”கோக்” கினால் கருத்தடை செய்...

இப்பத்தான் பார்த்தேன் இது என்னுடய 100வது பதிவுன்னு...ஸோ...
வெற்றிகரமான “100 வது பதிவு”

கோக்..டயட் கோக், பெப்ஸி போன்றவை தாகத்தை தணிக்கும், ஆனால் அதனால் வேறு ஓரு பயனும் இருக்கிறது.. அது என்னவென்று பார்த்தால் விந்தணுக்களில் இருக்கும் உயிர் அணுக்களை சுத்தமாய் அழிக்கிறது.. என்பதை ஆராய்ச்சி செய்து செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்..

ஆராய்ச்சியின் போது.. பல விதமான கோக்களை டெஸ்ட் டூயூபில் விந்துடன் போட்டு, ஓரு நிமிடத்தில் டயட் கோக்கில் உள்ள விந்துவிலிருந்த உயிரணுக்கள் அனைத்தும் இறந்து போய்விட்டது.. மற்ற சாதாரண கோக்கில் கிட்டதட்ட 41% உயிரணுக்கள் மீதம் உயிரோடு இருந்ததாகவும் தெரிவிக்கிறது.

பெண்கள் கருத்தடை சாதனமாய் 50துகளில் உபயோகித்ததாகவும் தெரிகிறது.. கோக்கிலிருக்கும் கார்போனிக் ஆசிட் தான் உயிரணுக்களை அழிக்கிறது என்றும் எப்படி உபயோகித்தார்கள் என்றால் கோக் பாட்டிலை குலுக்கி பீயிச்சி அடிக்கும் முறையையே பின்பற்றினார்கள் என்று இந்த ஆராய்ச்சியை நடத்திய ஹார்வேர்ட் மெடிக்கல் பள்ளியின் பிறப்பு தடுப்பு முறைகள் பற்றி ஆராயும் டோப்ரா ஆண்டர்சன் கூறியிருக்கிறார்..

1950-60களில் பியூட்டோ ரிகோவிலிருக்கும் பெண்கள் கதோலிக்க போர்டிங் பள்ளிகளில் தான் படிக்கும் போதே உபயோகபடுத்தப்ட்டது என்றும் தெரிவித்தார்.

எது எப்படியோ.. பூச்சி மருந்து என்று சொன்ன போது இல்லை என்று வாதிட்ட கோக் நிறுவனத்தினர்.. மனுச பூச்சிய அழிக்க உபயோக படுத்தபடுவது பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்போம்.. மேலும் வெளிநாட்டவர்கள் செய்த பலவிதமான கோக் ஆராய்சிகளை இங்கே பார்க்கவும்


டயட் கோக்கையும் மெண்டோசையும் வைத்து செய்யும்
ஆராய்ச்சிகள்







கோக்கையும் மெண்டோஸையும் கலக்கி வேறு ஓன்றுக்காக உபயோகிக்கிறார்கள் இங்கே கிளிக்கவும்

Comments

நல்ல விழிப்புணர்ச்சியை ஊட்டும் எக்ஸ்பரிமன்ட்.
பகிர்ந்தமைக்கு நன்றி.
//நல்ல விழிப்புணர்ச்சியை ஊட்டும் எக்ஸ்பரிமன்ட்.
பகிர்ந்தமைக்கு நன்றி.//

எதோ என்னாலானது ஜூர்கேன்.. நன்றி
இது என்னுடய் 100வது பதிவு ஜூர்கேன்.இப்பத்தான் பார்த்தேன்..
Anonymous said…
You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to

valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

Let's show your thoughts to the whole world!
//இது என்னுடய் 100வது பதிவு ஜூர்கேன்.இப்பத்தான் பார்த்தேன்..//

மேற்கண்ட சொற்தொடர் என்னுள் மிகப்பெரிய புன்னகையை உருவாக்கியது.
உங்கள் பணி தொடர என் உளம் கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.!

எப்ப treat ? :)
100 பதிவிற்கு வாழ்த்துக்கள்...

"கோக், பெப்சி குடிக்கதுக்கு, மோர் எளனி குடிங்கய்யா..." அப்படின்னு (௨௦௧௧- இல் ) வருங்கால முதல்வர் வடிவேலு சொல்லியிருக்காப்ல...

தெரிஞ்சுக்குங்க....

நல்லா எழுதீருக்கீங்க அப்பு...
பொழைச்சுக்குவீங்க...
இவன் said…
100க்கு வாழ்த்துக்கள்
//எப்ப treat ? :)//

எப்ப வேணும்? எங்க மீட் பண்ணலாம்? ஜூர்கேன்
//நல்லா எழுதீருக்கீங்க அப்பு...
பொழைச்சுக்குவீங்க...//

நன்றி நவநீதன் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்..மேலும் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் ..
//100க்கு வாழ்த்துக்கள்///

நன்றி இவன்.. மேலும் உங்கள் கருத்துக்களை என் பதிவுகளுக்கு எதிர்பார்க்கிறேன். நன்றி
Anonymous said…
அது சரி..நீ போட்றுக்கறது நிசமாலுமே மெய்யா..இல்லாங்காட்டி உட்டாலக்கடியா?
சதமடித்தற்கு வாழ்த்துக்கள் சங்கர்.

கோக் வச்சி குடும்ப கட்டுப்பாடா? ஆனா ஒரு விசயம் ஒதக்குது. நம்ம ஊர் காரமான சிக்கன் குழம்புல போட்டாக்கூடதான் உயிரணுக்கள் செத்துடும் அதுக்காக அதை எடுத்து கண்ட இடத்தில ஊத்தி ஆராய்ச்சியா பண்ண முடியும்?? :)))
//கோக் வச்சி குடும்ப கட்டுப்பாடா? ஆனா ஒரு விசயம் ஒதக்குது. நம்ம ஊர் காரமான சிக்கன் குழம்புல போட்டாக்கூடதான் உயிரணுக்கள் செத்துடும் அதுக்காக அதை எடுத்து கண்ட இடத்தில ஊத்தி ஆராய்ச்சியா பண்ண முடியும்?? :)))//

ஆனாலும் ரொம்பத்தான் குசும்பு உங்களுக்கு.. கோக் அடிச்சா திரும்ப யூஸ் பண்ணலாம்.. சிக்கன் குழம்பு ஊத்திகிட்டா யூஸ் பண்ண முடியாது.. அதனால தான் யாரும் ஆராய்ச்சி பண்ணல.. வெண்பூ.. நன்றி உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்
100க்கு வாழ்த்துக்கள்!

வழக்கம்போல அடித்து ஆடுங்கள்..

ஒரு ச்சின்ன கருத்து.. (ஆரம்பிச்சுட்டாங்கய்யா...)

சினிமாவைக் குறித்த தீர்க்கமான அறிவுள்ள நீங்கள் 100வது பதிவாய் எல்லா நடிகர்களின் 100வது படத்தைப் பற்றி எழுதியிருந்தால் டைமிங்காக இருந்திருக்குமே...
//சினிமாவைக் குறித்த தீர்க்கமான அறிவுள்ள நீங்கள் 100வது பதிவாய் எல்லா நடிகர்களின் 100வது படத்தைப் பற்றி எழுதியிருந்தால் டைமிங்காக இருந்திருக்குமே...//

100வது பதிவுக்கு என்னவெல்லாமோ செய்யணூம்னு நினைச்சி மற்ந்து போய் இந்த பதிவ போட்டுட்டேன்..போட்ட அரை மணிநேரத்துக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது 100 வந்துருச்சுன்னு.. 125/ 150 எல்லாம் வரமயா போயிடும்.. அப்ப பாத்துக்கலாம்.. நன்றி பரிசல்..
100 அடிசுடீங்க. ஆனா இத வாழ்த்துற அளவு எனக்கு வயசு இல்லை. இது மாதிரி நீங்க எழுதிட்டே இருக்கணும். அதான் என்னோட ஆசை.

இந்த பதிவு அருமையா இருக்கு. கொசுறு தகவல்.... தம் அடிச்சு பல்லு கலர் ஆனா, கோக் வச்சு வாய் கொப்புளிச்சா கரை போய்டும். அதுக்கு மேல பல்லு இருக்குமானு கேக்காதீங்க....
100 பதிவிற்கு வாழ்த்துக்கள்...
கோக்கையும் ஒரு கிளாசையும் வைச்சுடிங்க
வெறும் கோக்க எப்படி ''ராவா'' அடிக்கிறதாம்.
//அது சரி..நீ போட்றுக்கறது நிசமாலுமே மெய்யா..இல்லாங்காட்டி உட்டாலக்கடியா?//

என்ன தலைவா இப்டி கேட்டுகுற.. நெசமாலுமே நைனா.. என்கிட்ட புரூப்பு இருக்கு..
// தம் அடிச்சு பல்லு கலர் ஆனா, கோக் வச்சு வாய் கொப்புளிச்சா கரை போய்டும். அதுக்கு மேல பல்லு இருக்குமானு கேக்காதீங்க.//

எனக்கு தெரிஞ்சு டாய்லெட் க்ளின் செய்யக்கூட சில பேர் யூஸ் செய்யறாங்க்ன்னு கேள்வி.. ரொம்ப நன்றி சிம்பா.. உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்..
//வெறும் கோக்க எப்படி ''ராவா'' அடிக்கிறதாம்.//

அடடா.. நீங்க கேட்டது சரிதான். உங்க்ளுக்கு பிடிச்ச சரக்கை சொல்லுங்க உடனே அடுத்த பதிவுல போட்டுடறேன்.. அப்புறம் உங்க பாடு கொண்டாட்டம் தான்.
நன்றி ஜீவன் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.