என்னுடய ஸ்டார் சிட்டி பைக்கிற்கு இன்ஷூரன்ஸ் முடிந்துவிட்டது. அதை புதுப்பிக்க யுனைட்டெட் இந்தியா இன்ஷூரன்ஸுக்கு சென்றிருந்தேன். முதலில் அவர்கள் கொடுத்த அட்ரஸே தவறாய் இருந்தது. அல்லது நார்த் உஸ்மான் சாலையில் நம்பர் கொடுத்தவன் தப்பு. ஒரிஜினல் அட்ரஸ் ஒரு முனையில் என்றால் பேப்பரில் இருந்த அட்ரஸ் இன்னொரு மூலையில். ஒரு வழியாய் அவர்களுக்கே பல முறை போன் செய்து சரியான அட்ரஸை வாங்கிக் கொண்டு சென்றேன். உள்ளே சென்று என் இன்ஷூரன்ஸ் புதுப்பிக்க கட்டச் சொல்லி வந்த தொகையை கட்ட பில் கவுண்டரில் நின்ற போது அந்த அம்மணி எதிரில் இருந்த அப்ரைசல் கவுண்டரில் அமெளண்ட் கேட்டு வாருங்கள் என்றார். அதான் பில்லில் போட்டிருக்கிறீர்களே என்று கேட்ட போது, அவரை கேட்டுக்கங்க என்றார். சரி என்று அவரிடம் போய் நீட்டினேன். அவர் என் ரின்னியூவல் அமெளண்டை பார்த்துவிட்டு, கம்ப்யூட்டரை எல்லாம் செக் செய்துவிட்டு, எனக்கு போட்டிருந்த தொகையை விட அறுபது ருபாய் அதிகமாய் கட்டச் சொன்னார். அப்புறம் அவர் கேட்ட கேள்வி தான் டாப். உங்க வண்டி என்னா வண்டி? என்றார். ஏன் அது உங்கள் இன்ஷூரன்ஸ் டேட்டாவில் இல்லையா? என்றேன். என் ஆர்சிபுக் டீடெயில் எல்லாம் இருக்குமே அதில் போட்டிருக்குமே? அப்புறம் எதை வைத்து அப்ரைஸல் செய்கிறீர்கள்? எனக்கு இவ்வளவு தான் கட்ட வேண்டும் என்று பில் க்ளெயிம் செய்த பின் எப்படி நீங்கள் அதிகமாக தொகை கேட்க முடியும்? நீங்கள் என்ன தான் பில் கொடுத்தாலும், அதற்கான காரணம் என்ன? எதற்காக என்னுடய ஆர்.சி புக் ஜெராக்சை எடுத்து வரச் சொல்லுகிறீர்கள்? என்னுடய ஆர்.சி புக் டேட்ட்டாவெல்லாம் எங்கே? என்று தொடர் கேள்வி கேட்டதும், என் பேப்பரை என்னிடம் கொடுத்து எதிர் ரூமில் இருந்த ஒரு பெரிய ஆபீசர் அறையை காட்டி அவரிடம் கேட்க சொன்னார். எனக்கு கடுப்பாக ஆரம்பித்தது.
ரூமிலிருந்த அம்மணி.. சார் அது அப்படித்தான் சார். அதாவது வண்டிய முதல் டைம் கம்பெனியில் இருக்கிற ஏஜெண்ட் பல்கா பண்ணிக் கொடுக்கிறதுனால அவங்களுக்கு 20 பர்செண்ட் டிஸ்கவுண்ட் உண்டு. ஆனால் உங்களுக்கு இந்த வருஷம் ரென்னியூவல் செய்யும் போது கிடைக்காது அதனால் தான் அமெளண்ட் டிபர் ஆவுது. “என்னாங்க அநியாயம் இது எங்கயோ மொத்தமாய் சாப்பா போட்டு கொடுக்கிறவனுக்கு கொடுக்கிற ஆபரைக் கூட நேர வந்து பணம் கட்டுற எனக்கு தர மாட்டேன்னுறீங்க? சரி.. என் வண்டி டேட்டா எல்லாம் எங்க? ஏன் என் கிட்ட ஜெராக்ஸ் கேக்குறீங்க? அது வந்துங்க.. ஆர்.சி புக் புது வண்டி எடுத்து பத்து நாள் கழித்துதான் வரும். அதனால் சேஸிஸ் நம்பர், இன்ஜின் நம்பர் போட்டு இன்ஷூரன்ஸ் கொடுத்திருவோம். வண்டி ஆர்.சி பேப்பரை நீங்க கொண்டு வர ஜெராக்ஸை வச்சி பின்னாடி டேலி பண்ணிப்போம். அப்புறம் அந்த அமெளண்ட் வித்யாசம் ஆகுறது எப்படி? அதுக்கு எப்படி கணக்கு போடறீங்க? என்று கேட்டதும், அதெல்லாம் எனக்கு தெரியாதுசார்.. அதோ அந்த கார்னர் டேபிளில்ல இருக்கும் ஒருவரை காட்டி அவர் தான் பில் க்ளெயிம் அனுப்புற்வரு அவரு கிட்ட போய் கேளுங்க. என்றார். எனக்கு சரி கோபம் வந்து நட்ட நடு ஹாலில் கத்த ஆரம்பித்தது, அவரே எழுந்து வந்தார். மிக அமைதியாய் என் பில்லின் பின்னால் ஒரு க்ளாசைக் காட்டினார். அதில் அனுப்பபடும் தொகைக்கும், கட்டபட வேண்டிய தொகைக்கும் வித்யாசம் வரலாம் என்று போட்டிருந்தது. சரி அப்படியென்றால் என் வண்டி என்னவென்று சொல்லுங்க. என் ஆர்.சி புக் டீடெயிலை காட்டுங்க, எப்படி கால்குலேட் பண்றீங்க? என்றதும், அதெல்லாம் சொல்ல முடியாதுங்க உங்க ஆர்.சி புக் ஜெராக்ஸ் கொடுங்க இல்லாட்டி நான் இன்ஷூரன்ஸ் ரென்யூவ் பண்ண முடியாது. ஐ.ஆர்.டிலேயே ரூல்ஸ் இருக்கு. நான் லாயர் தான் நீங்க கேஸ் போட்டுக்கங்க என்றார்.
ஐ.ஆர்டிலேயே ரூல்ஸ் இருந்திச்சின்னா அதை எனக்கு காட்டுங்க. அப்ப என் ஆர்சி புக் டீடெயிலை எனக்கு கொடுங்க.. இல்லாட்டி என் டீடெயில் தொலைஞ்சிருச்சுன்னு எனக்கு லெட்டர் கொடுங்க.. பணம் வாங்க முடியாது என்று எழுதிக் கொடுங்க. வண்டின்னு ஒண்ணு இருக்கா இல்லையான்னு தெரியாமயே நீங்க இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட் வண்டி வாங்கின அன்னைக்கே ஆன்லைன்ல போட்டு கொடுத்திடறீங்க. ஒரு வேளை நாளை பின்ன வண்டி டீடெயில் மாறியிருந்தது என்றால் என்ன பண்ணுவீங்க? உங்க கிட்ட எவனும் க்ளைய்முக்கு வரதில்லை என்பதினால் தான் இவ்வளவு பொறுப்பற்ற தன்மையுடன் இருக்கிறீர்கள்?. எல்லாவற்றிக்கும் எனக்கு எழுத்து மூலமாய் தேவை. இல்லாவிட்டால் இப்போது இங்கேயிருந்து போக மாட்டேன். என்றது. ஏதுவும் பேசாமல் அப்ரைசலில் இருந்தவர் சார்.. இங்க வாங்க என்று என் க்ளெயிமில் இருந்த இன்ஜின் நம்பர், சேசிஸ் நம்பரைப் போட்டு, உங்களது என்ன வ்ண்டி என்று மீண்டும் கேட்டார். ஸ்டார் சிட்டி என்றேன். அதையும் போட்டு, அறுபது ரூபாய் அதிகமாய் கேட்டவர் அதைவிட குறைவாய் ஒரு தொகையை சொல்லி கட்டிருங்க.. இனிமே இந்த மாதிரி நடக்காம பாத்துக்குறோம். என்று சமாதானப்படுத்தி அனுப்பினார்.
வண்டியைப் பார்க்காமலேயே அட்லீஸ்ட் ஆர்.சி புக் காப்பி கூட இல்லாமல் இன்ஷூரன்ஸ் செய்கிறார்களே ஒரு வேளை ஏதோ ஒரு விபத்து நடந்து விட்டது. இவர்கள் வண்டியில் சொன்ன டீடெயிலும், மற்ற விஷயங்களும் சரியாக இல்லாவிட்டால் இதே இன்ஷூரன்ஸ் கம்பெனி பணம் கொடுக்காமல் இழுத்தடிக்கும். எனக்கு தெரிந்த வரை இது மிக அநியாயம் எவனோ ஒரு வண்டி டீலர் பணம் சம்பாதிக்க, இன்ஷூரன்ஸ் கம்பெனி நிறைய பாலிசி போட வேண்டி, சட்டத்தை வளைத்துக் கொண்டு இம்மாதிரி செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. இது பற்றி மேலும் விவரங்கள் தெரிந்தால் சொல்லுங்க அதை வைத்து மேல் முறையீடு செய்யவிருக்கிறேன். வெளியே வந்து என் இன்ஷூரன்ஸில் வண்டி சேசிஸ் மற்றும் இன்ஜின் நம்பரை செக் செய்துவிட்டு வண்டி கலரை பார்த்தேன் அதில் சிகப்பு- கருப்பு என்று போட்டிருந்தது. என் வண்டி கருப்பில் சிகப்பு டிசைனை உடையது.
கேபிள் சங்கர்
Comments
http://www.amazon.com/Happy-Without-Being-Perfect-Perfection/dp/0307354318
அனா என்ன நீங்க பிரபலமா இருக்கறதனால (கொஞ்சம்) ஓரளவு போராட்ட குணம் இருந்ததால வுங்களுக்கு கரெக்ட் அனா அமௌன்ட் (கொறச்சி) போட்டாங்க, நீங்க கத்தாம இருந்த அவளோ தான் (நார்மல் அஹ background இல்லாம இருந்த சுத்தமா ரெஸ்போன்ஸ் இருக்காது, வுன்னல என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ நு சொல்லிடுவனுங்க! (இது தான் மனுஷன் பிரச்சினை! போராடுவதற்கு எல்லோராலும் இயலுவது இல்லை) சிலருக்கு மனசு இருக்கும் நேரம் இருப்பதில்ல!
நல்ல பதிவு தொடரட்டும் வுங்கள் சேவை!
அன்புடன்,
JP
முழுக்க முழுக்க வெளிநாட்டு காப்புரிமைகளின் சுரண்டல் நடந்து கொண்டே இருக்கிறது, கைகூலி அரசு என்ன செய்யும் ? பாதுகாப்பு தானே கொடுக்கும்
இவங்களே இப்படின்னா தனியார் இன்சூரன்ஸ் கூத்து என்னவெல்லாம் இருக்கும்???
எவ்ளோ ப்ரீமியம் கட்டறீங்களோ அதுக்கு தக்க வேல்யூவ குறைப்பாங்க...அதில்லாட்டியும் ஒவ்வொரு வருடத்துக்கும் 15% வேல்யூ கட்டாயமா குறைக்கனும்கறது கம்பேணி ரூல்ஸ்...
சரி...விடுங்க..யுனைட்டட் இன்ஷ்யூரன்ஸ் கம்பெணிங்கறதால உங்களால கேள்வி கேட்க முடிஞ்சது...நாம்பாக்கறேன் நாம்பாக்கறேன் நான் கம்பேணியா இருந்தா மும்பாய்க்கு போனைப்போட்டு 1டூ9வரைக்கும் எல்லா பட்டனையும் அமுக்கி உங்க தாவு இல்ல தீர்ந்துபோயிருக்கும்...
ஒருத்தன் கல்யாணம் பண்ணினானாம், பல மாதமாப் பல தடவைப் பண்ணியும் கொழந்த இல்லையாம், என்னடா கொடுமைன்னு பொண்ணோட அப்பன்கிட்ட என்ன பரிகாரம் செய்யலாம்னு கேட்டானாம், அப்பன் சொன்னானாம்.
என் மக வயசுக்கு வரட்டும் அது வரை வெய்ட் பண்ணுங்க அப்பறம் பாக்கலாம்னு சொன்னானாம்.
நம்ம கவர்மெண்டு வயசுக்கு வராதவளுக்கே வளைகாப்பு நடத்திடும், வந்துட்டா கேக்கவா வேணும்.
கன்சூமர் கேஸ் பைல் பண்ணாம விடாதீங்க அண்ணா.
நமது முகநூல் ASK அமைப்பு பலப்படுத்த வேண்டும்..
கத்துனா தான் காசு கிடைக்கும் போல, என்ன கொடுமை..
நான் இதுக்கு ethaala sirikkanum
நான் இதெல்லாம் ஆன்லைன்ல பண்ணீக்கிறேன். நோ டென்சன்.,
டூவீலருக்கு இதுவரைக்கும் க்ளெய்ம் பண்ணினது இல்லை.,பல வருடங்களாக..:)
அதனால குறைந்த பிரீமியம் வர்ற மாதிரி நானே செலக்ட் பண்ணிடறேன். என்ன ஒருவாரம் முன்னாடியே இந்த முயற்சியை தொடங்கிடனும்:)
http://www.iffcotokio.co.in/
சும்மா டிரை பண்ணிப்பாருங்க...
ஆன்லைன்ல இந்த பாலிசி இல்லவேயில்லை. அது மட்டுமில்லாம இவங்க கிட்ட டேட்டா இல்லாததுனாலத்தானே நம்மளை நேர வரச் சொல்றானுங்க..
உங்களோடது எதுல வேணும்ணாலும் சிரிச்சிக்கலாம்.வலியோ சந்தோஷமோ உங்களூக்குத்தான் என் சாய்..
படத்தின் கதை . . .
பிட்சா கடையிலிருந்து பஞ்சர் கடை வரை
சரியான சர்வீஸ் கேடகிறார் நாராயணன் என்பவர் . . .
சர்வீஸ் கொடுக்காத ஆட்கள் ஒயர் மூலம் நெரிக்கபட்டோ . . .
ஷாக் வைக்கபட்டோ கொல்லபடுகின்றனர் . . .
துப்பு கிடைக்காமல் திணறும் போலீசுக்கு . . .
கொலை செய்யும் ஆள் ஒரு Blog எழுத்தாளர் என்று ஒரு க்ளு கிடைக்கிறது . . .
( க்ளு கொடுப்பவர்கள் அவர் எழுதும் விமர்சனகளால்
பாதிக்கப்பட்ட சில சினிமா தயாரிப்பாளர்கள் )
போலீஸ் ஒரு சாப்பாட்டு கடையில் அவரை சுற்றி வளைக்க . . .
நான் வெறும் நாராயணன் இல்ல . . .
ஒயர் நாராயணன் . . .
என்ற வாறு ஒரு பிளாஷ் பாக்கை துவங்க
அவ்வ் . . . .
Can everyone afford to increase our BP and spend on doctor / medication / lawyer etc.? That's why we can only support people like you in the forefront to fight for general good. Thank you. - R. J.
இதே போல கதை எனக்கும் நடந்து இருக்கு,எல்லா டாக்குமென்டோட வரனும் என ஐ.சி.ஐசி.ஐ ஆட்டோ இன்சுயுரன்ஸ் காரன் சொன்னான், அது வண்டி கொடுத்த டீலரா போட்ட இன்ஸ்யுரன்ஸ் ,எனவே டீலருக்கு போன் போட்டு என்னய்யா என கேட்டேன் , அவனே வீட்டுக்கு இன்சுயுரன்ஸ் ஏஜெண்ட் அனுப்பி ரினியுவல் செய்து கொடுத்துட்டான்(வண்டிய செல் கேமிராவில போட்டோ எல்லாம் எடுத்தான்,கண்டிஷன் தெரிஞ்சுக்கவாம்) மேலும் விபத்து ஏற்படுத்தி கிளெய்ம் செய்யாதா பாலிசி எனில் 20% கம்மியா பாலிசிக்கட்டினால் போதும்.
ரொம்ப பழைய வண்டி என்றால் தான் பிரச்சினை ,மத்தபடி விற்ற டீலரை கேட்டாலே போதும் வீட்டுக்கே வந்து சரி செய்துவிடுகிறார்கள்.
கேட்கணும் என நினைப்பதில்லை தவறே இல்லை, ஆனால் யாரை , எங்கே ,எப்படிக்கேட்கனும் எனவும் இருக்கு. சும்மா வரவன் போறவன எல்லாம் கேட்பது மொட்டை கடுதாசி வந்தது என்பதற்காக போஸ்ட்மேனை திட்டுவது போல :-))
நீங்க குடிக்க தண்ணீர் வைக்கலைனு கேட்டேன்னு சொன்னது எல்லாம் படிக்கும் போது நினைப்பேன் பெரும்பாலான உணவகங்களில் தண்ணீர் வைப்பாங்க அது குடிக்கும் தரத்திலே இருக்காது, சரவண பவன் போன்றவற்றில் கொடுக்கும் நீரையே விளக்கொளியில் தூக்கி பார்த்தால் வெற்றுக்கண்ணூக்கே பல தெரியும்:-))
தண்ணீர் கேட்டு வாங்கி குடிப்பதால் என்ன பயன், அது தரமான தண்ணீரா என கேட்கப்பட வேண்டும். சப்பாத்திக்கும் ,பர்ரோட்டாவுக்கும் சைட் டிஷ் வாங்க சொல்வதை ஏன் நீங்கள் கேள்வியே கேட்காமல் வாங்கி சாப்பிடுகிறீர்கள்,இதுக்கே நீங்கள் உணவகம் பற்றி தொடர்ந்து எழுதுகிறீர்கள்.அதுவும் ஒரு வேளைக்கு 3 பேருக்கு என்னூற்று சொச்சம் தான் ஆச்சு ரொம்ப நல்ல உணவகம்னு எழுதுவீர்கள் , அந்த விலை எல்லாம் சாதாரணம் என நினைப்பவர் அல்ப சொல்பத்துக்கு கேள்விக்கேட்டு பெருமைப்பட்டுக்கொள்ளலாமா :-))
// அல்லது நார்த் உஸ்மான் சாலையில் நம்பர் கொடுத்தவன் தப்பு. ஒரிஜினல் அட்ரஸ் ஒரு முனையில் என்றால் பேப்பரில் இருந்த அட்ரஸ் இன்னொரு மூலையில். ஒரு வழியாய் அவர்களுக்கே பல முறை போன் செய்து சரியான அட்ரஸை வாங்கிக் கொண்டு சென்றேன்.//
நார்த் உஸ்மான் ரோட் அஞ்சலகம் அருகே முதல் தளத்தில் யுடிஐ இருக்கு. சென்னை கோடம்பாக்கம், தி,நகர் ஏரியாக்காரங்கள் என்றால் தெரிந்திருக்கும், மேலும் போட்டிருக்கும் நம்பர் வச்சு எந்த முகவரியும் சென்னையில கண்டே பிடிக்க முடியாது,புது நம்பர்,பழைய நம்பர், அப்புறமே நம்பரே இல்லாம பல கட்டிடம்னு தண்ணிக்காட்டும்.
அரசு சார்பு இன்ஸுரண்ஸ் மட்டுமே அங்கே போகுது மத்தது எல்லாம் தனியார் கிட்டே தான்.ஏற்கனவே சொன்னாப்போல வீட்டுக்கே வந்து ரினிவல் செய்துக்கிறாங்க.
எந்த ஒரு நாடும் ஒரு தனி மனிதனுக்காக மாறாது. அப்படி ஒரு தனி மனிதன் ஒரு நாட்டை மாற்றினால் (நல்ல விதமாகவோ அல்லது கெட்ட விதமாகவோ) அவன் பெரும் தலைவனாகிறான்.
என்னை போன்ற சராசரிகள் நாட்டுக்கு தகுந்தது போல தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்.
அமெரிக்காவிலிருந்து செங்கிப்பட்டிக்கு வந்து தொலைக்காட்சியில் அமெரிக்கன் ஐடல் பார்க்க முடியவில்லை, லன்சுக்கு பர்கர் கிடைப்பதில்லை என்று அங்கலாய்ப்பதும் ஒன்று தான், இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்து டீக்கடையில் பஜ்ஜி போன்டா சாப்பிட முடியவில்லை என்று அங்கலாய்ப்பதும் ஒன்று தான், நீங்கள் இப்பொழுது செய்வதும் ஒன்று தான்.
நீங்கள் சென்ற பிறகு உங்கள் மீதுள்ள கடுப்பை வேறு ஒரு அப்பாவியிடம் காட்டுவார்கள். அவ்வளவுதான்.
In the republic of mediocrity, genius is dangerous. -Ingersoll
ஒரு தனியார் பொது காப்பீடு நிறுவனத்தின் கிளை மேலாளர் என்ற முறையில் இந்த பதிவிற்கு சில
விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன் . பொதுவாக எல்லா நிறுவனங்களையும் ஒரே மாதிரி எடை போட
வேண்டாம் . united india மட்டுமல்ல மற்ற மூன்று அரசு காப்பீடு நிறுவனத்திருக்கு நீங்கள் சென்றிருந்தாலும்
உங்களுக்கு இதே அனுபவம் தான் கிடைத்திருக்கும் .ஏன் நானே ஒரு விபத்து காப்பீடு பாலிசி எடுக்க வேண்டும்
என்று united indiaகிளைக்கு சென்ற போது நான் பட்டபாடு எழுத்தில் சொல்லி மாளாது . இதற்கெல்லாம் காரணம்
அவர்களுக்கு secured job என்ற மனப்பான்மையே .ஆனால் எங்களை போன்ற தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அப்படி
இல்லையே . மேலும் இன்று வீட்டிலிருந்தே உங்கள் அனைத்து பாலிசிகளையும் புதுபிக்க முடியும் .
ஆனால் அது ஒரு சில தனியார் கம்பெனிகளில் மட்டுமே சாத்தியம் . எங்களை போன்ற நண்பர்கள் இருக்கையில்
எதற்காக நீங்கள் அலைய வேண்டும் . இணைய நண்பர்களே ! எப்படி இந்த இணையம் இருக்கும் இடத்தில்
இருந்து நம்மை எல்லாம் இணைக்கிறதோ அதே போல் இன்று இணையம் மூலம் அனைத்துமே சாத்தியம் .
இன்சூரன்ஸ் தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தாலும் என்னை எப்போதும் தொடர்பு கொள்ளலாம்
அலை பேசி எண் :
ராஜ்மோகன் 9698442266
ICICI வங்கி எப்படி லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பது நியூட்டன் வந்து கண்டு பிடிக்க வேண்டிய ஒரு விஷயம். இந்த மாதிரி ஒரு inefficient and unproductive அலுவலகங்கள் நமது நாட்டுக்கு ஒரு கேடு, இவர்களால் நம் தேசம் அடைய வேண்டிய அத்தனை பெருமைகளும் நமக்கு மறுக்க பட போகிறது. இதே கூத்து தான் இங்கு அமெரிக்காவிலும், இந்த Indian embassy நடத்துகிறது. வெட்க கேடு, அமெரிக்கர்கள் இந்திய வர, வரிசையில் நின்று, வெளியே வரும் போது அவர்கள் ஆச்சரிய பட்டு சொல்லும் விஷயங்கள், நாக்கை பிடுங்கி கொள்ளலாம். அடுத்த சில நாட்கள், அலுவலகம் சென்று இன்னொரு அமெரிக்கன் முகத்தை பார்க்க கூட கூசும். இந்தியா உருப்பட வழியே இல்லையோ என்று கூட சில சமயம் வெறுப்பு தோன்றும்.
இங்கே சென்னையில அமெரிக்கன் எம்பஸ்ஸி வாசலில் பிளாட்பார்மில் வெயிலில் காஞ்சு நின்று விசா வாங்கும் போதெல்லாம் கூசவில்லையா :-))
என்னக்கொடுமையா இது அமெரிக்கா காரன் வெயிலில் ,பிளாட்பார்மில் நிற்க சொன்னா இதமாக இருக்கு, அதுவே வரிசையில இந்தியன் எம்பஸ்ஸி அலுவலகத்தில வர சொன்னா நாக்கு புடுங்குதாம் :-))
இந்திய ஏர்போர்ட்களில் சாதாரண பிச்சைக்கார அமெரிக்கனை கூட துணிய கழட்டி சோதனை செய்ய முடியாது,ஆனால் அமெரிக்க ஏர்போர்ட்களில் முன்னாள் இந்திய ஜனாதிபதியை கூட துணிய கழட்ட சொல்லி சோதனை செய்வாங்க அப்போ எல்லாம் ஒன்றும் கூசலை இவருக்கு :-))
Even in Indian Passport office, I had to stand outside in the Sun for more than 3 hours as my wife went for PP renewal and I was not allowed inside. That was worse.
I totally agree with a reader's comment on the pathetic situation in Indian Embassies abroad, having spent 28 years outside the country.
-R. J.
அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர்கள் செய்யும் அலம்பல் இருக்கிறதே.......... அய்யோ சாமி போதும்டா ஒயர் அந்து போச்சு என்று சொல்லத் தோன்றும்.
அடுத்த நாள் இந்தியா செல்ல வேண்டும் என்றால் முதல் நாள் வந்து வீசா கேட்பார்கள். கொடுக்க வில்லை என்றால் காச் மூச் என்று கத்துவார்கள். இந்திய எம்பஸி தளத்தில் தேவையான படிவங்கள், பூர்த்தி செய்து அனுப்பும் முறை, அனுப்பவேண்டிய கோப்புகள் என்று அனைத்தும் இருக்கும். ஆனாலும் நம்மாட்கள் ஒன்றையும் படிப்பதில்லை. மாமியார் வீட்டுக்கு வருவது போல கையை வீசிக் கொண்டு வருவார்கள். முதன்மை தபாலில் பெற 20 டாலர்கள் கொடுக்க மூக்கால் அழுவார்கள், இந்தியாவில் உள்ள அமெரிக்கன் எம்பஸி சென்று பத்தாயிரம் ரூபாய் மொய் வைப்பார்கள்.
அமெரிக்க குடியுரிமை பெற்று விட்டால் நம்மாட்களுக்கு வானில் இருந்து குதித்து விட்டதாக நினைப்பு.
நான், நம்ம நாட்டில இவ்ளோ கூத்து நடக்குது, நம்ம அரசு அலுவலகம் வெளி நாட்டிலேயும் இந்த அழகு தான்னு சொன்னா அதை விட்டு விட்டு, template அமெரிக்கா எதிர்ப்பா?
வவ்வால்..நீங்கள் ஒரு விதண்டாவாதிஎன்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கிறீர்கள். இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தை பற்றி ஏதோ அறிவு ஜீவித்தனத்தை காட்டுவதாய் தெரிகிறது. எட்டு நூறு ரூபாய் மேட்டரைப் பற்றி நீங்க பதில் எழுத வேண்டியது சப்பாட்ட்டுக்கடை பதிவில். அது மட்டுமில்லாமல். வெறும் எட்டு நூறு ரூபாய் இடத்தை மட்டும் நான் சொல்வதில்லை பத்து ரூபாய்க்கு சாப்பிடும் இடத்தையும் தான் சொல்கிறேன்.
அது மட்டுமில்லாமல் சைட் டிஷ் வாங்கித்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் ஓட்டல்களில் நான் சாப்பிடுவதில்லை. நான் எதை செய்கிறேன், செய்வதில்லை என்பதை விளக்க வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. என்று நினைக்கிறேன். ஸோ.. பதிவுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களைப் பேசி குரங்கு பெடல் லெவலுக்கோ, அல்லது எதால் சிரிப்பது என்று அறிவார்த்தமான கேள்விகளை கேட்பவர்களுள் ஒருவராய் பார்க்கப் படுவீர்கள். என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு இந்த பதிவைப் பற்றிய மாற்றுக் கருத்து இருந்தால் வரவேற்க்கப்ப்படுகிறது.
இல்லை இப்படிப் பட்ட பல உளறல்களுக்கிடையே என்னுடயதும் இருக்கும் என்று சொல்வீர்களானால் லீஸ்ட் பாதர்டு.. அது அப்படியே இருக்கும்
நல்லா சொன்னீங்க நான் ஒரு விதண்டாவாதி தான் கேள்வி கேட்பதை விரும்பாதவர்களுக்கு. நான் கேட்கும் கேள்வியில் உள்ள உண்மையை எதிர்க்கொள்ள முடியாமல் தப்பிக்க மற்றவர்கள் வழக்கமாக சொல்வது இதை தான்!
எண்ணூத்தி சொச்சம் என்ன எட்டாயிரத்து சொச்சம் கூட செலவழித்து சாப்பிடலாம் அது அவரவர் விருப்பம். அதைப்பற்றி எழுதவும் செய்யலாம். தண்ணீர் வைக்கவில்லைனு கேட்டேன் , அப்படிலாம் சொல்லும் போது இதையும் கேட்டால் என்னனு தான் சைட் டிஷ் மேட்டர் சொன்னேன், ஆனால் சைட் டிஷ் வைக்காத உணவகத்தில் சாப்பிட மாட்டேன்னு சொல்றிங்க(கேட்டால் கிடைக்கும் பாலிசி அங்கே செல்லாதா?) அப்படியே தண்ணீர் கொடுக்காத உணவகத்திலும் சாப்பிடாமல் வந்திருக்கலாம் :-))
(அப்படி இலவச சைட் டிஷ் கேட்டு வாங்கி இருக்கிறேன் , நான் என்ன செய்கிறேன் என்பதெல்லாம் சொல்லிக்கொள்வதில்லை அவ்வளவே)
மேலும் சம்பந்தமில்லாத இடத்தில் கேட்பதாக நீங்கள் நினைக்கலாம்,நான் கேட்டால் கிடைக்கும்னு கேட்டேன் ! மேலும் இப்படித்தான் கேட்கணும் என்று நீங்கள் சொல்லிக்கொள்வதால் இரண்டையும் தொடர்பு படுத்திக்கேட்டேன்.
இப்போ கூட முதல் இன்சூரன்ஸ் ஐ டீலரே செய்வதால் ஆர்.சி புக் டீடெயில் எல்லாம் அவரே செய்து இருப்பார், தவறியது எப்படி என்று நீங்கள் டீலரிடமே கேட்டு இருக்க வேண்டும், அவனே வீட்டுக்கு வந்து கூட சரி செய்து இருப்பான்.ஆனால் இன்சூரன்ஸ் காரனிடம் கேட்டீர்கள்(அவர்கள் சொன்ன விளக்கமும் சரியே) நம்ம தேடி வந்த கஸ்டமர் போயிடக்கூடாது என்றே மீண்டும் ரினிவல் செய்து விட்டார்கள்.(பொதுவாக நான் கிளெய்ம் டிஸ்கவுண்ட் அதிகம் தரும் இன்சூரன்சுக்கு மாறிவிடுவார்கள்)
உங்கள் வாகனத்தை புகைப்படம் கூட எடுக்கவில்லை எனத்தெரிகிறது. எதாவது கிளெய்ம் செய்யப்போனால் சுத்த விடும் வாய்ப்பே அதிகம்.
சும்மா குதிக்க நான் என்ன நடு ரோட்டில் குரங்காட்டமா போடுகிறேன்? நான் ஏழு வருடங்களாக அமெரிக்காவில் தான் இருக்கிறேன். பல முறை இந்திய தூதரகம் சென்றுள்ளேன். ஒரு முறை கூட எனக்கு கசப்பான அனுபவம் ஏற்படவில்லை. ஏன்? நான் போகும் பொழுதே இந்திய அரசு அலுவலகம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாரு எனது எதிர் பார்ப்பை குறைத்துக் கொள்கிறேன்.
அமெரிக்க அரசு அலுவலகங்கள் போன்றே இந்திய அரசு அலுவலகமும் செயல் பட இந்தியா என்ன அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமா?
சரி உங்களை ஒன்று கேட்கிறேன். நீங்கள் எப்பொழுது அமெரிக்கா சென்றீர்கள்? அதற்கு முன்பு அரசு அலுவலகத்திற்கு இந்தியாவில் சென்றிருக்கிறீர்களா? அப்பொழுது அரசு அலுவலகம் இந்தியாவில் எப்படி இருந்தது? சூப்பராக இருந்ததா?
அப்பொழுதும் இந்திய அரசு அலுவலகம் இப்படி தான் இருந்தது, இப்பொழுதும் இப்படித்தான் இருக்க்கிறது, இனியும் இப்படித்தான் இருக்கும். நீங்கள் அமெரிக்கா வந்து திரும்பிய உடன் இந்தியா அமெரிக்காவாக வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள். அப்படியே அதை ஒரு வாதத்திற்காக சரி என்று எடுத்துக் கொண்டாலும் கூட, அந்த எதிர் பார்ப்பை ஒரு ஏக்கமாக பதிவு செய்யலாமே தவிர, இந்தியா இப்படி இருப்பதினால் எனக்கு அமெரிக்கன் மூஞ்சியில் முழிக்கவே கேவலமாக இருக்கிறது என்றெல்லாம் கூறுவது கேவலம்.
இந்தியா இந்தியாவாகத்தான் இருக்கும். முடிந்தால் நீங்கள் உங்கள் எதிர் பார்ப்பை குறைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் வெட்கப்பட்டுக் கொண்டே இருங்கள்.
சுமார் நான்காண்டுகளுக்கு முன்பு நான் எழுதியது.
//
அமெரிக்க மக்களின் ஒழுங்கு முறை பற்றி பல இடங்களில் படித்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டு இருப்பீர்கள். நேரில் பார்க்காத மக்களுக்கு தான் இதனை எடுத்து சொல்ல இருக்கிறார்களே வெளி நாட்டு மாப்பிள்ளைகளும், மகன்கள்/மகள்கள் வீட்டிற்கு அமெரிக்கா வந்து திரும்பும் ரிட்டையர்டு பெரிசுகளும். ஆனால் சென்ற மாதம் இதற்கு முற்றிலும் மாறுபாடான ஒரு அனுபவம் எனக்கு கிடைத்தது.
Washington, DC மற்றும் Virginia இடையிலான பாதாள ரயில் போக்குவரத்தில் ஏதோ பிழை ஏற்பட்டு அதனால் இரு ரயில் நிலையங்களுக்கு இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஒரு பக்கம் வரும் ரயில்கள் பயணிகளை ஒரு நிலையத்தில் இறக்கிவிட, அங்கிருந்து அவர்களை பேரூந்தில் மற்றொரு ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து மீண்டும் ரயிலில் பயணம் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் ஒரு ரயிலில் வரும் பயணிகள் அனைவரையும் ஒரு பேரூந்தில் ஏற்றவா முடியும். அதனால் சுமார் 3000 அல்லது 4000 பயணிகள் வரை ஒரு நிலையத்தில் காத்திருக்க பயணிகளை ஏற்ற வரும் பேரூந்தோ நெடுநேரம் சென்றும் வரவே இல்லை.
அப்பொழுது அங்கே இருந்த தள்ளு முள்ளுவை பார்க்க வேண்டுமே. ஆஹா கண்கொள்ளா காட்சி.
Demand Vs. Supply என்பது சரிவிகிதமாக இருக்கும் வரை அமெரிக்கர்கள் ஒழுங்கு முறைகளை சரியாக பின்பற்றுபவர்களே. ஆனால் அதில் ஒரு சிறு பாதிப்பு வந்தாலும் அவர்களின் ஒழுங்கீனம் நம்மவர்களுக்கு சற்றும் சளைத்தது அல்ல. அதே நேரத்தில் Demand Vs. Supply விகிதத்தை சரியளவில் நம்மவர்களுக்கு அளித்தால் நம்மவர்களும் ஒழுங்கு முறைகளை சரியாகவே பின்பற்றுவார்கள். அதனை செய்வதை விட்டு விட்டு பேரூந்தில் வரிசையில் ஏறுங்கள் என்று பிரச்சாரம் மட்டும் செய்து கொண்டிருந்தால் எந்த மாற்றமும் நடக்காது. ஷங்கர் போன்ற இயக்குனர்களுக்கு அந்நியன் படம் எடுத்து காசு பார்க்கவே பயன்படும்.
//
பார்க்க நான் எழுதிய பதிவு:
http://sathyapriyan.blogspot.com/2008/06/blog-post_26.html
எங்கோ ஒரு இடத்தில நடந்ததை வைத்து, நீங்கள் அனைவரையும் எடை போட்டு விட்டர்கள். ஆனால், நாம் நாட்டில், ஒவ்வொரு இடத்திலும், முதியோர், பெண்கள், குழந்தைகள் இவர்களை பற்றிய எந்த அக்கறையும் இன்றி, முட்டி மோதுவதை நாம் மாற்ற வேண்டும் என்று சொன்னால், அது தவறு,
Demand vs supply எல்லாம், சரி, ரிசர்வ் செய்த ரயில் பெட்டியில் ஏற அடித்து கொள்ளும் கூட்டத்தை பற்றி உங்கள் கருத்து என்ன?
பீட்சா ஹட்டும் , subwayum , burger jointum வேண்டும், ஆனால் நல்ல பழக்கங்களோ, efficiency ஒ வேண்டாம்.
ஆனால், நாம் நாட்டில், ஒவ்வொரு இடத்திலும், முதியோர், பெண்கள், குழந்தைகள் இவர்களை பற்றிய எந்த அக்கறையும் இன்றி, முட்டி மோதுவதை நாம் மாற்ற வேண்டும் என்று சொன்னால், அது தவறு,
//
திரும்பவும் சொல்கிறேன். அப்படி நீங்கள் சொல்வதில் தவறில்லை. ஆனால் இந்தியர்கள் அப்படி இருப்பதினால் என்னால் அமெரிக்கனின் மூஞ்சியில் முழிக்க முடியவில்லை என்று கூறுவது கேவலம். அதை தான் உங்கள் முதல் பின்னூட்டத்தில் கூறி இருக்கிறீர்கள்.
ஒரு சராசரி அமெரிக்கனின் 70 வயது தாயார் பெடிக்யூர், மெனிக்யூர் எல்லாம் செய்திருப்பார். பொது இடத்தில் தும்மினால் எக்ஸ்யூஸ் கேட்பார். ஆனால் எனது தாயார் அதெல்லாம் செய்ய மாட்டார். அதனால் எனது தாயாரை பொது இடத்திற்கு அமெரிக்க மக்கள் முன்னால் அழைத்து செல்வது கேவலமாக இருக்கிறது என்று ஒருவர் சொல்வதற்கும் நீங்கள் கூறியதற்கும் அதிக வித்தியாசம் இல்லை.
//
Demand vs supply எல்லாம், சரி, ரிசர்வ் செய்த ரயில் பெட்டியில் ஏற அடித்து கொள்ளும் கூட்டத்தை பற்றி உங்கள் கருத்து என்ன?
//
நீங்கள் அமெரிக்கா வருவதற்கு முன்பு இருமினால் அதனால் நோய் தொற்றுமே என்று அப்பர் ஸ்லீவில் இருமுவீர்களா? கூட்ட நெரிசலில் வரிசையில் தான் பேரூந்தில் ஏறுவீர்களா? இன்னும் பல செய்வீர்களா இருக்கிறது.
இதெல்லாம் நீங்கள் செய்யாத பட்சத்தில் அமெரிக்கா வந்த பிறகு தான் அதனை செய்ய தொடங்கிய பட்சத்தில் உங்களை போல் அமெரிக்கா வருவதற்கு வாய்ப்பில்லாத பல கோடி இந்தியர்களை அடிப்படை வசதியான 24 மணி நேர குடிநீர், மின்சாரம், கல்வி, மருத்துவம் போன்றவையே கேள்வியாக கொண்ட சமூகத்தில் வாழும் மக்களை பொத்தாம் பொதுவாக வரிசை என்றாலே என்ன என்று தெரியாத பட்டிக்காட்டான்கள் என்று கூறுவது இரண்டாவது கேவலம். அவர்களுக்கு வரிசையில் நிற்பதை காட்டிலும் முக்கியமான கவலைகள் பல இருக்கின்றன.
//
பீட்சா ஹட்டும் , subwayum , burger jointum வேண்டும்,
//
இதுவும் நான் சொல்லவில்லை. நீங்கள் தான் சொல்கிறீர்கள். இந்தியாவில் பரோட்டா சால்னாவுடன் சாப்பிடுங்கள், அமெரிக்காவில் பர்கர் சாப்பிடுங்கள் என்றே நான் கூறுகிறேன். முன்னரே பல முறை எனது பதிவுகளில் கூறியும் இருக்கிறேன்.
உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் வரிசையில் நில்லுங்கள். நாங்கள் நிற்க மாட்டோம். Period.
இந்த 3 வாக்கியங்களை வைத்து கொண்டு, அதை சரியாக புரிந்து கொள்ளாமல், நாம் செய்வதெல்லாம் சரி என்று வாதிடும் உங்களை, என்ன வென்று சொல்வது. Demand draft இதற்க்கு யாரவது காபி கேட்பார்களா? கேட்டார்கள், மேலும் அவனின் passportil empty pages அதற்கும் கேட்டார்கள், இப்படி பல...சரி விடுங்கள், இதற்கும் நாங்கள் இந்தியாவில், இப்படி தான் இருந்தோம், இருக்கிறோம், அமெரிக்காவிற்காக நாங்கள் மாற்றி கொள்ள மாட்டோம் என்று சொல்ல போகிறீர்கள். Good luck.
அதே போல DD காபி கேட்பதற்கும் ஏதாவது காரணம் இருக்கலாம். நமக்கு காரணம் தெரியவில்லை என்பதற்காக அவர்கள் கேட்பதெல்லாம் அர்த்தமற்றது என்று விவாதிப்பது தவறு.
மற்றபடி உங்களுடன் எனக்கு என்ன பங்காளி சண்டையா? நானும் உங்களை போல் ஒருவன் தான். உங்களுக்கு இந்தியா மீது இருக்கும் பற்று எனக்கும் இருக்கிறது. நீங்கள் அமெரிக்காவிடம் காட்டும் அதே அளவு நன்றியை நானும் காட்டுகிறேன்.
பதிவிற்கு சம்பந்தமே இல்லாமல் நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். அமைதி திரும்பட்டும்.
en varaiyil நான் எனக்கு தேவையானதை, கேட்டு கிடைக்கப் பெற்றுக் கொண்டுதானிருக்கிறேன். உங்களை கேட்க சொல்லியும் பார்க்கிறேன். நீங்கள் எழுதியுள்ளதை நீங்களே படியுங்க விதண்டாவாதம் என்ன என்பது உங்களுக்கே புரியும்.
இதுக்கு மீறி உங்களுக்கு பதிலளிப்பதே வேண்டாத வேலை என்று தோன்றுகிறது.
இது இந்த இன்சூரன்ஸ் துறையில் மட்டுமல்ல.....மதிய அரசு பொது துறை நிர்வாகம் செய்கிற எந்த துறையும் இப்படிதான் எடுத்தோம் கவுத்தோம் என்று வரும் பொது மக்களிடம் நடந்து கொள்கின்றனர்......தேடி வரும் மக்களிடம் மரியாதையை இல்லாமல் நடந்துகொள்ள இவர்களுக்கு யார் உரிமை தந்துள்ளனர் .என்பதே ஒரு கேள்வி.....நம்மை போன்ற பொது மக்கள் விழிப்புணர்வு பெற்று தைரியமாக கேள்வி கேட்க ஆரம்பித்தால் மட்டுமே நிலைமை ஓரளவு கட்டுக்குள் வரும் என்பதே என் திண்ணமான எண்ணம்
//en varaiyil நான் எனக்கு தேவையானதை, கேட்டு கிடைக்கப் பெற்றுக் கொண்டுதானிருக்கிறேன். உங்களை கேட்க சொல்லியும் பார்க்கிறேன்.//
உங்களளவில் தேவையானதை செலக்டிவ் ஆகவே கேட்பேன் என்கிறீர்கள், அப்புறம் என்ன அடுத்தவங்களை கேட்க சொல்லி கற்று தருகிறேன்னு ஒரு விளம்பரம் :-)) ஏன் எனில் தேவைக்கு மற்றவர்களும் கேட்கவே செய்கிறார்கள்.
மற்றவர்களுக்கு எல்லாம் கேட்க தெரியவில்லை நான் எப்படிக்கேட்டேன் பாருங்க என ஒரு தொனி இருப்பதாலேயே சுட்டிக்காட்டினேன். கேள்விக்கேட்பது நல்ல விஷயம் தான் , ஆனால் உங்களுக்கே கேள்விக்கேட்டால் விதண்டாவாதமாய் தெரியும் போது நீங்கள் கேள்விக்கேட்டாலும் அப்படித்தான் அவர்களுக்கும் தெரிந்திருக்கும்.
எல்லாருக்கும் கேள்விக்கேட்பது எப்படினு நீங்க சொல்லிக்கொடுக்கும் நேரத்தில் நான் வேறு குறுக்க கட்டையப்போட்டுக்கிட்டு இருக்கேன் , நீங்க தொடருங்கள் உங்கள் சேவையை!
-----------
சத்யபிரியன்,
இந்தியாவில் இருக்கும் வரைக்கும் எல்லாம் சகஜமப்பா என்ன்று எறுமை மாட்டு மேல மழை பெய்தாற் போல வாழ்வார்கள் , அமெரிக்கா போய்விட்டு வந்தால் அவங்க பார்வையே மாறிவிடும் :-))
--------
டிபரெண்ட்,
//ஆனால் இந்தியர்கள் அப்படி இருப்பதினால் என்னால் அமெரிக்கனின் மூஞ்சியில் முழிக்க முடியவில்லை என்று கூறுவது கேவலம். அதை தான் உங்கள் முதல் பின்னூட்டத்தில் கூறி இருக்கிறீர்கள்.//
முதலில் வரிசையில் நின்று வெளியில் வரும்போது என்று சொன்னீர்கள், அதைப்படிச்சதும் அதில் ஏதோ ஒரு பயங்கரம் ஒளிந்திருக்கு என்று நாங்க புரிஞ்சுக்கணுமா? சரியா படிக்காம குதிக்கிறாங்க சொல்றிங்க.
அப்படி ஒரு பயங்கரமும் இல்லை, அதுக்கு அப்புறமா சொல்றதும் சின்னப்புள்ளத்தனமாவே இருக்கு, அது ஒரு புரோசீஜர் அதுல என்ன நாக்கை பிடிங்கிறாப்போல இருக்கு.அந்த அமெரிக்கனை இந்திய தூதரகத்தில் ஏதோ தரகுறைவா நடத்திட்டா போல இல்ல நீங்க குதிக்கிறிங்க :-))
நீங்க சொல்வது டெம்ப்ளேட் ஆக இந்தியாவை குறை சொல்லும் மக்களின் மனோபாவம்.
அமெரிக்க விசா வாங்க கைரேகை பதிய வைக்கணும் என்பது கூட தான் இருக்கு அதை விமர்சித்தா நீங்க என்ன சொல்வீங்க எல்லாம் பாதுகாப்பு ஏற்பாட்டுக்கான நடைமுறைனு சொல்ல மாட்டிங்களா?
நாட்டுப்புற கலைஞர்கள் அமெரிக்க விசா வாங்கப்போனப்போ அவங்களை கரகம்,டான்ஸ் எல்லாம் ஆடவிட்டுப்பார்த்து விசா கொடுக்கிறாங்க, அப்படி ஒரு பாதுகாப்பு நடைமுறை :-))
எல்லா டி.டி பணமும் மொத்தமாக ஒரு அக்கவுண்டிற்கு மாறிவிடும் , எனவே எந்த விண்ணப்பம்,எண் உள்ள டிடி பணம் அக்கவுண்டிற்கு மாறியது என உடனுக்குடன் யாரும் செக் செய்வதில்லை.ஆண்டிற்கு ஒரு முறை சோதனை செய்வார்கள். அப்போது மொத்த தொகைக்கும் பெறப்பட்ட டி.டிக்களின் மொத்த தொகைக்கும் ஒத்து வரவில்லை எனில் பெரும் தலைவலியாகவே முடியும். அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் வெறும் டிடி எண்ணை வைத்துக்கொண்டு மொத்த பணம் டேலி ஆகிறதா என மண்டை உடைத்துக்கொள்ள வேண்டும் என்பதால் எளிதாக இருக்க இப்படி நகல் வைத்துக்கொள்கிறார்கள்.வங்கியில் செலுத்தும் முன் அலுவலத்தில் தவறிவிட்டதா டிடி என கண்டுப்பிடிக்க உதவியாக இருக்கும். இது கணினி எல்லாம் நடைமுறையில் இல்லாத காலத்தில் செய்த ஒன்று என்றாலும் நம்பகமான நடைமுறை.
பீ கூல்.... ஆன்லைன்ல பண்ண வேண்டியத ஆபீஸ் ஆபீஸா தேடி அலைஞ்சிருக்கீங்க...
லைசன்ஸ் ரினீவல் எப்போ?... ஒரு சுவாரஸ்யமான பதிவை எதிர்பார்க்கிறோம்
nan coimbatore..nan bikela pokum pothu eallam signalla red velum pothu line kita iruntha correcta linela nippen..ada parthu mathavangalum linela irupanga..sila kesunga engu munadi poi nadu rotla ninu kitu oru look veduvanga...edu eduku solurenna most of peoples mathavanga seivatheye appadiye sei pavarkal...eduvum yosika mattarkal...
oru visayam nan line vitu thandi nirum pothum 2nd,3rd varuparkalum ademadiri seikerarkal.....
You rightly said.Insurance, especially those concerning two wheelers are a big scam in our country.They have stopped sending renewal notices. Even if they send, it doesnt reach you.Just in case you miss the deadline, you have to go through hell. They have to photograph the vehicle and you have to present the RC book details. I have also faced the same situation many times. Sine I am away in the US for 6 months, whenever I come back for 2 wheeler insurance I always end up with hassle. The company has the audacity to say that they are not interested in 2 wheeler business at all. In fact, this is the most profitable for them as there are very few claims.
I wish something is done to solve this problem.
Shankar
நான் மாற்றுக்கருத்து சொன்னாலும் விரும்பி படிக்கும் பதிவர் கேபிள்ஜி ,அவரது பதிவை நாரடிக்க வேண்டாம் எனப்பார்க்கிறேன் அதனாலேயே நீர் பிழைத்துப்போகிறீர், நான் எல்லாம் பேசினா அது புரியவே கெட்ட வார்த்தை அகராதி தேவைப்படும் :-)) சிங்கார சென்னைப்பாஷைல டார் ராரா கீச்சிடுவேன் :-)) ஓடிப்போ!
(ஆமாம் எங்கே ராசா பதிவு எதுவும் காணோம் இருந்தா சொல்லும் ஓய் அங்கே வந்து கச்சேரியை வச்சுக்கிறேன்)