சென்னை மாநகராட்சிக்கு 1900 கோடியை தமிழக முதலமைச்சர், இதயதெய்வம், புரட்சித் தலைவி, அம்மா அவர்கள் ஒரே ஆண்டில் ஒதுக்கியிருப்பதாகவும், இதே சென்ற ஆட்சியில் 1500 கோடி ஐந்து ஆண்டுகளுக்கு ஒதுக்கியதாய் மேயர் அவர்கள் பெருமையாய் அறிக்கை விட்டிருக்கிறார். சென்னையில் உள்ள பல தெருக்களில் குப்பை மலையாய் தேங்கிக் கிடக்கிறது. மழைக்கு முன் போட்ட சாலைகள் அனைத்தும் ஒரே மழையில் மீண்டும் பள்ளதாக்குகளாய் மாறி போய் விட்டது. ஐந்து வருஷத்துக்கு 1500 கோடி செலவு செய்த சென்ற அரசில் இவ்வளவு மோசமில்லை. ஆனால் ஒரே ஆண்டில்1900 கோடி செலவுக்கு கொடுத்தும் நாறுவது ஏன்? என்று யாராவது அறிக்கை விட்டால் நல்லாருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@விஸ்வரூபம்
விஸ்வரூபம் படத்தை வெளியாகும் நாள் அன்றே டிடிஎச் ஒளிபரப்பில் ஒரு நாள் மட்டும் ப்ரீமியம் விலையில் வெளியிட கமல் முடிவெடுத்திருப்பதாய் ஒரு செய்தி வலம் வருகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் கமல் ஒரு புதிய வியாபார யுக்தியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவதாய் அமையும். வழக்கம் போல விநியோகஸ்தர்கள் இதனை எதிர்க்கிறார்கள் என்று கேள்வி. சாட்டிலைட் மற்றும் கேபிள் டிவி ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும் என்று சினிமாக்காரர்கள் எல்லாரும் ஊர்வலம் போன போது, “இது டெக்னாலஜியின் வளர்ச்சி அதனால் அதனுடன் சேர்ந்து வளர கற்றுக் கொள்ள வேண்டும்” என்று சொன்னதற்காக கருங்காலி என்று பட்டம் கொடுத்தார்கள். ஆனால் இன்றைக்கு படமெடுப்பதே சாட்டிலைட் தொலைக்காட்சிக்காக என்றாகிவிட்ட நிலை இருக்கிறது. படம் வெளியான ஒரே வாரத்தில் தமிழில் முதன் முதலாய் கமலின் நாயகன் படம் ஒரிஜினல் வீடியோ கேசட் வெளியானது. படமும் வெற்றி, கேசட்டும் வெற்றிகரமாக விற்றது. அது போல தமிழ் சினிமாவில் வெளிநாட்டு எப்.எம்.எஸ் மார்க்கெட்டை யூரோப், ஏசியா, மிடில் ஈஸ்ட் என்று தனித்தனியே பெரிய பட்ஜெட் படங்களுக்கான மார்க்கெட்டை கண்டுபிடித்து விற்பனை செய்ய ஆரம்பித்ததும் கமல் தான். இப்படி பல விஷயங்களுக்கு முன்னோடியாய் திகழும் கமலை இன்று பலர் திட்டினாலும் பிற்காலத்தில் நிச்சயம் வாழ்த்துவார்கள். படம் வெளியான ரெண்டாவது வாரத்தில் சாட்டிலைட் உரிமத்தை விற்ற பெருமை பிரமிட் நடராஜனுக்கே உண்டு. ஆனால் அன்றைய நிலையில் தயாரிப்பாளர்கள் எல்லாம் வீடு தேடி வந்து ப்ரச்சனை செய்தார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இன்று அதுதான் பல தயாரிப்பாளர்களின் முதலீட்டில் அறுபது முதல் எழுபது சதவிகித வருமானத்தையே தரும் விஷயமாய் ஆகிவிட்டது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
ஏர்டெல்லுக்கும், ஏர்செல்லுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை. அந்தப் பிரச்சனையின் காரணமாய் இரண்டு நெட்வொர்க்குகளுக்குள்ளே யார் குறுஞ்செய்தி அனுப்பினாலும் போகாது. சரி.. அவங்களுக்குள்ள பிரச்சனைன்னு கஸ்டமருக்கு சொல்லணுமா வேணாமா? அதுவும் சொல்லலை. ஆனா குறுஞ்செய்திக்கு எடுக்கிற காசை மட்டும் விடாம எடுத்துக்கிறாங்க. விஷயம் கொஞ்சம் பெருசாகி வெளியே வந்தா ட்ராய்ல கேஸ் போட்டிருக்கோம் சரியாயிரும்னு சொன்னாங்க. நீங்க சண்ட போடுங்க கேஸு போடுங்க. எங்க குறுஞ்செய்தி பேக்க்குக்கு வாங்கின காசை திரும்ப கொடுப்பியா மாட்டியா? இந்த லட்சணத்துல வோடாபோனும் லிஸ்டுல சேர்திருச்சு. இவனுங்க காசுன்னா மட்டும் விடாம வாங்கிக்கிற்வனுங்க.. நம்ம காசுன்னா கொடுத்திர வேண்டியதுதானே.. அது மட்டும் மாட்டானுங்க. அதனால நாம கேட்காம விட்டுற முடியுமா? உடனே எல்லோரும் அவங்க அவங்க கஸ்டமர் கேருக்கு போன் செய்து எங்களுக்கான காசை திரும்ப அக்கவுண்டுல ஏத்தலைன்னா உங்க போன் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லுங்க. போஸ்ட்பெயிட் ஆளுங்க எல்லாம் பில்லு கட்ட மாட்டோம்னு சொல்லுங்க. நிச்சயம் இதற்கு பதில் கிடைக்கும். நாளையிலேர்ந்து எல்லோரும் அவங்க அவங்க கஸ்டமர் கேருக்கு போன் செய்யுங்க.. நோடல் ஆபீஸருக்கு மெயில் போடுங்க.கேட்டால் கிடைக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
மானாமதுரை போலீஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பாரதி,பிரபு இருவரையும் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டதை எதிர்த்து மனித உரிமை குழுக்கள் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. எதிர்த்து போஸ்டர் ஒட்டிய அக்குழுவினர் சிலரை போலீஸார் கைதும் செய்திருப்பதாய் தகவல்.போலீஸையே அடித்து கொன்றவர்கள் மீது இம்மாதிரியான நடவடிக்கைத்தான் நடக்கும் என்று எதிர்பார்த்ததுதான். அதற்கேற்றார்ப் போல வெள்ளைத்துரையை அங்கே ட்ரான்ஸ்பர் செய்ததிலிருந்து இந்தச் செய்தியை பலரும் எதிர்பார்க்க, அதன்படியே நடந்திருப்பது நெருடலாகவே இருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
மானாமதுரை போலீஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பாரதி,பிரபு இருவரையும் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டதை எதிர்த்து மனித உரிமை குழுக்கள் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. எதிர்த்து போஸ்டர் ஒட்டிய அக்குழுவினர் சிலரை போலீஸார் கைதும் செய்திருப்பதாய் தகவல்.போலீஸையே அடித்து கொன்றவர்கள் மீது இம்மாதிரியான நடவடிக்கைத்தான் நடக்கும் என்று எதிர்பார்த்ததுதான். அதற்கேற்றார்ப் போல வெள்ளைத்துரையை அங்கே ட்ரான்ஸ்பர் செய்ததிலிருந்து இந்தச் செய்தியை பலரும் எதிர்பார்க்க, அதன்படியே நடந்திருப்பது நெருடலாகவே இருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@
ஹிண்டுவில் ரெண்டு நாளாக ஒரு தொடர் போல விஷயத்தை இரண்டாம் பக்கத்தில் கார்த்திக் என்பவர் எழுதி வருகிறார். அவரது லேப்டாப்பை எக்ஸ்பிரஸ் அவின்யூவில் பார்க் செய்யப்பட்ட காரிலிருந்து திருடி போனதைப் பற்றி மிக சுவாரஸ்யமான நடையில் எழுதியிருந்தார். திருடியவர் பற்றிய லீட் அங்கேயிருந்து எடுத்த சர்வலைன்ஸ் கேமரா புட்டேஜிலிருந்து கிடைத்திருக்கிறது. திருடியதாய் நம்பப்படும் நபர் கார் பார்க்கிங்கில் காரை வைத்துவிட்டு கிளம்பாமல் காரிலேயே இருந்தபடி அரை மணி நேரத்திற்கு ஒரு முறை காரை மட்டும் மாற்றி மாற்றி பார்க் செய்தபடி இருந்திருப்பதும், கார்த்திகின் காரின் அருகில் அவரது காரை பார்க் செய்துவிட்டு, காரை சுற்றிச் சுற்றி வந்ததும் பதிவாகியிருக்கிறது. மணிக்கணக்கில் கணக்குப் போட்டு காசைப் பிடுங்கும் இந்த மாலில் அங்கே வருகிறவர்களை கண்காணிக்க, உதவ ஆட்களை போடுவதில்லை. சரி சர்வலைன்ஸ் கேமரா வைத்திருக்கிறார்களே.. அதை கவனிக்கவாவது யாராவது ஆளைப் போட்டிருந்தால் இந்த தவறு நிச்சயம் நடந்திருக்காது. கொள்ளையடிக்கும் பார்க்கிங் சார்ஜை வாங்கிக் கொண்டு இப்படி அலட்சியமாய் இருக்கும் இம்மாதிரியான மால்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிகழ்வை குறித்து கம்ப்ளெயிண்ட் கொடுத்த கார்த்திக்கு கிடைத்த போலீஸ் அனுபவம் அது ஒரு தனிக்கதை.
@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
குறும்படம்
நேற்று முன் தினம் “நாய் சேகர்” என்கிற குறும்பட வெளியீட்டிற்கு அழைத்திருந்தார்கள். குறும்படத்தை நான் வெளியிட, லயோலா கல்லூரி, மீடியா பிரிவின் ஹெ.ஓ.டியான புரபசர் லாரன்ஸ் ஜெயக்குமார் பெற்றுக் கொண்டார். எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கியவர் புஷ்பநாதன். டெக்னிக்கலாய் சில நிறை குறைகள் இருந்தாலும் சுவாரஸ்யமான துப்பறியும் சாம்பு போன்ற ஒரு கதையை நகைச்சுவையாய் சொல்லியிருந்தார். அவருக்கு வாழ்த்துக்கள். நடித்த நாக்க மூக்க செந்தில், கதாநாயகியாய் அநியாயமாய் படத்தில் வெட்கப்பட்ட அந்தப் பெண். மளிகை கடை ஓனராக வ்ந்த பெரியவரின் கேரக்டர் இண்ட்ரஸ்டிங். ஒரு காட்சியில் ஹீரோ ஒரு நாய்க்கு பிஸ்கெட் போட்டுக் கொண்டிருக்க, அப்போது அங்கே வண்டி ஓட்டி வரும் இன்ஸ்பெக்டர் அவர்களைப் பார்த்து “ரெண்டு நாயும் ஓரமா போய் பிஸ்கட் சாப்பிடுங்க” என்பார். சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
கள்ளக்காதல் செய்யததாக சொல்லப்படும் ஆண் பெண் படத்தைப் பார்க்கும் போது ஒரிஜினல் காதலே வராது. இதில் எப்படி கள்ளக் காதல்?#டவுட்டு
சரவணபவன் ஃபாஸ்ட்புட்டில் மதிய சாப்பாடு 50க்கு ஆரம்பித்து இப்போ 65 அப்பளம் தனியா வாங்கணுமா 7ரூபாக்கு இதை கேட்க ஆருமேயில்லையா?
தினக்குடிகாரர்கள் கார்திகை மாச சாமியாகி செய்யும் அலம்பல் தாங்கல.. ஐய்யப்பா இதை நீ கேட்க மாட்டியா?
The list provided by a website regarding the highest grossing films is fishy
எனக்கென்னவோ க்ளைமாக்ஸில் யார் குரல்வளையையோ கடித்துக் கொள்ளப் போகிறார் என்று தோன்றுகிறது. # என்ன படம்னு கண்டுபிடிங்க பாப்போம்.
என்னைப் பற்றி அறியாமல், என்னை வாழ்கையை வாழாமல் என்னை விமர்சிப்பதற்கு உனக்கு தகுதியில்லை.
உனக்காக தன் எல்லா அன்பையும், காதலையும் ஒருத்தி அளிக்கிறாள் என்றால் பின்னாளில் நீ அவளின் பொசஸிவ் தனத்தால் இம்சிக்கபடுவாய் என்று அர்த்தம் :)
சுஜாதாவின் கனவு தொழிற்சாலையில் வரும் மனோன்மணி கேரக்டர் யாருக்காவது ஞாபகம் இருக்கா?
அத்திப்பூக்கள் இன்னும் எத்தனை நாளைக்கு தான் ஓடும்?
@@@@@@@@@@@@@@
கமல்ஹாசனின் திரை வாழ்க்கையைப் பற்றி அவரின் பேச்சுக்களோடு, ஒரு கார்டூன் போன்ற வீடியோவை ரஜினி என்கிறவர் வரைந்து யூ ட்யூபில் அப்லோட் செய்திருக்கிறார். க்ரேட் ஒர்க்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
Guddi ஜெயபாதுரி நடித்த வெளியான சூப்பர் ஹிட் படம். இப்படத்தில் வாணிஜெயராம் பாடி ஹிட்டான Hum ko Manki Shakthi" என்கிற பாடல் பெரிய ஹிட். எல்லா பாடல்களையும் வாணி ஜெயராம் பாடியதாய்த்தான் நினைவு. ஆனாலும் எனக்கு இந்தப்பாடல் தான் மிகவும் பிடிக்கும். ஜெயபாதுரியின் முகத்திலிருக்கும் துள்ளல். இன்னொசென்ஸோடு வாணிஜெயராமின் அற்புதமாக குரலில் வாவ்..வாவ்... இப்படத்தின் பாடல்களின் ஹிட்டினால் வாணிஜெயராமை, வட இந்திய பாடகிகள் எல்லோரும் சேர்ந்து ப்ளான் செய்து இந்தி திரையுலகத்திலிருந்து துரத்திவிட்டதாய் கதைகள் கூட உண்டு. இதே நிலை எஸ்.பி.பிக்கு சொல்வார்கள். தமிழில் இந்தப் படம் சினிமா பைத்தியம் என்கிற பெயரில் ஜெயசித்ரா, கமல் நடித்து வெளிவந்தது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Kid walks on his parents having sex* "Dad what u doing?" Dad: "we are makin you a brother or sister" Kid: "do her doggie style, I want a puppy"
அடல்ட் கார்னர்
Kid walks on his parents having sex* "Dad what u doing?" Dad: "we are makin you a brother or sister" Kid: "do her doggie style, I want a puppy"
கேபிள் சங்கர்
Comments
MNP என்ற ஆயுதத்தை கையில் எடுத்தால் கஸ்டமர் கேர் ஆட்களே உங்களுக்கு பதறியடித்து கால் செய்து வேறு நெட்வொர்க்கிற்கு மாறிவிட வேண்டாமென தடவிக்கொடுக்க வாய்ப்புண்டு...
ஆனால், எல்லா நெட்வொர்க் ஆட்களும் கூட்டுக்களவாணிகள் என்பதால் அங்கே மாறினாலும் அது பிரச்சனைகள் தொடரலாம்...
எனவே, நேரடியாக நோடல் ஆபிசர், அப்பிலட் அத்தாரிட்டி, TRAI என்று அணுகினால் பிரச்சனைகள் தீரலாம்...
Unmai......
ஒரே நாளில் அகில இந்திய புகழ் பெற காரணமான இந்தப் பாடல் , அந்த வருடத்தின் பிலிம் பேர் உட்பட அனைத்து விருதுகளும் வாங்கி சேர்ந்து புகழின் உச்சத்தை தொட்டப் பாடல்!!
இது போல் "சினிமா பைத்தியம்" படத்தில் இந்தப் பாடலுக்கு இணையான பாடலைப் பாடியவர் வாணி தான்..
" என் உள்ளம் அழகான வெள்ளித் திரை..." ஞாபகம் இருக்கிறதா..?
மிக்க நன்றி ....
பலே பலே
முக்தா சீனிவாசன் நஷ்டம் , ஜீவி தற்கொலை , மணிரத்னம் உடல் நிலை பாதிப்பு .
Thanks for the cartoon type video on Kamal. Great work by Rajnibabu.
-R. J.
நல்ல கொத்து பரோட்டா தான். என்ன கொஞ்சம் தி.மு.க. ஆதரவு தான் கொஞ்சம் தூக்கல். நன்றி.
எழுத்தாளருக்கு இளையராஜாவையும் பிடிக்காது கமலையும் பிடிக்காது.
எனவே தனது குரு (!!!!) எண்ணங்களை பிரதிபலித்து இப்படி சேறு வாரி இறைத்து வருகின்றார. இவர் ஏற்கனவே உலக சினிமா ரசிகன் என்ற பதிவரிடம் செமத்தியாக அடி வாங்கியவர்.
ஜீவி இறந்தது 2003ல் நாயகன் எடுத்தது 1987ல்.
சம்மந்தமே இல்லாமல் இந்த இரண்டையும் இணைத்ததன் மூலம் இவர்களுக்கு கமல் மீது இருக்கும் வக்கிர வெறி வெளிப்படையாக தெரிகின்றது.
அடுத்த டார்கெட் இளையராஜா.
"முக்தா சீனிவாசன் நஷ்டம்" முக்தா எங்கே நஷ்டம் அடைந்தார். அவர்தான் படத்தை முழுமையாக ஜீவிக்கு விற்றுவிட்டு பொய் விட்டார்.
Adhiradi Sornakka, I have a doubt that Charu must be writing in the name of Pichaikaaran. All his blogs are just Vomits and nothing else.
உண்மையில் சாரு மூன்று நாய்கள் வளர்க்கின்றார். அதில் இரண்டு நாய்களுக்கு நான்கு கால்கள். ஒரு நாய்க்கு இரண்டு கால், இரண்டு கை