பாபாவின் >>>>திருவிளையாடல்கள்....



இப்போது சமீப காலமாய் சென்னையில் ஓரு விஷயம் பரபரப்பாய் செய்யப்படுகிறது.. அதுவும் புட்டபர்த்தி சாய்பாபாவின் பெயரில்.. நீங்கள் நினைத்த காரியம் நடக்க வேண்டுமா? உடனடியாய் இந்த காரியத்தை செய்தால் நீங்கள் நினைத்த காரியம் ஈடேறும்.. என்று சொல்லபபட்டு தொடர் சங்கிலியாய் தொடர்கிறது..

ஓரு வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் இரண்டு டீஸ்ஸ்பூன் டீ தூளையும், இரண்டு டீஸ்பூன் சக்கரையையும் சேர்த்து கலக்கி, அதன் வாயை காற்று புகா வண்ணம்..துணியால் மூடி நம் மனதில் நினைக்கும் காரியத்தை பாபாவை நினைத்து வேண்டிக் கொண்டு, வியாழன் முதல் வியாழன் வரை பூஜை அறையில் வைத்து பூஜித்து விட்டு அடுத்த வியாழன் அன்று அதை பூஜை செய்து திறந்து பார்த்தால்.. அந்த தண்ணீரின் மேலே ஓரு ஏடு போல திக்காக ப்ரவுன் நிற ஓரு லேயர் பார்ம் ஆகியிருக்க, அப்படி அகியிருந்தால் அவர்கள் எதை நினைத்து வேண்டி கொண்டார்களோ.. அது நடந்துவிடும் என்கிறார்கள்..

அனால் இதற்கு அப்புறம் தான் இருக்கிறது விஷயம்.. அவர்களின் பாத்திரத்தில் பார்ம் ஆன லேயரில் நான்கில் ஓரு பகுதியை அந்த தண்ணீரிலேயே போட்டு அதே பாத்திரத்தில் மேலும், அதே டீ தூள் , அதே சக்கரை சேர்த்து.. மேலே துணி வைத்து மூடி சேம் பார்முலா.. வேறு ஓருவர் வேண்டுதல், வேறு பூஜை அறை,, என்று ரிலே ரேஸ் போல் தொடர்கிறது..

எனக்கு சொன்னவரிடம் நான் கேட்டேன்.. நீங்க நினைச்சது நடந்ததா? என்று..

“ஓரு 75% முடிஞ்சது.. “

“மிச்சம்..?”

“பாபா பாத்துப்பார்..”

“நீங்க நினைச்ச காரியத்துக்காக இதுக்கு முன்னாடி முயற்சி செஞ்சீங்களா?”

”கிட்டத்தட்ட ஒரு வருஷமா..?”

‘அந்த ஓரு வருச்த்தில கிடைக்காத பதிலா இப்ப கிடைச்சிருக்கு.?”

“ அப்படியில்ல.. அவர்கிட்ட போய் சார் நானும் இவ்வளவு நாளா ட்ரை பண்றேன்னே கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்ன்னு கேட்டேன்.. “

‘இதை ஏன் நீங்க இவ்வளவு நாளா செஞ்ச முயற்சிக்கு பதிலா எடுத்துக்க கூடாது?

“நானும் அதையே தான் கேட்கிறேன்.. நீங்க ஏன் இதை பாபாவின் அருளாய் எடுத்துக்க கூடாது?”என்று கேட்க, மேலும் விவாதத்தில் ஈடுபடாமல் சரி என்று சிரித்தபடி.. கிளம்பிவிட்டேன்..

பாபாவை பற்றி தவறான பிரசாரத்துக்காக நான் இதை பதியவில்ல..முயற்சியில்லாமல் எந்த விஷயமும் நடக்காது என்பது என் கருத்து.. அது மட்டுமில்லாமல்.. இந்த டீ, சக்கரை,தண்ணீர், மூடிய பாத்திரத்தில் ஏதோ கெமிக்கல் ரியாக்‌ஷன் இருக்கிறது.. அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வம்..

டிஸ்கி: லேட்டஸ்டாய் ஓரு தகவல் இதே போல் ஓரு பாத்திரத்தில் ஓரு சப்பாத்தியை வைத்து மூடிவைத்து ,ஓருவாரம், பூஜை, எண்ணம், எல்லாம் முடிந்தபின் திறந்தால்.....
இரண்டு சப்பாதியாம்..

Comments

ஈஸ்வரா.....!

எவனும் சாக வரம் பெற்றுவரவே இல்லை, பின்பு ஏன் இதையெல்லாம் எப்படி நம்புகிறார்களோ !

ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்று(வித்தைக்)காரர்கள் இருப்பார்கள்.
//ஈஸ்வரா.....!

எவனும் சாக வரம் பெற்றுவரவே இல்லை, பின்பு ஏன் இதையெல்லாம் எப்படி நம்புகிறார்களோ !//
அதானே.. கரெக்டான கேள்வி.. நன்றி கோவி.கண்ணன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..
ஒருவாரச் சப்பாத்தி ஊசிப்போயிரும். பேசாம ஒரு தங்கச் சங்கிலி, இல்லேன்னா ரூபாய் நோட்டுன்னு வச்சுக் கும்புடுங்க. டபுள் என்னங்க டபுள்............ ?அப்படியே மாயமாய் மறைஞ்சுரும் பாருங்க.
Athisha said…
பாபாவின் அருளே அருள்

இன்னைக்கே பிரார்த்தனைய தொடங்கிடறேன்...

ஏய் எங்கப்பா அந்த வாய் அகண்ட பாத்தரம்
Athisha said…
\\ ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்று(வித்தைக்)காரர்கள் இருப்பார்கள். \\

ரிப்பீட்டுகிறேன்
Anonymous said…
http://www.virtualscribbles.com/virtual_scribbles/2008/08/tea-sugar-water.html

hi sankar
dont miss that link "kombucha"

you got ur answer

thats baba things are dooomangoooli sankar

dont beleive in that.
by all saying this you may think im a nasthigan, but im not.

bye.. keep posting
//ஒருவாரச் சப்பாத்தி ஊசிப்போயிரும். பேசாம ஒரு தங்கச் சங்கிலி, இல்லேன்னா ரூபாய் நோட்டுன்னு வச்சுக் கும்புடுங்க. டபுள் என்னங்க டபுள்............ ?அப்படியே மாயமாய் மறைஞ்சுரும் பாருங்க.//

அதுசரி.. :)
நன்றி துளசி கோபால்..
//ஏய் எங்கப்பா அந்த வாய் அகண்ட பாத்தரம்//

பிராத்தனையின் ரூல்ஸ் தெரியாமல் பேசகூடாது அதிஷா. ரிலே ரேஸ் பாத்திரம் தான் யூஸ் பண்ண்னும்.. இல்லேன்னா சாமி கண்ண குத்திரும்..
//hi sankar
dont miss that link "kombucha"

you got ur answer

thats baba things are dooomangoooli sankar

dont beleive in that.
by all saying this you may think im a nasthigan, but im not.

bye.. keep posting//

நானும் நாஸ்திகன் அல்ல.. ஆனால் இதையெல்லாம் நம்புவனும் அல்ல.. இதன் பின்னால் உள்ள கெமிக்கல் ரியாக்‌ஷனை பற்றி தெரிந்து கொண்டால் ம்ற்றவர்களுக்கு சொல்லலாமே.. என்று தான். நன்றி சுரேஷ்..
எனக்கு ரெண்டு அது வேணும். பாபா தருவாரா?
சென்னை ஹைடெக் சிட்டி என்றார்கள்?

கோவையில் இருக்கும் மூடபழக்கம் சென்னை சென்றடைய 5 வருடங்களா ஆகும்?

இந்த சப்பாத்தி விஷயம் 2003-ல் கோவையில் பிரபலம்.

சப்பாத்தியை மூடி ஒருவாரம் கழித்து திறந்தால் துளசி அம்மா சொன்னது போல ஊசி மட்டுமால்ல சொல்ல முடியாத வாடையும் வரும்.( இதில் டீ சக்கரை போட்டால் வேற என்ன வரும்? )

அடுத்த வாரம் ஊரில் உள்ளவர்கள் தங்கள் பக்தியை தவறாக நினைப்பர்களோ என அந்த வீட்டில் இருப்பவர்களே சப்பாத்தியை செய்து இரண்டாக்கி விடுவார்கள். இதனால் சிலருக்கு இலவச விளம்பரம் கிடைக்கிறது.

பத்தினியின் புருஷன் கண்னுக்கு கடவுள் தெரிவார் என சொல்லும் வேடிக்கை கதையை போன்றது இது.

தமிழகத்தில் உள்ள வட இந்தியர்கள் மத்தியில் இது அதிக நம்பிக்கையாக இருக்கிறது.

ஆனால் சுரேஷ் அவர்கள் சொன்னது போல கம்பூஜா எனும் சீனத்து தேனீர் முறை வேறு இது உடலுக்கு சத்தானது. இந்தியாவில் சமீபமாக பிரபலம் அடைந்து வருகிறது.
ALIF AHAMED said…
அதன் வாயை காற்று புகா வண்ணம்..துணியால் மூடி
//


!!!!

துணியால் மூடினா காத்து போகதா...

சின்ன ட்வுட்டு :)
//ஓரு வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் இரண்டு டீஸ்ஸ்பூன் டீ தூளையும், இரண்டு டீஸ்பூன் சக்கரையையும் சேர்த்து கலக்கி,//

அதை அப்படியே அடுப்புல வைத்து கொதித்த பிறகு இறக்கி ரெண்டு கிளாசுல ஊத்தி ஆத்தி ஆத்தி டீ குடிச்சாலாவது கொஞ்சம் பிரயோஜனமா இருந்திருக்கும் சங்கர்....
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்தக் கூலி தரும்

எனக்கு இதுதான் தோணிச்சு!
Anonymous said…
Yes, I was told some people mix that (what Baba asked to prepare) with their (your) urine and drink for better health benefits. There are several prominent personalities who did/do that.

The only condition for this therapy is that it, yeas, your urine, should be FRESH!!!

And for BETTER results drink urine-mixture twice daily one before sun rise and one dose after sunset!!!!
//எனக்கு ரெண்டு அது வேணும். பாபா தருவாரா?//

ரெண்டுன்னா எந்த ரெண்ட கேக்கிறீங்க.. ஆட்காட்டி.. ரொம்ப குசும்பு பிடிச்சவர் போலருக்கே..
//பத்தினியின் புருஷன் கண்னுக்கு கடவுள் தெரிவார் என சொல்லும் வேடிக்கை கதையை போன்றது இது.//


ஹா..ஹா... நல்ல உதாரணம்.. நன்றி சுவாமிஜி..
//துணியால் மூடினா காத்து போகதா...//

ஆனாலும் ரொம்பத்தான் கேள்வி கேக்கிறீங்க மின்னல்.. நன்றி உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும்
//அதை அப்படியே அடுப்புல வைத்து கொதித்த பிறகு இறக்கி ரெண்டு கிளாசுல ஊத்தி ஆத்தி ஆத்தி டீ குடிச்சாலாவது கொஞ்சம் பிரயோஜனமா இருந்திருக்கும் சங்கர்....//

ஆகா.. நீஙக் நினைச்சது நடக்க.. ஜூர்கேன் மேலே சொன்ன வழிவகைகளை தினமும் காலையில் செய்தால்.. எல்லா விஷயமும் காலையில் நன்றாக நடக்கும்..
//தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்தக் கூலி தரும் //

ரிப்பீட்ட்ட்டேய்ய்ய்ய்ய்...
//es, I was told some people mix that (what Baba asked to prepare) with their (your) urine and drink for better health benefits. There are several prominent personalities who did/do that.

The only condition for this therapy is that it, yeas, your urine, should be FRESH!!!

And for BETTER results drink urine-mixture twice daily one before sun rise and one dose after sunset!!!!//

உவ்வே......
Indian said…
திங்கட்கிழமை அன்னிக்கு ஒரு டம்ளர் ஜானி வாக்கர், ஒரு டம்ளர் பக்கார்டி, ஒரு டம்ளர் ஸ்மிர்னாஃப், மார்கரீட்டா மிக்ஸ் இதை எல்லாத்தையும் ப்ளென்டர்ல அடிச்சு ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றி காற்றுப் புகாத துணியால் இருகக் கட்டி ப்ரிட்ஜில் வைத்துவிட்டால், வெள்ளியன்று வீக்-எண்ட் பார்ட்டி சூப்பராப் போகும்.
Anonymous said…
hi sankar

last time i actually commented with one web id
but it is missing in that comment

so here it is

http://www.virtualscribbles.com/virtual_scribbles/2008/08/tea-sugar-water.html

dont miss this
Anonymous said…
hi shankar what happen where are you?????
//hi shankar what happen where are you?????//
நாளை முதல் வருவேன் பாலசந்தர்
Anonymous said…
hey sankar
im searching for u daily
where have u gone

we are waiting
priyamudanprabu said…
திருந்த்வே மாட்டாங்க
priyamudanprabu said…
ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்று(வித்தைக்)காரர்கள் இருப்பார்கள்.