்லலை, ஆனா நாசூக்கா நேட்டிவிட்டியோட பண்ணுங்க..

//அப்பாவாக வின்செண்ட் அசோகன், மனைவி சுவாதி, வேறு ஒருவனுக்கு கர்பமானவள் மனைவி என்று தெரிந்தே திருமணம் செய்து கொண்டு, அந்த காணாமல் போன குழந்தையை கொல்ல துடிப்பவன். அரைவேக்காட்டுதனமான திரைகதை ஆசிரியரின் சொந்த கற்பனை//
முடியலைன்னா விட்டுட வேண்டியதுதானே, ஏன் இப்பிடி மூளையை கசக்கி சொந்தமா அதுவும் சகிக்கமுடியாம சிந்திக்கணும்.?

என்னா பில்டப்புடா சாமீ..

Unknown said...

அப்ப படம் ஃப்ளாப்பா? நல்ல வேளை. ஒரு வேளை ஓடிருச்சினா அமீர் தொடர்ந்து ஹீரோவா நடிச்சிருவாரேன்னு பயந்தேன்.

Ganesan said...

இந்த படத்தை இரண்டு வருஷமாய் எடுக்க என்ன எழவு இருக்கிறது? ஒரு வேளை அஞ்சு லட்சம் அடி பிலிமில் ஷூட் பண்ணி, அதில் பதினாலாயிரம் அடி எடிட் பண்ணி, கொறைஞ்சது ஒரு 150 நாள் ஷுட் செய்தால் படம் ஹிட்டாயிரும்னு அமீர் நினைச்சி எடுத்திட்டிருந்தாரோ..?


யோவ். காசு உன் காசாய்யா?
எவன்வூட்டுதோ .


என்று மிச்சம வைக்காமல் ஒரிஜினல் படத்தின் எல்லா காட்சிகளும்.

அப்படி போடு.

முக்கியமாய் கொஞ்சம் கூட சென்னை ஸ்லாங்கில்லாம் மதுரை ஸ்லாங்கிலேயே இழுத்து இழுத்து பேசுகிறார்.

அமீரண்ணே இதல்லாம் தேவையாண்ணே, ஏண்ணே நம்மூரு பேர கெடுக்கிற,

பாத்துண்ணே, அடுத்த படத்திலயாவது அலப்பறைய காட்டுண்ணே.

பிரசன்னா கண்ணன் said...

அமீர எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.. இன்னக்கி சாயந்தரம் கண்டிப்பா போகலாம்ன்னு இருந்தேன்.. நீங்க என்னடான்னா இப்படி சொல்றீங்க..

பேசாம ஆர்யா 2 போயிற வேண்டியதுதான்.. (ரிங்கா ரிங்கா பாட்டுக்காகவே போயிருவேன்னு நெனைக்கிறேன்).. அதோட opening நல்ல இருக்குன்னு கேள்விப்பட்டேன்..நீங்க பாத்துட்டீங்களா??

Toto said...

இய‌க்குன‌ரா சிங்க‌ம் மாதிரி இருந்துட்டு இப்ப‌ ந‌டிக‌ரா பூனை மாதிரி ஆகிட்டாரே..இதெல்லாம் டிவிடி வ‌ராத‌ கால‌த்துல‌ செஞ்சிருக்க‌ வேண்டிய‌ வேலை..

-Toto
www.pixmonk.com

CS. Mohan Kumar said...

தல உங்களை மாதிரி இங்கிலீஷ் தமிழ்-ன்னு கலந்து கட்டி பார்த்தால் தான், இந்த மாதிரி ஜிகிடு வேலையெல்லாம் கண்டு பிடிக்க முடியும். இந்த comparison இல்லாமல் எழுதிய ஜெட் லி கூட படம் சொதப்பல் என்கிறார். நிச்சயம் உதை தான் படத்துக்கு என்பது நன்கு தெரிகிறது. நாங்க எல்லாம் Great escape.

Ganesan said...

படித்ததில் பிடித்தது--இப்படியும் ஒரு கலெக்டர்.

பதிவை பார்க்கவும்.

http://kaveriganesh.blogspot.com/

Beski said...

இது திரை விமர்சனமா?

ஜிகர்தண்டா Karthik said...

கேபிள் சார்... அமீர் என்ன நினைச்சுருப்பார்னா..
எங்க நீங்க கேளுங்களேன்...
கார்க்கி நீங்க கேளுங்களேன்..
ஆதி அண்ணே நீங்க கேளுங்களேன்..
அட.. யாரவது கேளுங்களேன்...
போங்க நான் சொல்ல மாட்டேன்...

வெற்றி said...

அட விடுங்கப்பா......அமீருங்கற நல்ல டைரக்டரு திரும்ப கெடச்சாருன்னு சந்தோசப்படுவோம்...

Ashok D said...

//கொஞ்சம் காட்டம் குறைவாக சொல்லி இருக்கலாம்//

repeatங்கன்னா...

குசும்பன் said...

நேற்று நண்பன் படத்தின் கதையை சொன்னதும் இது என்ன Tsosti கதை மாதிரியே இருக்கு என்றேன், அவார்ட் வாங்கிய படத்தைகூடவா அப்படியே சுடுவானுங்க? கால் முடமானவனிடம் திருடும் சீன் எல்லாம் இருக்கா அண்ணாச்சி?

joe vimal said...

இவர்கள் உலக படங்களை தமிழாக்க வேண்டும் என்று நினைகிறார்களே தவிர தமிழ் படங்களை உலக படமாக்க வேண்டும் என்று என் யோசிக்க மறுக்கிறார்கள்.கதைக்கா பஞ்சம் தமிழ் நாட்டில் .கதாசிரியர்களின் எண்ணிக்கை உயர வேண்டும் hollywood 100 வருடங்களுக்கு பிறகும் புதிய கதை தலத்தில் படம் எடுக்க முடியும் போது இவர்களுக்கு என்ன இன்னும் காப்பி அடித்துக்கொண்டு .

இதில் அமீர் அண்ணன் மக்கள் டி .வி விழாவில் ரஷ்ய படம் எல்லாம் போடுகிறீர்கள் தமிழ் படத்தையும் போடுங்கள் இதுவும் உலக படம் தான் என்றார் அதனுடைய அர்த்தம் இப்போது தான் விளங்குகிறது.

butterfly Surya said...

தலை.. என்ன இவ்வளவு கோவம்..??

Tsotsiயின் உல்டா தான் உ.த சொன்னாரு.. ஆனா இப்படி ஈயடிச்சான் காப்பியா..??


அமீர் திரைக்கதைன்னு கொஞ்சம் ஆவலாய் இருந்தேன்..

யாரைத்தான் நம்புவதோ இந்த பிளாக்கர் நெஞ்சம்ன்னு ....
பாட வேண்டியதுதான் போல

சரி ரைட்டு விடுங்க..நந்தலாலாவுக்கு வெயிட் பண்ணுவோம்..

guru said...

நல்ல வேளை உங்க உதவியால நான் தப்பிச்சேன்...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

உங்களால எங்களுக்கு பல நூறு ரூபாய் மிச்சம் தலைவரே. :-)))))))))

vettippayapullaiga said...

en arivu kannai thiranthutenga brother

யூர்கன் க்ருகியர் said...

திருடி (கதை மற்றும் காட்சிகள் ) எடுக்கப்பட்ட படத்தை திருட்டு வி சி டி யில் பார்ப்பது தவறா?

ARV Loshan said...

இவருமா? வாழ்க.

ஆசை யாரை விட்டது..
மற்றொரு படைப்புத் திருடன்.. :)

சங்கர் அண்ணே, நீங்கள் ஒரு களஞ்சியம்(இயக்குனரை சொல்லவில்லை)...
அமீர், மீண்டும் இயக்குனராக வாருங்கள்.. அது போதும்..

//யூர்கன் க்ருகியர் said...
திருடி (கதை மற்றும் காட்சிகள் ) எடுக்கப்பட்ட படத்தை திருட்டு வி சி டி யில் பார்ப்பது தவறா?
//

இல்லவே இல்லை.. நானும் அது தானே செய்யப் போறேன்.. நேரமிருந்தா..

மங்களூர் சிவா said...

டிஸ்கி சூப்பர்!

அகநாழிகை said...

கேபிள்ஜி,

மிகவும் அருமையான படம் Tsotsi. இரண்டு வருடங்களுக்கு முன் பார்த்தேன். சென்ற ஆண்டு இறுதியில் எஸ்.ராமகிருஷ்ணன் வலைப்பக்கத்தில் அப்படத்தின் விமர்சனம் படித்தபின் மறுபடியும் பார்த்தேன். படம் நெடுக ஒரு இடம் கூட தொய்வில்லாமல், அன்பு, பாசம், விரோதம், துரோகம் என எல்லா பரிமாணங்களையும் சொல்லியிருந்த படம் Tsotsi. Atol Fugard என்பவரின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். அவசியம் பார்க்க வேண்டிய படம்.
000
யோகி படம் நான் பார்க்கவில்லை. பார்க்கப்போவதும் இல்லை.
000
உங்கள் விமர்சனம் அருமை.

- பொன்.வாசுதேவன்

நால்ரோடு said...

இது போல மலையாளத்தில் ஒரு படம் வந்ததே

பின்னோக்கி said...

உங்கத் தொல்லை தாங்க முடியலை. கஷ்டப்பட்டு, யாரும் பார்த்துருக்க மாட்டாங்கன்னு நினைச்சு ஒரு தூரத்து தேசப்படத்த காப்பி அடிச்சா, அதையும் கண்டுபிடிச்சுடுறீங்க. அவங்க பின்ன எப்படித்தான் படம் எடுப்பாங்க சொல்லுங்க. டைரக்‌ஷன் சிவான்ன போதே டவுட் ஆனேன்.

பாலா said...

உதவி இயக்குனர்கள்.. என்னைத் தொடர்பு கொள்ளவும். யாருமே பார்த்திராத... பல மஹா மொக்கைப் படங்களை நான் பார்த்துள்ளேன்.

மரா said...

அண்ணாத்தே காலைல உங்க ப்ளாக் படிக்காம போயிட்டு 100ரூபாய் தெண்டம் பண்ணிட்டேன்.....கிரோம்பேட்டை வெற்றி தியேட்டரை விட்டு வெளியே வந்தவுடன் தங்களுக்கு mail அனுப்பலாம்னு இருந்தேன்...நீங்களே postmortem பண்ணிட்டீங்க..ரொம்ப சந்தோசம்...நந்தா பெரியசாமியப் பாராட்டி ஒரு வரி எழுதியிருக்கலாம்....

Romeoboy said...

படம் தேருமா ??

செந்தில் நாதன் Senthil Nathan said...

மறுபடியும் காப்பாத்திட்டிங்க!! நான் கண்டிப்பா படம் பார்க்க போறேன்.. Tsotsi-ய சொன்னேன்...

ஊர்சுற்றி said...

அம்புட்டுதேன்!

Pradeep said...

Thanks for Tsotsi sir. After seeing ur comments on that movie...i immd downloaded the movie and watched.....really it was good.....touching movie....Thanks for introduced such a good movie....

வஞ்சமில்லா said...

I've not watched the movie, not sure if i would. But complaining the movie being a copy cat of Tsotsi seems to be too much. People are critical and complaining, of too many things in this movie, when they accepted almost everything they are accusing about this movie when it came from others in other movies.

What about Avvai Shanmugi, Panchathanthiram, there are many more copy cats from lots of big guys like Kamal, Manirathnam, Shankar etc, you are saying because these movies are copy cat, one shouldnt watch?

I feel like something more is running behind all these reviews, rather just a movie review.

One of the things might be that people expected the same kinda aura like Paruthiveeran in this movie and they are not getting it and complaining.

Kabi said...

இதுவும் போச்சா, இந்த படம் ரிலீஸ் அவதுக்கு முன்னாடி பெரிய buildup வேற
இம்ம்ம்...எப்போ ஒரு நல்ல படம் வருமோ?

பெசொவி said...

// இந்த படத்தை இரண்டு வருஷமாய் எடுக்க என்ன எழவு இருக்கிறது? ஒரு வேளை அஞ்சு லட்சம் அடி பிலிமில் ஷூட் பண்ணி, அதில் பதினாலாயிரம் அடி எடிட் பண்ணி, கொறைஞ்சது ஒரு 150 நாள் ஷுட் செய்தால் படம் ஹிட்டாயிரும்னு அமீர் நினைச்சி எடுத்திட்டிருந்தாரோ..
//
எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி, படத்தையும் இழுத்தடித்து, படம் எடுக்கும் எல்லோருக்கும் இது ஒரு பாடம் என்றுதான் நினைக்கிறேன்.

ஷண்முகப்ரியன் said...

பசித்தவன் சாப்பிடும் போது உடனே சாப்பிடத் தொடங்கி விடுகிறானே தவிர,உணவின் recipe யை யார் சொன்னார்கள் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதில்லை.
அதே போலப் படம் நம்மை ஈர்த்து விட்டால், நாம் பிற பின்னணி விஷயங்களைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் படத்துடன் ஒன்றி விடுவோம் என்பதுதான் நிதர்சனம்.

NOWADAYS IT IS NOT EASY TO DELETE THE PRELOADED CONCEPTS OF THE VIEWERS AND MAKE THEM INDULGE IN THE MOVIE,THEY ARE WATCHING.
அதையும் தாண்டி வெற்றிப் படங்களைக் கொடுப்பவர்கள்,அறிவாளிகள்,அதிர்ஷ்டசாலிகள்.

தெளிவாக,நேர்மையாக,அழகாக உங்கள் பார்வையைச் சொல்லும் விமர்சனம்,ஷங்கர்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணா படம் பார்த்தேன். படம் சுமார்தான். அமீரின் பேட்டி படிச்சு பாருங்கள்:

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2009/November/281109c.asp

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணா படம் பார்த்தேன். படம் சுமார்தான். அமீரின் பேட்டி படிச்சு பாருங்கள்:

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2009/November/281109c.asp

மயிலாடுதுறை சிவா said...

சங்கர்

அமீர் கிட்டதட்ட 10 கோடி செலவு செய்துள்ளாரே?!

ஏன் இன்னும் 4 வருடம் ஆகும் என்று சொன்னீர்கள்?

ரொம்ப எதிர்பார்ப்பில் இருந்தேன் அமீரின் "யோகியை"!!!

மயிலாடுதுறை சிவா...

seval said...

padam

K.S.Nagarajan said...

ஏன் சார் விமர்சனம் லேட்டு? வெள்ளிக்கிழமை 9 மணிக்கு கூட இங்க வந்து பார்த்தேனே! அன்னிக்கு நைட் ஷோ போய்ட்டு வந்ததுல இருந்து மேல எறும்பு ஊர்ந்து போகிற மாதிரி ஒரு ஃபீலிங்!

இனிமே ரிலிஸ் அன்னிக்கே எப்படியாவது விமர்சனம் போட்டுடுங்க.. காசாவது மிச்சமாகும்!

Rafiq Raja said...

இதுவும் காப்பிதானா... அமீரிடம் சற்று அதிகம் எதிர்பார்த்தேன்.

தப்பிக்கை வைத்தற்கு நன்றி சங்கர் :)

ரஃபிக் ராஜா
காமிக்கியல்

Cable சங்கர் said...

@அத்திரி
அதுக்கென்ன..?:)

@அத்திரி

ஓகே.நீங்களே சொல்லிட்டீங்க

@ராஜ்
அதெப்படி..?

@ராஜூ
:(((((

Cable சங்கர் said...

@நான் கடவுள்

ஏன் ரெண்டு வாட்டி?

@அன்புடன் மணிகண்டன்
மரியாதையா ஒரு நூறை நமக்கு கொரியர் பண்ணிருங்க..:)

@ஹாலிவுட் பாலா
ஹா.. ஹா..அஹா..

@ஹாலிவுட் பாலா
:)(

Cable சங்கர் said...

@கே.ரவிஷங்கர்
ஆமாம் ரவி சார்

@பாலாஜி
இதுவே காட்டமா..?

@கார்க்கி
அந்த பில்டப்பினால் வந்த எரிச்சல் தான் இப்படி எழுத தூண்டியது..

@ஆதிமூலகிருஷ்ணன்
நான் கூட காப்பி அடிக்க கூடாதுன்னு சொல்லலை.. ஆனா இவங்க ஏதோ சினிமாவை காப்பாத்த வந்த தேவ தூதன் போல செய்யிற பில்டப் இருக்கே அப்பா முடியல..

Cable சங்கர் said...

@முகிலன்
அந்த மட்டும் சந்தோஷமே
@காவேரி கணேஷ்
யார் காசா இருந்தா என்ன ?
கேளுங்கண்ணே..

@பிரசன்னா
எனக்கு கூடத்தான் அமீரை பிடிக்கும் அதனாலதான் அவர் கிட்டேயிருந்து இந்த மாதிரியான படஙக்ள் வந்த துக்கத்தில எழுதினேன்

ஆர்யா 2 இன்னும்பாக்கல

Cable சங்கர் said...

@டோடோ
என்னது சிங்கமாதிரியா..இதுவெல்லாம் கொஞ்சம் ஓவர்

@மோகன் குமார்
நிச்சயம் நான் கம்பேரிசன் செய்து விமர்சிக்க வில்லை. அந்த ஒரிஜினல் படத்தின் நெகிழ்வை இவர்கள் கெடுத்துவிட்ட்டர்களே என்ற வருத்தமே

@காவெரி கணேஷ்
நிச்சயம் பார்க்கிறேன்

@அதிபிரதாபன்
அப்ப இது என்ன?

@கார்திக் விஸ்வநாதன்
நான் வரல் இந்த ஆட்டத்துக்கு

Cable சங்கர் said...

@அசோக்
என்ன ரிப்பீட்டு

@குசும்பன்
ஆமாண்ணே

@அபபிள் ஜோ
நல்ல கருத்து

@பட்டர் ப்ளை சூர்யா
அமீரின் திரைக்கதை என்று சொன்னால் காமெடியாய் இருக்கும்

@

Cable சங்கர் said...

@குரு
நன்றி

@ஸ்ரீ
என் பங்க அனுப்பிருங்க..


@வெட்டிபயபுள்ளைக
அப்படியா நன்றி

@யூர்கன் க்ருகியர்

அப்ப கூட நான் திருட்டு டிவிடியில பாக்க வேணாம்னுதான் சொல்வேன்

@லோஷன்
:)

@

Cable சங்கர் said...

@மங்களூர் சிவா
நன்றி

@அகநாழிகை
நிச்சயம் வாசு. நல்ல படம் டீன் ஏஜ் சிறுவர்களின் ஸ்லம் வாழ்ககையை, அவர்க்ளுடய உணர்வை கண் முன்னே ஓடும் ஒரு படம்..

@னால்ரோடு
ஆமா அதுவும் இதே படத்தின் உல்டா தான்

@பின்னோக்கி
:)

@ஹாலிவுட் பாலா
பாலாவிடம் யாரும் மெயில் செய்ய வேண்டாம் அவர்ரின் காப்பிரைட் என்கையில..:_)

@

Cable சங்கர் said...

@மயில்ராவணன்
ஏன் நந்தா பெரியசாமி உங்களுக்கு வேண்டியவரா.. இல்ல பாராட்டுற அளவுக்கு அவ்ர் என்ன செய்திட்டா இந்த படத்தில

@ரோமிபாய்
ப்:(((

@ஊர்சுற்றி
:)

@பிரதீப்
ஒரிஜினல் நல்லாவே இருக்கும்

@யெதுமில்லை
நான் காப்பி அடித்ததை பற்றி கூட பெரிதாய் கவலை படவில்லை.. அதில் உள்ள சாரத்தை சரியாய் கொடுத்திருந்தால் நிச்சயம் எனக்கு எந்த விதமான தனிப்பட்ட காழ்புணர்ச்சி கிடையாது.. ஆனால் இப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டு அவர்கள் ஏதோ உலக சினிமா எடுத்துவிட்டோம்.. என்றும் ஒரே பில்டப் செய்வது.. ஒவரே..

Cable சங்கர் said...

@ஷண்முகப்பிரியன்

நீஙக் தான் சரியா புரிஞ்சிட்டு இருக்கீங்க..

@ரமேஷ் ரொமப் நல்லவன்
அது பெரிய காமெடி

@ம்யிலாடுதுறை சிவா
:(

@

Cable சங்கர் said...

@சேவல்
என்ன படம்..?

@கே.எஸ். நாகராஜன்
அதுக்கு கொஞ்சம் செலவாகுமே

@ரபீக் ராஜா
அதே தப்பை தான் நானும் செய்திருந்தேன்..

Unknown said...

அப்ப இந்த படமும் மொக்க தானா. அப்ப தமிழ கடைசியாய் வந்த நல்ல படம் எதுன்னு சொல்லுங்க!

வால்பையன் said...

யூத்துன்னா 40 வயசா?

Rajesh V Ravanappan said...

@நமக்கு என்ன வருமோ அதை செய்வதுதான் உசிதம்..

அதனால தான் கேபிள் இன்னமும் விமர்சனம் மட்டுமே பண்ணறார்..

shortfilmindia.com said...

@movie poster
ஈரம், உன்னை போல் ஒருவன்,
ஓரளவுக்கு ஓகே கண்டேன் காதலை..

கேபிள் சங்கர்

shortfilmindia.com said...

//யூத்துன்னா 40 வயசா?//

ஆமாம்..:)

shortfilmindia.com said...

//அதனால தான் கேபிள் இன்னமும் விமர்சனம் மட்டுமே பண்ணறார்.//

ப்ரியன் என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். ஒரு கூற்று உண்மையே.. நான் எந்தஒரு விஷ்யத்தை செய்தாலும் அதில் தனித்து தெரியாமல் போக மாட்டேன். இல்லாவிட்டால் இறங்கவே மாட்டேன். இன்றைக்கு நான் விமர்சனம் எழுதுகிறேன். அதில் நான் யார் என்பது என்னை வந்து படித்துவிட்டு ஆதரித்தோ, அல்லது உங்களை போல பகடியோ செய்யும் அளவிற்கு இந்த துறையில் வளர்ந்து கொண்டுதானிருக்கிறேன்.

அப்படி ரெம்ப கஷ்டப்பட்டீர்கள் என்றால் ஒரு ரெண்டு கோடி எடுத்து வாருங்கள். நான் யார் என்று நிருபிக்கிறேன். நன்றி

அப்பாவி தமிழன் said...

படம் copy யா இல்லையா என்பதை விட்டு விடுவோம் ஆனால் நீங்கள் சொல்லும் அளவிற்கு ஒன்றும் மோசம் இல்லை ...உங்களின் அயன் படம் சூப்பர் என்ற விமர்சனம் பார்த்த போதே பின்னூட்டம் போட வேண்டும் என நினைத்தேன் (அயன் படத்தோடு ஒப்பிடும் போது யோகி பத்து மடங்கு பரவாயில்லை , ஆனால் இதை இழவு என்கிறீர்கள் அயனை சூப்பர் என்கிறீர்கள் )..இன்று தான் போட முடிந்தது .....
Tamilcinema is incarcerated by actors + Directors+ Reviewers இது முழுக்க முழுக்க என் சொந்த கருத்து மட்டுமே